குறள் 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)பொருள்
கொன்று - கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
செயினும் - செய்தாலும்
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
ஒன்றும் - சிறிதும், ஒன்று
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
உள்ள - உள்ளு - uḷḷu உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு
கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.-
முழுப்பொருள்
உறவுகளின் ஆதாரமே நம்பிக்கைத்(Trust) தான். அதுவும் நீண்டகால உறவுகளில் நம்பிக்கை என்னும் சாலையின் மீதே எல்லோரும் பயனிப்பர். இது கணவன் மனைவி உறவு, நண்பர்கள், உறவினர்கள், தொழில் முதலீடு செய்தவர்கள், அலுவகத்தில் மேலாளர் ஊழியர் உறவுகளில் பொருந்தும். ஆனால் நாம் எத்தனையோ வகைகளில் வஞ்சிக்கப் படலாம். அப்போழுது என்ன செய்ய வேண்டும்? உறவை, நட்பை, தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டுமா ? இல்லை என்றுக் கூறுகிறார் திருவள்ளுவர்.
பொதுவாக தீமை மனதில் மேலோங்கி இருக்கும். ஆனால் அதனை எப்படி மறப்பது? நண்பன் தான் பகைவனாக மாறுவார். அத்தகைய ஒருவர் நம்மை கொலை செய்வதற்கு ஒப்பான துன்பத்தினை நமக்கு செய்தாலும் அதனை அப்பொழுதே மறந்து விடு என்று கூறுகிறார் திருவள்ளுவர். அவ்வளவு பெரிய துன்பத்தை வஞ்சனையை எப்படி மறப்பது என்று திருவள்ளுவரை கேட்டால் ? ஒருவர் செய்த நல்லதை எல்லாம் மறந்து விட்டு, அவர் செய்த ஒரே ஒரு தவறான காரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மல்லு கட்டக் கூடாது. அவன் நமக்கு முன்னர் செய்த ஏதாவது ஒரு நல்லதை / உதவியை நினைத்துப்பார்த்தால் அவனுடைய நல்ல குணங்களும் அவன் நமக்கு செய்த நன்மைகளும் நினைவுக்கு வரும் என்று கூறுகிறார். இத்துன்பம் மறந்துவிடும். ஏனெனில் நான் முன்னமே கூறியுள்ளேன் "குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்" என்பதை நினைவில் கொள், நீ பண்பாளனாக இரு, மறந்துப்போ என்று பதில் கூறுகிறார் திருவள்ளுவர். அதுவே மறப்பதற்கான வழி. அவன் செய்தது தீமைத்தான். ஆனால் அவன் செய்த நல்லதைத் தேடிப் பிடி என்கிறார் திருவள்ளுவர். அந்த எழுச்சியிலே அவன் செய்த தீமையும் உள்ளத்தில் இருந்த (பகை எனும்) தீமையும் மறந்துப்போகும். நன்றல்லது உள்ளத்தில் இருந்தால் அது அன்றே மறைந்துப்போகும்/கெடும்.
மேலும், அன்று நமக்கு நன்மை செய்தவன் இன்று வேண்டுமென தீங்கு செய்திருக்க மாட்டான் என்று நமக்கு உணர்த்தும். அது மட்டுமில்லாமல் நம் மனதில் தீப்போல் வளர்ந்து நம்மையே அழிக்கக் கூடிய இயல்பு வாய்ந்த வஞ்சத்தை விதைக்காமல் இருக்க நன்மையை நினைத்தலும் மறத்தலும் பெரிதாய் உதவும்.
இக்குறள் எல்லா உறவுகளிலும் நட்பிலும் மிக மிக உதவும். நட்பு அல்லாதவற்றில் கூட பகையில் உதவும் ஏனெனில் நல்லது அல்லாதவற்றை மனதில் வைத்தால் வஞ்சம் தான் வளரும். அது விஷம். நாம் வஞ்சம் என்னும் விஷத்தைக் குடித்தால் அது எதிரியைக் கொள்ளாது. நம்மைத் தான் கொள்ளும். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என ஏதுமில்லை.
என்னும் குறளையும் நினைவில் கொள்க
மனதில் உள்ள சினம் / வெறுப்பு கொடியது. அதனை விட்டொழிக. உங்களின் ஆக்க சக்தியின் பெரும் பகுதியை உங்களை அறியாமலேயே சினம் எடுத்துக்கொள்ளும் தடையாக அமையும். ஆங்கிலத்தில் சொன்னால் Resentment blocks energy. சரி அதனை எப்படி விடுவது என்பதை மேலே பார்த்தோம். ஏன் விடவேண்டும்? உங்கள் சக்தியை பாதுக்காத்துக்கொள்ள. அதற்கு இன்னும் ஒரு குறளை மேற்கோள் காட்டுகிறேன்.
அதாவது, இவ்விடத்தில், மனதில் சினத்தை நீக்கிவிட்டால் அதனால் உனக்கு நன்மையே என்று பொருள் கொள்ளலாம்.
யாரிடத்தில் குறிப்பாக இந்த சினத்தை காக்க வேண்டும். அந்த வெறுப்பை அழிக்க வேண்டும். நமது கோபம் செல்லுபடி ஆகும் இடத்தில். அதற்கு ஒரு குறள் கூறியுள்ளார் திருவள்ளுவர்
நாலடியாரில் “சிறந்தொருவர் செய்தநன் றுள்ளுவர் சான்றோர்” (356) “ஒரு நன்றி செய்தவர்க்கொன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்” (357) எனப்படுகிறது. “பிழை யாவும்” என்னாமல், “நூறும்” என்றதால், பிழைகளைப் பொறுத்தலைப் பற்றி கூறினாலும், அதற்கும் ஒரு எல்லை இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
"ஒருநன்றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி” என்கிறது குறுந்தொகை (115:2-3)
புலவி தீர அளிமதி” என்கிறது குறுந்தொகை (115:2-3)
சிசுபாலன் உதவியே செய்திராவிட்டாலும், அவனுடைய தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக, அவன் செய்த நூறு பிழைகளைப் பொறுத்தான் கண்ணன் மகாபாரதத்தில்; பிறகு அவனை வதை செய்தான். அதுதான் தேவனே மனிதனாகப் பிறந்தாலும் நிகழக் கூடிய உண்மை. ஆனால் அது ஒரு அறத்திற்காக செய்யப்பட்டது.
கடைசியில் உள்ள "How to handle Resentment?" ஐ படிக்கவும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.
மு.வரதராசனார் உரை
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
என்றாவது உனக்கு உதவியிருக்கிறானா? கொலைபாதகனையும் மன்னித்துவிடு.
How to handle Resentment?
When you resent people, you’re angry at them because they didn’t behave the way you wanted them to. Maybe they broke their promises, or perhaps they didn’t give you what you expected from them. Perhaps you believed they owed you something, but they failed to deliver?
Resentment often builds up when you fail to communicate effectively with the people you resent. That is, when you didn’t tell them you felt hurt, or didn’t communicate your needs and wants, assuming they would naturally cater to them. It can also grow when you did express your feelings but can’t let go of them and forgive. As Nelson Mandela once said, “Resentment is like drinking poison and then hoping it will kill your enemies.” It just doesn’t work.
Resenting people
Resentment will grow in intensity following the formula:
Interpretation + Identification + Repetition = strong emotions.
You can resent someone for years for a rather insignificant event based on:
1) Your interpretation of the event
2) Your identification with the story you’re telling yourself about it, and/or
3) The number of times you replay the event in your mind.
Let’s say one of your friends ‘betrayed you’ by not inviting you to a party. In your mind, your friend truly betrayed you and you deeply resent him for it. You can’t stop thinking, “How could he do that to me?” The thought consumes you for weeks and you decide to cut ties with him. Months later you’re still resenting him. Notice that the event in itself isn’t upsetting. What creates resentment is your interpretation of the event.
The danger of letting resentment build up Often, what adds fuel to the fire is your inability or unwillingness to confront the people you resent. Instead of this, you keep revisiting in your mind what (you think) happened. As a result, your resentment grows stronger as time passes. This is especially true if you regularly interact with people you resent.
How to use resentment to grow?
resentment is being a result of being attached to past instead of focusing on the future
Resentment is here to tell you that you must love yourself and value your peace of mind more than anything else. Your peace of mind is more important than being right, taking revenge or hating someone else.
In short, moving beyond resentment is making a declaration of love to yourself so you can move on, while at the same time, sowing compassion to others
Loving yourself
When you experience resentment, you believe that something you are legitimately entitled to was unjustly taken from you. For instance, it could be someone else's trust, respect, or love.
As a result, you feel as though you've been attacked personally.
Resentment will subsists as long as your need to be being right and getting even is more important than your peace of mind. it will keep growing as long as you keep feeding the emotion with thoughts of resentment. And it will remain as long as you repress it. That's why it is important you make your peace of mind a priority and learn to forgive others as well as yourself.
Loving others
The more you are compassionate to others, the more it is easier to let go of the resentment and forgive others
Remember, others might do think unconsciously
We are deeply conditioned. Reason: Upbringing. We often act the same way as their parents
We cling to old patterns and recreate them.
Just notice your family history and notice the pattern.
We resent our parents for being overly protective, not encouraging to grow, actions made me weaken. But, remember, your parents didn't have any bad intentions. she simply meant well and did the best she could.
Remember, we cannot change the past. We can only create a future
How to deal with resentment
1. Changing / re-evaluating your interpretation
2. Confronting the situation
3. Forgiving (breaking free from identification) and
4. Forgetting (stopping the repetition)
Resentment results from your interpretation of something that happened to yo leading to feeling of betrayal, anger, revenge .
1. Changing/reevaluating your interpretation
Have you over-dramatized the situation?
Did you misinterpret something?
See only the facts.
2. Confronting the situation
If your resentment is directed toward people, perhaps you need to have an honest discussion with them and share how you feel.
Resentment builds when do not share your feelings with the person.
Because of fear.
Talk to them, or write a letter. or at least write down a letter and have it with your self. it might help you release some of your resentment
3. Forgiving
Forgive.
Think of negative consequences created by resentment.
Forgiveness is simply reconnecting with the only thing that is real, the present while forgetting the past which isn't real
Remember, forgiving is an act of self love.
You forgive not because of your compassion. It is because your value your happiness and peace than anything else.
4. Forgetting
When such resentment thoughts rise again, let them go. over time they will lose their power.
English Meaning - As I taught a kid - Rajesh
A friend or a known person might have done something as bad as almost killing us. Yet, rather than getting angry, we should think about the good things he or she had done for us. Because anger leads to resentment and kills our happiness and internal peace, whereas gratefulness leads to forgiveness and maintain our internal peace.
Questions that I ask to the kid
A person has done something as bad as killing you. What should you do?
How to overcome anger when a person does a thing that is as bad as killing you?
Why should you give forgive a person?
No comments:
Post a Comment