குறள் 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்
இறந்தார் - மிகுந்தோர் (சினத்தில் என்று சொல்லாமல் உணர்த்தப்படுகிறது)
இறந்தார் - செத்தவர்
அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons
சினத்தைத் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறந்தார் - துறந்தவர்கள்
துறந்தார் - துறவினர்கள்
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)
முழுப்பொருள்
அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் என்றால் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் இறந்தவருக்கே ஒப்பாவார். இறந்த ஒரு உடல் பிணம் எனப்படும். பிணம் துர்நாற்றம் வீசும். கிருமிகளைதந்து அவ்விடத்தை அசுத்தமாக்கும். அதனால் அருகில் இருப்போரும் நோய்வாய்ப்படுவர். அதுவே அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் அடையும் கீழ்மையாகும்.
அதுவே ஒருவர் கோபத்தை துறந்தார் என்றால் அவர் துறவறம் மேற்கொள்ள இல்லறத்தையும் மற்ற எல்லாவற்றையும் துறந்த துறந்தவர்களுக்கு ஒப்பானவர். துறந்தவர்கள் அழியும் உடலைப் பெற்றவர்களாயினும், நித்தியமாம் வீடுபேறினைப் பெறத்தக்கவர்களான துறவு நிலையிலுள்ளவர்கள். அதுவே சினத்தை தவிர்த்தவர் அடையும் உயர்ச்சியாகும்.
அருகே ரீங்கரித்து வந்தமர்ந்த குளவி “அதனினும் விடுதலை அச்சத்தின்பொருட்டு சேர்த்துவைத்த நஞ்சை துறப்பது” என்றது. திரும்பி அருகே வால்விடைக்க கைதூக்கி நடந்துசென்ற சிறிய தேளை நோக்கி சிரித்து “உன் கொடுக்கு விடைப்பு கொள்ளவேண்டியதில்லை, நண்பா. அந்நஞ்சை உதறிவிடு. அதன்பின் எஞ்சுவதென்னவோ அதுவே நீ” என்றது. சிலந்தி “ஆம், நஞ்சிலாத கொடுக்கு இன்னொரு காலென்றும் ஆகக்கூடும்” என்றது.
“ஆம், நஞ்சுக்கு இனி தேவை ஏதுமில்லை. நான் எவரையும் கொல்லவேண்டியதில்லை, எவரும் என்னை கொல்லவும்போவதில்லை. ஆனால் என் உடல் அமைந்திருப்பதே என் கொடுக்குமுனை நஞ்சை ஏந்திச்செல்லவும் விசையுடன் செலுத்தவும் உதவும் வடிவில்தான். நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது” என்றது தேள். “ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன். எனக்கு வேறுவழியில்லை.” சிலந்தி திகைப்புடன் நோக்க “வலையில்லாமல் வெறும்வெளியை நெய்துபார். அது பேருவகை அளிக்கும் பின்னற்கலை” என்றது பூச்சி.
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது
பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.
“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.
“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.
பரிமேலழகர் உரை
இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.
மு.வரதராசனார் உரை
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.
English Meaning - As I taught a kid - Rajesh
A person who has hatred or more anger is considered as a dead person. Because a dead body decays, smells bad, spreads harmful germs. No healthy person would like to be with such a dead body. Similarly, a person who has anger and hatred spreads negativity, hatred to others. He/She thinks about destruction only. He is a harm to the society.
However, a person who gives up hatred/anger is like a sage. Because Hatred and anger is a prison and is a distraction too. Giving up hatred is a liberation. One can do greater things in liberation.
Questions that I ask to the kid
1) An angry bird / a person with angry is known as ? A person who controls anger is known as? How giving hatred is beneficial?
2) Why is an angry bird known as a dead person?
No comments:
Post a Comment