குறள் 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
பொருள்
இன்மையின் - இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
இன்னாது - தீது; துன்பு
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
செய்யா - செய்யாமல்
மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
கோற் - கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.
கீழ்ப்படின் - அடங்கிநடத்தல், இழிவுபடுதல், தாழ்வுபடுத்தல்;
முழுப்பொருள்
வறுமையில் இருப்போருக்கு எப்பொழுதும் துன்பங்கள் இருக்கும். (நல்ல ஆட்சியாளர்கள் வந்து அவற்றை நீக்கக்கூடும்.) அது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று என்றுக்கூட கூறலாம். ஆனால் வறுமையில் செல்வம் இல்லாது இருப்பதை விட செல்வத்தை உடைய நேர்மையான செல்வந்தோர் துன்பத்தை அனுபவிக்கும் காலம் இருந்தால் அது கொடுமையான காலம். ஏனெனில் அந்த நாட்டின் மன்னன் மிக தவறான கொடுமையான ஆட்சியை நிகழ்த்துகிறான்.
இல்லாரிடம் எடுத்துக்கொள்ள ஏதுமில்லாததால், அவர்களுக்கு மேலும் வருந்துன்பம் ஒன்றுமில்லை. ஆனால் செல்வம் உள்ளார்க்கு, எப்போது அரசன் அவற்றை எடுத்துக்கொள்ளுவானோ என்ற பயமும், அதனால் துன்பமும் இருந்துகொண்டே இருக்கும்.
ஆதலால் தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
உதாரணமாக நாம் இன்றைய ஆட்சிகளில் பல செல்வந்தர்கள் தங்களது அழகிய வீடுகளை ஆட்சியாளர்கள் அபகரித்த கதைகளை கேட்டுள்ளோம். உதாரணமாக திரைப்படங்களில் பணிப்புரியும் பல்கலை கலைஞர் கங்கை அமரனின் வீட்டை அபகரித்த கதைகளை சிலர் அறிந்திருப்பர். கங்கை அமரன் அவருடைய உழைப்பில் பெற்ற இடம் அது. ஆனால் ஆட்சியில் இருக்கும் சகோதரிகள் அதனை அபகரித்த கதை ஒரு கொடுமையான ஆட்சியின் கதை. அதுப்போல சினிமா துறையில் பல ஓடக்கூடிய வெற்றிப்பெறக்கூடிய சினிமாக்களை தயாரிப்பார்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ”வாங்கி” விநியோகித்து எவ்வித உழைப்பும் இன்றி இலாபத்தை மட்டும் அனுபவித்த ஆட்சியாளர்களின் பேரன்கள் மச்சான் பிள்ளைகள் (அவர்களின் நிர்வாகங்கள்) எல்லாம் உண்டு. இவற்றைப்போல் பல கதைகள் உள்ளன. பல செல்வந்தர்கள் தங்களது பல ஏக்கர் நிலம், பங்களா வீடு, பனை விடு, வணிக வளாகங்கள், நிர்வாகங்களை அபகரித்த கதைகள் பல உண்டு.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.
மு.வரதராசனார் உரை
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
No comments:
Post a Comment