Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

தொழுதல் - வணங்கல்

தொழா - வணங்காத

அள் -அள்ளப்படுவது; செறிவு வன்மை வண்டிவில்லைத்தாங்கும்கட்டை; பற்றிரும்பு கூர்மை பூட்டு நீர்முள்ளி அள்ளுமாந்தம் காது பெண்பால்விகுதி.

கொழுநன் - கணவன்; இறைவன்

தொழுதுதொழுதல் - வணங்கல்

எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.

எழுவாள் - தோன்றுவாள் 

பெய்  - பெய்-தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

பெய்யும் - பெய்-தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to

மழை - மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி

முழுப்பொருள்
மற்ற தெய்வத்தை வணங்காது கணவனை தெய்வமாய் வணங்கி ஒழுக்கமாக நடந்து இல்லறத்தை நடத்தும் துணைவியார் பெய் என்றால் மழை பொழியும். திருமணத்தில் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உறுதிமொழியிலே வழுவாது நடத்தும் இல்லறத்திலே, கற்புநெறி காக்கப்படுகிறது.

பொதுவாக ஆண் அறிவுசார் உலகத்தை சார்ந்தவன். ஒருநாளும் தன்னை ஒருநிலை படுத்தமாட்டான். புத்தி அதிகமானால் உணர்வு குன்றும். உணர்வு குன்றினால் ஒழுக்கம் பேண முடியாது. பெண் அவனையும் சேர்த்து காப்பாற்றினாள் தான் உண்டு.

அதுவே பெண் உணர்வு சார்ந்தவள். ஆதலால் உணர்வு சார்ந்த பெண் தன்னை அடக்கி ஆள்வாள் என்றால் இயற்கையும் அவளின் ஏவலுக்கு உட்படும். இது பெண்ணுக்கு மட்டுமே சாத்தியம். அது பெண்ணின் (பேர்)ஆற்றலை கூறுகிறது.

புராணத்தில் ஒரு கதை உண்டு ஒரு பெண் மும்மூர்த்திகளை தன் குழந்தையாக ஆக்கினாள் என்று. பெண்ணுக்கு அவ்வாற்றல் உண்டு.

கம்பர் கம்பராமாயணத்தில் கூறுகிறார், அனுமன் வாளுக்கு தீ வைக்கப்பட்டது. சீதை சுடாது என்றுவிட்டார். அனுமனுக்கு ஆச்சர்யமாகிவிட்டது. இது எப்படி சுடவில்லையென்று. அனுமனை போல அறிவாளி இராமாயணத்தில் வேறொருவர் இல்லை. ஆனால் சீதையை முன்பு ஒரு குழந்தையை போல் இருந்தான். ஏனெனில் சீதையின் ஒழுக்கம் அப்படி. அவள் ஒழுக்கத்தின் முன்பு அறிவு ஒரு தூசு. சீதை நெருப்பில் இறங்கு என்று சொன்னார்கள். அவள் இறங்கினாள். ஐயோ என்ன இவள் இப்படி சுடுகிறாள் என்று நெருப்பு அலறியது. அப்படி பட்டது சீதையின் ஒழுக்கம்.

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் கூறுகிறார். கண்ணகி ஒரு எல்லைக்குமேல் ஆவேசம் அடைந்து தன் மார்பை திருகி வீசுகிறாள், மதுரை எரிகிறது. அப்பாடல் கீழே
"பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க தீ!"

பாஞ்சாலி சபதத்தில் கீழ்காணும் வாரு திரௌபதி சொல்வதாக பாரதியாரை கூறுகிறார். அதாவது இயற்கை அவள் ஏவலுக்கு உட்பட்டது என்கிறார்.
ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சமகால இலக்கியங்கள். இவையிரண்டுமே, இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளன.
சிலப்பதிகார கட்டுரைக்காதை இறுதிவெண்பாவில் இவ்வாறு வருகிறது.

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணினதால் – தெய்வமாய்
மண்ணக மாந்தர் கணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து”

இக்குறளையும், குறள் எண் 58-ல் கூறப்பட்ட ‘பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு’ என்கிற கருத்தையும் ஒருங்கே சொல்லியுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனாரும், மணிமேகலையின் 22-ம் அத்தியாயத்தில் (சிறை செய்காதை) இக்குறளையே மேற்கோளாகக்காட்டி, அதில் வள்ளுவரைப் "பொய்யில் புலவன்" என்று சுட்டியிருப்பார்.

”தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்;
பெய்எனப்பெய்யும் பெருமழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!”
“கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை”

என்னும் கொன்றைவேந்தனின் சொற்றொடரின்படி, திருமணத்தில் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உறுதிமொழியிலே வழுவாது ஆணும் பெண்ணும் நடத்தும் இல்லறத்திலே, கற்புநெறி காக்கப்படுகிறது.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்றாலும், பெண்ணுக்குத்தான் அது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. நல்லத்தங்காள், நளாயினி, சீதை, கண்ணகி என்று கற்புக்கரசிகளை இதிகாசங்களும், வரலாறுகளும் இன்னமும் போற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.  இராமவதாரனும் அத்தகு ஒழுக்கநெறியில் இருந்ததாலேயே அவனுக்கு சிறப்பும் அவனை ஆண்களில் உயர்வானவன் என்கிற பொருளில் புருஷோத்தமன் என்றதும்.

மனமுறிவுக்கும் வெகு எளிதாக இடங்கொடுத்து, மணமுறிவுகளை சாதாரணமாக நிகழ்வாகக் கொள்ளும் இன்றைய சமூகச் சூழலில், கற்பின் திறம் கையாலாகாதவர்களின் கற்பனைத்திறமாகக் கருதப்படுவது வருந்தற்குரியது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
1. "காமவேள் கோட்டம் தொழுதார் நன்மை பெறுவர்" என்ற விடத்துக் கண்ணகி “பீடன்று” என இருந்தாள் என்பர் இளங்கோவடிகள் (சிலப்.9:60-64); அதன் உரையின் “தெய்வம் தொழுதல் எங்கட்கு இயல்பு அன்று” என உரைத்தார் அடியார்க்கு நல்லார்

“கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப், பெண்டிர்” (மணி.8:101-2)
“கடவுட் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறையுடைப் பெண்டிர் தம்மே போல” (மணி 22:64-6)

“தங்கள்நா யகரில் தெய்வம் தான்பிறி தில்லென் றெண்ணும்
மங்கைமார்” (கம்ப.வேள்விப் 16)

2. “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய் கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து” (சிலப் 23, இறுதி வெண்பா)
“காமனை யென்றும் சொல்லார் கணவர்க்கை தொழுது வாழ்வார்” (சீவக.1598)

3. ”குறவர் மடமகளிர் தாம்பிழையார்
கேள்வர்த் தொழுதெழலால்” (கலி 39:16-7)

4. ”வறனோடின் வையகத்து வான்தரும் கற்பினாள்” (கலி 16:20)
”அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே” (கலி 39-6)
“கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி...
இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை” (திரிகடும் 96)
“பெண்பால், கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து” (திரிகடும் 98)

“வானம் பெய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் குறையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” (சிலப் 15:145-7)

“பத்தினி மகளிர் பெய்யெனப் பெய்யும் மழைஎன்பதூஉம்” (சிலப்.பதிகம் 89, அரும்பத)

“வான்கரு கற்பின் மனையுறை மகளிர்” (மணி 15:77)
“புண்ணியம் முட்டாள் பொழிமழை தரூஉம்
அரும்பெறன் மகளிர்ப் பத்தினிப் பெண்டிரும்” (மணி 16-49-50)

“மண்டிணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டிர்” (மணி 22:45-6)

”ஓங்கிரு வானத்து மழையும்நின் மொழியது” (மணி 99)

“நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும்
பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும்
கூட லாற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே” (வளையாபதி)

“மழைக்குதவும் பெருங்கற்பின் மனைவியார்” (பெரிய.மானக்.11)

”மாதரார், அற்பின் நின்றன, அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே” (கம்ப.நாட்டுப் 59)

5. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” (மணி 22:59-61)

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறோம். ‘திருக்குறளில் காலத்துக்குப் பொருந்தாத எத்தனையோ கருத்துகள் இருக்கின்றன. அவற்றைத் தற்காலத்திற்கு எப்படி வலியுறுத்திச் சொல்ல முடியும் ? பெண்களைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் ஏற்புடையவையா ?’ என்ற வினாக்கள் எழுப்பப்படுகின்றன. 

