Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நல்லாறு -நல்வழி, நற்பயன்; nal-l-āṟuṭaiyāṉ   n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.)

எனப்படுவது - அறியப்படுவது, என்பது; என்பதின் பொருள் யாதெனின்

யாது? - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

ஒன்றும் -  சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing

கொல்லாமை - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

சூழும்  - அவதரித்து, தந்திரத்தால்
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

நெறி -  வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
ஒரு உயிருக்கு தீங்கு செய்தாலோ அல்லது அதனை கொன்றாலோ அது மிக கொடியது. அவ்வாறு கொல்வது தீயவழி. ஆதலால் எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதனை தன் வாழ்வின் நெறியாக ஒழுக்கமாக, சுருளாக, மனநிலையாக வைத்துக்கொண்டு (வாழ்நாள் முழுவதும்) பின்பற்றி வாழும் வழி நல்வழியாகும். அதுவே அறமாகும். அது நற்பயனை அளிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

கொல்லாமை, கள்ளுண்ணாமை போன்ற பல தலைப்புகளில் வள்ளுவர் சொல்லும் நீதிகள் சமண நீதிகள் என்பதுடன் அவை முன்வைக்கப்பட்டிருக்கும் விதம், அவற்றுக்குரிய காரண காரியத்தொடர்பு முழுக்க முழுக்க சமண மதத்தின் தத்துவப்பின்புலத்தில் இருந்துவந்தது. கொல்லாமையைச் சொல்லவரும்போது
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
என்று கொல்லாமையை அனைத்துக்கும் மேலாக நிறுத்தும் தன்மையை நாம் குறளில் காண்கிறோம். உண்மையில் அனைத்து அறங்களுக்கும் மேலாக கொல்லாமையை நிறுத்துவது சமணத்துக்கே உரிய தத்துவம் ஆகும். 

பரிமேலழகர் உரை
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

032 இன்னாசெய்யாமை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - இன்னாசெய்யாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்

குறள் 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

குறள் 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை

குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

குறள் 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
கறு - மனவைரம், kaṟu   கறுவு, s. anger, malice, கோபம்.
வழக்கறுத்தல் - போக்கைத்தடுத்தல்; வழக்கைத்தீர்த்துவிடுதல்.

கறுத்தல் -> தடுத்தல்; தீர்த்துவிடுதல்

கறுத்து - கோபித்து; கோபத்தால்

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்த - செய்தாலும்

அக்கண்ணும் -  அப்பொழுதிலும்

மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.
மறுத்து - maṟuttu   adv. id. 1. In return;மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 2.Again; மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ளவேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 3. Moreover; மேலும்.மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு.சூழ்வி. 128).

இன்னா - துன்பம்
செய்யாமை - செய்யாது இருத்தல்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா

அற்றார் - அல்லாதவர் ; aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).  

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி

முழுப்பொருள்
பிறர் ஒருவர் நம்மீது மிகுந்த சினத்துடன்/ கோபத்துடன் இருக்கும் பொழுது நமக்கு தீங்கு செய்தாலும், அதனால் நமக்கு கோபம் வந்தாலும், அந்த நேரத்திலும் (ஏட்டிக்குப் போட்டியாக) அவருக்கு திருப்பி தீங்கு விளைவிக்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. 

உள்ளத்தில் மாசு இல்லாதவரின் கொள்கையாக பிறருக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை செய்யாதிருத்தல் இருக்கும். அதுவே அவர்களின் வலிமையாகும் (கோள் என்றால் வலிமை). திருப்பி தீங்கு செய்யாது இருத்தல் பலவினம் அல்ல. அது வலிமையே. அது மனதில் மாசு அற்றவர்களின் இயற்கையான குண நலன் ஆகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று” (நாலடி 67)

“கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” (பழமொழி 19)

”இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினான் மாண்டார் வெகுளார்” (பழமொழி 370)

பரிமேலழகர் உரை
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).

மணக்குடவர் உரை
தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

மு.வரதராசனார் உரை
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

031 வெகுளாமை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - வெகுளாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்

குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற

குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்

குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்

குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

குறள் 308

குறள் 309

குறள் 310





சினத்தைப் பொருளென்று கொண்டவன்

குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்

சினத்தைப் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்று - eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச் சொல் (தொல். சொல், 261, உரை: நன் 424.) 3. An expletive; ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.  

கொண்டவன் - உடையவன்

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

அறைந்தான் - அறைதல் - அடித்தல்; மோதுதல் சொல்லுதல் கடாவுதல் ஒலித்தல் பறைமுதலியனகொட்டுதல்; மண்ணெறிந்துகட்டுதல்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

பிழையாதற்று - பிழையாகி போகுதல்

முழுப்பொருள்
பொருள் என்ற சொல்லுக்கு தலைமை(ப் பண்பு) என்ற பொருள் உண்டு. சினம் என்பற்கு கோபம், வெம்மை என்று அர்த்தம். சினத்தை/கோபத்தை தன்னுடைய பண்பாக உடையவனுக்கு கேடே பயனாய் கிடைக்கும் என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் எத்தகையதையும் தாங்கும் (பொறுமை உடைய) நிலத்தை ஓங்கி அடித்தால் அடித்தவரின் கைக்குத் தான் வலிக்கும். நிலத்திற்கு வலிக்காது. அதுப்போல சினம் கொண்டவருக்கு தான் வலி/கேடு. சினம் வலிமை அல்ல அது கேடு ஆகும்.

சினம் கொள்ளாமல் (அகழ்வாரை தாங்கும்) நிலம் போல் பொறுமையாக இருத்தல் வேண்டும் என்பதை சுட்டவே நிலத்தை இங்கே சுட்டுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“கதம் எனும் பொருண்மையிலர்” (கம்ப.மராமர.10)

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது

பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.

“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.

“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.



சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.
நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.

பரிமேலழகர் உரை
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

பொய்மையும் வாய்மை யிடத்த

குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
பொய்ம்மையும் - பொய்மை - poymai   s. Falsehood, falsity, பொய். 2. Unreality, illusion, மாயம். 3. That which is counterfeit, artificial, கரவடம். (p.)

வாய்மை - vāymai   n. id. 1. Word;சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.) 2. Ever-truthful word;தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35). 3. Truth; உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 4.(Buddh.) Sublime truths, numbering four,viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam,tukka-nivāraṇa-mārkkam; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் எனநால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).5. Strength; வலி. (சூடா.)

இடத்த - இடத்தல் - பிளவுபடுதல்; உரிதல் தோண்டுதல் பிளத்தல் பெயர்த்தல் குத்தியெடுத்தல்; உரித்தல்

புரை - குற்றம்; உட்டுளைப்பொருள்; குரல்வளை; விளக்குமாடம்; உள்ளோடும்புண்; கண்ணோய்வகை; பொய்; களவு; இலேசு; மடிப்பு; கூறுபாடு; வீடு; ஆசிரமம்; தேவாலயம்; அறை; பெட்டியின்அறை; மாட்டுத்தொழுவம்; இடம்; ஏகதேசம்; பூமி; பழைமை:ஒப்பு; உயர்ச்சி; பெருமை.

தீர் - tīr   VI. v. t. finish, complete, முடி; 2. accomplish, perfect, பூர்த்தியாக்கு; 3. settle, decide, தீர்மானி; 4. expiate (as sin), cure (as sickness), allay (as thirst) நீக்கு.

தீர்-தல் - tīr-   4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated; முற்றுப்பெறுதல் வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள்482). 4. To go, proceed; போதல் (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent; கழிதல் சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided; நிச்சயித்தல் தீர்ந்த

தீர்ந்த -

நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

பயக்கும் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
வாய்மை என்றால் உண்மை. வாய்மைக்கு  நேர் எதிர்ச்சொல் என்றால் அது பொய்மையாகும். வாய்மை என்றால் எத்தகைய நிலையிலும் உண்மையை சொல்வது, உண்மையை அறத்தை கடைப்பிடிப்பது. அறத்தை பின்பற்றினால் வாழ்வில் சிறப்பு. அதனுடைய பலனும் நல்லவையாக இருக்கும். ஆதலால் வாய்மை சிறந்தது.

