குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
யாம் - தன்மைப்பன்மைப்பெயர்.
மெய்யாக் - மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து
கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
கண்டவற்றுள் - அறிந்தவற்றுள்
இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.
எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும்
ஒன்றும் - சிறிதும், oṉṟum oNNum ஒண்ணும் (+ neg.) nothing
வாய்மையின் - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.
நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.
பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
முழுப்பொருள்
மற்றகுறள்களுக்கு மாறாக திருவள்ளுவர் நேரடியாகவே தன்னுடைய அறிதல் மூலம் கண்டவற்றை இக்குறளில் கூறுகிறார். திருவள்ளுவர் மெய்யாக பல நூல்களை கற்க கசடறகற்றவர். அவற்றில் பல உண்மைகளை கற்றார். ஆனால் அவர் கண்டவற்றுள் /கற்றவற்றுள் வாய்மையை போன்று சிறந்த வேறு ஒன்று இல்லை என்று கூறுகிறார். வாய்மையை போல் நன்மை பயக்கும் வேறு ஏதும் இல்லை. வாய்மை போல் பிறிது ஒரு அறம் வேறு இல்லை.
வாய்மை என்பது மனதில் மட்டுமல்லாது, சொற்களாலும், செயல்களாலும் உண்மையைக் கடைபிடித்தல். அதன் தூய்மையே மற்றவற்றைவிட சிறந்தது.
பி.கு: பாய்ஸ்/Boys (2003) திரைப்படத்தில் Secret of Success என்று ஒரு பாடல் இருக்கும். அதில் வெற்றியின் ரகசியம் நேர்மை நேர்மை நேர்மை (வாய்மை) தான் என்று கூறப்பட்டு இருக்கும்.
மேலும்: அஷோக் உரை
மேலும்
மகாகவி பாரதியார் அவர்கள் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று கூறினார். இந்தச் சொற்றொடர் இக்குறளில் அமைப்பில் இருந்து தோன்றியதாக இருக்கலாம். ஏனெனில் ”இரந்து உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான்” என்பது குறள். “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கூறியவர் பாரதியார்.
பரிமேலழகர் உரை
யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
மு.வரதராசனார் உரை
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.
Thirukkural - Management - Truthfulness
Speaking the truth, according to Valluvar, is greater than all the other things in the world. ‘Be true to yourself' is a sage advice for a harmonious life. Valluvar confirms this view in Kural 300 based on his experience.
In all the gospels we have read we have found
Nothing held higher than truthfulness.
There is nothing greater or better than truthfulness in this world. There is no substitute for truthfulness. Always telling the truth frees one from the burden of falsehood. Refer to Kural 293 of ‘Ethical Practices.'
English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar is a scholarly person who would have read many books and debated with many scholars. Thiruvalluvar says, of all the truth that I found, I have not found anything that is better than honesty. Honesty is the best Dharma in this world.
Questions that I ask to the kid
Among all the things that you have seen, what is the best thing that doesn't have a parallel? Why?
No comments:
Post a Comment