குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
பொருள்
நல்லாறு -நல்வழி, நற்பயன்; nal-l-āṟuṭaiyāṉ n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.)
எனப்படுவது - அறியப்படுவது, என்பது; என்பதின் பொருள் யாதெனின்
யாது? - எது; எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.
எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்
யாது - எது; எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.
ஒன்றும் - சிறிதும், oṉṟum oNNum ஒண்ணும் (+ neg.) nothing
கொல்லாமை - kollāmai n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை
சூழும் - அவதரித்து, தந்திரத்தால்
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
சூழும் - அவதரித்து, தந்திரத்தால்
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.
முழுப்பொருள்
ஒரு உயிருக்கு தீங்கு செய்தாலோ அல்லது அதனை கொன்றாலோ அது மிக கொடியது. அவ்வாறு கொல்வது தீயவழி. ஆதலால் எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதனை தன் வாழ்வின் நெறியாக ஒழுக்கமாக, சுருளாக, மனநிலையாக வைத்துக்கொண்டு (வாழ்நாள் முழுவதும்) பின்பற்றி வாழும் வழி நல்வழியாகும். அதுவே அறமாகும். அது நற்பயனை அளிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
ஒரு உயிருக்கு தீங்கு செய்தாலோ அல்லது அதனை கொன்றாலோ அது மிக கொடியது. அவ்வாறு கொல்வது தீயவழி. ஆதலால் எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதனை தன் வாழ்வின் நெறியாக ஒழுக்கமாக, சுருளாக, மனநிலையாக வைத்துக்கொண்டு (வாழ்நாள் முழுவதும்) பின்பற்றி வாழும் வழி நல்வழியாகும். அதுவே அறமாகும். அது நற்பயனை அளிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
கொல்லாமை, கள்ளுண்ணாமை போன்ற பல தலைப்புகளில் வள்ளுவர் சொல்லும் நீதிகள் சமண நீதிகள் என்பதுடன் அவை முன்வைக்கப்பட்டிருக்கும் விதம், அவற்றுக்குரிய காரண காரியத்தொடர்பு முழுக்க முழுக்க சமண மதத்தின் தத்துவப்பின்புலத்தில் இருந்துவந்தது. கொல்லாமையைச் சொல்லவரும்போது
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
என்று கொல்லாமையை அனைத்துக்கும் மேலாக நிறுத்தும் தன்மையை நாம் குறளில் காண்கிறோம். உண்மையில் அனைத்து அறங்களுக்கும் மேலாக கொல்லாமையை நிறுத்துவது சமணத்துக்கே உரிய தத்துவம் ஆகும்.
பரிமேலழகர் உரை
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
மு.வரதராசனார் உரை
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
No comments:
Post a Comment