Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம்

வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி

என்பது - 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )  

ஒருவன் - ஒரு செயலை செய்பவர் ; அமைச்சர்  ; அரசர் 

மனம்  - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

மனத்திட்பம் - மனவுறுதி

மற்றைய - மற்றது  - குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று.

எல்லாம் - முழுதும்; (மற்ற) எல்லாம் 

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்ய பல குணங்கள் அவசியம். உதாரணமாக அச்செயலை செய்ய தேவையான பொருட்கள், ஆராய்ச்சி, மக்கள், குழு, திட்டம், ஒருங்கிணைப்பு, செல்வம், நேரம் என்று பலவற்றை சொல்லலாம். ஆனால் இவை மட்டும் போதாது. இவற்றிளுளெல்லாம் முதன்மையாக தேவைப்படுவது அச்செயலின் கண் கொள்ளும் மன உறுதியே ஆகும். மனவுறுதி என்னும் விசை இருந்தால் தான் மற்ற எல்லாவற்றையும் இயக்க முடியும். மனவுறுதி இல்லையென்றால் மற்ற எல்லாம் அரை மனதாகவே செய்வோம். அது செயலை முழுமையாக செய்யவிடாது. 

அது மட்டும் இன்றி நல்ல குழு நல்ல பொருட்கள் நல்ல ஆராய்ச்சி நல்ல திட்டம் இருக்கிறது என்று கர்வம் கொண்டு இருந்து செயலை செய்யும் மனவுறுதி இல்லை என்றால் பின்னால் ஏதாவது இடர் வந்தால் அதனை எதிர்நீச்சலிட்டு கடந்து செயலை செய்து முடிக்க முடியாமல் போகும்.

மனவுறுதி இருந்து மற்ற தேவையானவற்றில் சிறிது குறைந்தாலும் சமாளித்துவிடலாம். ஆனால் மற்ற எல்லாம் இருந்தும் மனவுறுதி இல்லை என்றால் நம்மால் அச்செயலை முழுமையாக செய்யவே முடியாது. 

செய்யும் செயலின் கண் உறுதி மிக அவசியம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

மு.வரதராசனார் உரை
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Thirukkural - Management - Thoughts
A person's thought is the best tool for effcient  and effective execution of a task. Compared  to one's power of thoughts and the outcomes of determined thoughts, the other things do not have so much power. The rest of the things are secondary as per Kural 661

Efficiency is but strength of mind; 
All aids mere aids.

Our actions follow our thoughts. When our thoughts are positive and our beliefs in our thoughts are strong, our actions will be meaningful and the outcome will be possible.

English Meaning - As I taught a kid - Rajesh
An action/task's outcomes comes from one's determined thoughts. Our thoughts are primary. Rest of things are only secondary. A person's thought is the best tool for efficient and effective execution of the task. Because action follows our thoughts. When thoughts are positive and we believe in it, our actions will follow and the outcome will be possible.

Questions that I ask to the kid
For perseverance, what is primary and what is secondary?

067 வினைத்திட்பம்

பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - வினைத்திட்பம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்

குறள் 665



குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்


066 வினைத்தூய்மை

பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - வினைத்தூய்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

குறள் 653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

குறள் 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று

குறள் 656


குறள் 659

குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

குறள் 651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
துணை- அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

தரூஉம் - தரும், கொடுக்கும்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

நலம் -  நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

வேண்டிய - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

எல்லாந் - எல்லாவற்றையும்

தரும் தரும், கொடுக்கும்

முழுப்பொருள் 
துணை என்றால் கணவன் மனைவின் என்று பல உரைகள் இங்கு கூறுகின்றன. ஆனால் துணை என்றால் உறவு நட்பு கணவன் மனைவி என்ற எல்லா பொருளும் இக்குறளுக்கு பொருந்தும். ஒருவர் செய்யும் காரியத்தில் நல்ல துணையாக ஒரு நண்பரோ நபரோ கணவனோ மனைவியோ அலுவலக நண்பாரோ அமைந்தால் அச்செயல் இறுதியில் நல்ல பலனை தரும். பலன் என்றால் புகழ் செல்வம் பொருள் என்று அர்த்தம் கொள்ளலாம். 

