குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
பரிமேலழகர் உரை
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.).
மணக்குடவர் உரை
கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
சாலமன் பாப்பையா உரை
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
உறாஅதவர்போல் - உறாதவன் - நொதுமலன், பகையும்நட்பும்இல்லாதவன்.
சொலினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்.
செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்
செறாஅர் - கோபம்கொண்டிருக்கவில்லை
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.
உணரப்படும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
முழுப்பொருள்
தலைவியும் தலைவனும் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களுக்குள் உள்ள உறவை பற்றி உறுதியாக தெரியவில்லை. ஆதலால் தோழி தலைவியிடம் தலைவனை பற்றி கேட்டாள். தலைவியியோ தலைவனை அயலார் போல் பகையும் நட்பும் அல்லாதது போல் கூறுகிறாள். அவள் மனதில் தலைவனை பற்றி பகையில்லை. (அதுவே காதலுக்கு அறிகுறி). ஆதலால் இருவருக்கும் இடையே உள்ள உறவை பற்றி மிக விரைவில் அவர்களும் உணர்வார்கள் நாமும் உணர்ந்துக்கொள்ளலாம்.
காதலைப் பொருத்தவரை, “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை அல்ல கலத்தல்” வேண்டும் போலுள்ளது.

உதாரணமாக சொன்னால் “அலைபாயுதே” திரைப்படத்தில் கதாநாயகி ஷாலினி தன்னுடைய அக்காவிடம்(அதாவது தோழி ஸ்தானத்தில் இருப்பவரிடம்) கதாநாயகனை பகைவர் போலும் கூறமாட்டார் உறவுப் போலும் கூறமாட்டார். மாறாக காதல் எல்லாம் பைத்தியகாரத்தனம் வேலை இல்லாதவர்கள் செய்வது என்று பூசி மொழுகுவார். ஆனால் அக்கா குறிப்புணர்ந்துவிடுவார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.).
மணக்குடவர் உரை
கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
சாலமன் பாப்பையா உரை
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
No comments:
Post a Comment