Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
தந்தை - தகப்பன்

மகற்கு - மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன்.

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

நன்றி  - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அவையத்து -  கற்றோர்கள் நிறைந்த அவையிலே

முந்தி - முன்னிடம்; காண்க:முன்றானை; முற்காலம்.

இருப்பச் - இருப்பன - நிலைத்திணைப்பொருள்கள்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
நன்றி என்றால் அறம் என்ற பொருளும் உண்டு. நம்மை என்ற பொருளும் உண்டு. அப்பொருள் இங்கு மிக பொருந்தும். அறம் என்றால் தர்மம் அதாவது கடமையாகும்.

ஆதலால் தந்தை தன் மகனுக்கு ஆற்றக்கூடிய கடமை என்றால் அது கற்றோர்கள் சான்றோர்கள் கூடிய அவையின் முன் அவனை சான்றோன் என நிற்கும் அளவிற்கு மகனை ஆயுத்தமாக்குவதே ஆகும். மகனுக்கு கல்வியும், நற்பண்புகளும் நிறையப்பெற்ற சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.  இக்கடமையை ஆற்றினால் அதுவே மகனுக்கு ஆற்றும் நன்மையாகும் ஏனெனில் மீன் பிடித்து தருவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதேச் சாலச் சிறந்தது - நெடுங்காலத்திற்கு நன்மை பயக்கும்.

செல்வம் தேவையில்லையா ? செல்வம் சேர்த்துவைத்தால் நல்லது. ஆனால் செல்வம் சேர்பதற்க்கும் கடினமாக உழைக்க வேண்டும் அதனை பாதுகாக்கக்கவும் உழைக்க வேண்டும். ஆனால் அது நிலையில்லாதது. மேலும் பலபேருக்கு செல்வத்தை கொடுத்தப்பதில் மகிழ்ச்சி இருக்காது. செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு நீங்கலாம். கல்வி அப்படிப்பட்டது அல்ல. நற்பண்புகள் அப்படிப்பட்டது அல்ல. அதனை நம்மைவிட்டு யாரும் எடுக்கமுடியாது. கல்வி இருந்தால் செல்வத்தை ஈட்டிவிடலாம். கல்வியை சேர்ப்பதில் மகிழ்ச்சி, கல்வியை பாதுகாப்பதில் மகிழ்ச்சி, கல்வியை பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி. மூன்றும் மகிழ்ச்சி. அதனால் தான் செல்வத்தை கொடுப்பதை விட கல்வியை கொடுப்பது சிறந்ததாகும். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறையும் (அன்னை, தந்தை, ஆசான், இறை) இதனாலே வந்தது. இவர்தாம் தந்தையென்று மக்களுக்குச் சொல்பவள் தாய்; மக்களை, நல்ல ஆசானிடத்தில் சேர்ப்பித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்கக் காரணியும், வாழும் முறைகளைச் சொல்லித்தருபவனும் தந்தை; தம் மாணக்கருக்கு கல்வியும், அறிவும் தந்து, உயர் பொருளாம் இறையை அடைய ஆற்றுப்படுத்துபவர் ஆசான். தாய் பெற்றாலும், ஆசான் வழிகாட்டியாக இருந்தாலும், தந்தையின் பங்கே மக்களை நெறிப்படுத்தி, வாழ்க்கைப் பாதையில் சரிவர செலுத்துவதால், தந்தையின் கடமையை முன்னிருத்தி இக்குறள் பேசுகிறது. 

பிள்ளைகள் பெற்றால் போதுமா? மனிதன் பிள்ளைகள் பெறுவதற்கும் விலங்குகள் குட்டிகளை பெறுவதற்கும் என்ன வேறுபாடு? அந்த கடமைகளை சொல்வதற்காகவே இக்குறள். பிள்ளைகளுடைய அறிவு தந்தையின் பொறுப்பு. ஏனெனில் தந்தை தான் உணர்வு சாராமல் மகனை நிறுத்துவான். பெண்கள் உணர்வு சார்ந்தவர்கள். போட்டி உணர்ச்சி வரும் (உதாரணமாக மற்றொரு தாயின் குழந்தை ஒரு பாட்டு போட்டியில் வெற்றிபெற்றால் தன் குழந்தையும் வெற்றிப்பெற நினைக்கும் பல தாய்மாறார்களின் மனது. குந்திக்கும் காந்தாரிக்கும் உள்ள பூசலை பற்றி சொல்லி அறியவேண்டியதில்லை. அவர்கள் எப்படி தன் மகன்களை ஏவினார்கள் என்பதை உலகம் அறியும்). 