இவற்றுக்கு உடனடியாக நம்மால் விடைகூற முடிவதில்லை. ‘இல்லைங்க. வள்ளுவர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்’ என்று சொன்னால் வினவியவர்கள் ஏற்று அமைவதில்லை. இதற்கு விடைகூற நூற்றுக்கணக்கான தரவுகளின் செம்மையோடு சார்பற்ற மனத்தோடு சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

ஓர் அற இலக்கியம் எழுதப்படுகிறது. அது எழுதப்பட்ட காலத்தின் நிலைமைகள் இன்றுள்ளவற்றோடு முழுமையாக வேறுபடுகின்றன. ஆனாலும் ‘அறம்’ என்பது முக்காலப் பொருத்தமுடையது. அது காலத்தால் தேய்ந்து வழக்கொழிந்து நீங்குவதாக இருக்க முடியாது. அதே சமயம் காலம் புரண்டு படுக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்தப் புரள்வு அப்படியே நிலைப்பதுமில்லை. மீண்டும் சுழல்கிறது. அதனால் அறக் கருத்துகள் சில ஒளி மங்குவதும் பின் புத்தொளியூட்டம் பெறுவதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

மலைப்பாங்கான அடர்ந்த வனத்தில் இருக்கின்றோம் எனக் கொள்வோம். கால் வைத்தால் சதுப்பாகப் புதைகிறது. மழையூறி நிலம் வழுக்குகிறது. தவறி விழுந்தால் அதள பாதாளம்தான். எப்படியாவது நம்மை நிலைப்படுத்திக்கொண்டு நிதானமாக எட்டு வைத்து அவ்வனத்தைக் கடக்கப் பார்க்கிறோம். அதற்கு எதையேனும் துணைக்கோலாகக் கொள்ளத் தேடுகிறோம். வலுவான ஆளுயர மூங்கில் ஒன்று கிடைக்கிறது. அதைக் கைப்பற்றிக்கொள்கிறோம். அந்த மூங்கில் கம்பை ஊன்றி ஊன்றி மலைப்பாங்கான வனத்தைக் கடந்து வருகிறோம். 

வனமலை கடந்ததும் பேராறு ஒன்று குறுக்கிடுகிறது. அங்குள்ள காய்ந்த மரங்களைச் சேகரித்து, கொடிகளைப் பறித்துக் கட்டி தெப்பம் செய்துகொள்கிறோம். தெப்பத்தை ஊன்றித் தள்ள அந்த மூங்கில் கம்பைப் பயன்படுத்திக்கொள்கிறோம். காட்டாற்றுப் போக்கோடு தெப்பத்தை உந்தித் தள்ளி ஒருவழியாக நல்ல சமவெளிப் பரப்பை அடைந்துவிட்டோம். இப்போது அந்தத் தெப்பம் தேவையில்லை. அது ஆற்றோடு போகும்படி அனுப்பிவிடமாட்டோம். ஓர் ஓரத்தில் இழுத்துக் கட்டி நிறுத்துவோம். பிறகும் தேவைப்படலாம். 

சமவெளியில் அச்சுறுத்தும் மிருகங்கள் இருக்கக் கூடும். நம்மை அவற்றிடமிருந்து காத்துக்கொள்ள அதே மூங்கில் கம்பு பயன்படும். அறக் கருத்துகள் என்பவை அந்த மூங்கில் கம்பினைப் போன்றவை.

எங்கும் பொருந்திக் காக்கும் தொழில் செய்ய வல்லவை. எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதைப் பயனாளர்களின் அறிவு தீர்மானிக்க வேண்டும். அது தேவையில்லை என்று வன எல்லையிலேயே எறிந்திருந்தால் நட்டாற்றில் தவித்திருப்போம். அங்கேயே நம் கதை முடிந்திருக்கலாம். சமவெளியை அடைந்ததும் அதைத் தூக்கி எறிந்தால் மேலும் உள்ள ஆபத்துகள்பற்றி நமக்கென்ன தெரியும் ?

