Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இயல்பினான் இல்வாழ்க்கை

குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இயல்பு தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று

இயல்பினான் - இயல்பு அறிந்து அறத்தோடு (நெறிகளின் படி) இயந்து ; இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன்.

இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது 
-> இயல் - இயல்புகாண் டோற்றிமாய்கை ((சி. சி. 1. 3)
-> ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15)
-> நற்குணம்.ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44)
-> நேர்மை 
-> முறை

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை., இல்லற வாழ்க்கையில் கூடி

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்பவன் - வாழ்க்கையை நடத்துபவன் 
என்பான் - என்று சொல்லப்படுபவன்
வாழ்பவன் என்பான் - சிறப்புற வாழ்கின்றவர்கள் (நெறிகளின் படி) 

என்பான் - அப்படிப் பட்டவர்கள்

முயலுதல் - காரியம் முற்றுப்பெறும் பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்; வருந்துதல்; தொடங்குதல்.
முயல்வாருள் -  முயற்சிகளை மேற்கொள்வோரில்
-> மேலான  (பொருள்) வாழ்வு  வேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள்.   
-> தங்களுக்குரிய ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்கள்.
-> நோன்பு கொண்டு முற்றும் துறக்க புலன்களை விட்டு இறை நிலைய அடைய முயலும் தவம் செய்கின்றவர்கள்.
(அவர்கள் முயற்சித்தான் செய்வார்கள் அடையமாட்டார்கள் என்றும் கொள்ளலாம்)

எல்லாம் - அவர்கள் எல்லோரையும் விட

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

தலை - சிறந்தவர்கள்; மேலானவர்கள்.

முழுப்பொருள்

முன்குறிப்பு: உலகியலை துறப்பதை பற்றி ஆழமாக புரிந்துக்கொள்ள எழுத்தாளர் ஜெயமோகனின் “விடுதல்” கட்டுரையை வாசிக்கவும்

ஜெயமோகனின் “திரள்” கட்டுரையையும் வாசிக்கவும்

இல்வாழ்க்கையில் அறநெறிகளை பின்பற்றி முறையாக இயல்புடன் இயைந்து வாழ்பவர்கள் எல்லோரும், மற்ற வழியில் இயல்பு அல்லாத வழிகளில் வாழ கடும் முயற்சி செய்பவர்களைவிட மேலானவர்கள். 

இயல்பினான் இல்வாழ்க்கை
ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கையக் குறித்தது. வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு. 

இயல்பு இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

முயல்வாருள் - மேலான வாழ்வு பெற முயற்சி செய்கிறவர்கள்.
”இயல்பினான்” என்று தொடங்கி இல்லறத்தவரைச் சிறப்பிப்பதால், தங்களுக்குரிய ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்களை, தடுமாறிய அறிவுடையவர்களைக் குறித்தே (இக்குறள்) சொல்லியிருக்க வேண்டும்.

தவம்
1) முக்தியாகிய வீடுபேறை முயல்வோர்
2) இறைவன் திருவருளைக் காண முயல்பவர்
3) பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார்
4) ப்ரஹ்மசர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகள் உள்ளன. இதில் வானப்ரஸ்தத்தில் உள்ளவர்களை முயல்பவர்கள் என்றுகூறுகிறார் திருவள்ளுவர். . 

பொருள்
4) மேன்மேலும் பொருளீட்டி வாழ முயல்வர்
5) வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார் (அதாவது இல்வாழ்க்கை கடமைகளை தவிர்த்து சுகபோக வாழ்வில் திளைத்து வாழ்பவர்கள்)

அறம்
6) இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்பவர்.
7) திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்

ஆக, முதலில் மேற்சொன்ன இல்வாழ்க்கையை அறநெறிகளுடன் வாழ்பவர்கள் எல்லோரும், ஒழுக்க நெறிகளில் நில்லாது, தங்கள் அறத்தைத் தவிர்த்து, பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்களை விட சிறந்தவர்கள்.

