குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம்.
காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.
காக்கும் - பாதுகாக்கும், அரசாளும்
வையகம் - மண்ணுலகம்; விலங்கு இழுக்கும் வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
எல்லாம் - அனைத்தும், முழுதும்
அவனை - அந்த தலைவனை, அரசனை
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள் மாறி மாறி வேலை செய்யும் நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவு முறைப் பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
முறை - ஊழ், நீதி
காக்கும் - பாதுகாக்கும்,
முட்டு - விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; தடை; தட்டுப்பாடு; சங்கடம்; குறைவு; உட்சென்று கடத்தலருமை; கண்டு முட்டுக்கேட்டு முட்டு முதலிய தீட்டுகள்; மாதவிடாய்; கருவி:சில்லறைப் பொருள்கள்; பற்றுக்கோடு; முழங்கால், முழங்கை, விரல்கள்இவற்றின்பொருத்து; மேடு; குவியல்.
முட்டு - s. Want, difficulty, straits, ex tremity, இடுக்கண். 2. Battering; butting of a beast, முட்டுகை. 3. A prop, a sup port, தாங்கல். 4. Utensil, as தட்டுமுட்டு. 5. A blockade, an impediment, அடைப்பு. 6. [in combin.] A musical instrument, as நட்டுமுட்டு. 7. A bridle, கடிவாளம். 8. The knee, முழங்கால். 9. The menses of women, தொடக்கு. 1. (R.) Rising ground, மேடு. முட்டுற்றபோழ்தின். In the time of adver sity. (நாலடி.) எனக்குவெகுமுட்டாயிருக்கிறது. I am in great straits (for money).
முட்டாட்டம் - முட்டுகை; முட்டாள்தன்மை; செருக்கு.
முட்டாச்செயின் - தங்கு தடையில்லாமல், குறைவில்லாமல் செய்தால்
முழுப்பொருள்
ஒரு நாட்டின் அரசருக்கோ நிர்வாகத்தின் தலைவருக்கோ குடும்பத்தின் தலைவருக்கோ அரச/ நிர்வாக/ குடும்ப நியதியின்/ நெறியின் படி பல கடமைகள் உண்டு. அந்நெறிகளின் படி தடையில்லாமலும் எவ்வித குறையில்லாமலும் அனைத்து மக்களையும் காத்தலே தலைவனின் கடமை. அப்படி காத்தால் காத்தலின் ஊழாக (பயனாக, முறையாக) அந்த நல்ல விளைவுகளே அவனை காக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
இதனை நமது வேலைக்கு ஒப்பிடலாம், நாம் நமது வேலையை ஒழுங்காக செய்தால் நமது வேலை பறிப்போகாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. நம்மை வேலையில் இருந்து விரட்டமாட்டார்கள். இக்கட்டான நேரங்களிலும் நல்ல வேலையாட்களை காப்பாற்ற நிர்வாகம் முயற்சி செய்யும். ஆனால் வேலையில் அலாதியாக இருந்தால் அவர்களையே முதலில் விரட்டுவார்கள்.
நம் குடும்பத்தை எடுத்துக்கொண்டால் தலைவன் தன் பிள்ளைகளை முறையாக அன்புடன் வளர்த்தால் கல்வி கொடுத்து வளர்த்தால் பின்பு பிள்ளைகள் தங்கள் சொந்த கால்களில் நிற்பர். நல்ல பிள்ளைகள் பெற்றோரின் முதுமையில் அவர்களை பேணிக் காப்பர்.
இதனை "செய்வன திருந்தச் செய்" என்கிறார் ஒளவையார்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 )தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.
முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.
மு.வ உரை
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
நன்றி: ரிஷ்வன்
அறம்போற்றி குடிகளை
நெறிமுறை வழுவாமல்
தினம்போற்றி காப்பானாயின்
குறைபடாத நீதி
அவனின் ஆட்சியை
முறையோடு காக்குமாம்.
English Meaning - As I taught a kid - Rajesh
A king / family head / organization's head / team's head protects all the world by doing his duties promptly and diligently without dissatisfaction/mistakes. Such a king / leader is protected by the justice that he dispenses resolutely i.e., the results of his dharma/duties will protect him.
W.r.t our jobs/career, If we do our work diligently, most likely we won't loose our jobs (unless there is mass layoffs or recession). In difficult situations also our organizations, our managers will try to save us. In case we lose our job, we can get another job by show casing (or prove) our work in previous jobs.
Questions that I ask to the kid
What does a king/leader protect?
How a king is protected?
No comments:
Post a Comment