அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மைகுறள் 659 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை


குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
அழக் அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

கொண்ட - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

எல்லாம் - முழுதும்

அழப் - அழுதல் -  அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

போம் - ஓர்அசைச்சொல்

இழப்பினும் - இழத்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

பிற் - பின் - பின்பு - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

பயக்கும் - பய-த்தல் - paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

நற் - நல்ல, நன்மை
பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

அவை -  மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

நற்பாலவை – நல்ல வழியில் பெற்றவை

முழுப்பொருள் 
தீயவினைகள் செய்து பிறர் பொருளை அபகரித்தால் பிறர் அழுது துன்பப்படுவர். அப்படி பிறர் அழுகையில் பெற்ற பொருளை பின்னொரு நாள் நாமும் இழப்போம். அப்பொழுது நாம் அழுவோம். ஏனெனில் பொய்யான இன்பத்தில் திளைத்தோம். இப்பொழுது அவ்வின்பத்தை இழக்கையில் நமக்கு துன்பமே.

ஆனால் நல்ல வழிகளில் இயற்றிய பொருளை இழந்தாலும் நமக்கு பிற்காலத்தில் அது நன்மையே பயக்கும். ஏனெனில் தீமை செய்தால் தீமையே பயக்கும். தீமை செய்யாது இருந்தால் தீமை/ துன்பம் பயக்காது. அதுவே ஒருவிதத்தில் நன்மை. (துன்பம் இல்லாத நிலையே ஷக்தி). மேலும் துன்பமே இயல்பென நினைத்தால் துன்பம் இல்லை. ஆதலால் இன்பமே. 

இது அரசுகளுக்கு பொருந்தும். ப்ரிட்டீஷ் (British) போன்ற நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒரு காலத்தில் இழந்தார்கள். ப்ரிட்டீஷ் எவ்வளவு செல்வம் பெற்று இருந்தாலும் அவர்கள் கைகள் என்றும் இரத்தக்கரைகளால் கரைபடிந்தவையே. அதுவே இந்தியா போன்ற நாடு பலவற்றை இழந்தாலும் அஹிம்சையை பின்பற்றியதனால் இன்று உலக அரங்கில் பெருமையே.

இதே கருத்தை வெஃகாமை அதிகாரத்திலும் “படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (குறள் 172) என்று கூறியிருக்கிறார். தமக்குரியதென்று அல்லாதவற்றைக் கவர்தல் நடுநிலையற்ற செயல் என்றறிந்து அதற்கு வெட்கப்படுபவர், ஒருவர் பொருளை முறையற்று கவர்ந்தால், தமக்குறும் பயன் மிக்கதாயினும் முறையற்று கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அது பழிக்கப்படும் செயலென்றறிந்து, அச்செயலைச் செய்யமாட்டார். 


மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும். இது தேடினபொருள் போமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain