பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

thirukkural meaning விளக்கம் குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்
குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
பெண்ணின் - பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெருந்தக்க - பெருந்தகை - மிக்கபெருமையுடையவர்; காண்க:பெருந்தன்மை; மிக்கஅழகு.

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

உள - யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

கற்பு - மகளிர்கற்பு; களவுக்கூட்டத்துக்குப்பின்தலைவன்தலைவியைமுறைப்படிமணந்துஇல்லறம்புரியும்ஒழுக்கம்; கற்பின்அடையாளமானமுல்லை; கல்வி; தியானம்; ஆணை; கதி; உறுதி; புரிசை; மதிலுண்மேடை; நீதிநெறி; கற்பனை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

முழுப்பொருள்
ஒரு பெண்ணுக்கு எது மிகுந்த பெருமை சேர்க்கும் ? கற்பு எனப்படும் நீதிநெறி, மன உறுதி ஒரு பெண்ணிடம் இருந்தால் அவளை திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்யப்போகும் தலைவனுக்கு அதைத் தாண்டி வேறு ஏதும் தேவையில்லை.

எனக்கு தோன்றுவது என்னவென்றால் பல குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் இடையே சிக்கல்கள் வருவது இருவருக்கும் இடையே நேர்மை இல்லாமல் இருப்பதால் தான்.  அந்த நேர்மையில்லையெனில் மற்றவர்களை தவறாக சித்தரித்து சிக்கல்களை உண்டாக்குவார்கள். வெறுப்பு, பொறாமை, ஆசை, மனதழுக்கு, கீழ்மையான சொற்கள் போன்ற தீயொழுக்கங்கள் வந்து சேரும். இறுதியில் உறவு முறியும் அல்லது வருந்திக்கொண்டே மன அமைதி இழந்தே வாழவேண்டியது இருக்கும். நேர்மை இருந்தால் இந்த பிரச்சனையெல்லாம் வராது. ஆதலால் நேர்மையிருந்தால் வேறு என்ன வேண்டும்?  நேர்மையிருந்தால் மற்ற செல்வங்கள் எல்லாம் தானாக வரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

சாலமன் பாப்பையா உரை
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தூயமனம் கொண்ட பெண்ணினும் சிறந்தது ஏதுமில்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain