குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
[பொருட்பால், குடியியல், உழவு]
பொருள்
'இலம்!' - இல்லம்; இல்லறம் வறுமை
இலம்பை - ilampai லம்பை, s. poverty, தரித்திரம்; 2. vexation, affliction, இடுக்கண், இலம்பைப்பட, to be distressed.
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
அசை - செய்யுள்உறுப்புகளுள்ஒன்று; இசைப்பிரிவு; ஆடுமாடுகள்மீட்டுமெல்லும்இரை; அசைநிலை செயலறவு (ceyal-aṟavu n. id. +.Prostrate condition, helplessness; வலியின்மை. ) சுவடித்தூக்கு; தொங்குதூக்கு.
அசை - acai VI. v. t. move, shake, agitate ஆட்டு; v. i. சோம்பு. be idle.
அசை - acai II, v. i. move, stir, shake, ஆடு; 2. be active, walk, உலாவு; 3. be slow, சோம்பு; 4. be agitated, disturbed, கலங்கு.
இ - மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.
அசைஇ - தம்மிடம் விட்டு நகராது சோம்பி
இருப்பாரைக் - இருப்பவர்களை
காணின் - கண்டால்
நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
நிலமகள் - the earth as a goddess, பூமி தேவி.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.
நகும் - நகு-தல்
naku- 6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).
முழுப்பொருள்
ஒருவனுக்கு வறுமை (தரித்திரம்) என்பது வாழ்நாளில் வரக்கூடும். ஆனால் அந்த வறுமையின் துன்பத்தில் உழன்று சோம்பல் கொண்டு அதனை சுகமென்று வாழ்வோர் சிலர் இருப்பர். அந்த சுகமே சொர்க்கம் என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வார்கள். தன் வாழ்வின் நோக்கம் என்ன என்று உணராமல் இருப்பர். ஒருவேலையும் செய்யாது நேரத்தை வீண் அடிப்பர். இத்தகையவர்களை கண்டு பூமி திருமகள் சிரிப்பாள். ஏளனம் கொள்வாள்.
ஏனெனில்? எவ்வேலையும் யாரும் கொடுக்கவில்லை என்றாலும் உழவு என்னும் தொழிலை எப்போதும் கொடுக்க நிலமகள் காத்து இருக்கிறாள். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் உழுது விதைத்து அறுத்து உண்பதே உயிர்வாழ்கை என்ற உண்மையை உணரவேண்டியது தான். உழவு செய்து வரும் உணவுப்பொருளில் உணவு மட்டும் அல்ல பொருளும் ஈட்டலாம்.
இக்குறள் சோம்பலை என்று பற்றியப் போல் தெரிந்தாலும், இவ்வுலகத்தில் பிறருக்கு உணவு கொடுக்கும் உழவு தொழிலுக்கு எப்பொழுது ஆட்கள் தேவை என்று.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும். (உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.).
மணக்குடவர் உரை
பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.
மு.வரதராசனார் உரை
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
சாலமன் பாப்பையா உரை
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள்
No comments:
Post a Comment