Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

057 வெருவந்தசெய்யாமை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - வெருவந்தசெய்யாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குறள் 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்


குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

குறள் 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

குறள் 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

குறள் 566




குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

நாடொறும் நாடி முறைசெய்யா

குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாள்தொறும் - ஒவ்வொரு நாளும்

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா  -  இயற்றாமல் இருத்தல்

மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

நாள்தொறும்  - ஒவ்வொரு நாளும்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

கெடும் - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

முழுப்பொருள்
ஒரு அரசருக்கு அன்றாட கடமையாதெனில் ஒவ்வொரு நாளும் மக்களை நாடி மக்களுக்காக  தீவிர ஆராய்ந்து நூல்கள் கூறியுள்ளதுபோல் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து மக்களின் இன்னலைகளை போக்குவது ஆகும். இதில் தனி நபர் தேவைகள் மட்டும் இன்றி நாட்டின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது விவசாயம், பாசனம், நீர்மேலாண்மை, உள்பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, வெளியுறவு, தொழில், வணிகம்,  வனம்/காடு, இயற்கை மேலாண்மை என்று எல்லா துறைகளிலும் அதன் தேவைகளை நாடி பூர்த்தி செய்யவேண்டும்.

அவ்வாறு ஒரு அரசன் செய்யவில்லை என்றால் அந்த நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அழிவு உண்டாகும்.

இங்கே திருவள்ளுவர் நாள்தோறும் என்று இரண்டு தடவை கூறுவதற்கு காரணம் என்னவெனில் கடமைகளை தினம் தினம் ஆற்ற வேண்டும். ஒரு ஆறு மாதம் செய்து விட்டு மீதிநாட்களில் சும்மாக இருந்தால் பயன் ஒன்றும் இல்லை. ஒரு நாள் விடுபட்டாலும் அதனுடைய இன்னல்களை  சந்தித்தாக வேண்டும். அது மட்டும் இன்றி நாட்டின் பிரச்சனைகள் ஒரு நாளில் தீர்வதும் அல்ல அவற்றை களைவதற்கு சிறிது சிறிதாக செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடித்தாலும் அது மறுபடியும் வராமலிருக்க நாள்தோறும்  உழைக்க வேண்டும். ஒரு பழைய பிரச்னை முடிந்தால் ஒரு புதிய பிரச்னை இருக்கும். ஆதலால் வேலை என்பது எந்நாளும் இருக்கும்.

இக்குறள் அரசனுக்கு மட்டும் பொருந்தாது, இது ஒவ்வொரு குடும்ப தலைவனுக்கும் நிர்வாக தலைவனுக்கும் பொருந்தும்.  அரசன் என்ற சொல்லுக்கு கணவன் என்ற பொருளும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை அறிவோம் நாம்.  ஒரு தன்னுடைய அறத்தை கடமையை தர்மத்தை ஆற்றவில்லை தேவையான பொருளை  ஈட்டவில்லை என்றால் அவனால் இன்பத்தை ருசிக்க முடியாது. கேடு விளைந்து அழிவு உண்டாகும்.

நான்கு வேடங்கள் - என்ற ஜெயமோகன் கட்டுரையை வாசித்தால் அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இன்னும் ஆழமாக அறியலாம்.

முதுமொழிக்காஞ்சி 9:1, “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் முறையில் அரசன் நாடுதல் கூர்ந்தன்று” என்று இக்குறளை ஒட்டிச் சொல்கிறது.

திருமூலரின் திருமந்திரப்பாடல் 239, ஒன்றும் இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி 
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல் 
நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால் 
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே”

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே” என்றும், செங்கோல்முறை தவறும் மன்னர்க்கு நரகமே என்றும், அவரே கூறுவார்!

“பழிபடர் மன்னவன் பரித்த நாட்டினூஉங்
கழிவதென் காரணம் அறிஞ கூறென்றான்” (கம்ப.தாடகை 20)

மேலும்: அஷோக் உரை
நாள்தொறும் நாடிழத்தலாவது,
"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம்

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து வதால்" . (சிலப். 11:60 - 45) வரவர வளங்குன்றுதலும் , குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங்கைப்பற்றப் பெறுதலுமாம் . நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது.

பரிமேலழகர் உரை
நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Everyday a King has to perform his duties in order to develop the country, improve the quality of life of the people, protect the country and prepare of the future. He should have appropriate teams in place to gather data , get plans done by experts, make decisions, approve plans, oversee the execution of plans and results of the plans etc. The King who fails to do perform his daily job will see his country ruining everyday. This applies to the head of a family, leader or CEO of a company etc

Questions that I ask to the kid
A country is ruining daily. Why?

056 கொடுங்கோன்மை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - கொடுங்கோன்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு 
அல்லவை செய்தொழுகும் வேந்து

குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு

குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு

குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

குறள் 556




குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர்

குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
இரண்டாம்உயிரெழுத்து; குரலிசையின்எழுத்து; பெற்றம் மரை எருமைஇம்மூன்றன்பெண்பாற்பெயர்; இடபம் ஆன்மா காண்க:ஆச்சா; விதம் ஆகுகை; ஆவது ஓர்இரக்கக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு; புழுக்கக்குறிப்பு; நினைவுக்குறிப்பு; ஈற்றில்வரும்வினாவிடைச்சொல்; எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை; பலவின்பால்எதிர்மறைவினைமுற்றுவிகுதி; உடன்பாட்டுஇறந்தகாலவினையெச்சவிகுதி; தொடங்கிஅல்லதுவரையும்எனப்பொருள்தரும்ஒருவடமொழிஇடைச்சொல்.

பயன் பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

குன்றும் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

அறுதொழிலோர் aṟu-toḻilōr   n. ஆறு³+. Brāhmans; பிராமணர்.

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை;
நூல் - ஒருவர் நூல்களால் பெற்ற அறிவு

மற-த்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
மறப்பர்

காவலன் - பாதுகாப்போன்; அரசன்; மெய்காப்பாளன்; கணவன்; கடவுள்

கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்

காவான் - பாதுகாக்கவில்லை / கடமையை செய்யவில்லை

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
ஒரு அரசன் தனது கடமைகளை செய்யவில்லை என்றால், அதாவது மக்களையும், நாட்டின் செல்வத்தையும், செல்வம் எனப்படும் அறிவுச்செல்வத்தையும் பொருட்செல்வத்தையும், காக்கவில்லை என்றால் அந்த நாட்டில் எல்லா செல்வங்களும் குறையும், அறத்தொழில் செய்யும் பிராமணர்கள் தாங்கள் கற்ற நூலில் இருந்து பெற்ற அறிவினை மறந்துப்போவார்கள்.

பயன் என்ற சொல்லுக்கு பால் என்ற பொருளை பல உரைகள் கூறுகின்றன. பால் வளம் என்பது எல்லா தேசங்களிலும் பிரதானமான ஒன்று என்று சொல்ல முடியாது. ஆதலால் பயன் என்ற சொல்லுக்கு செல்வம் என்பதே பொருந்தும். செல்வம் என்றால் விவசாயம், விலங்குகள், மக்கள் என்று அனைத்துச்செல்வங்களும் அடங்கும். அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் இச்செல்வங்கள் குறையும்.

அறுதொழிலோர் என்று இங்கு பிராமணர்களை கூறப்படுகிறது. ஆனால பிறப்பால் பிராமணர்கள் என்று கூறப்படவில்லை. மனுஸ்ம்ருதிகள் பிராமணர்களுக்கு வகுக்கபட்ட ஆறு தொழில்களை செய்யும் பிராமணர்களை குறிக்கிறது.  ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மை இங்கு குறிக்கிறது. ஆதலால் அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் வேறு எந்த தொழிலையும் செய்யாமல் கல்வி கற்பதையும் வேள்வி செய்வதையும் மட்டும் கொண்ட பிராமணர்களை அரசால் சரிவர பாதுக்காக்க முடியாது. அப்படி பிராமணர்களை பாதுகாக்கவில்லை என்றால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக காத்து வரும் அறிவினை ஞானத்தினை மறந்துப்போவார்கள். ஞானம் ஒரு நாட்டின் மிக பெரிய சொத்து. அதனை ஒரு நாடு இழக்கும் என்றால் அதனை திரும்ப பெற பல நூற்றாண்டுகள் கூட ஆகும். அது ஆபத்தானது. அழிவானது.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது அரசனின் தலையாய கடமை. அதனை செய்யவில்லை என்றால் அது கொடுங்கோல் ஆட்சியாகும். அனைத்து செல்வங்களும் குன்றும்.

மேலும்: அஷோக் உரை

அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது பிராமணத்தன்மை பற்றி குறள் சொல்வதென்ன என்றும் பார்க்கலாம். அந்தணர் என்று குறள் சொல்வது பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. அறவழி நின்றவர் என்ற பொருளில் அது பயின்றுவருவதனாலும் குறளின் பொதுவான கருத்துநிலையாலும் அது அறிவர் என்றும் அறவோர் என்றும் சமணர்களால் சொல்லப்படும் துறவிகளையே குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள் அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.

ஆனால் குறள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் [ குறள் 560]

என்று சொல்லும் இடத்தில் அது பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு தொழில்களையே குறிக்கிறது என்பது தெளிவு. வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்கு பட்டியலிடுகிறது.  பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.

குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற சொல்லாட்சியின் வழியாக பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த அடையாளத்தையே முன்னிறுத்துகிறது என்று சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ அது பொருட்படுத்தவில்லை. ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மையையே அது கணக்கில் கொள்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளில் உள்ள செய்தொழில் என்ற சொல்லுடன் இங்குள்ள அறுதொழில் என்ற வரியை இணைத்துக்கொள்ளலாம்.

ஆக, முழுமையாக மனு முதலிய ஸ்மிருதிகளில் இருந்து வேறுபட்டுச் செல்கிறது குறள்.

பரிமேலழகர் உரை
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

055 செங்கோன்மை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - செங்கோன்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை

குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழுங் குடி

குறள் 543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

குறள் 544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

குறள் 545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

குறள் 546

குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்