பொன்முடியார் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்றில் கிட்டத்தட்ட இதே கருத்தே கூறப்பட்டுள்ளது.

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – புறநானூறு-312)
திணை வாகை; துறை மூதில்முல்லை.
பொன்முடியார் பாடியது.

ஒளவையார் இப்படிச் சொல்கிறாள்.
தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

தந்தையோடு கல்வி போம்... ஏன்? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும், தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில், தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே?

ஒளவையார் சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மட்டும் அல்ல.
தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்" என்றார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற” (நாலடி 134)

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வாரிசா என்ற கட்டுரையில் “அவையத்து முந்தியிருப்பச் செயல்” பற்றி இவ்வாறு கூறுகிறார்
அஜிதனுக்கு நான் கற்கவும் வளரவும் வேண்டிய சூழலை அளித்தேன். அது தந்தையாக என் கடமை. ஒவ்வொரு தந்தையும் அதைச் செய்யவேண்டும் என்றே சொல்லி வருகிறேன். ‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என அதை வள்ளுவர் சொன்னார். அவை என்றால் தன் மைந்தனுக்குரிய அவை, அவனே தெரிவுசெய்யும் அவை என்று பொருள். பொதுச்சூழல் முன்வைக்கும் அவை அல்ல. தான் உருவாக்கி அளிக்கும் அவையும் அல்ல.

அஜிதன் வெவ்வேறு களங்கள் வழியாக முட்டிமோதிக்கொண்டிருந்தான். முதலில் இயற்கையியல். சூழியல். அதன்பின் திரைப்படம், மேலைச்செவ்வியல் இசை. அங்கிருந்து மேலைத் தத்துவம். கொஞ்சநாள் கதகளியும்கூட. இந்த ஒவ்வொரு களத்திலும் அவனுக்கு நான் வேண்டியன செய்தேன்.  அவன் கடந்துசென்றுகொண்டே இருந்தபோது அவ்வப்போது சலிப்பும் பதற்றமும் வராமலுமில்லை.

சராசரிகளாலான சூழல் அளிக்கும் அழுத்தம், மைந்தன் பலவாறாக திசைதேடி தத்தளிக்கும் போது தந்தையாக  தனக்கே உருவாகும் எதிர்காலம் பற்றிய  பதற்றம் ஆகியவற்றைக் கடந்து தன் மைந்தன் செல்ல விரும்பும் பாதையை முடிந்தவரை அமைத்துக் கொடுப்பதே தந்தை செய்யவேண்டியது. நான் செய்துள்ளது அது மட்டுமே. இன்றியமையாத கடமை, ஆனால் நம் சூழலில் அது எளிதல்ல. பெரும் பொறுமை தேவை. அத்துடன் தன் மகனுக்கும் சேர்த்து பொருள் சேர்த்துக் கொள்ளவேண்டிய தேவையும் உண்டு.


சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து (28-Oct -2023)
"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
என்கிறது வள்ளுவம்.

இதில் முந்தி இருப்பச் செயலுக்கு உண்மையான பொருள் என்ன?
செல்வத்தில், பதவியில், கல்வியில்,
நற்பண்புகளில் முந்தியிருக்கச் செய்வதில்
எது முன்னிலை வகிக்கும்?

இதற்கான பதில் தந்தையர்களைப் பொறுத்தது. தன் மகனுக்கு இது தான், தான் செய்யவேண்டியது என ஒரு தந்தை தன் லெளகீக இச்சைகளைத் தேவைகளைக் கொண்டே முடிவு செய்வார்.
பெரும்பாலும் அப்படித்தான்.
விதிவிலக்குகள் உண்டு.
காந்தியைப் போல.

1932 ஆம் வருடம். காந்தி சிறையில் இருக்கிறார்.தேவதாஸ் காந்தி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கூட காந்தியை, தன் தந்தையை வந்து சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

காரணம், அங்கிருந்த சிறை கண்காணிப்பாளர், தன் கீழ்நிலைப் பணியாளர்கள் முன் தேவதாஸ் தன்னை அவமதிப்பாகப் பேசிவிட்டதாகக் கருதியதால்.காந்திக்குத் தகவல் போகிறது.

காந்தி தேவதாஸுக்குக் கடிதம் எழுதுகிறார்:
"என்னை வந்து சந்திக்க உனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். அதற்கான காரணமும் சொல்லப்பட்டது.
யார் தரப்பில் உண்மை என்று எனக்குத் தெரியாது. அதில் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை என்றால், நீ அவரிடம் மன்னிப்புக் கேட்டு பின் அனுமதி பெற்று என்னைச் சந்திக்கலாம்.
இல்லை, அது அவதூறு எனில் உன் சுயமரியாதையை விட்டுத் தந்து நீ மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நேரில் சந்திப்பதில் என்ன இருக்கிறது, நாம் கடிதம் மூலமாகவே பேசிக் கொள்வோம். மற்றபடி நான் நலம்"

தேவதாஸ் காந்தியைச் சந்தித்ததாகத் தெரியவில்லை.
கீழே இருக்கும் புகைப்படம்
தேவதாஸ் காந்தி, மணிலால் காந்தி அவர் மகள் சீதா காந்தி






அன்புள்ள மதி,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாதக் கருத்துக்களை விட நடைமுறைசார்ந்த கருத்துக்களையே நான் வைத்துக்கொள்ள விரும்புவேன். ஆனால் நடைமுறைவெறி இருக்காது. வேண்டுமென்றால் ‘நடைமுறைஇலட்சியவாதம்’ என்று சொல்லலாம்.

நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள் உண்டு. அதில் முதலாவது குழந்தைகளை நாம் ‘வளர்க்க’ முடியாது. அவை வளர்கின்றன. அவற்றுக்கு சூழல் அளிக்கும் பலநூறு பாதிப்புகளில் ஒன்று மட்டுமே நாம். கொஞ்சம் பெரிய, கொஞ்சம் தீவிரமான பாதிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அந்தப்பாதிப்புகளை வாங்கி வளரும் அவன் ஆளுமையின் விதை அவனுக்குள் பிறவியிலேயே உள்ளது.

ஆகவே குழந்தைகளை நாம் நம் விருப்பப்படி வளர்க்க முடியும் என்பது பெரிய மடமை. அவர்கள் நன்றாக வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அதில் நம் பங்களிப்பு ஒரு சிறு பகுதிதான். அதற்கான பொறுப்பையோ பாராட்டையோ நாம் ஏற்றுக்கொள்வது அபத்தமானது.

ஆக, நாம் அவர்களை எங்கும் ‘முந்தியிருக்க’ச் செய்ய முடியாது. அவர்கள் முந்துவது அவர்களிடம், அவர்களை உருவாக்கும் பலநூறு சக்திகளிடம், அவர்கள் எதிர்கொள்ளும் பலநூறு விசைகளிடம் உள்ளது.

நாம் செய்யக்கூடுவது நாம் அளிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாகக் கவனித்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே. அந்தப்பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது. அதில் நான் செய்வதென்ன என்று கேட்டால் என்னால் சில சொல்ல முடியும்.

ஒன்று, நான் அறிவியக்கத்தை நம்பக்கூடியவன். ஆகவே என்னுடைய நம்பிக்கைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் சிந்தனைகளையும் அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களை ஒருவகையில் என் மாணவர்களாகவே நினைக்கிறேன்.

இரண்டு, சாத்தியமான உற்சாகமான சூழலை வீட்டில் அவர்களுக்கு அளிக்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் அளவுக்கு குழந்தை விரும்பும் பிறிதில்லை. ஆகவே குடும்பத்தில் மனக்கசப்போ பூசலோ நிலவ விடுவதே இல்லை.

மூன்று, ஒவ்வொருநாளும் அவர்களிடம் நேரம்செலவழிக்கிறேன். அப்போது வேடிக்கையும் சிரிப்பும் பேசும் பகிர்தலுமாகவே நேரம் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் [நான் ஒரு நல்ல மிமிக்ரி நடிகன் என்பது என் பிள்ளைகள் மட்டுமே அறிந்த ரகசியம்]

நான்கு, அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நினைப்பு, அவர்களின் தரப்பு என்று ஒன்றை கேட்க எப்போதும் உயன்றுகொண்டிருக்கிறேன். அவர்களிடம் தூரமோ விலக்கமோ நிகழக்கூடாது என எண்ணுகிறேன்.

