கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

thirukkural meaning விளக்கம் குறள் 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில் காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்
குறள் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உழந்தும் - உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.

மடல்  - பனைமுதலியவற்றின்ஏடு; தோண்மேலிடம்; கை; ஏற்றக்கழி; பனங்கருக்கு; காண்க:மடன்மா; உலாமடல்; பூவிதழ்; கிளை; சிறுவாய்க்கால்; கண்ணிமை; திருநீறும்சந்தனமும்வைக்குங்கலம்; சோளக்கதிர்முதலியவற்றின்மேலுறை; காதுமடல்; ஆயுதவலகு.

மடலூர்தல் - தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல்

ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

ஏறாப் - ஏறாமல் , வளராமல், பரவாமல் 

பெண்ணின் - பெண்  - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.


பெரும் -  பெருமை 
தக்க - tkk  - adj. Fit, proper, தகுதியான; [ex தகு, v.]

பெருந்தக்கது - பெரிய தகைமை

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
கடல் என்பது மிக பெரிய உப்புநீர்நிலை. அதன் ஆழமும், பரந்த பரப்பும் மிக பெரியது. அதனை வியந்தாலும் அவ்வுப்பு நீரை யாரும் பருகமாட்டார்கள். கடலில் அலைகள் எழும் சில நேரங்களில் கொந்தளிக்கும். அதுப்போல காதல் பிரிவால் வாடும் என் தலைவி கடல் போன்ற துன்பத்தால் வருந்துகிறாள்.  அது துன்பம் ஆயினும் உவர் நீர் மழை தருவதற்கும் ஒரு காரணம் போன்று எங்கள் காதல் வளர்வதற்கு இந்த துன்பம் ஒரு காரணம்(காரணமோ?) . தனி ஒருவன் நீந்தி கடப்பதற்கு அரிய கடலை போன்று இந்த காதல் துன்பத்தையும் தனியே கடக்க முடியாது. தலைவன் படகில் வந்து கடத்திச்சென்றால் தான் முடியும். 

ஆனால் இவ்வளவு பெரிய துன்பத்தை வருத்தத்துடன் அனுபவிக்கும் என் தலைவி எந்நிலையிலும் மடல் ஏற மாட்டாள். ஏனெனில் அவள் நாணம் அவளை தடுக்கிறது. இதுவே தலைவன் நானாக இருந்தால் பிரிவு தாங்காமல் மடல் ஏறி இக்காதலை இவ்வுலகிற்கு பறைசாற்றி இருப்பேன். ஆதலால் இத்தனை துன்பத்தையும் நாணத்தால் பொறுத்து கொண்டு இருக்கும் இவளை போன்ற பெருமைவாய்ந்த பெண் பிறவி இவ்வுலகில் வேறு இல்லை. 

இக்குறளின் கருத்தை வழிமொழிந்திருக்கின்றன சீவக சிந்தாமணியும், சூளாமணியும்.

“கண்ணும் வாளற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே” (சீவக சிந்தாமணி)

“கண்ணிலாம் கவினொளிக் காளை மார்திறத்து
உண்ணிலா எழுதரு காம ஊழெரி
வெண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே” (சூளாமணி)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.).

மணக்குடவர் உரை
கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain