Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அன்போடு இயைந்த வழக்கென்ப

குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அன்போடு - அன்புடன்

இயை - அழகு; புகழ், இசைப்பு (junction, union), பொருந்து, வாழை
இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்
இயைந்த - இணங்கிய, பொருந்திய, நிரம்பிய

வழக்கு - vaḻakku   n. வழங்கு-. 1. Moving, passing to and fro; இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 2. (Gram.) Usage,of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இருவகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர்மேற்றே (தொல். பொ. 647). 3. (Gram.) Usage inrespect of words in literature and in speech, oftwo classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku;இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக்குக்கள். (நன். 266, மயிலை.) 4. Customs, manners,ancient practice; பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37). 5. Way, method;நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென்ப (குறள், 75). 6.Justice; நீதி. வழக்கன்றுகண்டாய் (திவ். இயற். 2,19). 7. Litigation; நீதிஸ்தலத்திற்செய்யும் வியாச்சியம். Mod. 8. Legal procedure; விவகாரம்.9. Dispute, controversy; வாதம். 10. Bounty,liberality; வண்மை. உடையான் வழக்கினிது (இனி.நாற். 3).

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

உயிர்க்குயிர் - uyirkkuyir   n. id. +. God,who is the soul of the soul; கடவுள் உயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில் (தேவா. 575, 4).  

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஆருயிர் - அருமை + உயிர்

என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்
என்போடு - என்பு உடன்

இயைந்த - இணங்கிய, பொருந்திய, நிரம்பிய

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
வழக்கு என்றால் வாழ்க்கை நெறி, வாழ்வு என்று நாம் கொள்ளலாம். அதுப்போல என்பு என்றால் எலும்பு, உடம்பு என்று நாம் கொள்ளலாம். தொடர்பு என்றால் உறவு என்ற பொருளில் இங்கு கொள்ளவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஒரு உவமையை மற்றொன்றுக்கு உதாரணமாக காட்டுகிறார் திருவள்ளுவர்.

உயிருக்கு உடல் எதுப்போன்றதோ அதுப் போன்றதே அன்புக்கு வாழ்க்கை யாகும் என்கிறார் திருவள்ளுவர். அதாவது, இவ்வுலகத்தில் உயிர் இருக்கும் பொழுது தான் அவ்வுடலிற்கு மதிப்பு. உயிர் பிரிந்த அடுத்த கணம் அவ்வுடலினை பிணம் என்றே நாம் அழைப்போம். பிணம் என்பது வேகு விரைவில் அழிய கூடியது, அருகில் இருப்போருக்கு தூர்நாற்றம் அடிக்கக்கூடியது. கேட்டை கொடுக்கும்.

ஆதலால் அன்புடன் இணங்கிய வாழ்க்கையே பொருள் கொண்டது. அன்பில்லாத வாழ்க்கை என்றால் அது பிணத்திற்கு சமம். பிணம் சமூகத்திற்கு கேட்டை விளைவிக்கும். மக்கள் அதனை உடன் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

ஔவையும் “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று கூறியதைக் கருதவேண்டும். கவிராஜ பண்டிதர் என்பாரின் உரையும் இக்கருத்தை அடியொட்டியே வருகிறது.  மணிமேகலையில், “அன்புடை ஆருயிர் அரசர்க்கருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய்” (25:170-171) என்று வருவதும் இதுபொருள் பற்றியே.

ஒப்புமை
”அன்புடை ஆருயிர் அரசர்க் கருளிய
என்புடை யாக்கை இருந்தது காணாய்” (மணி. 25:170-71)

”என்பென்ப தியாக்கை என்ப துயிரென்ப திவைகள் எல்லாம்
பின்பென்ப அல்ல வேனும் தம்முடை நிலையிற் பேரா
முன்பென்ப உளவென் றாலும் முழுவதும் தெரிந்த வாற்றால்
அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிந்த தன்றால்” (கம்ப. மருத்து.4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

மு.வரதராசனார் உரை
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

007 மக்கட்பேறு

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - மக்கட்பேறு

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற


குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்

குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்


குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்

குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

குறள் 68

குறள் 69

குறள் 70

பதிவு வரிசை

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
எழுபிறப்பும் - eḻu-piṟappu   n. id. +. 1. Seeஎழுபவம். எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62). 2.See எழுமை². (குறள், 107, உரை )

எழுபவம் - எழுவகைப்பிறப்பு; தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்; மேல்வரும்பிறப்பு.

தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல்.

தீண்டா - தீண்டாது இருத்தல்

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்

பிறங்குதல் -  விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல்.

பிறங்காப் - பிறங்காது இருத்தல்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பண்புடை  - பண்பு உடைய

மக்கட் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
ஒருவர் செய்யும் செயல்களினால் உண்டாகும் தீயப்பயன்களால் மறுபிறவி என்னும் ஏழு பிறவிகளை எடுக்க நேரிடும். [அதாவது பிறவிப் பெருங்கடலை நீந்துவர்]. ஏழு பிறவிகள் என்பது தண்டனையையும் துன்பத்தையும் குறிக்கும் என்றே சொல்லலாம்.

ஆனால் இப்பிறவியில் நாம் பெற்ற பிள்ளைகளை நல்ல குணமுள்ள மக்களாக தீயபழிகளுக்கு ஆளாகாதவராக வளர்த்தெடுத்தால் அதுச் சாலச் சிறந்தது. அஃது தீயவைகளும், துன்பங்களும் ஒருவரை மறுபிறவிகளிலும் தீண்டாதிருக்க வழிவகுக்கும்.

மாறாக ஒருவர் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை என்றால் அவர்களுக்கு மறுபிறவியில் துன்பம் வந்து பாடாய்படுவார் என்றும் கூறலாம்.

ஆக பெற்றெடுப்பது மட்டும் போதாது அவர்களை நல்ல மக்களாய் வளர்த்தெடுப்பதும் கடமையும் ஆகும். ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று சற்று யோசித்தால் எனக்கு கிடைக்கும் விடை, நல்ல பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர் சமுதாயத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். சமுதாயம் மேம்பட வழிவகுப்பார்கள். பிறருடைய துன்பம் தனை துடைப்பார்கள். குறைந்தபட்சம் பிறருக்கு துன்பம் தரமாட்டார்கள். ஆனால் தீயொழுக்கம் கொண்ட பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர் இந்த சமுதாயத்திற்குத் தலைவலியாக அமைவர். அவர்களை எதிர்கொள்வது, அவர்களுடன் இயைந்து வாழ்வது என்பதே கடினமான ஒன்றாகும். இந்த சமுதாயத்திற்கு பின்னடைவாகும். ஆகவே நல்ல பிள்ளைகளை வளர்த்தல் இன்றியமையாதது.

மேலும்:
“இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடே உற்றோமேயாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்கிறது ஆண்டாளின் பாசுரம் ஓரிடத்தில்.  “இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்” என்கிறாள் நாச்சியார் திருமொழியில். “எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்டபெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோடாடல் புரிவானே”என்கிறது சுந்தரமூர்த்தி நாயானாரின் திருவாலங்காட்டுப் பதிகம்.

இவர்கள் வாக்குகள் படி ஏழேழ்பிறவி என்பது நாற்பத்தொன்பது பிறவிகள் ஆகிவிடுகிறது. வள்ளுவரோ ஏழு பிறவிகள் என்கிறார். இது என்ன கணக்கு என்று புரிவது ஒருபக்கம் இருந்தாலும், ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்பது ஒரு இந்திய நம்பிக்கை.  எண்ணிக்கை எதுவாக இருந்தால் என்ன?  ஏழு பிறப்புகளில் எப்படியோ, இப்பிறப்பிலேயே பண்புநலமிக்க பிள்ளைகளால் பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பதே அறிய வேண்டிய கருத்து.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி
இருமை யும்பெறற் கென்பது பெரியவர் இயற்கை” (கம்ப.மந்திரப் 63)

“சொன்ம றாமகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்” (கம்ப.மந்திரப் 68)

பரிமேலழகர் உரை
எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

மு.வரதராசனார் உரை
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

006 வாழ்க்கைத் துணைநலம்

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

குறள் 56

குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை





மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற்

குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மனைத் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.

தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

மாண்பு - பெருமை; அழகு; நன்மை; மாட்சிமை.

உடையள் - உடையவள்

ஆகி - ஆகுதல் - ஆதல், நன்றாகக்கூடிவருதல்


ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தற் - taṟ   a particle for தன், self (ன் is changed into ற் before க, ச, ப).

கொண்டான் - koṇṭāṉ   n. கொள்-. 1. Seeகொண்டவன். கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56). 2. See கொண்டல்¹, 6. (W.)
கொண்டான்கொடுத்தான் koṇṭāṉ-ko-ṭuttāṉ, n. id. +. Persons who have enteredinto matrimonial alliance by the marriage oftheir sons and daughters; கொண்டுங்கொடுத்துஞ்சம்பந்தஞ் செய்தோர். Colloq.
மகளிர்விளையாட்டுவகை; கணவன்.

வளத்தக்காள் - வளத்துக்கும், ஈட்டும் பொருளுக்கும் ஏற்ற அளவுக்குத் தகுந்தார்போல், இல்லறத்தை நடத்துபவள்

வாழ்க்கைத்துணை - vāḻkkai-t-tuṇai   n. வாழ்க்கை + துணை¹. Wife; மனையாள். தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள், 51).

முழுப்பொருள்
இல்லறம் நடத்துவதற்குத் தேவையான நல்ல குணநலங்களையும், நற்செயல்களை ஆற்றும் பண்பினையும், கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு குடும்ப செலவுகளை நிர்வகித்து குடும்பத்தை முன்னே கொண்டு செல்லும் திறனை உடைய ஒரு மாண்புடைய (பெருமை, அழகு, மாட்சிமை, நன்மை) பெண் என்பவள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்றவளாவாள். அப்படியான மனையறத்திற்குத் தக்க குணங்களை கொண்ட பெண்ணை வாழ்க்கைத்துணையாக கொள்ளுதலே வாழ்வு சிறக்க உதவும். 

1) நற்குணங்களெனப்படுவது -> துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. 

2) நற்செய்கைகளெனப்படுவது -> வாழ்க்கைக்கு வேண்டும் (மெய்ப்)பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில்(மடைப்பள்ளி/ சமையலறை) தொழில் வன்மையும்(ஆற்றலும்), ஒப்புரவு (உலகவொழுக்கம்) செய்தலும் முதலாயின. 

3) வருவாய்க்குத் தக்க வாழ்க்கையெனப்படுவது -> முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். 

இது பெண்களுக்காக எழுதப் பட்ட குறள், ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரைக் கூடப் பெண்கள் குடும்பத் தலைவி என்றே அழைக்கப்பட்டுள்ளனர். அன்று ஆண்கள் மட்டுமே வெளியுலகலில் வேலைக்கு சென்றனர். ஆனால் இன்றோ ஆண்களும் பெண்களும் எல்லாவேலைகளிலும் பணிப்புரிகின்றனர். இல்லறத்தில் இருக்கும் பெண்களும் வெளியுலக வாழ்க்கையில் பணிப்புரிகின்றனர். ஆதலால் இக்குறள் இன்று ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்களுக்கு இந்த நல்ல குணங்களும், நற்செயல்கள் செய்யும் ஆற்றலும், வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நிர்வகிக்கும் திறனும் இருத்தல் வேண்டும்.

பி.கு: வாழ்க்கைத் துணைநலம் என்று மனைவியை மட்டும் கூறாமல், இல்லற வாழ்க்கைக்கு தேவையான துணையாக இருக்கக்கூடிய குணநலங்களாக இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட கருத்துக்களை ஆண்கள் (கணவன்) பெண்கள் (மனைவி) என்று இருபாலினரும் எடுத்துக்கொள்ளலாம் (எடுத்துக்கொள்ள வேண்டும்).

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மனைமாட்சி” (குறள் 52)
“இல்லவள் மாண்பு” (குறள் 53)
“மாண்டஎன் மனைவி” (புறநா 191:3)

“வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்விருந் தோம்பி...
செய்வதே பெண்டிர் சிறப்பு” (சிறுபஞ்ச 42)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.)

மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

English Meaning - As I taught a kid - Rajesh
Note: this Thirukkural actually refers the spouse as a wife. Husband responsibilities are detailed in children upbringing chapter and also in other various chapters
A spouse who have the below is the ideal life partner
a) virtues/traits/qualities required for family (i.e 1) (leading and) running a family, 2) doing charity works such as welcoming and showing hospitality(giving food) to sages and those in need, managing a family, 3) upbringing the children as good citizens (in terms of love, knowledge, scholarliness, beneficence/benevolence, compassion, honesty etc.),   and 
b) spends within the means (earnings of the life partner) 
c) leading the family (in terms of dharma/duty, work, knowledge, wealth, socio-economical status, respect, fame etc.) in the growth direction and growing the family.

Questions that I ask to the kid
Who is an ideal spouse?

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).  

என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

மூவர்க்கும் - பிரமன், திருமால், சிவன்ஆகியமும்மூர்த்திகள்; அப்பர்; சுந்தரர், திருஞானசம்பந்தர்ஆகியமூன்றுநாயன்மார்கள்; தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்; பிள்ளைகள், பெற்றோர், உறவினர்

நல்லாற்றின் - நல்லாறு - நல்வழி - nal-l-āṟuṭaiyāṉ   n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.)

நின்ற - நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இல்வாழ்க்கை என்னும் இல்லறத்தில் வாழும் வாழ்க்கையை வாழ்பவன் என்பவன், இதே (இல்வாழ்க்கை) இயல்போடு வாழும் தன்னுடைய பெற்றோர்கள், மனையாள், பிள்ளைகள் ஆகிய மூவரையும் நல்வழியில் நின்று அவர்களுக்கு துணையாக ஆதரவாக இருக்க வேண்டும். அதுவே இல்லறம்.  அதுவே இல்லறத்தில் வாழ்பவனின் கடமை.

அஃதாவது, இல்லறத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை என்பது நமக்கு நேரடியாக தோர்புடைய நம்மை பெற்றெடுத்தப் பெற்றோர்கள், நாம் மணந்த மனைவி (கணவன்), நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளை நல்வழியில் பேணிக் காப்பதே ஆகும். அதை தவிர வேறொன்றும் இல்லை. இங்கே உறவினரை பேண வேண்டும் என்று கூட திருவள்ளுவர் சொல்லவில்லை. ஏனெனில் அது நம்முடைய முதற்குடும்பம் அன்று.

இதையொட்டியே, ஔவையும், “இல்லறமல்லது நல்லறம் அன்று” என்று கூறியதும்.

பி.கு: ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று சொன்ன திருவள்ளுவர், தான், தன் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் சிந்திப்பவரும் அல்லது நம்மை சிந்திக்கச் சொல்பவரும் அல்ல. அவர் இங்கே சொல்வது இல்லறத்தில் ஆற்ற வேண்டிய முழுமுதற் கடமை. இது (மூவருக்கு துணையாக இருத்தல்) எளிதாக தோன்றினாலும் ஆனால் இதுவே பெரும்பாலான இடங்களில் கடினமாகவே இருக்கிறது.

அதனால் தான் திருவள்ளுவர் இல்லறத்தில் உறவினர்களை சேர்த்து சுமையை அதிகரிக்கவில்லை போலும் (ஏனெனில் உறவினர்கள் ஒரு முடிவில்லா கணக்காகக் கூட மாற வாய்ப்பு உண்டு). ஒரு தனி மனிதனாக ஒருவன் செய்ய வேண்டிய அறம் பற்றி மற்ற குறள்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)

இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.).

மணக்குடவர் உரை
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

மு.வரதராசனார் உரை
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

005 இல்வாழ்க்கை

பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - இல்வாழ்க்கை


சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

குறள் 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது

குறள் 46

குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை

குறள் 48

குறள் 49

குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

பதிவு வரிசை