துணை என்ற சொல்லுக்கு உறவு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பொருள் எடுத்துக்கொள்ளாமல், அம்பு என்ற பொருளும் அகராதியில் இருப்பதை காணாலம். அதாவது, செய்யும் செயலுக்கு உதவியாக இருக்கக்கூடிய கருவிகளை குறிக்கிறது. அதாவது Tools / Productivity Tools. இந்த கருவிகள் செய்யும் செயலை செய்ய உதவும். 

அதுபோல செய்யும் செயலில் தூய்மையும் செம்மையும் அழகும் அறமும் முழுமையும் இருந்தால் அச்செயலின் பலனாக தேவையான எல்லாச்செல்வங்களையும் பெறலாம்.

சிலகாலம் கழித்து இன்னும் ஆழமாக இக்குறளைப் பற்றி யோசித்தேன். எனக்கு தோன்றியது என்னவெனில், பொதுவாக எல்லோரும் கூறுவது எனக்கு கூடயிருந்து நல்லது கெட்டது சொல்ல யாருமே (உறவுகளோ நண்பர்களோ இல்லை) இல்லைங்க என்பது தான். என்ன தூக்கிவிட ஆளே இல்லை என்பது தான். எனக்கு ஒரு support system இல்லைங்க என்பது தான். நல்ல உறவுகளும் நண்பர்களும் நமக்கு செல்வங்களே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் வள்ளுவரே சுற்றந்தழால் அதிகாரத்தில் “குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்று கூறியிருப்பார். ஆனால் இந்த support system இல்லங்க என்றென்பது எல்லாம் சுத்தமான சால்ஜாப்புக்கள். ஏனெனில் நாம் நமது அன்றாட நாட்களில் எவ்வளவு நேரம் வீண் செய்கிறோம், நமது கவனத்தையும் ஆற்றலையும் எவ்வளவு வீண் செய்கிறோம். அதுவே நாம் ஒரு செயலை செவ்வென செய்தால் நமக்கு அதன் பலனும் முன்னேற்றமும் நன்றாக கிடைக்கும். அதனால் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் என்று இக்குறளில் கூறியுள்ளார் வள்ளுவர். ஏனெனில் “குறள் 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு” என்று வள்ளுவரே கூறியுள்ளார். இதையே “When you want something all the universe conspires in helping you to achieve it” என்று - Paulo Coelho (The Alchemist இல்) கூறியிருப்பார். நாம் ஒன்று வேண்டும் என்று ஒரு செயலில்  ஈடுப்பட்டால் நமக்கு இவ்வுலகமே வந்து உதவும். அதனால் தான் எல்லோரும் கூறுவது "செய்யும் தொழிலை சுத்தமாக செய்யவேண்டும்" என்று. 

மேலும் ஒருவர் ஒரு காரியத்தை செவ்வென செய்து பலனை விளைவித்தால், நாம் அதனால் ஒரு பலனை அறுவடை செய்வதற்கு முன் மற்றவர்களின் நம்பிக்கையை ஈன்று எடுத்திருப்போம். அதுவே முதல் நன்மை.
For e.g, when you do your work well you would deliver results. When one delivers results, one would the earn the trust of his supervisors, manager, peers.

மேலும் அஷோக் உரை 


பரிமேலழகர் உரை
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Friends are fortune. Remember the old saying, “A friend in need is a friend indeed.” Right companionship brings you all the wealth and benefits. We always need the supports of others to achieve greater things. There is no such person as a self-made man. Similar to right companionship, meaningful and timely execution of a beneficial act brings all the desired beneficial things to you, as per Kural 651.

A man's friends bring him worldly goods.
His good deeds all he needs.

English Meaning - As I taught a kid - Rajesh
Good support system (good people, mentors, team, tools, relationships etc) would help in improving the productivity/effectiveness and making progress. At the same time, prudently doing a work correctly and effectively will yield all the positive results one conspires for. 

Basically, One has to have a goal, conspire for it and prudently do all things required to achieve it. Support system would be of help for sure. However, one should not depend on support system alone. When you want something all the universe conspires in helping you to achieve it. 


Questions that I ask to the kid
What does good support system and prudence yield?

065 சொல்வன்மை

பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - சொல்வன்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

குறள் 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

குறள் 644

குறள் 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து



குறள் 648
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்