Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்


குறள் 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
எண்பதம் - எளியசெவ்வி, தக்ககாலம்; எண்வகைத்தவசம்; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, கேழ்வரகு.
செவ்வி - cevvi   n. id. 1. Time; காலம் (பிங்.) 2. Season, opportunity, occasion, juncture; ஏற்றசமயம். கதங் காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி (குறள், 130). 3. Audience; காட்சி செவ்வியுங் கொடா னிவ்வியல் புரிந்தனன் (பெருங்.இலாவாண. 9, 198). 4. Bud about to blossom;மலரும்பருவத்துள்ள அரும்பு (பிங்.) 5. Maturecondition; பக்குவம் முதிர்ந்த செவ்வித் தினையினை(கந்தபு. வள்ளி 158). 6. Newness; freshness;புதுமை. காயா மலருஞ் செவ்விப்பூப்போல (பு. வெ 9, 4, உரை). 7. Beauty, fairness, gracefulness,elegance; அழகு (சூடா.) வண்டுறை கமலச்செவ்வி வாண்முகம் (கம்பரா. சூர்ப்ப. 2). 8. Taste;சுவை. நாய் பாற்சோற்றின் செவ்விகொள றேற்றாதாங்கு (நாலடி, 322). 9. Smell; வாசனை நாவியசெவ்விநாற (கம்பரா. கார்கால. 35). 10. State, condition, appearance; தன்மை (W.) 11. Propriety;தகுதி. செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை (கம்பரா. இராவணன்வதை. 210). 12. The 14th nak-ṣatra. See சித்திரை (வீமே. உள் 17.)  

எண் - எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்.

பதம் - பக்குவம்; உணவு, சோறு; அவிழ்; தண்ணீர்; ஈரம்; கள்; அறுகம்புல்; இளம்புல்; இனிமை; இன்பம்; அழகு; ஏற்றசமயம்; தகுதி; பொழுது; நாழிகை; கூர்மை; அடையாளம்; அளவை; பொருள்; காவல்; கொக்கு; முயற்சி; மாற்றுரு; செய்யுளடிநாலிலொன்று; பூரட்டாதிநாள்; மொழி; காண்க:பதபாடம்; இடம்; பதவி; தெய்வபதவி; வழி; தரம்; கால்; வரிசை; ஒளி; இசைப்பாட்டுவகை.

எண்பதத்தான் காட்சிக்கு எளியனாய் (ஆளுவோருக்கும் எல்லா நேரங்களிலும் ஏற்றதல்ல); 

ஓர்த்தல் - ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; நினைத்தல்; கூர்ந்துகேட்டல்.

ஓரா - ஆராயாமல், நினைக்காமல், கூர்ந்துகேட்காமல்

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

செய்யா -செய்யாமல்

மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

தண்பதம் - புதுப்புனல்; புதுப்புனல்விழா; தாழ்நிலை.

தண்பதத்தான் - தாழ்நிலையில் உள்ள்வன் 

தானே - தாமாக, தானாக

கெடும் - கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
எளியோரும் எளிதாக அணுகி நீதி கேட்க வழி செய்யாத மன்னவன், தக்க காலத்தில் ஆராய்ந்து நீதி வழங்க வழி செய்யாத மன்னவன் தாழ்நிலை அடைந்து தானே கெட்டு அழிவான். அவனுக்கு பகைவர் தேவையில்லை. 

நாம் இங்கே முக்கியமாக பார்க்க வேண்டியது
1. எளியோரும் எளிதாக அணுக வழி (Accessibility/ Reach ability) 
2. எளியோருக்கும் நீதி (Righteousness / Justice to everyone including poor people)
3. தக்க காலத்தில் நீதி (Justice on time not late or very late)
4. ஆராய்ந்து நீதி வழங்கும் முறை (A proper judicial process to inquiry and find the truth)

சிலப்பதிகாரத்து பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி கூறும் குறளாக இது உள்ளது. பொற்கொல்லன் சொல்கேட்டு வந்த வழக்கை தீர விசாரிக்காமல், கோவலனைக் கொல்லச் சொல்லி, பின்பு கண்ணகியால் தவறு உணர்த்தப்பட்டு, தன் கொற்றம் தாழ்ந்து, செங்கோல் வளைந்து இறந்து பட்டதை இக்குறள் உணர்த்துவது தெளிவு. 

காட்சிக்கு எளியனாய் இருத்தலை வள்ளுவரே சிறப்பித்து இறைமாட்சி அதிகாரத்தின் ஆறாவது குறளில் இவ்வாறு கூறியுள்ளதைக் கண்டிருக்கிறோம்.

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.” (386 – இறைமாட்சி அதிகாரம்)

ஆள்வோர் எளிமையான தோற்றமும் இயல்பும் உடையவராகவும், பிறரைக் கடிந்து தடித்த சொற்களைச் சொல்லாதவராயும் இருந்தால், வானகமும் அவ்வாள்வோரின் புகழைப் போற்றிக் கொண்டாடும். இதையே புறநானூற்று வரியும், “இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும” (புறம்: 40:9) என்று போற்றியே சொல்லுகிறது.

“முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர்” (புறநா 35:15)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.
(எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும்.
எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.

மு.வ உரை
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

1 comment: