குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
செல் - To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
- போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.
செல் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
செல் - செலாவணி - செலாமணி - celāmaṇi n. U. calāoṇi.1. That which can be passed, as coin; thatwhich is a legal tender; செல்லக்கூடியது. 2.Influence; செல்வாக்கு இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணியில்லை. Loc. ; புழக்கம்; செல்லக்கூடியது; செல்வாக்கு.
இடத்துக் - இடம் - தானம்; Context; சந்தர்ப்பம், வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி
செல் இடத்துக் - தனக்கு மற்றொருவர் மீது அதிகாரம் (ஆளுமை) உள்ள ஒரு இடத்தில். அதாவது மெலியார்களிடம்
காத்தல் - kā- 11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.
காப்பான் - கட்டுப்படுத்துவான்
சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
காப்பான் - கட்டுப்படுத்துவான்
அல் - al part. id. 1. Neg. verb-ending:(a) imp. sing.; எதிர்மறையேவல் ஒருமை விகுதி
இடத்து - இடம் - தானம்; Context; சந்தர்ப்பம், வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி
அல் இடத்து - மற்ற / பிற இடத்தில் ; அதாவது வலியார்களிடம் (தனக்கு ஆளுமை இல்லாதவர்களிடத்தில்)
காத்தல் - kā- 11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.
காக்கின் என்? - சினம் தனை கட்டுப்படுத்தினால் என்ன ?
காவாக்கால் என்?. - சினம் தனை கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ?
முழுப்பொருள்
ஒருவர் மீது நாம் சினம் கொள்ள நேரிடும் பொழுது விளைவுகள் இரு வகைப்படும். 1) எதிரே உள்ளவர் அதனால் மனம் வாடி எதுவும் பேசாமல் உள்ளே புகைந்துக்கொண்டு சகித்துக்கொண்டு சென்று விடுவார். அதாவது மெலியார்கள். 2) எதிரே உள்ளவர் இவருடைய சினத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், இவரையே மதிக்காமல் அலட்சியம் செய்து சென்றுவிடுவார். இவர்கள் வலியார்கள்.
ஆகவே மெலியாரிடத்தில் சினம் தன்னை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி கட்டுப்படுத்தினால் சிறப்பு. ஏனேனில் இங்கு பொதுவாக மெலியார் என்று இல்லாமல் இவர்களுடன் உள்ள நண்பர்கள், உறவுகள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் ஆகியோரிடம் சினம் காண்பிக்காமல் இருந்தால் உறவு மேம்படும். நம்மைச் சுற்றி மக்கள் இருப்பர். நன்மை விளைவிக்கும்.
தன்னை சட்டை செய்யாதவரிடம், வலியார்களிடம் கோவம் கொண்டால் என்ன, கொள்ளாவிட்டால் நமக்கு என்னப் பயன் ? ஒரு பயனும் கிடையாது.\
அதுமட்டும் இன்றி நமது நெருங்கிய உறவுகள் குறிப்பாக நமது குழந்தைகளிடம், பெற்றோர்களிடம், உறவுகளிடம் சினம் நெடுங்காலத்திற்கு குழந்தைகளின் மனதிலும் குணாதிசயத்திலும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். பெற்றோர்களிடமும், உறவுகளிடமும், சுற்றத்தாருடனும் காண்பிக்கும் சினத்தை குழந்தைகள் பார்த்து வளருவர். அவர்கள் முன்னே கோபப்படவில்லை, தனியே இன்னொரு அறையில் அல்லது அவர்கள் இல்லாத பொழுது கோபித்துகொள்கிறேன் என்பதும் தவறு. ஏனெனில் நாம் கோபப்பட்டத்தை பிள்ளைகள் வேறு ஒரு தருணத்தில் தானாகவோ அல்லது வேறு யாரோ சொல்லி செவி வழி அறிந்துக்கொள்வர்.
