Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

அஞ்சிப் - அஞ்சுதல் - பயப்படுதல்

பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

உடைத்து - உடை-தல்
uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 8. To be dispirited, dejected,as one's heart with grief; to be in despair;மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 9. To become poor, reduced in circumstances; எளிமைப்படுதல். (பிங்.) 10. To be divulged, to become publicly known; வெளிப்படுதல் 11.To die; சாதல் உடைந்துழிக்காகம்போல் (நாலடி,284).

ஆயின் - ஆனால்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

எஞ்சல் - eñcal   n. எஞ்சு-. 1. Defect,blemish; குறைவு எஞ்சலி லமரர் குலமுதல் (திவ்.கிபுவாய். 3, 6, 9). 2. Extinction; அற்றொழிகை.வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் (குறள், 44).

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
இல்லறத்தில் சிறக்க 11 கடமைகளை (அதிகாரத்தில் முதல் மூன்று குறள்கள். குறிப்பு: 11வது கடமை தன்னை பேணிக்கொள்வது. ஏனெனில் பிறரைப் பேணிக்கொள்ள தான் இயங்க வேண்டுமே!) ஒருவன் செய்யவேண்டும். அதுவே அவனுடைய அறம். ஆனால் ஒருவன் இல்லறத்தை நடத்த பொருள் ஈட்டவேண்டும். ஆனால் தேடினால் மட்டும் போதாது, அதனை பழி அஞ்சித் தேடவேண்டும்.

பழி என்பது உலகம் தூற்ற செய்வது. பாவம் என்பது நமது ஆத்மாவில் பதிவது. பாவம் செய்து ஆத்மாவை இழிவுபடுத்தக்கூடாது.

அப்படி பழிக்கு அஞ்சி ஈன்ற பொருளை பகுத்துண்ண வேண்டும் (1) தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள், 2) தெய்வங்கள், 3) விருந்தினர்கள், 4) உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் 5) தான் -> குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.)

அப்படி ஒருவர் எல்லோருடனும் பகுத்துண்டால் அவருக்கும் அவரது தலைமுறைக்கும் (பரம்பரை, சந்ததிகளும்) ஒரு நாளும் அழிவில்லை.

நீ நியாயமாக ஈன்ற பொருளில் பிறருக்கு உதவினால் ஒருநாளும் அழிவில்லை. ஆனால் பிறரிடம் ஏமாற்றி ஊழல் செய்து பாவத்தால்  ஈன்ற பொருளில் உதவினால் அது செய்தவனுக்கு பயன் தராது, அப்பொருளின் சொந்தக்காரரருக்கு பயன் போய் சேரும்.

ஒப்புமை
”பாத்துண்மின்” (நாலடி 92)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நேர்வழியில் சம்பாதித்துப் பகுத்துண்பவன் நன்கு வாழ்வான்.

No comments:

Post a Comment