குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
திறன் - திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
அல்ல - இல்லை
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..
பிறர் - piṟar n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.
செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
நோ - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஓ); வலி; துன்பம்; நோய்; சிதைவு; வலுவின்மை
நொந்து - நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்.
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்
அல்ல - இல்லை
செய்யாமை - செய்யாது இருத்தல்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
முழுப்பொருள்
திறன் என்றால் மேன்மை, உபாயம், கோட்பாடு, இயல்பு, ஒழுக்கம் என்று பொருள்.
பிறர் தனக்கு மேன்மை அல்லாத கோட்பாடுக்கு ஒவ்வாத இயல்பல்லாத ஒழுக்கமல்லாத செயலை செய்து துன்பத்தை தந்தால் அவருக்கு பதிலுக்கு ஒன்றும் செய்யாதே. அவரை தண்டிக்காதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். அவருக்கு இந்த பதிலடியை தந்தால் அவர் துன்பத்தில் வருந்துவார் என்றெண்ணி அறமல்லாதவற்றை இயல்பல்லாதவற்றை செய்யாதே. அவரை தண்டிக்காது இருப்பது நன்று. நன்மை பயக்கும். ஆதலால் பிறர் நமக்கு செய்த தீமையை பொறுத்துக்கொள். மறப்பது அதனினும் நன்று என்று முன்னமே கூறியுள்ளார் திருவள்ளுவர்.
ஏன் தண்டிக்க கூடாது?
தண்டிப்பது என்பதே அறம் அற்ற செயலாகும். (இது அரசருக்கு பொருந்தாது. அவர் குற்றங்களை களைந்து நாட்டை அமைதியாக நடத்த கடமைப்பட்டவர்).
மேலும் ஒருவர் தவறு செய்தால் அதற்கு தண்டனை மேல் உலகத்தில் உண்டு. மேல் உலகத்திற்கு ஏன் செல்ல வேண்டும். ஒருநாளல்ல ஒருநாள் அவன் மனசாட்சியே அவனை சுடும். அதுவே அவனுக்கு தண்டனை.
எப்படி இது நன்று (நன்மை பயக்கும்)?
அதுமட்டும் அல்லாது நீ அவனை தண்டித்து பதிலுக்கு அவனும் தண்டித்துக்கொண்டு இருந்தால் இப்பகை வளர்ந்துக்கொண்டே இருக்கும். நிம்மதி கெடும் சந்தோஷம் அழியும்.
தண்டித்தல் நமக்கு தற்காலிக மகிழ்ச்சியை தந்தாலும் (குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்) பின் ஒருநாள் ஏன் ஒரு தீமையை பிறருக்கு செய்தோமென தன்நெஞ்சே தன்னை சுடும் (குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்).
மனதாலோ செயலாலோ பிறருக்கு நாம் தீமை செய்தால் அதற்கான தண்டனை கண்டிப்பாக உண்டு. அத்தீமை பிறர் நமக்கு செய்த தீமைக்கு பதிலாக இருப்பினும் கூட.
அதுமட்டும் இன்றி நமது ஆத்ம சக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களில் பயன்படுத்தவேண்டும். பழிக்குப்பழி போன்ற காரியங்களில் நமது ஆத்ம சக்தியை இழக்க கூடாது.
ஆதலால் பிறரை தண்டிக்காது இருப்பது நமக்கு நன்மையே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.].
மணக்குடவர் உரை
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று
மு.வரதராசனார் உரை
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
English Meaning - As I taught a kid - Rajesh
Even when an untoward evil is done to you, it is better not to resent and do a unrighteous deed to them. When one feels the bitterness of the untoward incident, one normally thinks to mirror it (hurt others so that they will also get a feel of it). But such things will only grow the hatred and will take away the peace from us. Being in hatred like being in a prison. Hence, it is good to not hurt others even if they did untoward evil to us. That is why, Thiruvalluvar as previously in another Kural told us to forget such untoward incident.
Questions that I ask to the kid
When someone does a untoward incident, what should we do?
No comments:
Post a Comment