குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]
பொருள்
வருக - வருகை - arrival
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
வருகமன் - வரட்டும்
கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.
ஒருநாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
பருகுவன் - பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.
பைதல் -இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.
paital n. id. 1. That whichis young or small; இளையது. பைதல் வெண்பிறை(தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6). 2. Boy; சிறுவன். பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).3. Sorrow, affliction; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 4. Cold, chilliness; குளிர்.பனிப்படு பைதல் (பரிபா. 11, 75).
பைதல் - paital v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.
பை - pai -s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. [ex பசு.] Color, நிறம். 5. Beauty, அழகு. 6. Green, பச்சை.
பைத்தல், v. noun. Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., as the verb.
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
எல்லாம் - முழுதும்
கெட - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று உள்ளான். அப்பொழுது பிரிவு தந்த பைதல் நோய் தலைவியின் மேனி முழுவதும் படர்ந்து அவளை மிகவும் துன்புறுத்துகிறது. துன்பத்தில் தவிக்கும் தலைவி நினைக்கிறாள், இருக்கட்டும் இருக்கட்டும், என்னை பிரிந்து சென்ற நெய்தல் நிலத்தை சார்ந்த என் தலைவன் ஒருநாள் திரும்பி என்னிடம் வந்து தானே ஆகவேண்டும். அப்பொழுது அவரை ஆரா பசிக்கொண்ட வேள்விப்போல உண்பேன். வேள்வி எவ்வாறு மாசுகளை எல்லாம் எரித்து சுத்தம் செய்யுமோ அதுப்போல அவருடன் மகிழ்ச்சையாக இருக்கப்போகும் நாட்கள் எல்லாம் என் பிரிவின் நோயை அழித்து அதன் நினைவுகளையும் அழித்து விடும் என்றென்கிறாள் தலைவி.
இது பிரிவின் நோய் என்றில்லை, வாழ்வில் கஷ்டமான நாட்கள் இருந்தால் அதனால் தலைவி துன்புற்றால், அவற்றையெல்லாம் அழித்துவிட முடியும். ஆனால் அதற்கு தலைவன் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் தலைவி மகிழ்ச்சியடையும் வண்ணம் செய்வனவற்றையெல்லாம் (தன் அடிப்படை கடமைகளை) செய்யவேண்டும் - என்பதை நாம் இக்குறள் கூறாவிட்டாலும் நாம் அவ்வாறு கண்டுக்கொள்ளலாம்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”கூரா ராழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” (திருவாய் 6.9:1)
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.
மு.வரதராசனார் உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
No comments:
Post a Comment