Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

 

குறள் 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றியில்செல்வம் - naṉṟi-y-il-celvam   n. id. +. Riches not used in doing good, useless wealth; உபகாரமற்ற செல்வம் (குறள், 101-ஆம்அதி.)  

நச்சு - ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

நச்சுதல் - விரும்புதல்; அலப்புதல்; தொந்தரவுசெய்தல்.

நச்சப் படாதவன்  - விரும்பப்படாதவன் 

செல்வம் -கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

நடு - இடை; மையம்; வானத்தின்உச்சி; நடுவுநிலை; இடுப்பு; நீதி; மிதம்; வழக்கு; பூமி; இடைப்பட்டது; அந்தரியாமியானகடவுள்.
நடுவூருள் - நடு ஊர் உள் - ஊரின் நடுவே

நச்சு -  ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

பழுத்தல் - பழமாதல்; முதிர்தல்; மூப்படைதல்; பக்குவமாதல்; கைவருதல்; பருமுதலியனமுற்றுதல்; மனங்கனிதல்; நிறம்மாறுதல்; நன்மையாதல்; செழித்தல்; மிகுதல்; பழுப்புநிறமாதல்; குழைதல்; காரம்முதலியனகொடாமையால்பிள்ளைபெற்றவயிறுபெருத்தல்.

அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
யாராலும் விரும்பபடாதவனிடம் (அனைவராலும் வெறுக்கபடுபவனிடம்) இருக்கும் செல்வம் ஒரு ஊரின் நடுவே யாராலும் விரும்பபடாத மரத்தில் காய்த்திருக்கும் பழங்களை போன்றதாம். யாருக்கும் பயன்படாமல் கனிந்திருக்கும் பல பழங்களும் தீண்டப்படாமல் அழியும். அதேப்போல் விரும்பபடாதவனிடம் யாரும் வந்து உதவி கேட்கமாட்டார்கள். ஆதலால் அச்செல்வம் பயனல்லாமல் போகும். பயனில்லாம அழியும் செல்வத்திற்கு என்ன மதிப்பும் இல்லை. 

ஆதலால் செல்வம் இருந்தும் எல்லோரும் விரும்பபடுபவனாக ஒருவன் இல்லாமல் இருந்தால் அவனுக்கு என்ன மதிப்பு? ஒரு மதிப்பும் இல்லை. மேன்மையும் இல்லை. புகழும் இல்லை. பெருமையும் இல்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதும்  கடப்பாட்ட தன்று” (நாலடி 261)

பரிமேலழகர் உரை
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
A affluent person who is not loved/liked by anyone or who is hated by everyone is like a tree bearing lots of fruits yet it is not consumed by any bird or animal or human in the center of the city. Those fruits go useless. Hence, the tree goes useless. Similarly the person's wealth would go useless. and the person also goes useless. Hence, there is no respect or value for the both the tree and the men. Hence, one has to remember that compassion, character, personality, helping tendency etc. are more important than wealth one accumulates

Questions that I ask to the kid
Who is considered as a poisonous tree?

No comments:

Post a Comment