குறள் 544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
தழீ - ஓர்ஒலிக்குறிப்பு
தழுவு - அணைப்பு; இருகையிலும்அணைக்கும்அளவு.
இக்கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.
செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை
ஓச்சு-தல் - எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல்.
ஓச்சும் - உயரும்
மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.
நில - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
மன்னன்
அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை, சூழ்
தழீஇ - ஓர்ஒலிக்குறிப்பு

நிற்கும் - நிலைக்கும்
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
குடிமக்களின் நலனை கருதியும் அவர்களை அரவணைத்து நாட்டின் நலனை கருதியும் நல்லாட்சிச் செய்கின்ற அரசன் அந்த நிலத்திருக்கு பெருமை தேடித்தருகிறான். அந்த மக்களின் நலனையும் அந்த நாட்டின் நலனையும் நாட்டின் வளங்களின் நலன்களையும் உயர்த்துகிறான். அப்படிப்பட்ட மன்னனை சூழ்ந்து அரவணைத்து இவ்வுலக மக்கள் என்றும் இருப்பார்கள். இங்கே உலகு என்று கூறுவதால் தன்னாட்டு மக்கள் மட்டும் அல்ல பிறநாட்டு மக்களும் இந்த அரசனின் மேல் அன்புடனும் மதிப்புடனும் இருப்பர் என்பதை அறியலாம்.
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நாயகன் அல்லன் நம்மை நனிபயந் தெடுத்து நல்கும்
தாயென இனிது பேணத் தாங்குதி” (கம்ப.அரசியல்.34)
“முறையறிந் தவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறையறிந் துயிர்க்கு நல்லும் இசைகெழு வேந்தன் காக்கப்
பொறைதவிர்ந் துயிர்க்கும் தெய்வப் பூதலம்” (கம்ப.நாட்டுப்.20)
பரிமேலழகர் உரை
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.
(அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
மு.வ உரை
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா உரை
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

No comments:
Post a Comment