அப்படியானால் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று எதைச் சொன்னார் வள்ளுவர்? நான் விவேகம் சார்ந்து ஒரு தவறான விஷயம் குறளில் இருக்காது என நினைப்பவன். குறள் சொல்வது என்ன?

‘அவை’ என்று குறள் சொல்வது சமூக அரங்கை. ஒரு தந்தையின் கடமை ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக அரங்கில் தன் மகன் நிற்பதற்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது. கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை. நான் இன்றைய சமூக அமைப்பில், இன்றைய கல்வியமைப்பில் என் மகனுக்கு என்னால் சாத்தியமான சிறந்ததை அளிக்க வேண்டும். இதுவே நடைமுறை உண்மை. இதைத்தான் குறள் சொல்கிறது.

ஆனால் குழந்தைகளின் சவாலே வேறு. என் மகன் சம்பிரதாயமான கல்விக்குள் பொருந்த முடியாமல் மூச்சுத்திணறுகிறான். அதில் அவனால் முதலிடம் வர முடியாது. ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து அபப்ழுக்கில்லாமல் பிரதி எடுப்பது அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. பள்ளிப்பாடத்தை மட்டுமே மீளமீளப் படிப்பவர்களுக்கானது இந்த அமைப்பு. இதில் அவனை ‘முந்தியிருக்க’ ச் செய்வதற்காக அவனிடம் நான் எதிர்பார்க்கக் கூடாது.  அதற்காக அவன் மேல் நான் வன்முறையைச் செலுத்த முடியாது. அவனுடைய சவால்கள் அவனுக்கு மட்டுமே உரியவை, அதன் வெற்றி தோல்விகளும்.

குறளும் அதையே சொல்கிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி அவர் எதிர்பார்த்ததைச் செய்வது என்றோ அவையில் முந்துவது என்றோ சொல்லவில்லை. அவன் தந்தைக்குப் பெருமை சேர்த்தல் என்றே சொல்கிறது. சேர்க்க முயல்தல் என்று கூடச் சொல்லலாம். என் அப்பாவை நான் மகிழ்வித்திருக்கவேண்டுமென்றால் நாகர்கோயிலில் ஒரு நல்ல ஆடிட்டராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அபப்டி ஆகியிருந்தால் பாகுலேயன்பிள்ளை என்றபெயரை பல்லாயிரம் பேர் இன்று அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமையாலேயே பலவகையான பதற்றங்கள் உருவாகின்றன. பொறியியலில் முதல்தர வெற்றியை அடைந்தபின் சினிமாவில் உதவி இயக்குநராக ஒரு பையன் வந்து வெயிலில் காய்ந்து அலைவதைக் கண்டு அந்த தந்தை என்ன பாடுபடுவார் என்று எனக்குப் புரிகிறது. அந்தப் பையனின் இடத்தில் கொஞ்சகாலம் முன்பு வரை இருந்தேன், இப்போது அந்த அப்பாவின் இடத்துக்கு மாறிவிட்டேன்.

ஆக, நமக்கு நம் சமூகம் அளித்திருக்கும் அவையில், கல்வியின் பொருளியலின் மேடையில், முந்தியிருக்கச் செய்வதும் முந்தவேண்டும் என்ற கட்டாயத்தை விதிக்காமலிருப்பதும்தான் நம் கடமைகள்.

ஜெ


மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர்.

அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்தார் என்பது தான். இக்காரணத்தால் என் ஊரில் பெண்களுக்கு ஜான்சி என்று பெயர் போட்டிருப்பார்கள். என்னுடனேயே இரண்டு ஜான்சி படித்தனர். அது ஊரின் பெயர் என்பது எனக்கே அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது. ஜான்சியின் கைவிடப்பட்ட பெரிய கோட்டையை சுற்றிப்பார்த்தேன். நான் சென்ற போது அங்கே ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தார்கள். ஜான்சிராணிலட்சுமிபாயின் அரண்மனையைச் சேர்ந்த பிறபெண்கள் தீயில் குதித்து ஜோகர் செய்து கொண்ட குழி ஒன்றைக் காட்டினார்கள்.

முட்புதர்கள் அடர்ந்திருந்த பெரிய கற்சுவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தபோது பழமையையும் தனிமையையும் உணர்ந்து கொண்டிருந்தேன். சென்ற காலம் நம்மைத் தனியர்களாக்குகிறது. நாம் வாழும் காலத்தில் மட்டுமே நமக்குத் துணைவர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான பருந்து நம்மை நம் கூட்டத்திலிருந்து தன் கால்களால் தூக்கிக் கொண்டு போவது போல கடந்த காலம் கொண்டு சென்று வேறு இடத்தில் போட்டுவிடுகிறது

மூச்சுத் திணற வைக்கும் அனுபவம் அது. இதிலிருந்து எப்படியோ வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் அதன் கனவுத்தன்மை காரணமாக மீண்டும் அதனுள் புகுந்து கொள்ளும் ஆவலும் ஏற்படும். இத்தனை ஆண்டுகளாக அந்த மோகம் கூடிக்கூடித்தான் வருகிறது.

ஜான்சியிலியிருந்து திரும்பி குவாலியருக்கு ரயில் ஏறும்பொருட்டு ரயில் நிலையத்துக்கு வந்தேன். ரயில் நிலையத்துக்கு சுற்றும் உள்ள சிறிய தகரக்கூரையிட்ட உணவகங்களை நோக்கியபடி நடந்தேன். நான் சோறு சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டிருந்தது. எங்காவது சோறு கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று நடந்தேன். அன்றெல்லாம் சோறு சமைத்து பெரிய கூம்புத் தாம்பாளங்களில் மலைபோல் குவித்து முன்னால் வைத்திருப்பார்கள். சோறு கிடைக்கும் என்பதற்கான அடையாளம் அதுதான் எழுதி வைக்கும் வழக்கம் இல்லை, வாசிப்பவர்கள் குறைவாக இருந்திருக்கலாம்.

இரண்டு முறை சுற்றியபோது ஒரு உணவகத்தின் முன்னால் சோற்றுக் குவியலைப் பார்த்தேன் அன்று எனக்கு பக்தன் சிவலிங்கத்தைப் பார்த்தது போன்ற ஒரு பரவசம் ஏற்பட்டது. நேராகச் சென்று அதைச் சுட்டிக்காட்டி “கானா?’ என்றேன். “சாவல்!” என்று சொல்லி உள்ளே வந்து அமரும்படி சொன்னார். “டால்?” என்றேன். இருக்கிறது என்று தலையசைத்தார். பிறகு “மூர்த்தி!” என்று அவர் அழைக்க உள்ளிருந்து ஒருவர் வந்து இந்தியில் என்னிடம் சாவல், டால் இரண்டுமே இருக்கிறது. சப்ஜி இருக்கிறது சாம்பார் இருக்கிறது என்றார்,

“சாம்பாரா ?”என்று நான் கேட்டேன். அவர் என்னிடம் “நீங்கள் தமிழா?” என்றார். நான் ஆம் என்று தலையசைத்தேன். “எந்த ஊர்?” என்றார். “நாகர்கோவில்” என்றேன். “நான் மதுரை சார். உள்ளே வாங்க” என்று அழைத்தார் மூர்த்தி.

கடை உரிமையாளர் என்னைப்பார்த்து புன்னகைத்து “சாப்பிடுங்கள் சார்” என்று தமிழில் சொன்னார். ‘இத்தனை தொலைவில் வந்து கடை வைத்திருக்கிறீர்கள்?’ என்றேன். ”வந்தாச்சு” என்றார். அந்தக் கடையில் அப்போது எவருமே உணவருந்திக் கொண்டிருக்கவில்லை. மூர்த்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றார் உள்ளே தகர மேஜையில் அமரவைத்து உணவு பரிமாறினார்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காய்கறிக்கூட்டுடனும் மோருடனும் ரசத்துடனும் சமையலறையில் இருந்து வெளியே வந்து பரிமாறி சென்றாள் ஒரு கரிய பெண். காதில் பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தாள். நெற்றியில் அன்று பரவத்தொடங்கியிருந்த பிந்தி என்று அழைக்கப்படும் தங்க நிற வெல்வெட் பொட்டு ஒட்டியிருந்தாள். மூர்த்தியிடம் சிரித்துப்பேசி ஏதோ இந்தியில் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள்.

”உரிமையாளரின் மனைவி சார். நாங்கள் மூன்று பேர்தான் இந்த ஹோட்டலை நடத்துகிறோம்” என்றார் மூர்த்தி. “அவர்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். “சாந்தா” என்று அவர் சொன்னார். சாந்தா மீண்டும் வந்து எனக்கு மேலதிகமான ஒரு அப்பளத்தை அளித்தாள். நான் அவளைப்பார்த்து சிரிக்க என்னைப்பார்த்து சிரித்து “கல்யாணமாகிவிட்டதா?” என்றார் “இல்லை” என்றேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள். “ஏன்?” என்றேன். “இல்லாவிட்டால் இப்படித்தான் ஊர் ஊராக செல்லவேண்டியிருக்கும்” என்றாள். “நான் அதனால்தான் கல்யாணம் செய்யாமல் இருக்கிறேன் ”என்றேன். சிரித்துக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

மூர்த்தி என்னிடம் என்னுடைய வேலை மற்றும் ஊர் குடும்பம் அம்மா அப்பா எல்லாவற்றையும் பற்றி பேசினார். என் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள் என்று சொன்னபோது வருத்தப்பட்டு “அவள் சொன்னது சரிதான் சார். உங்களைப்பார்த்ததுமே தாய் தந்தை இல்லாதவர் என்று தெரிந்திருக்கிறது ஆகவே தான் உங்களை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள். மிகவும் நுட்பமானவள். உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றார். நான் சிரித்துவிட்டு “சரி” என்றேன்.

சாப்பிட்டு கைகழுவி பணம் கொடுத்துவிட்டு நான் கிளம்பியபோது மூர்த்தியும் வேட்டியை மடித்துக் கட்டியபடி என்னுடன் வந்தார். நாங்கள் சாலையில் நடந்தபோது “இங்கெல்லாம் வேட்டியை இப்படி மடித்துக் கட்டமாட்டார்கள். நான் ஆரம்பத்தில் வந்த்போது இப்படிக்கட்டக்கூடாது என்று என்னிடம் பலபேர் சொன்னார்கள். இப்படி வேட்டியை கட்டுவது நம் மதராசிகளுடைய உரிமை. நான் அதை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்? இவர்கள் யாராவது இவர்களுடைய பழக்கத்தை விட்டுக் கொடுக்கிறார்களா? மதுரையில் அடகுக் கடை வைத்திருக்கும் சேட்டுகள் கூட காந்தி குல்லாய் வைத்துக் கொண்டு தானே அலைகிறார்கள்?” என்றார் மூர்த்தி. “ஆம் விடவே கூடாது” என்று நான் சொன்னேன்.

மூர்த்தி என்னிடம் “ஒரு டீ சாப்பிடலாம் சார்” என்றார். “டீயா இப்போது தானே சோறு சாப்பிட்டேன்?” என்றேன். “இங்கெல்லாம் சோறுக்கு பிறகு டீ சாப்பிடும் வழக்கம் உண்டு வாருங்கள்” என்று கூட்டிச் சென்று ஒரு டீக்கடையில் டீக்கு உத்தரவிட்டார். சிறிய மண் கோப்பைகளில் டீ வந்தது. மிக கசப்பான கொழுப்பான டீ. அதை ஒரு கீர் என்று தான் சொல்லவேண்டும்.

மூர்த்தி “இங்கெல்லாம் இப்படித்தான் வாயில் ஊறுவது போல டீ போடுகிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு குமட்டல் வரும் இப்போது இது பழகிவிட்டது. ஒரு போதைப்பொருள் மாதிரி அதை சாப்பிடுகிறேன் ” என்றார்.

பிறகு அந்தக் கடையிலிருந்து ஒரு மாவா வாங்கி அதைக் கையில் வைத்து அடித்து கசக்கி தூளாக்கி வாயில் ஈறுகளுக்கு இடையில் செருகிக் கொண்டார். ”இது இல்லையென்றால் இங்கு நிம்மதியாக இருக்கமுடியாது சார்” என்றார். ”ஏன்?” என்றேன். “இதைப் போட்டுவிட்டால் எல்லா படபடப்பும் அடங்கிவிடும். இல்லாவிட்டால் கைகள் நடுங்கும் எங்கோ ரயிலைத் தவறவிட்டது போலவே இருக்கும்” என்றார்.

“முன்பு இந்தப் பழக்கம் இருந்ததா? என்றேன். “இல்ல சார் இதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. இங்கே வந்தபிறகு தான் இது ஆரம்பித்தது. ஆனால் இதைப் போட்டால் எவ்வளவு நேரமாயிற்றென்று தெரியாது. காலையா மாலையா என்று கூட தெரியாது. நமது வேலையை நாம் செய்து கொண்டே இருப்போம். எவ்வளவு வேலை செய்தோம் என்று கூட நமக்குத் தெரியாது. நானெல்லாம் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சப்பாத்திகள் போட்ட நாள் கூட உண்டு. என்னைக் கேட்டால் எத்தனை சப்பாத்திகள் போட்டேன் ஐந்தா ஐந்தாயிரமா என்று கூட சொல்ல முடியாது”.

“கடை எப்போது வியாபாரம் ஆகும்?” என்றேன். “இங்கெல்லாம் வியாபாரம் என்பதெல்லாம் சாயங்காலம் மட்டும் தான் இங்குள்ளவர்கள் பகலில் சாப்பிடுவது மிகவும் குறைவு. பார்த்தீர்களா எல்லாரும் மெலிந்து வயிறு ஒட்டித்தான் இருக்கிறார்கள். இரண்டு வேளைக்கு மேல் உணவுண்பவர்களை இங்கே பார்க்கமுடியாது வீடுகளைப்பாருங்கள் தகரக்கூரைப் போட்டு மேலே கல்லை தூக்கி வைத்திருக்கிறார்கள். நமது ஊரே கொஞ்சம் தரித்திரமாகத்தான் இருக்கும். இது அதைவிடப்பரிதாபமாக இருக்கிறது” என்றார்.

“அப்படியென்றால் ஏன் இங்கு வந்து கடை வைத்தீர்கள் ?’ என்று நான் கேட்டேன்.” நான் கடை வைக்கவில்லை நான் வேலைக்கு வந்தேன்” என்றார். “வேலைக்கா, இவ்வளவுதூரமா?” என்றேன். “நீங்கள் பார்த்தீர்களே சாந்தா, அவள் என்னுடைய மனைவிதான்” என்றார். “உரிமையாளரின் மனைவி என்று சொன்னீர்களே?” என்றேன். “அந்த உரிமையாளர் அங்கே எங்கள் வீட்டுப்பக்கத்தில் ஒரு சிறிய டீக்கடை வைத்திருந்தார். நான் அங்கு பழைய இரும்பு பொருட்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் இவள் என்னைவிட்டு இவருடன் ஓடிவந்துவிட்டாள்” என்றார்.

எனக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பதே குத்துமதிப்பாகத்தான் புரிந்தது. “நான் அவளை தேடாத இடம் கிடையாது. எந்தத் தகவலும் இல்லை. அப்போது தான் இவர் கடையை காலி செய்துவிட்டுப்போன தகவல் தெரிந்தது. ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. ஏனென்றால் பலமுறை இவர்கள் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொள்வதை வைத்து ஏதோ உறவிருக்கும் என்று நான் ஊகித்திருந்தேன். ஆகவே இவருடைய வீட்டுக்குச் சென்று கேட்டேன். அங்கும் எதுவும் தகவல் தெரியவில்லை. இவருடைய மனைவி முன்னால் இறந்துவிட்டிருந்தார். தனியாகத்தான் இருந்தார்”

”நான் விசாரித்துக் கொண்டே இருந்தேன்” என்றார் மூர்த்தி “ஒருவருடம் கழித்து தான் இவருடைய கடிதம் ஒன்று இவர் தங்கைக்கு வந்தது. அந்த கடிதத்திலிருந்த விலாசத்தை தெரிந்து கொண்டு நேராக இங்கே வந்துவிட்டேன்” என்றார். நான் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். “நான் வந்து இவளை அடித்தேன். அவள் என்னைத் திருப்பி அடித்து என்னுடன் வரமாட்டேன் என்று சொன்னாள். நான் கெஞ்சினேன். காலில் விழுந்து அழுதேன் என்னை கைவிட்டுவிட வேண்டாம் என்று சொன்னேன்”

“அவள் என்ன சொன்னா?” என்றேன். “பெண்களின் மனம் இறுகிவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது சார். இரும்பு போல. ஈவு இரக்கம் ஒன்றும் இல்லை” என்றார் மூர்த்தி. “அவர் ஒன்றும் சொல்லவில்லையா?” என்றேன். “அவள் வந்தால் கூட்டிக் கொண்டு போ எனக்கொன்றும் பிரச்னையில்லை என்று சொன்னார். எனக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. நான் இரண்டு நாட்கள் அந்தக் கடைக்கு வெளியே சாலையில் ஒரு கல்லிலே தான் அமர்ந்திருந்தேன். இரண்டாவது நாள் அவளே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்து சப்பாத்தியும் டாலும் தந்தாள். நான் அதை சாப்பிட்டுவிட்டு அழுதேன் அவள் இங்கேயே இருந்து கொள் என்று சொன்னாள். நான் சரி என்று சொன்னேன்.”

