கருமம் செயஒருவன் கைதூவேன்
செய - செய்தல்
ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.ஒருத்தன்
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
கை - kai part. 1. Suffix at the end ofverbal nouns as செய்கை தொழிற்பெயர் விகுதி 2. Auxiliary prefix to verbs, as in கையிகந்து. ஓர்தமிழுபசருக்கம்.
தூ - tū VII. v. t. send away, cause to go, செலுத்து.
துரப்பு, துரத்தல், v. n. driving, causing to go; 2. emission, discharging, விடுகை; 3. scaring away, dispelling, அகற்றுதல்.
கைதூவேன் - செய்கையில் அகலமாட்டேன்; ஓயாமல் செய்வேன்
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.
பெருமையின் - பெருமை எல்லாவற்றிலும்
பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.
உடையது - கொண்டது
இல் - வேறு இல்லை; மற்றொன்று இல்லை
தன் குடியின் (குடும்பம், நாடு, சமூகம்) பெருமை (புகழ்) ஓங்குவதற்கான ஒரு செயலை பெருமை அடையும் வரை அச்செய்கையில் இருந்து ஓயமாட்டேன் என்று சங்கல்பம் ஏற்றுக்கொண்டு அதற்காக உழைத்து இறுதியில் அடையும் பெருமை என்பது அவன் அடைந்த எல்லா பெருமைகளிலும் பெரிய பெருமையாகும். அதைப்போன்ற பெருமை வேறேதுமில்லை.
ஒருவன் தன்னுடைய பெருமைக்காக உழைக்கலாம். அதுவும் புகழ். ஆனால் தான் செய்யும் செயல் தன் குடியிற்கே பெருமையை தரும் என்றால் அதுவே அவன் அடைந்த பெருமையான எல்லாவற்றிலும் பெருமையாகும்.
உதாரணமாக கூகுல் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சுந்தர் பிச்சை அவர்கள் தன்னுடைய நாட்டிற்கே புகழை சேர்த்துள்ளார்.
மகாத்மா காந்தி அவர்களும் இந்தியநாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க அரும்பாடுபட்டார். பிறதேசத்து தலைவர்கள் வன்முறையில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முப்பது கோடி மக்களை ஒருங்கினைத்து அறவழியில் நடத்தி அஹிம்சை முறையில் சுதந்திரம் வாங்கிக்கொடுத்து அஹிம்சையின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டாக காண்பித்தவர் மகாத்மா காந்தி. அவரால் இந்திய நாட்டிற்கே பெருமை.
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
தாதா அப்துல்லா என்பவரின் கம்பெனி தென்னாப்பிரிக்காவில் செயல்பட்டு வந்தது. மிகப் பெரிய கம்பெனி. அந்தக் கம்பெனியின் வழக்கு ஒன்று நீண்ட நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. 40,000 பவுன் பற்றிய வழக்கு. அந்த வழக்கை நடத்த ஏற்கனவே பிரபல வக்கீல்கள் நியமிக்கபட்டு இருந்தார்கள். அவர்களுக்கு வழக்கு பற்றிய விவரங்களை எடுத்துக் கூற இவர்கள் தரப்பில் ஒரு பிரதிநிதி தேவைப்பட்டார். ஏனெனில் ஆங்கிலப் புலமை அவர்களுக்கு இல்லை. எனவே காந்தியை ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் அனுப்ப முடியுமா? என்று அவருடைய அண்ணனிடம் கேட்டார்.
வாதாடும் வேலை இல்லை. குமாஸ்தா வேலைதான் என்றதும் காந்தி ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே பம்பாய் அனுபவம் அவரை பயம்கொள்ள வைத்தது. உள்நாடிலேயே வாதாட முடியாத தன்னால் அயல்நாட்டில் வாதாட முடியாது என்பது அவரது எண்ணம். அவருக்கான டிக்கெட் செலவு அனைத்தும் கம்பெனியே செய்து கொடுக்கும். அது போக 105 பவுன் சம்பளம் என்று முடிவாயிற்று.
புறப்பட ஆயுத்தமானார் காந்தி.
இந்த புலம் பெயர்வுக்குக் காரணம், கமிஷன் தந்து மனு எழுதித் தந்து ஜீவிப்பது அவருக்கு ஏற்பில்லை. தனியே வாதாடும் திறனும் இல்லை. குடும்பம் நடக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சாதிக் கட்டுப்பாடு. அவருடைய மைத்தினர் - மைத்துணிகளே இவரை ஏற்கக் கூடாது. உணவு வழங்கக் கூடாது என்ற பயங்கர கட்டுப்பாடு. ரகசியமாக அவர்கள் கட்டுப்பாட்டை மீறத் தயார். ஆனால் அதை காந்தி ஏற்கவில்லை.
கட்டுப்பாடு விதித்தவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. அவர்களை எதிர்க்கவும் இல்லை. இதுவே, அவரது அகிம்சை கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் ஆனது என்று கூட சொல்லலாம்! எனவே இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து விலகி வாழ்வதே நலம் என்று கருதினார். எனவே தென்னாப்பிரிக்கப் பயணம் மேற்கொண்டார். ஏற்கனவே, லண்டன் பயணத்திற்கு சாதிக் கட்டுப்பாடு. தற்போது தென்னாப்பிரிக்கப் பயணம். துணிந்து புறப்படுகிறார்.
காரணம், குடும்பத்தைப் பராமரிக்க வேறு வழி தெரியவில்லை. எனவே மீண்டும் மகனையும், மனைவியையும் விட்டுப் பிரிந்து அயல்நாடு செல்கிறார். அவருடைய புலம் பெயர்ந்த பயணம், தென்னாப்பிரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட வேள்விக்கு கால்கோல் விழாவாக அமைந்தது. எனினும் அந்த இளம் வயதில் இரண்டாவது கடல் கடந்த பயணம் ஆழ்மனதை கனக்கச் செய்தது என்பதே நிஜம்.
இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.
குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்
குறள் 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்


Join the conversation