குறள் 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
பொருள்
அறத்து - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
புறம்பு - puṟampu n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).
புறத்த - இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை
புறத்து - மற்ற ; பிற
ஆற்றில் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
போஒய்ப் - சென்று
பெறுவது - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
எவன்? - யார் ?
முழுப்பொருள்
ஒருவன் இல்லறத்தில் இல்லறத்தின் அறநெறிகள் படி வாழ்வானானால் அவன் அதற்கு பயனாக பெறுபவற்றிலும் சிறந்த எதனை வேறு வழியில் சென்று பெறப்போகிறான் ?
இல்லறத்திலேயே நாம் எல்லா நற்பயனையும் அடைய முடியும். ஆனால் அதற்கான அறத்தை நீண்ட காலம் ஆற்ற வேண்டும் பொறுமையாக. அக்கடமைகளை ஆற்றுவது கடினமாக இருப்பினும் பயன் கண்டிப்பாய் கிட்டும். அது சிறந்தாதாகவே இருக்கும்.
ஒருவன் இல்லறத்திலேயே துறவறத்திற்கான பயனை அடையமுடியும். ஆனால் இல்லறத்தை விட துறவறம் மேல் என்றோ துறவறத்தை விட இல்லறம் மேல் என்றோ திருவள்ளுவர் எங்கும் கூறவில்லை.
உலகில் வாழ்வு தொடர, இல்லறத்தோர் இருத்தல் வேண்டும். ஆனால் நல்ல இல்லறத்தை விட்டு, அதற்கு உண்டான கடமைகளைப் புறக்கணித்து துறவு கொள்ளுதல், ஒருவருக்கு கடமையை மறந்த செயலாகும். அது இருவகையில் குற்றமாகும். தனக்கென்று இருக்கும் தற்போதைய கடமையை புறக்கணித்தல், துறவின் அடிப்படைத் தகுதிகளை புரியாதிருத்தல். இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்கின்ற மனநிலை துறவறதிற்கு ஏற்றதில்லை. அத்தகு துறவினால் எவருக்கும் பயனில்லை. அது துறவும் இல்லை!
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”அறந்தலைப் பிரியாதொழுகலும்” (அகநா 173:1)
பரிமேலழகர் உரை
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).
மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்வழியில் குடும்பம் நடத்துவதைவிடச் சிறந்த வேறொன்றில்லை.
Excellent explanation
ReplyDelete