Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

104 உழவு


குறள் 1034


குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

குறள் 1038

குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
[பொருட்பால், குடியியல், உழவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுழன்றும் - சுழங்கு-தல் - cuḻaṅku-   5 v. intr. prob.சுழல்-. To whirl; to be tossed about; உழலுதல்.நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.)

சுழல் - சுழற்சி; வளைவு; சுழிநீர்; சுழல்காற்று; காற்றாடி; பீலிக்குடை; ஏமாற்று; சஞ்சலம்.

ஏர்ப் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

பின்னோன் - பிற்பட்டவன்; தம்பி; வேளாளன்.

பின்னது - பின்னே

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அதனால் - அதனால்

உழந்தும் - உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.

உழவே - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
உழவு தொழிலை தவிர வேறு எந்த ஒரு தொழிலில் இவ்வுலக மக்கள் சுழன்றாலும் இறுதியில் ஏர் பிடித்து நிலத்தை பயிராக்கி உணவாக்கும் உழவனின் பின்னே தான் இவ்வுலகம் நிற்கிறது. அத்தகைய இந்த உழவு தொழிலில் எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் கடினமாக இருந்தாலும் உழவே இவ்வுலகில் முதன்மையான சிறந்த தொழில் (என்று திருவள்ளுவர் கூறுகிறார்).

உழவு தொழில் என்பது உடல் உழைப்பையும் அறிவையும் அனுபவத்தையும் சார்ந்த ஒரு தொழில். அது போல இயற்கையை நம்பி இருக்கின்ற தொழில். இயற்கை கைவிட்டால் (வானம் பொய்த்தாலோ அதாவது மழை அதிகமானாலோ பொய்த்தாலோ, வறட்சி ஏற்பட்டாலோ) உழவு செய்தல் முடியாது. அல்லது பூச்சி தாக்கினாலோ பயிர்கள் நாசம் அடைந்துவிடும்.  அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு வருவாய் குறைந்துவிடும் சில சமயம் ஒன்றுமே வராது. அதில்லாமல் உழவில் அன்றாடம் வருவாய் கிடையாது. அறுவடை காலத்தில் மட்டும் தான் விளைச்சலுக்கு ஏற்ப வரும். இதனால் இவர்களின் வருமானம் நிலையானது இல்லை என்பதை நாம் அறிகிறோம். இப்படி பல கஷ்டங்கள் இருந்தாலும் இவ்வுலகிற்கு உணவு படைக்கும் தொழிலே இவ்வுலகின் சிறந்த தொழில். 

அதுமட்டும் இன்றி மற்ற தொழில்களில் வரும் பயன் எல்லா மக்களுக்கும் ஆனது அல்ல. ஆனால் உழவில் மட்டும் தான் பயன் ஒவ்வொரு மக்களையும் சென்று அடையும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். . 

உப தகவல் (Sapiens book - Yuval Noah Harari)
வரலாற்று ரீதியாக பார்த்தால் மூன்று லட்சம் ஆண்டுகள் முன்பு மனிதன் (ஹோமோ சேப்பியன்ஸ்) ஆப்ரிக்காவில் விஸ்தரிக்க தொடங்கினான்.. ஆனால் 12000 ஆண்டுகள் முன்பு தான் அவன் விவசாயம் செய்ய துவங்கினான். அங்கிருந்து தான் சமூதாயங்கள், நாகரீங்கள் உருவாக தொடங்கின. அதன் பின்பு தான் ராஜாங்கம், பணம் முதலியவை உருவாகின. பின்பு தான் மதம், சாம்ராஜ்யங்கள் உருவாயிற்று. ஐநூறு ஆண்டுகள் முன்பு விஞ்ஞான புரட்சி துவங்கியது. இருநூறு ஆண்டுகள் முன்பு தொழிப்புரட்சி துவங்கியது. இன்றும் நாம் விவசாயம் இல்லாமல் இல்லை.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can choose to one of the 1000s of jobs/opportunities available today. And that can person go around the world for that job. But at the end of the day, every person in this world is behind the farmer who carries the plow and does agriculture and serve the food. Hence, agriculture is best profession in the world

Questions that I ask to the kid
All the people in various occupations are behind whom?
Which is the best profession in the world? Why?

103 குடிசெயல்வகை

பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - குடிசெயல்வகை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்

குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

குறள் 1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு

குறள் 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

குறள் 1026



குறள் 1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு

ஆள்வினையும் ஆன்ற அறிவும்

குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
ஆள்வினையும் - முயற்சி; மகிழ்ச்சி

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

இரண்டின் - இவை இரண்டின்

நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.

வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

முழுப்பொருள்
ஒருவருடைய முயற்சியும் ஆழ்ந்த அகன்ற அறிவும் ஒரு செயலின் வெற்றிக்கு மிக அவசியம். அவ்வாறு முயற்சியும் அறிவும் கொண்டு ஒருவர் நெடுங்காலம் தன் செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தால் அவருடைய குடும்பம் நீண்ட நாட்கள் புகழுடன் விளங்கும். இது நாட்டிற்கும் பொருந்தும். எந்த நாடு இடைவிடாத முயற்சியும் அறிவும் உடையதோ அந்த நாடு பல நூற்றாண்டுகள் முன்னேறும் அதன் நல்ல பயன்களையும் அனுபவிக்கும்.

இங்கே பார்க்க வேண்டியது சில
1. முயற்சி என்பதை முதலில் சொல்கிறார் திருவள்ளுவர். அறிவென்பதை அதற்கு அடுத்து தான் சொல்கிறார்.
2. வினை என்று சொல்லமால் நீள்வினை  என்று சொல்கிறார் . முயற்சியும் அறிவும் செயலில் நெடுங்காலம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குடியின் வளர்ச்சியும் பயனும் பல காலம் இருக்கும். சில காலம் மட்டும் ஒரு செயலை நன்கு செய்தால் அதன் பயன் உண்டு எனினும் குடியின் புகழ் பல காலம் நிலைக்க வேண்டும் என்றால் நாம் ஆற்றும் செயலும் நெடுங்காலம் இருக்க வேண்டும்.

மேலும் அஷோக்  உரை


பரிமேலழகர் உரை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.

மு.வரதராசனார் உரை
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்

குறள் 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

அல்ல - இல்லை ; அன்று ; மாறுபாடு

நாண் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்; வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை -  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
எல்லோரும் உண்ணுகிறார்கள் உடை உடுத்துகிறார்கள் வாகனங்களில் செல்லுகிறார்கள் பலர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் ஆபர்கணங்கள் அணிகிறார்கள். ஆனால் இவையும் மற்ற (பொருள்) எல்லாமும் மனிதருக்கு சிறப்பு சேர்க்காது (வேறு என்றால் சிறப்பு என்ற பொருளும் உண்டு). ஏனெனில் மனிதர் எல்லோரும் சமமே. ஆனால் மனிதர்களுக்கு உண்மையான சிறப்பென்பது அவர்களின் நாணுடைமையாகும். அதாவது தீய செயல்களை செய்ய நாணுவது, நாணத்திற்கு அஞ்சி தீ செயலை செய்யாது இருத்தலே மனிதருக்கு சிறப்புடையதாகும் சிறப்பு சேர்க்கும். அவர்களின் செயலே அவர்களை வேற்றுமைப்படுத்தும். அவர்களின் செயல்களே அவர்களுக்கு புகழ் சேர்க்கும்.

என்பதையும் நினைவில் கொள்க.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.