குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
பொருள்
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெற்றாற் - பெற்றார் - பெற்றவர்
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெறுவர் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெண்டிர் - பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை
பெருஞ் - பெரும் - பெரிய
சிறப்புப் - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
புத்தேளிர் - வானோர், தேவர்.
வாழும் - வாழ் - vāẕ வாழு, II. live, sustain life, சீவி; 2. flourish, prosper, live happily, செழி; 3. live together (as husband and wife.) வாழாவெட்டி, a married woman not living with her husband.
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
ஒரு பெண் தன்னுடைய கணவனை போற்றி குடும்பத்தின் கடமைகளை செவ்வென ஆற்றுவார் என்றால் அந்த பெண்ணை தேவர் உலகத்தில் இருப்பவர்கள் போற்றுவார்கள். அதுவே மனைவிமார்கள் பெறக்கூடிய பெருஞ்சிறப்பு.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”பெற்றாற் பிழையாத பெண்டிரும்” (பரிபா.திரட்டு 2:25)
பரிமேலழகர் உரை
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
மு.வரதராசனார் உரை
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
சாலமன் பாப்பையா உரை
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வல்லவனை வரித்தால் வாழ்க்கை சொர்க்கம்
No comments:
Post a Comment