“உங்கள் மனைவியாகவா இருக்கிறாள்?” என்றேன். “இல்லை சார் நான் அவர்கள் வீட்டு வேலையாளாக இருக்கிறேன். அவருக்குத்தான் மனைவியாக இருக்கிறாள். ஆனால் நான்தான் இங்கே சமையல் பரிமாறுதல் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். நான் வந்த பிறகு தான் வியாபாரம் நன்றாக நடக்கிறது. எனக்கெல்லாம் ஒரு குறையுமில்லை சார். வேட்டி துணியெல்லாம் எடுத்துக் கொடுப்பார்கள். நல்ல சாப்பாடு. அவள் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறாள்” என்றார்.

“அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். “நான் வந்த பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கிறது. சின்னக்குழந்தைக்கு ஒருவயது” என்றார். “நீங்கள் அவளிடம் அன்பாகத்தான் பேசியது போலத் தெரிந்தது” என்றேன். “ஆமாம், அவர்கள் என்னை நன்றாகத்தானே பார்த்துக் கொள்கிறார்கள். நான் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறேன். மூத்தவளை ஒவ்வொரு நாளும் நான் தான் பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு கூட்டிக்கொண்டு வருகிறேன். சிறிய குழந்தையை இரவில் என் பக்கத்தில் படுக்கவைத்து தூங்குவதுண்டு” என்றார்.

நான் அவர் என்னிடம் இதையெல்லாம் சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எப்படி இதை புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சொல்லாத ஏதோ அதில் இருந்தது. திடீரென்று அவர் “பிள்ளைக இருக்கில்ல சார்? இல்லேன்னா எப்பவோ விட்டுட்டு போயிருப்பேன். இந்தப்பிள்ளைகளால் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தமே வந்திருக்கிறது. நான் கடுமையாக வேலை செய்வதே இந்தப் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென்பதற்காகத்தான்” என்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின.

நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு டெல்லிக்கு ரயில் ஏறினேன். நெடுநாட்கள் அவரது முகம் நினைவில் இருந்தது. எனக்கு குழந்தைகள் பிறந்தபோது தான் நான் ஒன்றை உணர்ந்தேன். பெண்ணுக்குள் இருப்பதற்கு சமானமான அன்னை ஒருத்தி ஆணுக்குள்ளும் இருக்கிறாள். ஆண்களை இவ்வாழ்க்கையில் கட்டிப்போட்டிருப்பது எது? அந்த தாய்மைதான்.

பரிமேலழகர் உரை
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.

மு.வரதராசனார் உரை
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

Management - Public Speaking
When a leader speaks everyone listens’ has been proved repeatedly. Even if a person knows many things, if he cannot put across his thoughts convincingly to his listeners, he cannot influence them. Most of the time management and managing are convincing others to do what you and they want to do. Hence, Public Speaking has gained prominence. the students, the skill will make the students confident so that they can present their views among the learned group. Thiruvalluvar, referred to as Valluvar, says that one of the ways a father can help his son develop is to make him become confident to address an audience. Refer to Kural 67.

Addressing an august gathering confidently infuses confidence in the kids. The sole and supreme responsibility of a father is to make his children become powerful public speakers, highlights Kural 67. 

The good one can do one's son
Is to place him in the van of learned

To become an acceptable public speaker, one must have contents, communication, culture, capability, confidence, and commitment. All these skills and qualities are the products of valuable education. Therefore, a father has to educate his children to become better and contributing citizens. 

Note: Many books on Kural 67 say that a father has to be grateful to his son and on Kural 70 say that a son has to be helpful to his father. In my view, a father has to be helpful to his son because he has to bring his son up and a son has to be grateful to his father, as the father has brought him up.

Kural 67 insists on the supreme responsibility of a father towards his son.



No comments:

Post a Comment