Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
[பொருட்பால், குடியியல், உழவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுழன்றும் - சுழங்கு-தல் - cuḻaṅku-   5 v. intr. prob.சுழல்-. To whirl; to be tossed about; உழலுதல்.நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.)

சுழல் - சுழற்சி; வளைவு; சுழிநீர்; சுழல்காற்று; காற்றாடி; பீலிக்குடை; ஏமாற்று; சஞ்சலம்.

ஏர்ப் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

பின்னோன் - பிற்பட்டவன்; தம்பி; வேளாளன்.

பின்னது - பின்னே

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அதனால் - அதனால்

உழந்தும் - உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.

உழவே - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
உழவு தொழிலை தவிர வேறு எந்த ஒரு தொழிலில் இவ்வுலக மக்கள் சுழன்றாலும் இறுதியில் ஏர் பிடித்து நிலத்தை பயிராக்கி உணவாக்கும் உழவனின் பின்னே தான் இவ்வுலகம் நிற்கிறது. அத்தகைய இந்த உழவு தொழிலில் எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் கடினமாக இருந்தாலும் உழவே இவ்வுலகில் முதன்மையான சிறந்த தொழில் (என்று திருவள்ளுவர் கூறுகிறார்).

உழவு தொழில் என்பது உடல் உழைப்பையும் அறிவையும் அனுபவத்தையும் சார்ந்த ஒரு தொழில். அது போல இயற்கையை நம்பி இருக்கின்ற தொழில். இயற்கை கைவிட்டால் (வானம் பொய்த்தாலோ அதாவது மழை அதிகமானாலோ பொய்த்தாலோ, வறட்சி ஏற்பட்டாலோ) உழவு செய்தல் முடியாது. அல்லது பூச்சி தாக்கினாலோ பயிர்கள் நாசம் அடைந்துவிடும்.  அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு வருவாய் குறைந்துவிடும் சில சமயம் ஒன்றுமே வராது. அதில்லாமல் உழவில் அன்றாடம் வருவாய் கிடையாது. அறுவடை காலத்தில் மட்டும் தான் விளைச்சலுக்கு ஏற்ப வரும். இதனால் இவர்களின் வருமானம் நிலையானது இல்லை என்பதை நாம் அறிகிறோம். இப்படி பல கஷ்டங்கள் இருந்தாலும் இவ்வுலகிற்கு உணவு படைக்கும் தொழிலே இவ்வுலகின் சிறந்த தொழில். 

அதுமட்டும் இன்றி மற்ற தொழில்களில் வரும் பயன் எல்லா மக்களுக்கும் ஆனது அல்ல. ஆனால் உழவில் மட்டும் தான் பயன் ஒவ்வொரு மக்களையும் சென்று அடையும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். . 

உப தகவல் (Sapiens book - Yuval Noah Harari)
வரலாற்று ரீதியாக பார்த்தால் மூன்று லட்சம் ஆண்டுகள் முன்பு மனிதன் (ஹோமோ சேப்பியன்ஸ்) ஆப்ரிக்காவில் விஸ்தரிக்க தொடங்கினான்.. ஆனால் 12000 ஆண்டுகள் முன்பு தான் அவன் விவசாயம் செய்ய துவங்கினான். அங்கிருந்து தான் சமூதாயங்கள், நாகரீங்கள் உருவாக தொடங்கின. அதன் பின்பு தான் ராஜாங்கம், பணம் முதலியவை உருவாகின. பின்பு தான் மதம், சாம்ராஜ்யங்கள் உருவாயிற்று. ஐநூறு ஆண்டுகள் முன்பு விஞ்ஞான புரட்சி துவங்கியது. இருநூறு ஆண்டுகள் முன்பு தொழிப்புரட்சி துவங்கியது. இன்றும் நாம் விவசாயம் இல்லாமல் இல்லை.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can choose to one of the 1000s of jobs/opportunities available today. And that can person go around the world for that job. But at the end of the day, every person in this world is behind the farmer who carries the plow and does agriculture and serve the food. Hence, agriculture is best profession in the world

Questions that I ask to the kid
All the people in various occupations are behind whom?
Which is the best profession in the world? Why?

No comments:

Post a Comment