ஆனால் பொய்மையும் (பொய் சொற்களும், மாயச் சொற்களும்) வாய்மையின் சிறப்பை பெறும் ஒரு தருணம் ஒன்று உண்டு. அது எதுவெனில் எவ்வித குற்றமும் தராத (யாருக்கும் தீங்கு தராத) நன்மையை பயக்க சொல்லபடும் பொய். குறிப்பாக தீமையைப் போக்கி நன்மையை தரவேண்டும். 

இக்குறளில் முக்கியமான சொல்லாட்சி என்றால் “புரைதீர்ந்த நன்மை”. குற்றம் அல்லாத நன்மை என்பது முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு நன்மையும் பிறருக்கு தீமையும் விளைவிக்குமாயின் அதனை செய்யக்கூடாது. மற்றொன்று வாய்மை யிடத்த என்று சொல்கிறார். வாய்மை தரும் சிறப்பை அத்தகைய பொய்யும் தரும். அவ்வளவே. வாய்மையும் பொய்யும் ஒன்றாகிவிடாது. பொய் அறமாகிவிடாது. 

சரி, எதற்காக பொய் சொல்கிறோம்? சுயநலம் (பேர், பணம் புகழ், வியாபாரம், வேலை), செய்த தவறை மறைத்தல் (ஏன் மறைக்கிறாய் என்று கேட்டால், நீ என்னை திட்டுவாய் அதனால் மறைத்தேன். ஒரு தவறை திருத்திக்கொள்ளாமல் மறுபடியும் மறுபடியும் செய்தால் திட்டத்தான் செய்வார்கள்), தீய நோக்கத்தில் (அடுத்தவர்க்கு கெடுதல் ஏற்பட), நகைச்சுவை, மற்றவர்களுக்கு உதவ (இது நன்மை பயக்கும் பொய்). 

ஆனால், யாருக்கும் தீமை தரவில்லை என்றால் (என்று நினைத்துக்கொண்டு) பொய் சொல்லலாம் என்பதற்கு இக்குறள் ஒரு உரிமம் (License) அல்ல. அவசியம், தேவை என்று ஆரம்பித்து இன்று எல்லாவற்றிக்கும் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் பலர். உதாரணமாக வீட்டில் நீ சினிமாவிற்கு போனாயா என்று கேட்டால், இல்லை என்று பொய் சொல்லுவது. அலுவகத்தில் உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுப்பது அடங்கும். 

தான் ஒரு சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக பொய் சொன்னால் அது சுயநலம். அது ஒருவகையில் கெடுதல் ஏனெனில் அந்த ஒரு தடவை தப்பித்துவிடலாம். ஆனால் பிற்காலத்தில் அதுவே பழக்கமாகி நாம் செய்த தவறை திருத்திக்கொள்ளாமல் தேங்கி நிற்போம். 

மேலும் 
குறள் 63
நம்மை பார்த்து நமது பிள்ளைகள் வளருகிறார்கள். ஆதலால் நாம் பொய் சொன்னால் நமது பிள்ளைகளும் பொய் சொல்வார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

மு.வரதராசனார் உரை
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

Thirukkural - Management - Ethical Behavior
Life is an act of balancing. One of the specialties of Valluvar is to balance different and opposite concepts. Many Kurals fit in this category. When he tells about lies and the act of telling lies, he says, in Kura1 292, even telling a lie is acceptable, if that results in a gain for the person who tells and the 
person who receives.

Even a lie is truthful
If it does unsullied good.

If telling a lie is better than telling the truth in that particular context, telling a lie is acceptable to telling the truth. Telling a lie is acceptable, if that does  not do any harm to both the person who tells and the 
person who receives. There is no justification for telling a lie. But the context in which a lie is told justifies the act of telling a lie.

030 வாய்மை

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - வாய்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்


குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானஞ்செய் வரின் தலை

பதிவு வரிசை