உதாரணம் (நன்றி: தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)(சுட்டியை சொடுக்கவும்)

இல்வாழ்க்கையை பற்றி பேசுகிற திருவள்ளுவர் பல இடங்களில் துறவுடன் ஒப்பிடுகிறார். அதனுடன் ஒப்பிட்டு துறவை விட இல்வாழ்க்கை சிறந்தது என்று சொல்ல முற்படுகிறார். 

துறவு வாழ்க்கை என்றென்பது காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசல் இல்லாத நேரத்தில் பயணம் செல்வதுப் போல. ஆனால் இல்வாழ்க்கை என்றென்பது காலையில் 8-8:30 மணிக்கு அண்ணா சாலையில் (Mount Road)இல் எதிரும் புதிருமான் சாலையில் பலத்த போக்குவரத்து மத்தியில் விதிகளை பின்பற்றி எந்தவிதமான மோதல்கள் இல்லாமல் சென்று சாதிப்பது செல்வதுப் போல. ஆக துறவத்தாரை விட பல சிக்கல்கள் மத்தியில் வாழ்கிறவன் இல்லறத்தான். அதுவும் அறத்தோடுக் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகிறான் என்றால் அங்கே துறவிலே சென்று சாதிக்கக் கூடியவற்றை கூட இங்கேயே சாதித்துவிடலாம். அதனால் தான் முயல்வாருள் எல்லாம் தலை என்கிறார் திருவள்ளுவர்.

இக்குறள் இல்லறத்தில் வெற்றிபெற்றவர்கள் துறவிகளை விட சிறந்தவர்கள் என்று கூறவில்லை. துறவுக்கு முயற்சி செய்யும் வானப்ரஸ்த்திரர்களை விட சிறந்தவர்கள் இல்லறத்தில் இருப்பவர்கள். 

குறளின் குரல்
நன்றி: அவனிவன் பக்கங்கள் அஷோக் (சுட்டியை சொடுக்கவும்)

குறள் திறன் (சுட்டியை சொடுக்கவும்)
இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் முயல்வார் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது பாடலின் பொருள்.
முயல்வார் யார்?

இயல்பினான் என்பதற்கு இயற்கைப்படி அல்லது இயற்கை உந்தும் வழி என்று பொருள் கொள்வர்.
தலை என்ற சொல்லுக்கு முதன்மை என்பது பொருள்.

முயல்வார் யார்?

முயல்வார் என்பதற்கு நேர் பொருள் முயற்சி செய்கிறவர்கள் என்பது. 
முன்னேற முயல்வார், மேலான வாழ்வு பெற முயற்சி செய்கிறவர்கள் என்று இதன் பொருளை நீட்டிக்கலாம்.

'பொருட்கு முயலுவார்' என மணக்குடவரும், 'உணவு உறக்கம் நீத்து உடலை ஒறுத்துத் தவஞ் செய்து அறியமுயல்வர்' எனப் பரிதியும் இச்சொல்லுக்குப் பொருள் கண்டனர். பரிமேலழகர் 'புலன்களை விட முயல்வார்' என்கிறார்.
பிற்காலத்தவர்களில் சிலர், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர், இறைவன் திருவருளைக் காண முயல்பவர் என்று பொருள் கூறினர்.
பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார், உயிர் உய்திபெற முயல்வோர், நல்ல கதி அடைய முயற்சி செய்வோர் என்றனர் வேறு சிலர்.

இல்லறத்தின் முயல்வார் என்றபடியும் ஓர் உரை உள்ளது.
மேன்மேலும் பொருளீட்டி வாழ முயல்வர் என்றும் பொருள் கூறினர். 
நாமக்கல் இராமலிங்கம் முயல்வார் என்பதற்குப் 'பலவித முயற்சிகள் செய்கிறவர்கள் அதாவது துறவறம் பூண்டு பல வழிகளில் தவம் செய்கிறவர்கள், சாகாமலிருக்க காயகற்பம் தேடுகிறவர்கள், வெவ்வேறு சித்திகள் பெறுவதற்காக வெவ்வேறு மந்திர தந்திரங்களை நாடுகிறவர்கள் முதலானோர்' என்பார்.

'இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்' என்பது சி.இலக்குவனார் முயல்வார் என்றதற்குத் தரும் விளக்கம். 

குன்றக்குடி அடிகளார் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற விளக்கம் பொறித்துள்ளார்.
வ சுப மாணிக்கம் 'முன்னேற முயல்வார்' என்று பொருள் தருகிறார்.

முயல்வார் என்பது வாழ்க்கை முயற்சி செய்வார் என்ற பொருளிலே இக்குறளில் வந்தது என்று தோன்றுகிரது. இது வாழமுயற்சி செய்வோர்- சிறப்பாக 'வெற்றி வாழ்க்கை முயல்வார்' குறித்தது என்று கொள்ளலாம். வாழ முயல்வார் என்று சொல்லும்போது வீடு பேற்றை முயல்வோர், புலன்களை விடத் தவஞ்செய்வோர் என்ற கருத்துக்கள் இக்குறளுக்கு அமையா.
குன்றக்குடி அடிகளாரின் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற பொருள் பொருந்தி வரும்.

ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கையக் குறித்தது. வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு. 
இயல்பு இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

மாந்தரை வாழவிரும்புகிறவர்கள், உலக வாழ்க்கையை விரும்பாதவர்கள் என்று இரண்டாகக் கொண்டால் துறவு மேற்கொண்டவர்களும் துறவுச் சிந்தனையுள்ளவர்களும் உலக வாழ்க்கையை விரும்பாதோரில் அடங்குவர். முயல்வோர் என்ற சொல் வாழவிரும்புவோர் பற்றியது. எனவே துறவியரும் தவசிகளும் இக்குறளில் பேசப்படவில்லை என்று கொள்ளவேண்டும். மணக்குடவர், மு வ., வ சுப மாணிக்கம், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இப்பாடலை இப்பொருளில் அணுகி உரை கண்டவர்கள்.

வாழவிரும்புவர்கள் வாழ்வில் வெற்றியடைய விரும்புவார்கள். அப்படி வாழ்க்கையில் வெற்றி பெற மாந்தர் வெவ்வேறூ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கை வெற்றியை எது தீர்மானிக்கிறது? செல்வம் சேர்ப்பதும் மனித வாழ்வின் வெற்றியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது. இதனால்தான் மணக்குடவர் முயல்வார் என்பதற்கு பொருட்கு முயறல் என்று குறிப்பு தந்தார். இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு'வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம் என்று இதனை பரிப்பெருமாள் வேறுவிதமாக விளக்குவார்.

ஆனால் பொருள் மட்டுமே வெற்றியைக் குறிக்காது. மக்கட்செல்வம், புகழ் போன்ற மற்ற பேறுகளைப் பெற்று நல்வாழ்வு வாழ மாந்தர் முயல்கின்றனர். இயல்பான இல்வாழ்வு வாழ்ந்தாலே வெற்றி வாழ்க்கைதான் என்கிறார் வள்ளுவர். இன்னொரு வகையில் சொல்வதானால் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவனே வெற்றி பெறுகிறான். எனவே அத்தகைய வாழ்வு வாழ்பவனை முயல்வாருளெல்லாம் தலை என்கிறார்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது இக்குறட்கருத்து.

துறவிலும் சிறந்தது இல்வாழ்க்கை (நன்றி: TamilVu)

‘பற்று‘ இல்லாதவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை என்பார்கள் சமயவாதிகள். அந்தப் பற்றைத் துறப்பது மிகவும் கடினம். இவ்வுலகப்பற்றை, குறிப்பாக இல்வாழ்க்கைப் பற்றைத் துறத்தல் அரியசெயல். எனவே, வாழ்க்கைப்பற்றை - இல்வாழ்க்கைப் பற்றைத் துறந்துவாழும் துறவிகளைப் பெரிதும் போற்றி ஒழுகுவர் சமயச் சார்புடையவர்கள். அதனால் சமயத்துறவிகள் சமுதாயத்தில் பெரும் செல்வாக்குடன் இருப்பதுடன் அறவுரை கூறும் ஆசான்களாகவும் திகழ்கின்றனர்.