சரி, அது எப்படி நாம் காண்பிக்கும் சினம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். நம்மிடம் இருந்து கண்டோ அல்லது செவி வழியாக அறிந்தோ நமது சினத்தை அறிந்தால், பிற்காலத்தில் குழந்தைகளும் சினம் கொள்ள யோசிக்கமாட்டார்கள். நாம் சினம் கொண்டால் சினம் தவறு அல்ல நீயும் (நமது குழந்தையும்) பிற்காலத்தில் சினம் கொள்ளலாம் என்று உரிமம் கொடுப்பதுப்போல் ஆகும். அது குழந்தைகளின் மனநிலையை அவர்களிடன் உறவுகளை வெகுவாக பாதிக்கும். ஒருவித பயத்தை குழந்தைகள் மனதில் சின்ன வயதிலேயே உண்டுப்பண்ணும். அப்பயம் அவர்களின் வாழ்வில் வேறு ஒரு தளத்தில் ஆழ்மனத்தடையாக மாறிவிடும். சினம் ஆழ்மனத்தடையை உருவாக்குவதால் அதனை நமது உறவுகளிடம் காண்பிக்க கூடாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைப் போகும். ஆதலால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கவனம் மிக மிக தேவை. (பி.கு. Hellinger Family Constellations என்ற ஒரு குடும்ப ஆலோசனை மனோத்தத்துவ முறை உண்டு. அதில் எப்படி குடும்ப உறவுகள் ஒரு குழந்தையை பாதித்துள்ளது / பாதிக்கும் என்பதை உணரலாம். ஒரு குழந்தையின் மனதில் முடிச்சு (knot) / ஆக்கசக்தியில் தடை energy blockage எப்படி உருவாகி அக்குழந்தையின் வளர்ச்சியைத் நெடுங்காலத்திற்கு தடை செய்கிறது என்பதை உணரலாம்).
முக்கிய செய்தி. நமது உறவுகளை, (நமது கோபம் செல்லுபடியாகும் உறவுகளை) அலட்சியம் செய்யாதீர் (The main point is. Don't take our relationships for granted. Don't show your anger upon them).
பிள்ளைகள் நம்மிடமா எல்லா நேரமும் இருக்கிறார்கள்? அவர்கள் பள்ளிக்கூடங்களில் நண்பர்களுடன் தானே பெரும்பாலான நேரம் வளர்கிறார்கள். உண்மைதான். ஆனால் ஒரு வகுப்பில் எல்லா பிள்ளைகளும் கோபப்படுவத்தில்லை. கோபப்படும் பிள்ளையும் வெகு சில சந்தர்ப்பங்களில் கோபப்படும். அக்கோபத்தை நெடுங்காலத்திற்குக் கொள்ளாது. மேலும் அக்கோபத்தை ஆசிரியர்கள் அடக்கிவிடுவார்கள். மிக மோசமான பிள்ளைகளைக்கொண்ட பள்ளியில் அல்லது ஒழுக்கத்தைப் பேணாத பள்ளியில் ஒரு குழந்தை வளர்ந்தால் அதுவும் குழந்தையை பாதிக்கும். பிள்ளைகள் ஒரு தனி நபரிடம் அதிக நேரம் செலவிடுகிறது என்றால் அதுப் பெற்றோர்கள் தான். யோசித்துப்பாருங்கள், குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியே வந்தப்பின்பு தனது நண்பர்களைப் பற்றி வெகுவாக நினைக்காது. ஆனால் பெற்றோர்பற்றியும், வீட்டில் நடந்ததைப் பற்றியும் பள்ளியிலும் நினைத்துப் பார்க்கும். ஆதலால் நாம் பிள்ளையுடன் நடந்துக்கொள்ளும் விதம் பிள்ளைகளை வெகுவாக பாதிக்கும். (மேலும், வீட்டில் நாம் வசைச் சொற்களைப் பேசாது இருந்தால் வெளியே பிள்ளைகள் பலர் பேச கேட்டாலும், அதனை பிள்ளைகள் பேச கூசுவர் ஏனெனில் பெற்றோர்கள் பயன்படுத்தாத அவ்வார்தைகளை தான் பேசுவது அவர்கள் மனதில் நெருடலாகவே இருக்கும்)
ஒரு பள்ளியில் வளர்ந்த எல்லா குழந்தைகளும் கோபப்படுவதில்லை. சிலப் பிள்ளைகள் கோபப்படவே படாது. சில பிள்ளைகள் கோப்படும். அது பெரும்பாலான சமயங்களில் பெற்றோரின் குணாதிசயமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு முன்னுதாரணம். ”குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.” என்பதை நினைவில் கொள்க.
மேலும், அலட்சியம் செய்வோரிடம் சினம் கொண்டால் பொதுவாக, வாக்குவாதம் வராது, அல்லது அவரை நாம் அன்றாடம் காணமாட்டோம். ஆதலால் கோபம் கொண்ட தருணத்தை நாம் மறந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் நெருங்கிய ஒருவரிடம் கோபம் கொண்டால் நம்மிடம் காழ்ப்பு / மனக்கசப்பு (resentment) வளரும். அவர்களை காணும் பொழுது எல்லாம் நமக்கு கோபம் வரும். இதயத்துடிப்பு எகிறுவதை உணரலாம். இது நமது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும். அதுமட்டும் இன்றி, உறவிலும் மனம் விலக்கம் கொண்டு சிக்கலாகவே இருக்கும். அது ஒருவித எதிர்மறை சக்தியை அவ்வீட்டில் உள்ளோரிடம் எப்பொழுதும் பரப்பிவிடும். (வீடே சூனியமயமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்).
கோபத்தை கற்றுக்கொள்ள ஆயிரம் சந்தர்ப்பங்கள் நம் அன்றாட வாழ்வில் உள்ளன. பெரியவன் ஆகியப் பின்பு அலுவகத்தில் இருப்போரிடம் இருந்து கோபத்தை கற்றுக்கொள்ளலாம். அப்படி எல்லாம் கோபத்தை பார்க்காமல் பொத்தி பொத்தி ஒருவர் வாழமுடியாது. அப்படியேனில், ஏன் அக்கோபங்களையெல்லாம் கற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்கு இக்குறளை மறுபடியும் படிக்கலாம். மேலும் இவ்வதிகாரத்தை நன்கு உணரும் வரை படிக்கலாம். கீழ்க்காணும் குறள்களையும் படிக்கலாம்
அதுமட்டும் இன்றி, நாம் நமது உறவுகளிடம் சினத்தை காண்பிக்கவில்லையென்றால்
பரிமேலழகர் உரை
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்?
விளக்கம்
('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினம் செல்லிடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே!
'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாதவருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலாலும், அதையடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.
மணக்குடவர் உரை
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
மு.வரதராசனார் உரை
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
சாலமன் பாப்பையா உரை
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.
பொருள்: செல் இடத்து காப்பான் சினம் காப்பான் - (வெகுளி) செல்லும் இடத்து (செல்ல விடாது) காப்பவன் வெகுளியைக் காப்பவன் (ஆவான்) ; அல் இடத்து காக்கில் என் காவா(த) கால் என்- (வெகுளி) செல்லாத விடத்து (வெகுளியைக்) காத்தால் யாது பயன்? காவாத பொழுது யாது பயன்? (ஒரு பயனும் இல்லை).
அகலம்: செல்லிடமாவது, வெகுளி செல்லக் கூடிய இடம். அஃதாவது, தம்மின் மெலியாரிடம். செல்லாத விடத்து வெகுளியைக் காத்ததாகச் சொல்லல் முடியாது, அவ் விடத்து வெகுளியைச் செலுத்தின் அது தடுக்கப்பட்டுப் போ மாகலான். செல்லாத இடம்‡ தம்மின் வலியாரிடம். தருமர் பாடம் ‘செல்லிடத்திற்’, ‘அல்லிடத்திற்’. மற்றை நால்வர் பாடம் ‘காக்கினென்’. மணக்குடவர் பாடம் ‘காக்கி லென்’. ‘காவாக்கா லென்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான், ‘காக்கிலென்’ என்னும் மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.
கருத்து: மெலியாரிடத்து வெகுளியைக் காக்கக் கடவர்.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தந்தையே எனது உறவினர் ஒருவர். வயதால் மூத்தவர். நிறையக் கற்றிருக்கின்றார். இல்லை தந்தையே படித்திருக்கின்றார்.
எல்லோருக்கும் வழி சொல்வது. எல்லோருக்கும் உதவுவது என்று நல்லதெல்லாம் செய்கின்றார். ஒரே ஒரு தீய குணம்.
எல்லா நன்மைகளையும் யாருக்குச் செய்கின்றாரோ அவர்களிடம் கோபம் கொள்கின்ற போது அவர் நடந்து கொள்கின்ற முறைகள் தாங்க முடியவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார். பாவம் அவர்கள் அவர் உதவியிலே வாழ்பவர்கள்.
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாமல் மனதுக்குள்ளேயே மறுகுகின்றனர். அவரை எப்படிச் சரி செய்வது.
மனிதர்கள் பலர் மனைவியிடம் கூட இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அவள் எதிர்க்க மாட்டாள் என்கின்ற ஒரே நம்பிக்கை. தந்தையின் பதில்.
அவரிடம் சொல்லு அவர்கள் உங்களையே நம்பி வாழ்கின்றவர்கள்.அவர்களிடம் கோபம் கொள்வது பண்பாடற்ற செயல்
என்று.கோபத்தை கட்டுப் படுத்தப் பழகிக் கொள்ளவே அவர் இந்த உறவுகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அது அவருக்கு அவர் உயிரையும் உடைமைகளையும் காக்கின்ற மிகப் பெரிய உதவியினைச் செய்யும்.
ஆமாம் இப்படி நல்லவர்களிடம் தன்னை நம்பி வாழுகின்ற ஏழை எளியவர்களிடம் இந்தப் பயிற்சியினை எடுத்துக் கொண்டாரெனில் அவரால் கோபம் கொள்ள முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் எத்தகைய சூழலிலும் கோபம் வராது.
புரிகின்றதா?அதனால் அவருக்குப் பெரிய நன்மையல்லவா ஏற்படும்.இல்லையெனில் அவர் நிலை என்னவாகும்.
ஏழைகள் அவருக்குக் கீழே இருப்பவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்கள் இவருடைய குணம் கொண்டவர்களாக இருப்பின் இவர் கதி அதோ கதிதானே.
இவர்கள் இப்படியே இருப்பின் நீயும் நானும் என்ன செய்ய முடியும். இதே பழக்கத்தில் இவர்கள் விபரமில்லாமல் கோபப் படக் கூடாத இடங்க்ளில் கோபப் பட்டு ஒரு அனுபவம் பெறுவார்கள் பார். அப்போது அவர்களாகவே தெரிந்து கொள்வர்.
கோபப் படாமல் இருக்க நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தந்தை சொன்ன வழியை எண்ணிஎண்ணி அவரை வணங்கி நின்றேன்.
குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உந்தனது கீழிருக்கும் ஏழையர்கள்
உறவினர்கள் நண்பரொடு அன்பு கொண்டோர்
வந்தமைந்த மனைவி அவள் வழியாய் வந்த
வாரிசுகள் என்றிவர்கள் இடத்திலெல்லாம்
நொந்தழிக்கும் கோபமதைக் கொள்ளல் தீது
நொய்ந்தவர் மேல் கோபமது தீதோ தீது
வந்த சினம் தானாக மறைந்து விடும்
வாழும் வழி சொல்லுகின்றார் வள்ளுவரும்
இந்த விதம் சொல்லி விட்டு வள்ளுவரும்
இடக்காகச் சொல்லுகின்றார் அதனைப் பார்ப்போம்
மைந்தர்களே உம்மை விடப் பெரியோர் ஆளும்
மாட்சிமையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்
எந்த விதத் தவறுகட்கும் அஞ்சா நெஞ்சர்
இவரிடத்தில் சினம் கொள்ளும் தடுக்க மாட்டேன்
சந்தடியில் அடி வாங்கித்தான் திருந்த
சரியான வழி சொன்னார் வள்ளுவரும்
‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள் நடைபெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபங்களால் வன்முறைகளும், கொலைவெறிகளும் தாண்டவமாடுகின்றன. பெற்றோர் கோபங்களில் பிள்ளைகள் நலம் கெடுகிறது; உறவு சிதைகிறது. ஆசிரியர்களின் கோபங்களில் மாணவ நெஞ்சங்கள் கருகிப் போகின்றன. அர்த்தமற்ற அநாகரீகமான காட்டுமிராண்டித்தனமான கோபத்தின் உக்கிரமும் உஷ்ணமும் தாங்காமல் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்! பிரிந்த உயிர்கள் ஏராளம்!
10 வயது மாணவன் சென்னையில் ஆசிரியர் கோபத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், “நான் மறுபிறவியில் இதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். ஆனால் இதே பள்ளியில் படிக்க விரும்பவில்லை” என்ற செய்தி சிந்திக்கத்தக்கது.
2007 ஜனவரி மாதம் ஒரு நாளில் திருநெல்வேலியில் ‘சுடலி’ என்ற 9 வயது சிறுமி வகுப்பில் கவனமாக இல்லை என்று ‘மிஸ்’ அவளை நோக்கி சினங்கொண்டு எறிந்த டம்ளர் ‘மிஸ்’ ஆகாமல் சிறுமியின் கண்களைப் பதம் பார்த்தது. பார்வை நிரந்தரமாகப் பறிபோனது. 2007 அக்டோபரில் அகமதாபாத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்தான் 11 வயது மாணவன் மிலான் தாணா. அவனுக்கு ஐந்து முறை பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு அவமானகரமான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.
2009 மார்ச் 24ஆம் தேதி மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகிலுள்ள குளத்தில் 5 வயது மாணவி ஸ்ரீரோகிணி உடல் மிதந்தது. காவல்துறை புலனாய்வு செய்தது. வகுப்பறையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீரோகிணி தலையில் பிரம்பால் ஓங்கி வன்மத்துடன் ஆசிரியை அடித்திருக்கிறார். அடித்ததும் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். ஆசிரியைக்கு அச்சம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை பீரோவில் திணித்து வைத்துப் பூட்டி வைத்திருக்கிறார். அதன் பின் ஊழியர்கள் உதவியுடன் இறந்துவிட்ட குழந்தையைக் கொண்டுபோய் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார்.
2009 ஏப்ரல் 17ல் டில்லி மாநகராட்சியில் பள்ளி ஒன்றில் 11 வயதுச் சிறுமி ஷானுகான் ஆங்கில வார்த்தை ஒன்றைச் சரியாக வாசிக்கவில்லை என்பதற்காக ஆசிரியையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளது முதுகில் செங்கற்களைச் சுமக்க வைத்து கடும் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். சில நிமிடங்களில் ஷானு மயங்கிச் சரிந்துவிட்டாள். அதன்பின் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவளது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளில் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.
சமீபத்தில் 13 வயது கிராமப்புற மாணவனை அவனது தந்தை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். “வகுப்பு நேரங்களில் அடிக்கடி இவனுக்கு வலிப்பு வந்துவிடுகிறது” என்றும் அதன்பிறகு ஓரிருநாள் உடல் வலியும், கடும் தலைவலியும் நீடிப்பதாகக் கூறினார். ஆங்கில மருத்துவ நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, தொடர்ச்சியாக அவரது பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் கொடுத்து வருவதாகவும் கூறினார். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்…. மீண்டும் மீண்டும் வகுப்பறையில் வலிப்பு வந்துவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறினார்.
அப்பாவை சிறிது நேரம் வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, பையனிடம் நட்போடும் கனிவோடும் வகுப்புச் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து அறிந்தோம். முதன் முறையாக வலிப்பு வந்த நாளை நினைவு படுத்துமாறு கேட்டோம். அன்று கிராமத்திலிருந்து நகர்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து இடைவழியில் ஒரு பிரச்சனை காரணமாக 15 நிமிடம் நிற்க நேர்ந்துவிட்டது. அதனால் அவன் சற்று தாமதமாக பள்ளியை அடைந்தான். வாசலில் உடற்கல்வி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க கையில் பிரம்போடு அவனைக் கடுமையாக உபசரித்திருக்கிறார்.
மனதிலும் உடம்பிலும் பட்ட காயங்களின் ரணத்தோடு வகுப்பறையில் இருந்த போது மற்றொரு தாக்குதலை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மாதாந்திர தேர்வுத்தாள் திருத்தப்பட்டு அவற்றை வழங்கிய ஓர் ஆசிரியர் மதிப்பெண் குறைவுக்காக அவனை விசேஷமாகக் கவனித்திருக்கிறார். அந்தப் பாடவேளையில் அடுத்த சில நிமிடங்களில் உடல் நடுங்கி, கண்கள் இருண்டுபோய், தன்னிலை இழந்து முதன் முறையாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவன் பள்ளியில் கண்டிக்கப்படும் போதும் தண்டிக்கப்படும் போதும் வலிப்பு வருவது வாடிக்கையாகி விட்டது. அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனையும் மலர் மருந்துகள் மற்றும் ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டபின் சில மாத காலத்தில் வலிப்பிலிருந்து நலமடைந்தான்.
ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசும் கையொப்பம் இட்டுள்ளது. குழந்தைகளைக் கடும் சொற்களாலும் உடல் ரீதியிலும் தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய குழந்தை உரிமை மீறல் அனுமதிக்க முடியாத வன்முறை. 1989 ஐ.நா, குழந்தை உரிமை உடன்படிக்கையின் முக்கிய அம்சம், “குழந்தைகளை முறைப்படுத்துவதில் உடல்ரீதியான தண்டனை உபயோகிக்கக்கூடாது…” என்பதுதான். ஆனால் பெரும்பாலான வகுப்பறைகளைக் கோபமும் எரிச்சலும் கோலோச்சுகிறது.
வாழ்க்கையை வாழும் கலையை, வாழ்வியல் பண்புகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகள் சித்ரவதை முகாம்களாய் மாறிவிட்டன. அன்பையும் பண்பையும் அறிவையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்களிடம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் காவல் துறையினர் போல மாறிவிட்டனர்.
விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வியை வலியுறுத்தினார் (Man Making Education). மகாத்மா காந்தி அவர்கள் உடல், உள்ளம், ஆன்மா மலர்ச்சிக்கு உறுதுணையாகக் கல்வி அமைய வேண்டும் என்று விரும்பினார். மாற்றுக் கல்விக்கான குரல்கள் வலிமையடைந்துவரும் நேரம் இது. மனப்பாட முறை தேர்வுகளை மையப்படுத்திய, வாழ்க்கைக்கு உதவாத கல்வித்திட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்குமில்லை. ‘மதிப்பெண்களை’ வைத்து மாணவனை மதிப்பிடுகிற அபத்தமான, ஆபத்தான கல்வித் திட்டத்தால் கோடிக்கணக்கான இளம் உள்ளங்களின் இயற்கையான பரிணாம மலர்ச்சியும், சுயதிறன்களின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது.
ஒரு பக்கம் பாடத்திட்டமும் மறுபக்கம் பெற்றோர் ஆசிரியரின் அணுகுமுறையும் நம் குழந்தைகளின் நிகழ்காலத்தை பேரச்சம்மிக்கதாய் மாற்றியுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் இயல்பான மனநிலையோடும் உற்சாகத்தோடும் கல்விகற்க இயலவில்லை. மாறாக எண்ணற்ற பயந்தாங்கொள்ளிகளும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுமாக மாறுகிறார்கள்; அல்லது வன்முறையாளர்களாய், அராஜகப் பேர்வழிகளாய் பரிணமிக்கின்றனர். இது இன்றைய நமது குடும்ப, சமூக, கல்விச் சூழலின் எதிர்மறை விளைவு.
கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொட்டித் தீர்க்கும் இயல்புக்கு ‘CHERRY PLUM’, மாணவர்களை எப்போதும் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், குறை கூறிக் கொண்டும் வகுப்பறைறை வசையறையாக மாற்றும் இயல்புக்கு ‘HOLLY’ ‘WILLOW’, பொறுமையற்ற தன்மையும், பரபரப்பும், மாணவர்களை வேகப்படுத்தும் மனநிலைக்கு ‘IMPATIENCE’ , நல்லதோ கெட்டதோ தான் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும் என்று வகுப்பறையை தனது அதிகாரக்கூடமாக மாற்றும் ஹிட்லர் மனநிலைக்கு ‘VINE’ போன்ற பாச் மலர் மருந்துகள் பயன்படும். இத்தகைய குணங்கள் ஆசிரியப் பணிபுரிவோரின் ஆளுமையில் படிந்த கறைகள்.
இன்றைய காலத்தில் மிகைச் செயல்பாடு (Hyperactive) கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலைக்குரியது. இவர்களால் மனம் ஒன்றிக் கல்வியில் ஈடுபடமுடியாது. இப் பிரச்சனையை Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.
சில குழந்தைகளுக்கு Dyslexia என்ற கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ளது. இவர்களுக்கு கரும்பலகையில் வரையப்படும் நேர்கோடுகள் வளைந்து நெளிந்து தெரியும். எழுத்துக்களும், எண்களும் தலைகீழாகத் தெரியும். கண்ணாடியில் பார்ப்பது போல் எழுத்தின் அமைப்பு மாறுபட்டுத் தெரியும். சமீபத்தில் மும்பையில் ஒரு டிஸ்லெக்ஷியா குழந்தையை ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம்.
ஆங்கில மருத்துவத்தில் மன வளர்ச்சிக் குறைபாடுகளுக்கோ (Mental Retardation) ADHD, AUTISM, DYSLEXIA போன்ற நவீனகால குழந்தை உளவியல் சிக்கல்களுக்கோ சிறப்பான சிகிச்சைகள் உருவாகவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்சனைக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. மாற்று மருத்துவங்களில் குறிப்பாக ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவத்தில் இப்பிரச்சனைகளுக்கு சிறப்பான பலனளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. இத்தகைய குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் ஆதரவோடும் அரவணைப்போடும் கையாள்வது அவசியம். இத்தகைய குழந்தைகளிடம்கூட ஆசிரியர் கோபத்துடன் வழக்கமான அணுகுமுறைகளுடன் நடந்து கொள்வது ஆபத்தில் முடியும்.
இன்றைய கல்வித் திட்டத்தில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றாலும் கற்பிக்கும் அணுகுமுறையில் வகுப்பறைச் சூழ்நிலையில் அன்பும் நட்பும் கலந்த நேரிய (Positive) அணுகுமுறையை ஆசிரியப் பெருமக்கள் கடைப்பிடித்தால் மாணவர்களின் மனநலமும் உடல் நலமும் சிதையாமல் ஆரோக்கியமாக அமையும்.
Thirukkural - Management - Managing Anger
“Anger,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 39), “is a strong feeling of annoyance and hostility.”
“Anger can lead to heartbreak. A person's risk of having a heart attack increased nearly fivefold within two hours of having an angry outburst, Harvard University review of more than 6000 people. Anger ups heart rate and blood pressure and makes blood vessels stiffen, straining the cardiovascular system” (Source: Reader's Digest, August 2014, p 117).
The Practice on ‘Anger' contains six Kurals to educate us on the negative consequences of the most destructive emotion: anger.
A common and inexcusable excuse by most of us is that we are not able to manage our anger consciously. We say that we are not conscious of our anger, certain incidents trigger them, and that we find it difficult to control anger consciously. At times, our anger goes out of control. On the contrary, besides all these flimsy excuses, we are conscious of our anger and we can consciously control anger. We manage or control our anger depending upon the situations and based on the consequences of expressing our anger. Kural 301 supports that possibility.
The real curb is curbing elective wrath;
What matters other wrath, curbed or uncurbed!
True and conscious control of anger is controlling anger that can harm or damage the receiver. Can you control your anger when expressing that out can hurt or injure someone? Controlling your anger where your anger is impotent or powerless is not true control. When your anger can have negative consequences for you and if you control that, that is not control of anger. Anyone can control one's anger in that sort of situation, as there is no alternative. He is forced to accept the reality.
If we say we cannot control anger consciously, how is that we can control that in the presence of an employer, a police officer, a street thug, a robber at gun point, or anyone who is more powerful than us? We consciously become submissive and we surrender ourselves when someone encounters us with a gun. Whereas, we unleash our anger at a dependent employee because we are sure that he will not be able to fight back for fearing consequences.
English Meaning - As I taught a kid - Rajesh
When we show anger two things can happen 1) The opposite person will suffer, get sad, tolerate it and not oppose 2) The opposite person does not give a damn and ignores it.
Hence, a person should control himself and not show his anger because his/her anger is tolerate by the person in his/her circle such as mom, father, spouse, children, friends etc. Remember, it has both short term impact (harmony is lost) and long term impact (relationships are broken). And it doesn't mattter whether you control or you dont control against a person who doesn't give a damn. Hence, don't get anger because anger distracts you.
Questions that I ask to the kid
1) At whom should we control the anger?
2) At whom controlling anger doesn't matter? and why? So, should we still get angry with them?
No comments:
Post a Comment