பெண்மை குறித்து எழுதப்பட்ட முற்காலக் கருதுகோள்கள் இன்று நமக்குப் பொருந்தாமல் போகலாம். யாருக்குத் தெரியும், அதுவே நம்மைப் பல்வேறு பிறழ்வுகளிலிருந்து தற்காத்திருக்கவும் உதவியிருக்கக் கூடும். ஒரே தாண்டலில் நம் வாழ்வு இந்த இடத்திற்கு வந்துவிட்டதாக எண்ண இயலுமா ? அது பண்பாட்டுக் கூறாகி வழிவழி வந்தபின் ஆணிவேராகி, ஊற்றம் வலுப்பெற்றுவிடுகிறது. 

நம் விரல்கள் இத்தனை நீளமாக ஒரே நாளில் முளைத்துவிடவில்லை. நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மரக்கிளைகளை விடாதுபற்றிப் பிடித்துத் தொங்கியதன் விளைவுதான் நம் நீள விரல்கள் என்பதைப் பரிணாமவியல் விளக்குகிறது. அந்த விரல்களைக்கொண்டு எத்தனை அற்புதங்கள் படைத்தோம் ! எல்லாம் எங்கிருந்து வந்தது ? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோரின் முன்னோரின் முன்னோர் மரங்களைப் பற்றித் தொங்கிக்கொண்டிருந்தனர். அதன் விளைவாக இன்று நான் சரளமாக அச்சுத்தட்டுகிறேன். விரல்கள் நம் உலகை ஆக்கின. எல்லாமே அப்படித்தான், ஒன்றுடன் ஒன்று’ செறிந்த நுண் தொடர்புடையது. 

மானமும் வீரமும் தமிழர் பண்புகள். மானம் என்பது தன் தகைமைக்கு எவ்வொரு இழுக்கும் நேராத நேர்நிலை. வீரம் என்பது அந்த மானத்திற்குக் கேடெனில் உயிர் கருதாது நெஞ்சை நிமிர்த்தும் உணர்ச்சி. 

பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று வள்ளுவர் தெளிவாக முன்னுரைத்துவிடுகிறார். பெண்ணை விடவும் பெருந்ததகைமையுள்ள வேறொன்றாக எதுதான் உள்ளது ? அந்தத் தகைமை அவளிடம் மட்டுமே உள்ளது. 

இப்போது குறளுக்கு வருவோம். 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இறைவனைத் தொழாமல் கணவனைத் தொழுதெழுகின்றவள் பெய்’ என்றால் மழை பெய்யும்.

தன் மானத்தைக் காக்கும் செய்கையுள்ளவன் கணவன். வீர உணர்ச்சியால் நிரம்பியவன். வாழ்க்கைத் துணையாகி அவனோடு வாழும் வாழ்க்கைக்கு வேறொன்றும் ஈடில்லை. இது ஈருடல் ஓருயிர் நிலைமை. உயிர்கலந்து உவப்பாகி உருகிநிற்கும் உறவுகளுக்கு ‘எங்களைப்போல் இவ்வுலக இன்பத்தைத் துய்த்தார் ஒருவருமிலர்’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். அவள் தெய்வத்தை ஏன் தொழ வேண்டும் ? தன்னை, தான் ஈன்றவற்றைக் காக்கும் செயலுள்ளவனைத் தொழுதாள். தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். அந்த இனிய வாழ்வில் பெருஞ்சோலைகளின் குளிர்ச்சியோடு வாழ்கிறாள். அதில் சிறு கீற்றளவும் பிறழ்வில்லை. அந்த உரமான உள்ளத்தின் கட்டளை எத்துணை குளிர்ச்சியோடு இருக்கும் ? அவள் ‘பெய்’ என்று பணித்தால் வேறொரு மலைமுகடு தேடிப் போய்க் குளிர்ந்து மழையாகப் பொழியவேண்டிய தேவை முகில்களுக்குண்டா ? இல்லை. அவள் உத்தரவுச் சொற்கள் பட்டதில் குளிர்ந்த முகில்கள் அங்கேயே மழையாகிப் பொழிந்துவிடும்.

பரிமேலழகர் உரை
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

மு.வரதராசனார் உரை
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

சாலமன் பாப்பையா உரை
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

No comments:

Post a Comment