குறள் 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
[பொருட்பால், குடியியல், உழவு]
பொருள்
உழுது - உழுதல் - நிலத்தைக்கிளைத்தல்; கிண்டுதல்; மயிரைக்கோதுதல்.
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்
வாழ்வாரே - வாழ்வார் - வாழ்கின்றவர்
வாழ்வார் - வாழ்கிறார்
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
மற்றெல்லாம் - மற்று எல்லாம் - மற்ற கொடுத்தல் எல்லாம்
தொழுது - வணங்கல்
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்
பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.
செல்பவர் - செல்லுவர்
முழுப்பொருள்
பூமியில் நிலத்தை உழுது பயிர் விளைவித்து அதனை அறுவடை செய்து அவ்வுணவை தானும் உண்டு பிறர்க்கு கொடுக்கும் உழவர்களே இவ்வுலகில் உண்மையாக வாழ்கின்றவர்கள். மற்றவர்கள் எல்லாம் தம் உணவுக்காக உழவர்கள் பின்பு சென்று உழவர்களை வணங்குபவர்கள்.
வாழ்தல் என்றால் மகிழ்தல் என்றும் பொருள். ஆதலால் உழவர்களே மெய்யான மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றும் கூறலாம். ஏனெனில் பிறரின் பசியை (பசி என்னும் பிணியை) ஆற்றும் உணவை நிலத்தில் கடினமாக உழைத்து அவர்களுக்கு தருகின்றனர். அதனை தன்னுடைய அன்றாட தொழிலாக வைத்துள்ளனர். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வீழ்குடி உழவரொடு” (சிலப்.இந்திரவிழவூர் 43)
பரிமேலழகர் உரை
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
மு.வரதராசனார் உரை
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

No comments:
Post a Comment