Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும்

குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு
[பொருட்பால்,  அரசியல், கொடுங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கூழும் - பொருள்; பொன்  (குடிமக்களின் ஈட்டுதலால் பெருகும், அருகும்)
குடியும் -  ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
ஒருங்கு -  ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே ) 
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.
கோல் - செங்கோல், அரசாட்சி
கோடி - நூறுநூறாயிரம், தேவைக்குஅதிகமானதண்ணீர், புதுமை,
11 v. tr. cf. krōḍīkāra.1. To adorn, decorate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண.8, 185). 2. To make, form, build; அமைத்தல்.கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4).3. To imagine, picture in mind; மனோரதஞ்செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச். 10, 9).4. To beseech, supplicate; பிரார்த்தித்தல். (யாழ்.அக.)

சூழாது - ஆலோசனை; ஆராய்ச்சி
செய்யும் - செய்கின்ற
அரசு - அரசாட்சி, அரசன்

முழுப்பொருள்
ஒரு அரசன் தன் நாட்டிற்கும் தன் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி அளிப்பது தன்னுடைய கடமை. அதற்கு நிகழ்காலம் மட்டும் அல்லாது வரும் காலங்களையும் வரும் சந்ததியனரையும் நினைத்து செயல் புரிய வேண்டும். உதாரணமாக நாட்டின் அரணை (கோட்டை மட்டும் அல்ல "குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்"). பாதுகாக்க  வேண்டும்"), நிதி நிலைமையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டும், பாதுக்காப்பான ஆட்சி கொடுக்க வேண்டும், எதிரியினரிடம் இருந்து காக்கும் அளவிற்கு அச்சுருத்தும் நெஞ்சுரம் கொண்ட படைகளை உருவாக்க வேண்டும்.

ஆனால் இவையாவும் நடக்க வேண்டும் என்றால் மன்னன் ஆலோசனை செய்து வியூகம் அமைக்க வேண்டும். அப்படி இல்லையேல் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் (நிதி சறுக்கும், சுகாதாரம் கெடும், பாதுகாப்பு குறையும்). மக்கள் அவதிக்கு உள்ளாகி ஆட்சியை வெறுப்பார். பலநாள் கசப்புக்குள்ளான மக்கள் வேறு நாட்டிற்கு குடிப்பெயர்ந்து விடுவார்கள். ஆதலால் நாட்டை கட்டி அமைக்கும் அறிவுச் செல்வமும் இழக்க நேரிடும். ஆதலால் பொருளாதாரம் மட்டும் அல்லாது மக்கள் செல்வத்திலும் அதனால் அறிவு செல்வத்திலும் இழப்புகளை ஒரே நேரத்தில் சந்திக்கும் நாடு.

இந்த மக்கள் நாட்டின் நிலைமை வளர்ச்சிப்பாதையில் பீடு/ கம்பீர நடை போடும் வரை மறுப்படியும் வர மாட்டார்கள். ஆதலால் நல் ஆட்சி கொடுப்பதை மன்னன் சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

உதாரணமாக: இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லு வதற்கு சொந்த நாட்டில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தராதது ஒரு முக்கிய காரணமே. ஆதலால் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இந்தியா செய்யவில்லை ஆனால் 2000ஆம் ஆண்டுகளில் அமேரிக்கா செல்லும் மோகம் குறைவதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வாய்ப்புகள் உறுவாக்க பட்டமையே காரணம்.

மேலும்: அஷோக் உரை
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை செங்கோன்மை தவறிய அரசினால் வரும் தொடர் விளவுகளை இவ்வாறு கூறுகிறது.

“கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாறிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை” (மணி.7:8-10)

“கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீள்நில மாரி இன்றி விளைவஃகிப் பசியும் நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கள் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான்” (சீவக.255)

இதை வேடிக்கையாகச் சொல்லுமிடத்து, கம்பன் குலோத்துங்கனிடம் கோபித்து சேரநாட்டுக்குச் சென்றதாகக் கூறுவார்கள். கம்பன் கோபித்துச் சொன்ன பாடல்:

“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”

ஒரு நாட்டின் அறிவுச்செல்வம் குறைவது, அழிவதும், அந்நாட்டின் அரசு சரியில்லை என்பதையே காட்டுகிறது, “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற சொற்படி, வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், தாய்நாட்டிலிருப்பதையே மக்கள் விரும்புவர். அதற்கு மாறாக, நாட்டைவிட்டு அகலுவார்களேயானால், அந்நாடு அறிவு வளத்தையும், அறவளத்தையும், மற்றும் பொருள் வளத்தையும் மெல்ல இழக்கும். இதை பாரதியின் கோபம் வேறுவிதமாகச் சொல்லியது, “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று.

பரிமேலழகர் உரை
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

மணக்குடவர் உரை
பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.

இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.

வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.

மு.வ உரை
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

சாலமன் பாப்பையா உரை
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
The king who lets his sceptre tilt towards tyranny/repression/despotism/udemocratic rule/reign of terror
will lose (not just) all his wealth, (but also) people and state.

It is the responsibility of the king to give good governance to his citizens. For that the king should not just consider the present but also consider the future generations. He has to take care of the security w.r.t borders, forts. He has to improve the economy by developing schemes. He has improve the healthcare. He has to have the military defense that can attack any opponent. 

For all these, a king should consult with ministers, qualified and reputed scholars/advisors and make decisions. Or else, lots of confusion and chaos will happen. Economy will slow down and deteriorate over period of time, people will suffer. As people suffer they start hating the country and migrate to foreign countries that attract with better opportunities. Because of this the country loses its wealth, loses people which is loss of brain (brain drain. i.e. loss of capacity for a country to develop industries, technologies etc.), loss of tax revenues etc. 

For e.g. A country like India faced lots of brain drain since 1950s to even 2020s because despite good number of reputed educational institutions such as IITs and AIIMS, the policy makers failed to create opportunities that will give allow the educated engineers and doctors to express and develop their skills as well as benefit the financially. 
A country like Pakistan faced lots of financial trouble in 2020s because they focused more on wars with neighboring country India and they didn't focus on developing the country, resolving the problems faced by their people and uplifting the people. This led to increase inflation and people suffer a lot.
A country like Sri Lanka also faced lots of financial trouble in 2020s because they focused more on wars. They got more loans then they could repay. This led to inflation and the country almost went into bankruptcy.

Questions that I ask to the kid
If a king doesn't rule well, what all will he loose? Why? (follow up: a person migrates to another country. In what all ways it is a loss to the country)

No comments:

Post a Comment