Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

குறள் 996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

பட்டு - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உலகம் -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.; atu   atu அது it, that, that thing  

இன்றேல் - இல்லை என்றால்

மண் -  நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

புக்கு - pukku   n. Paper-tree; பிராய். (பிங்.); pirāy   n. Paper-tree, s. tr., Streblusasper; மரவகை.
பிராயச்சித்தசமுச்சயம் pirāyaccitta-camuccayam, n. A Tamil work on pirāyaccit-tam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல்.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்

மாய்வது - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள்
நற்பண்புகளை உடையோர் இவ்வுலகில் தோன்றி இருப்பதால் தான் இவ்வுலகமும் இவ்வுலக மக்களும் வாழ்கின்றனர். பண்புடையோர் இல்லையென்றால் இவ்வுலகத்தில் உள்ள மக்கள் அழிந்து மண்ணுக்கு இரையாகி மடிந்து இருப்பார்கள். ஆதலால் இவ்வுலகம் நிலைக்க காரணமாக இருக்க வேண்டுமா அல்லது அழிய காரணமாக வேண்டுமா என்பதை முடிவெடுத்து நாம் பண்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அவரவர் கையிலே. இக்குறளை நன்கு அவதானித்து விட்டு முடிவெடுத்தால் நன்று. 

இதனால் தான் என்னவோ யுகபுருஷர்களான இராமன், கிருஷ்ணன் ஆகியோர் நற்பண்புகளுக்கு உதாரணமாக திகழுகிறார்கள். அதுவே இராவணன், கம்சன் போன்றோர் அழிவுக்கு உதாரணமாக இருந்திருக்கிறார்கள். 

கீழ் காணும் புறநானூற்றுப் பாடலில் (புறம்: 182) இளம் பெரும்வழுதி என்னும் புலவர் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறார்:

உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர், 
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே. முனிவிலர் 
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழியெனின் 
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; 
அன்ன மாட்சி அனைய ராகித், 
தமக்கென முயலா நோன்தாள், 
பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறநா.182)

இப்பாடலின் பொருள்: தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள். இவர்கள் உண்ணும் உணவு அமிழ்தம். இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே இவர்களுக்குச் சாவு இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். எந்தச் சூழலிலும் சினம் கொள்ளமாட்டார்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள். பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய மாட்டார்கள். இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம் படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. பண்புடையாரைக் கொண்டே இவ்வுலகம் வாழ்கிறது என்று சங்க இலக்கியப் பாடலும் வலியுறுத்துகிறது.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” 

என்ற ஒளவையாரின் “மூதுரைப்” பாடல் வரிகளின் உள்ளுரைக் கருத்தும் இதேயாம். இக்குறள் நம்பிக்கையை இழக்காமல், ஒருவர் பண்புடையாராக இருப்பினும் மழையாவது பொழியும், உயிர்கள் தழைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மழையின்றி, மன்னுயிர் ஏது? மன்னுயிரின்றி இவ்வுலகம்தான் நிலை பெறுதல் எங்கனம்.?


“ஓய்ந்துளண் வீரன் என்னின் உலகமோ ரேழும் ஏழும்
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமே தெய்வம் என்னாம்
வீய்ந்துறும் எண்க ணான்முன் னுயிரெலாம் வெருவல் அன்னை
ஆய்ந்தவை யுள்ள போதே அவருளர் அறமும் உண்டால் (கம்ப.பிராட்டிகளங்காண் 26)
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.

மு.வரதராசனார் உரை
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

Thirukkural - Management - Relationship
The world has been revolving around because of the presence of people who are polite, courteous, supportive, and encouraging. There are workshops, talks, seminars, and conferences on the importance of and practice of ‘Compassion.' The world needs compassionate people. The world would have disappeared by now but for the presence of compassionate people, confirms Kural 996. People need people to progress. Therefore, relationships sustain this world.

The world goes on because of good men
Else it will turn to dust.

No comments:

Post a Comment