குறள் 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
பொருள்
பொருள்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
மலைந்து - மலைத்தல் - மாறுபடுதல்; பொருதல்; மயங்குதல்; வருத்துதல்;
மலைந்து - மலை-தல் - malai- 4 v. cf. மிலை-. [K. male.]tr. 1. To wear, put on; சூடுதல். மாபெருந் தானையர்மலைந்த பூவும் (தொல். பொ. 60). 2. To takeupon oneself; to enter into, as war; மேற்கொள்ளுதல். பழிமலைந் தெய்திய வாக்கத்தின் (குறள்,657). 3. To resemble; ஒத்தல். கவிகைமாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 4.To pluck; பறித்தல். கழுநீர் மலையு வயன்மா தினரே(கல்லா.). 5. To oppose, fight against;எதிர்த்தல். (சூடா.)--intr. 1. To fight; to become opposed; பகைத்து மாறுபடுதல். இகன்மலைந்தெழுந்த போழ்தில் (சீவக. 747). 2. To bestaggered; to be doubtful or confused; மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல்பற்றி மலையற்க(சி. போ. பா. 6, 2, பக். 146). 3. To wrangle,dispute; வாதாடுதல். தத்த மதங்களே யமைவதாகவரற்றி மலைந்தனர் (திருவாச. 4, 53).திகைத்தல்; வியத்தல்.
எய்திய - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
ஆக்கத்தின் - ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.
கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு.
நல்குரவே - நல்குரவு - வறுமை
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
முழுப்பொருள்
குற்றங்களிலும் பொய்களிலும் தீய வழிகளிலும் பகைவரிடமும் மயங்கி செல்வத்திற்கு ஆசைப்பட்டுப் பெற்ற செல்வத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். அத்தகைய செல்வத்தை காட்டிலும் மிக துன்புறுத்தும் வறுமையை ஏற்று அனுபவித்து வாழ்வதே சான்றோர்க்கு சிறப்பு. ஏனெனில் குற்றங்களில் இருந்து வரும் செல்வம் மெய்யான இன்பம் அல்ல. அது துன்பம். மேலும் வறுமையை துன்பம் என நினையாமல் இருந்தால் அது துன்பமே இல்லை. அவ்வாறு நினைத்து வறுமையை அனுபவிப்பதே சான்றோர்க்கு சிறப்பு.
கீழ்வரும் பழமொழிப் (657) பாடல் இக்குறளின் கருத்தையொட்டிருப்பதைக் காணலாம்.
சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.).
மணக்குடவர் உரை
பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.
மு.வரதராசனார் உரை
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
Thirukkural - Management - Ethical Behavior
Valluvar resorts to a simile, in Kural 657, to further drive home the importance of ethical behavior for a lifelong happiness and achievement. It is better for a person to live in poverty than to live in prosperity with the wealth gained through improper or unimproved means. Living in poverty makes life more meaningful than living in prosperity with the wealth gained through unethical means. One's living must be honest and meaningful. Be known for your integrity, as money cannot buy integrity.
Better the poverty of the wise
Than wealth got with infamy.
Wealth amassed through improper means will get that person all the blame. The wealth amassed through improper means is not worth the blames a person gets for resorting to unethical means. Moreover, that act will disturb the conscience of that person at a later stage and he will regret. Regretting demolishes all that one has built in life. Ends do not justify means.
No comments:
Post a Comment