ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை குறள் 653 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்
குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு

ஓஒதல் - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

ஒளி  - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

மாழ்கும் - மாழ்குதல் - யங்குதல்; கெடுதல்; சோம்புதல்; கலத்தல்.

செய்வினை - வினைமுதல்வினை; முற்பிறப்பில்செய்தகருமம்; பில்லிசூனியம்; செய்யுந்தொழில்.

ஆஅதும் - ஆகுதல், (எண்ணிய திண்ணிய முடிதல்) உயர்வான மேன்மையைக் கொடுத்தல்
என்னுமவர் - வேண்டுமென கருதுவோர்

முழுப்பொருள்

ஒருவர் வாழ்நாளில் தவிர்க்க வேண்டும் என்றால் அது தன்னுடைய புகழையும் மாண்பையும் அறிவையும் நன்மதிப்பையும் கெடுக்கும் செயல்களும், எண்ணங்களும் ஆக தான் இருக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். இதனை ஆக்கப்பூர்வாமான செயல்களை விரும்பவரும், வாழ்வில் மேன்மை தரும் செயல்களை வேண்டுபவரும் விரும்புவர். 

உனக்கு புகழ்வெளிச்சம் வேண்டும் என்றால் உனது செயல்களை சரியாக தேர்வு செய் செவ்வென செய்.


என்று முன்னரும் வள்ளுவர் கூறியிருந்தார்.

சும்மா சோம்பேறியாக ஒரு செயலையும் செய்யாது இருத்தலைக்கூட ஒருவர் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும். ஏனெனில் செயலின்மை புகழையும் மேன்மையையும் குறைக்கும். சான்றோர் ஏசுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை 
தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.

மு.வரதராசனார் உரை
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain