களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

thirukkural meaning விளக்கம் குறள் 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்
குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
களி - மகிழ்ச்சி; கள்முதலியனஅருந்திக்களிக்கை; தேன்; கள்; கட்குடியன்; உள்ளச்செருக்கு; யானைமதம்; குழைவு; குழம்பு; மாவாற்கிண்டியகளி; கஞ்சி; வண்டல்; உலோகநீர்; களிமண்.

தொறும்  - toṟu   a distributive plural particle of place, time, quality etc. as தோறு, பன்மையிடைச்சொல்.

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.

தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

உண்டல் - uṇṭal   n. உண்-மை. Cominginto existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவேறுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2)

உண்டல் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

வேட்டு - வேட்கைத்தொழில்; வெடி.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து

வேட்டற்றால் - வேட்கை தரும் இன்பமாம் (சிலருக்கு? பலருக்கும்?)

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

வெளிப்படும் - வெளிப்படு-தல் - veḷi-p-paṭu-   v. intr. id. +. 1. To come out, issue forth, asbreath; வெளியேவருதல். 2. To become manifestor evident; to become public; to be revealed;வெளிப்படத் தோற்றுதல். பரவா வெளிப்படா . . .உரவோர்கட் காமநோய் (நாலடி, 88). 3. To beclear, explicit; பொருள் விளக்கமாதல். வெளிப்படுசொல்லே கிளத்தல் வேண்டா (தொல். சொல். 298).4. See வெளிவா-, 2.

வெளிப்படுத்துதல் - பலர்அறியத்தெரிவித்தல்; காட்டுதல்; வெளியேவரச்செய்தல்; புத்தகம்பதிப்பித்தல்; வெளியேபோகச்செய்தல்.

தோறும் தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.

தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக, இனிமை, இனிய 

முழுப்பொருள்
கள் /மது உண்ணும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி கிடைக்கிறது. அது உடற்கின்பம் தான். ஆனால் எங்கள் காதலைப்பற்றி இவ்வூரார் பேசும் பொழுதெல்லாம் பழிக்கும் பொழுதெல்லாம் வெடி வெடித்து இவ்வுலகிற்கே பறைசாற்றியதுபோல் உள்ளது. அது அவ்வாறு வெளிப்படுவதால் இனிமையே தருகிறது எங்கள் உள்ளத்திற்கு.

கள் குடித்தால் மகிழ்ச்சி (என்றாலும் உடல் அழியும்). ஆனால் இந்த காதலை மக்கள் பேசினால் எங்கள் காதல் வளரும். காதல் வளர்வதை காட்டிலும் இனிது காதலர்க்கு ஏது ?
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மகிழ்ந்ததன் தலியும் நறவுண் டாங்கு” (குறுந் 165:1)

“உட்கொண் டரற்றும் உறுபிணி தலைஇக்
கட் கொண் டாங்குக் களிநோய் கனற்ற” (பெருங் 1.35:50-51)

“நறவிளை தேறல் உறுபிணி போலப்
பிறிதின் தீராப் பெற்றி நோக்கி” (பெருங் 2.16:63-4)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain