குறள் 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
பொருள்
கறு - மனவைரம், kaṟu கறுவு, s. anger, malice, கோபம்.
வழக்கறுத்தல் - போக்கைத்தடுத்தல்; வழக்கைத்தீர்த்துவிடுதல்.
கறுத்தல் -> தடுத்தல்; தீர்த்துவிடுதல்
கறுத்து - கோபித்து; கோபத்தால்
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்த - செய்தாலும்
அக்கண்ணும் - அப்பொழுதிலும்
மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.
மறுத்து - maṟuttu adv. id. 1. In return;மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 2.Again; மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ளவேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 3. Moreover; மேலும்.மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு.சூழ்வி. 128).
இன்னா - துன்பம்
செய்யாமை - செய்யாது இருத்தல்
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா
அற்றார் - அல்லாதவர் ; aṟṟār n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).
கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி
முழுப்பொருள்
பிறர் ஒருவர் நம்மீது மிகுந்த சினத்துடன்/ கோபத்துடன் இருக்கும் பொழுது நமக்கு தீங்கு செய்தாலும், அதனால் நமக்கு கோபம் வந்தாலும், அந்த நேரத்திலும் (ஏட்டிக்குப் போட்டியாக) அவருக்கு திருப்பி தீங்கு விளைவிக்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.
உள்ளத்தில் மாசு இல்லாதவரின் கொள்கையாக பிறருக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை செய்யாதிருத்தல் இருக்கும். அதுவே அவர்களின் வலிமையாகும் (கோள் என்றால் வலிமை). திருப்பி தீங்கு செய்யாது இருத்தல் பலவினம் அல்ல. அது வலிமையே. அது மனதில் மாசு அற்றவர்களின் இயற்கையான குண நலன் ஆகும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று” (நாலடி 67)
“கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” (பழமொழி 19)
”இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினான் மாண்டார் வெகுளார்” (பழமொழி 370)
பரிமேலழகர் உரை
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).
மணக்குடவர் உரை
தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
மு.வரதராசனார் உரை
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
No comments:
Post a Comment