Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

 

குறள் 567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கடுமொழியும்கடுமொழி - கடுமையானசொல், வன்சொல்.

கையிகக்க - kaiyikkk   inf. To exceed, be excessive, break over bounds, வரம்புகடக்க. 2. To escape one, to be gone beyond recall, to be irrecoverable. (p.)

கையிகந்த - கையிகத்தல் -அளவுக்குமேற்படுதல்; மீறுதல்; ஒழுங்குதப்புதல்; கடத்தல்.

தண்டமும்  - தண்டம் - கோல்; தண்டாயுதம்; அபராதம்; தண்டனை; குடைக்காம்பு; உலக்கை; படகுதுடுப்பு; ஓர்அளவை; உடம்பு; படை; படைவகுப்புவகை; திரள்; வரி; கருவூலம்; இழப்பு; யானைகட்டும்இடம்; யானைசெல்லும்வழி; ஒறுத்துஅடக்குகை; வணக்கம்; ஒருநாழிகைநேரம்; செங்கோல்.

வேந்தன் -  எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

அடு - அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

முரண் -  பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்டொ(தொ)டை; முருட்டுக்குணம்; கொடுமை; மாணிக்கக்குற்றங்களுள்ஒன்று.

அடுமுரண் -  அருகிலேயே பகையாய் இருந்து

தேய்க்கும் - தேய்த்தல் - உரைசச்செய்தல்; துலக்குதல்; குரைத்தல்; செதுக்குதல்; அழித்தல்; துடைத்தல்; எண்ணெய்முதலியனஅழுந்தப்பூசுதல்

அரம் - இரும்பைத்தேய்க்கப்பயன்படும்கருவி; விரைவு வண்டி பாதலம் தோல்

முழுப்பொருள்
1) கடுஞ்சொற்களும் கடுமையான பொருளும் கொண்ட கடுமொழியும் அளவுக்கு மீறிய தண்டனைகளும் படைக்கொண்டு பதிலடி கொடுப்பது அபராதங்களும் ஒரு வேந்தன் உள்நாட்டு கொடுமைகளும் வெளியுறவு பகையும் அளவை மீறும் பயன்படுத்தவேண்டிய ஆயுதங்களாகும். இவ்வாயுதங்கள் கூர்மையான அல்லது அளவு அதிகமாக உள்ள இரும்பைத் தேய்க்கப்பயன்படும் அரம் போன்ற கருவியாகும். 

உள்நாட்டில் அளவுக்கு மீறிய லஞ்சங்கள், தேச தலைவர்கள் கொலை, குழந்தைகள் கற்பழிப்பு, குழந்தைகளை பாலியில் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவற்றை அளவுக்கு மீறிய குற்றங்கள் எனலாம். இதற்கு அதீத தண்டனைகளே தக்கது என்பது எனது கருத்து. அதேப்போல் வெளிநாடு அமைப்புகள் தேவையற்ற கருத்துக்களை நம்மீது திணித்தலோ அல்லது எல்லையில் வால் ஆட்டுவதோ மனிதம் அல்லாத உள்ளாட்டு அலுவல்களில் கருத்து தெரிவிப்பதோ அதீதமான ஒன்று அதற்கு கடுமையான மொழியில் பதில் அடிக்கொடுப்பதும், படைக்கொண்டு பதிலடி கொடுப்பதும் தேவையான ஒன்றே. தவறில்லை.

2) அதேப்போல், முரண் என்றால் பெருமை என்ற பொருளும் உள் அடங்கும் சொல் ஆகும். அதீதமான தேவையற்ற கடுமொழியும் அளவுக்கு மீறிய தண்டனையும் வேந்தனின் பெருமையை அவனருகிலேயே இருந்துக்கொண்டு தேய்க்கும் அரமாக அமையக்கூடும். ஆள்வோன் குடிகளிடம் கடுமையான மொழியும், குற்றத்தின் அளவுக்கு மிஞ்சிய தண்டனையும் கொடுத்து அஞ்சும்படியாக இருந்தால் அவனது அத்தகைய பண்பற்ற செயல்களே அவனருகிலேயே இருந்து பகையாய் அவனை சிறுகச் சிறுகக் குறைத்து அழிக்கின்ற அரமாகிய கருவியாக இருக்கும். ஆதலால் கவனம் தேவை. 

வீடுகளில் உதாரணமாக சொன்னால், பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிப்பது அவசியம் தான். ஆனால் அதற்கென்று சிறிய தவறுகளுக்கெல்லாம் ஒரு மணிநேரம் வியாக்கானம் (counselling/lecture) கொடுத்தால் பிள்ளைகள் மனதில் ஆராத ரணத்தை தந்துவிடும். அந்த ரணத்தின் நினைவுகள் வந்த பிற்காலத்தில் கொல்லும்.  அளவுக்கு மீறிய வியாக்கானம் மென்மையாக அமர்ந்துப்பேசினாலும் அது கடுமொழி என்பதை உணர்க. ஏன் என்றால் எதிரே உள்ளவருக்குத்தான் தெரியும் தான் செய்த சிறியதவறை ஏதோ பாதக செயல்ப்போல இவர் பேசிக்கொண்டு இருகிறாரே என்று தோன்றும்.


ஒப்புமை
சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை
தெறல்கடு மையோடு பிறவும் இவ் வுலகத்து
அறந்தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
தீது      (பதிற்.22:1-5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடுமொழியும் கையிகந்த தண்டமும் - கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை,கண்ணோட்டம் இன்மை , கடுஞ்சொற்சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம்கூறப்பட்டன.

மணக்குடவர் உரை
கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்.
இது வலியைக் கெடுக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Harsh words/strong language and heavy/overboard/cruel punishments are like sharp weapons/tools that can be used to flatten crimes, other country atrocities etc. However, they should be used with caution and used less often only for grave situations. Because if used often, these punishments will become notorious, people will not follow rules and will defeat the purpose of punishment.

Questions that I ask to the kid
Can you use harsh/strong words or heavy tools to punish? Why?

No comments:

Post a Comment