உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை குறள் 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
உள்ளிய - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

எல்லாம் - முழுதும், யாவும்

உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு.

எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

உள்ளத்தால் - உள்ளம் - னம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை

உள்ளான் - உளவறிபவன்; ஒருபறவைவகை; உற்றவன்; போரடிக்குந்தலைமாடு.
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
உள்ளான் - எண்ணமாட்டார், கருதமாட்டார்

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
உள்ளத்தால்க்கூட சினம் கொள்ளாது இருக்க ஒருவனுக்கு முடியுமானால் அவன் மனதால் நினைத்த எல்லா செயல்களையும் உடனே செய்து முடிக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இங்கே திருவள்ளுவர் உள்ளத்தால் கூட சினம் கொள்ளக்கூடாது என்பதை மறுபடியும் நினைவுப்  படுத்திக்கொள்ளவேண்டும். 

புறத்தே கோபம் கொள்ளாது இருக்கமுடியும் (அதுவும் நன்று தான்). ஆனால் அகத்திலும் கோபம் கொள்ளாது இருந்தால் அதுவே சிறந்தது. ஏனெனில் எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாகவும் மாறும். உள்ளத்தில் கோபம் கொண்டால் தீய எண்ணங்கள் உண்டாகும். சஞ்சலங்கள் உருவாகும். மனம் புத்தியும் சமநிலை இழக்கும். பின்பொரு சமயத்தில் வஞ்சனை செய்ய தூண்டும். முகம் புன்னகை இழக்கும் மனம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழக்கும். அதனால் நாம் ஆக்கபூர்வமாக ஆற்ற வேண்டிய செயல்களில் கவனம் செலுத்தாது இருப்போம். நம் ஆன்மசக்தியை சினம் பங்குபோட்டுக்கொள்ளும். மனதாலும் சினம் கொள்ளாது இருந்தால் நாம் தேர்ந்தெடுத்தப் பாதையில் தொடர்ந்து பயணித்து இலக்கை அடைந்து வெற்றியை சுவைத்து மகிழ்ச்சியை அடைய முடியும். 

மேலும்: அஷோக் உரை


“சொல்லாக மாற்றத்தக்க கசப்புகளும் சினங்களும் சொல்லாக ஆக்கி வெளித்தள்ளத்தக்கவை. இது நஞ்சென அங்கு ஊறிவிட்டது. அங்கே முளைத்துப்பெருகுவது. அதை அகற்ற அவரால்கூட இயலாது. அது எவ்வண்ணம் எங்கிருக்கிறதென்பதையே அவர் அறிந்திருக்க மாட்டார்” என்றார் தருமன். “சில பிளவுகள் பளிங்கில் மயிர்கோடென தெரிபவை. ஆனால் அவை அமையும்போதே நாம் அறிந்துவிடுவோம், அவை பிளந்து விரிபவை

பரிமேலழகர் உரை
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஆத்திரம் அற்றவன் அனைத்தையும் அடைவான்.

Thirukkural - Management - Managing Anger
If  you do not harbor the thought of anger in you, you can achieve whatever your mind thinks and wants to achieve is the assurance from Kural 309. So, keep your anger away to achieve all pleasant, positive, and wonderful things in your life.

All things desired are his at once
Whose min d is free of wrath.

Your anger interferes with your positive thoughts and peaceful life. Anger is similar to a pebble that is dropped in a bucket of water. The pebble creates ripples and the ripples remain longer. Ripples in water create vibrations. Negative vibes in you damage your serene thoughts.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain