Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈன்றாள் - ஈன்றவள், தாய்

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

செய்யற்க - எதுவும் செய்யாமல் 

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பழிக்கும் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள் 
ஒருவர் செய்யும் செயல் எக்காலத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதி தவறக்கூடாது. அறம் அல்லாத செயல்களை ஒருவர் என்றும் செய்யக்கூடாது. அவ்வாறு மீறி செய்தால் சான்றோர் பழிப்பர் என்ற அச்சம் ஒருவர்க்கு வேண்டும் . தன்னை பெற்றெடுத்த தாய் பசியால் வாடுகிறாள் அவள் பசியை போக்க ஒருவன் அறம் அல்லாத காரியத்தை செய்தால் அக்குற்றத்திற்காக அவன் சான்றோரால் பழிக்கப்படுவான். ஆதலால் எக்காரணம் கொண்டும் தவறு செய்யாதே.

தாயின் பசியை விட பெரிய ஒரு காரணம் இவ்வுலகில் ஒருவனுக்கு இல்லை. ஆதலால் நீ உன்னை நியாயப்படுத்திக்கொள்ள எப்படிப்பட்ட காரணமும் அது உனது கடமையையை ஆனாலும் கூறாதே. மேலும் ஒருவர் தவறு செய்ய உணர்ச்சியின் அதிகபட்சமான தாயின் பசியை காரணமாக கூறக்கூடாது. அப்படியெனில் எவ்வித உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவும் எடுக்காதே செயலையும் செய்யாதே. தவறு செய்தால் சான்றோர் பழிப்பர்.

மேலும் சான்றோர் பழிப்பர் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு சராசரி மனம் சலம் உடையது உணர்ச்சிவயமாக எதனையும் அணுகுவர். சான்றோர் தவறான செயல்களை என்றும் ஒப்பர். ஏனெனில் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். 

One cannot justify their wrong / unethical things with any kind reason even if it is helping to alleviate one's mother's hunger.


முதன்முறை தவறு செய்யும் பொழுது ஒருவருக்கு தான் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் அதற்கு அவர் ஒரு நொண்டி சாக்கை கண்டுப்பிடித்துக்கொள்வர். அது அவர்களுக்கு பழகிவிடும். அடுத்தவருக்கு பழகி விடும். அதனால் அவர்கள் நெஞ்சத்தில் அவலம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார். அதனால் தன்னை ஈன்றத் தாயின் பசியையே ஒரு காரணமாக எடுத்தக்கொள்ள மறுக்கிறார் திருவள்ளுவர். கடமையைவிட அறமும் வாய்மையும் முக்கியம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. ('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.

மு.வரதராசனார் உரை
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

Thirukkural - Management - Ethical Behavior
Never do an act that will have negative consequences and will make you regret. Valluvar is too 
strong when he advises, ‘Never resort to unethical acts even if they quench your mother's hunger.’ 
That act will not make your mother satisfied and instead will make virtuous people blame you, 
commands Kural 656.

Do not do what the wise condemn
Even to save your starving mother.

The decisive test to check whether a task is worth doing is to ask yourself whether your mother 
will feel proud of you, if you do that task. Definitely, your mother will not be proud of your 
involving in any unethical act. Therefore, the acid test is to ask yourself, 'Will this make my 
mother feel proud?’

English Meaning - As I taught a kid - Rajesh
Even if one sees his/her mother starving, yet one should not do wrong/unethical/immoral activities that would be lamented/discouraged by scholars. There cannot be a bigger reason than mother's hunger to justify stealing or any other immoral activities. Yet Thiruvalluvar places honesty and morality above any other justification. Because, people have the potential to justify anything with 1000s of reasons

Questions that I ask to the kid
You see your mother is starving to death, what should you not do? Why?

No comments:

Post a Comment