‘துறவு‘ என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்து, துறவு பற்றிப் பல கருத்துகளை வழங்கிய வள்ளுவர், இல்லறத்திற்குக் கொடுக்கும் தலைமை, அவரது சமயம் கடந்த மாட்சிமையைக் காட்டும். எனவே, இல்லறத்தினைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது எல்லாம், துறவறத்தைவிட, அது சிறப்பு வாய்ந்தது, உயர்ந்தது என்றே சொல்லுகிறார். இதற்கு முன்னர் இல்லறத்தினால் கிடைக்கும் இன்பம் பற்றிக் குறிப்பிடும்போது (குறள் :46),
“இல்வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கத்தின்படி ஒருவன் வாழ்ந்தால் போதும்; அவன் இல் வாழ்க்கைக்குப் புறம்பான துறவறத்திற்குச் செல்லவேண்டாம். அங்கு இதைவிட சிறந்த பயன் எதுவும் இல்லை” என்று கூறினார். அடுத்த நிலையில், நல்ல முறையில், இல்வாழ்க்கைக்கு உரிய அறத்துடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு பல திறத்தாலும் முயற்சி செய்பவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்வானவன், தலைமையானவன் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை
(குறள்:47)

(இயல்பினான் - அறத்தின் இயல்போடு வாழ்பவன், 
தலை - தலைமையானவன்)

இதில் ‘முயல்வார்‘ என்பதற்குப் பலரும் பலவிதமான கருத்துரைகளை வழங்கினாலும், அவர்களும் மறைமுகமாக, இல்லறத்திற்குப் புறம்பான முயற்சியாகிய துறவு நிலையையே சுட்டுகின்றனர். பரிமேலழகர் முதல் பாவாணர் வரையிலும் ‘முயல்வார்‘ என்பது துறவு நெறியாரையே குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இல்வாழ்க்கையில் அறத்துடன் வாழ்பவன், சமயத்தாரால் போற்றப்படும் துறவிகளை விடவும் உயர்வானவன், தலைமையானவன் என்பது வள்ளுவர் கருத்து. மேலும் நல்லறத்துடன் நடத்தப்படும் இல்லறம், இவ்வுலக வாழ்க்கையில் தலைமையானது, என்று வள்ளுவர் கருதுகிறார்.

அறநெறியில்
இல்லறம் கொள்பவன்
பிறநெறியில் சிறப்பாய் வாழ
முயற்சிப்பவனவிட சிறந்தவன்

பரிமேலழகர் உரை
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான்-இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் கலை-புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
விளக்கம் 
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பலவகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்தலின், 'தலை' எனவும் கூறினார்.)

மணக்குடவர் உரை
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

மு.வ உரை
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான்- (இல் வாழ்க் கைக்குரிய) இயல்போடு (கூடி) இல் வாழ்க்கையை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை ‡ (வீட்டுப் பேற்றை அடைய) முயல்பவரு ளெல்லாம் முதன்மையானவன்.

அகலம்: ‘ஆன்’ என்னும் உருபு ‘ஓடு’ என்னும் பொருளில் வந்தது. தாமத்தர் பாடம் ‘என்ப’. மற்றை நால்வர் பாடம் ‘என்பான்’.

கருத்து: இயல்பினான் இல்வாழ்வான் வீட்டுப் பேற்றை அடைய முயல்வாருள் முதன்மையானவன்.

Thirukkural - Management - Married Life
A husband who lives a virtuous family life spontaneously or by instinct is superior to someone who attempts, against all personal odds, to lead a virtuous life. Valluvar's advise, in Kural 47, is that the intention to lead a virtuous life should come from within. When the intention is spontaneous, the outcome of that intention will be greater than the expected outcome.

A householder by instinct scores
Over others striving in other ways.

பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.”

English Meaning - As I taught a kid - Rajesh
The one lives normal live and fulfills his duties especially in a family life is better than a person who runs away from family life and "trying to lead" a sage life (not exactly a sage)

Questions that I ask to the kid
Will you recommend a person run away from normal family life in order to lead a sage life?

No comments:

Post a Comment