ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், நாணுடைமை குறள் 1012 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு
குறள் 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

அல்ல - இல்லை ; அன்று ; மாறுபாடு

நாண் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்; வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை -  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
எல்லோரும் உண்ணுகிறார்கள் உடை உடுத்துகிறார்கள் வாகனங்களில் செல்லுகிறார்கள் பலர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் ஆபர்கணங்கள் அணிகிறார்கள். ஆனால் இவையும் மற்ற (பொருள்) எல்லாமும் மனிதருக்கு சிறப்பு சேர்க்காது (வேறு என்றால் சிறப்பு என்ற பொருளும் உண்டு). ஏனெனில் மனிதர் எல்லோரும் சமமே. ஆனால் மனிதர்களுக்கு உண்மையான சிறப்பென்பது அவர்களின் நாணுடைமையாகும். அதாவது தீய செயல்களை செய்ய நாணுவது, நாணத்திற்கு அஞ்சி தீ செயலை செய்யாது இருத்தலே மனிதருக்கு சிறப்புடையதாகும் சிறப்பு சேர்க்கும். அவர்களின் செயலே அவர்களை வேற்றுமைப்படுத்தும். அவர்களின் செயல்களே அவர்களுக்கு புகழ் சேர்க்கும்.

என்பதையும் நினைவில் கொள்க.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain