Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 13 இயல் - நட்பியல். Show all posts
Showing posts with label 13 இயல் - நட்பியல். Show all posts

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்


குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
காணுதல் அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
காணாதான் - அறிவிலிக்கு, பேதைக்குப்

காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

காட்டுவான் - ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்)

தான்காணான் -  தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான்

காணாதான் - அவ்வறிவிலியோ

கண்டானாம் - தான் எவ்வாறு காணுகிறானோ, அதையே அறிவென்று

தான்கண்டவாறு - நினைத்து பாசாங்கிலோ, அறிவு மயக்கத்தின் போதையிலோ இருப்பான்

முழுப்பொருள்
அறிவில்லாதவன் ஒன்றையும் அறிந்து உணர்ந்துக்கொள்ளாதவன். அவன் தானும் அறியமாட்டான் (காணமாட்டான் / காணாதான்), அவனுக்கு தெரிந்ததையே அறிவென நம்பி பிறருக்கு உரைப்பான் (காட்டுவான்). ஆனால் பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டான்/அறிந்துக்கொள்ளமாட்டான் (தான்காணான்). அத்தகைய அறிவில்லாதவன் (காணாதான்) தான் கண்டதையே (கண்டானாம்) அறிவென (தான்கண்ட வாறு) நம்பி அறியாமையில் வாழ்வான்.

புல்லறிவாளராம் அறிவிலிகளுக்கு நல்லறிவை ஊட்டுதல் ஒருவழியிலும் இயலாது என்பதைச் சொல்லும் குறள். இதைப் “பேதைக்கு உரைத்தாலும் செல்லாதுணர்வு” என்கிறது சிறுபஞ்சமூலப் (22) பாடல் ஒன்றும். இன்னும் தெளிவாக, பழமொழிப்பாடலொன்று (168) இக்குறளைக் கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க – மூர்க்கன்றான்
கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது. (பழமொழி 168)

அறிவிலார்க்கு, இவையே நல்ல வழிமுறைகள் என்று காட்டுபவன், தாமே அறியாமையில் மூழ்கியவனாகிறான். அறிவில்லாதவனோ, தான் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி பாசாங்கிலோ, அறிவு மயக்க போதையிலோ, தாம் செய்பவற்றையே செய்துகொண்டிருப்பான். கொடுத்தாலும் கொள்ளார்க்குக் கொடுத்து, அவர் கொள்ளாதிருக்கும் போது கொடுத்தவனும் முட்டாளேயாகிறான். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று சொல்லுவதும் இதைத்தான்.

சரி, நமது பேதைமையை குறைத்துக்கொள்ள என்ன செய்வது? பொதுவாக எல்லோருக்கும் விவாதம் செய்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். ஏனெனில் நமக்கு ஒன்று அதிக பேசப்பிடிக்கும் அல்லது அதிக பார்க்கவோ கேட்கவோ பிடிக்கும். அதனால் தான் அடுத்தவரை பேசவிடாமல் தான் பேசுவதையே பேசுகிறோம் அல்லது கேளிக்கை நிகழ்ச்சிகளை பல ஊடகங்களில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அரிதாகவே உரையாடவோ ஆரோக்கியமாகவோ விவாதிக்கிறோம். உரையாட வேண்டும் என்றால் முழுமையாக மனதையும் காதையும் கொடுத்து கேட்க வேண்டும். இங்கே பதில் சொல்வதற்காக கேட்கக் கூடாது. புரிந்துக்கொள்வதற்காக கேட்கவேண்டும். பிறர் நம்மிடம் சொல்லியவற்றையும் சொல்லாமல் விட்டவற்றையும் புரிந்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் நமது பேதைமையை குறைத்துக்கொள்ளலாம் அல்லது வெளிக்காட்டும் அளவையாவது குறைத்துக்கொள்ளலாம்.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

 

குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
ஏவவும் - ஏவுதல் - கட்டளையிடுதல்; தூண்டிவிடுதல்; செலுத்துதல்; சொல்லுதல்; அனுப்புதல்.

செய்கலான் - செய்யவதற்கறியான்; செய்யாதவன்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

தேறான் -  தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான் 

அவ் - அந்த 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவினை

போஒம் - அவன் இறந்துபடும்

அளவும் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அளவுதல் - கலப்புறுதல்; கலத்தல் உசாவுதல்

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு

முழுப்பொருள்
தனக்கும் எதையும் செய்யும் அறிவும் தேர்ச்சியும் இல்லாமல், பிறர் சொன்னாலும் அதனை புரிந்து அதன்படி செயல்படாதவன் அறிவில்லாதவன் எனப்படுவான். அத்தகையவன் இறக்கும் வரையில் ஒரு நோயே. அவனை நினைத்து இவ்வுலகம் வருந்தும் (அவன் உற்றோர் வருந்துவர்.) அவன் துன்பத்தையே தருவான். அவன் ஒரு பிணி.

“தனக்கும் தெரியாது தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று பேச்சு வழக்கிலே நாம் கூறுவதையே இக்குறள் கூறுகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அறிவுடைமையே குறைவற்ற செல்வம். அறிவின்மை ஒருவருக்கும் நோயைப் போன்றதே, போக்கிக்கொள்ள முயலாதவரை, உடனிருந்தே, வளர்ந்து, உடம்பில் புரையோடிக் கொல்லவும் செய்யும் என்பதை உள்ளுறையாகச் சொல்வது இக்குறள். 

உதாரணமாக சொன்னால் உடல்நலத்தை பற்றி தனக்கும் தெரியாது பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவில்லையென்றால் அவருக்கும் நோய் வரக்கூடும். அவரும் பிறருக்கு துன்பத்தையே தருவார். 

இது உடல்நலம் என்றல்ல எல்லா துறைகளுக்கும் எல்லா தளங்களிலும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தௌ¤யான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது

மு.வரதராசனார் உரை
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

 

குறள் 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
கழா - அசுத்தத்தை மிதித்துவிட்டு கழுவாமால்
அக் - அந்த
கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

பள்ளி - கல்விகற்குமிடம்; அறை; அறச்சாலை; இடம்; சிற்றூர்; இடைச்சேரி; நகரம்; முனிவர்இருப்பிடம்; சமணபௌத்தக்கோயில்; அரசருக்குரியஅரண்மனைமுதலியன; பணிக்களம்; மக்கட்படுக்கை; கிறித்துவக்கோயில்; பள்ளிவாசல்; தூக்கம்; விலங்குதுயிலிடம்; சாலை; வன்னியச்சாதி; குள்ளமானவள்; குறும்பர்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

வைத்தற்றால் -  வைத்ததுபோலேதான்

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

குழா - குழு -  மக்கட்கூட்டம்; மகளிர்கூட்டம்; ஆடுமாடுமுதலியவற்றின்கூட்டம்; தந்திரம்; சாதுரியச்சொல்; தொகுதி

அத்துப் - இசைப்பு; சிவப்பு செவ்வை துவர் அரைஞாண் அரைப்பட்டிகை தைப்பு; அசைச்சொல், ஒருசாரியை.

குழாஅத்துப் – குழுவினிலே

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

புகல் - புகுகை; இருப்பிடம்; துணை; பற்றுக்கோடு; தஞ்சம்; உடம்பு; தானியக்குதிர்; வழிவகை; போக்கு; சொல்; விருப்பம்; கொண்டாடுகை; பாடும்முறை; வெற்றி; புகழ்; புரையுள்ளது.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்.

முழுப்பொருள்
ஒரு அசுத்தத்தை (சாணி, மலம்) மிதித்து விட்டு அக்காலை கழுவாமல் ஒரு வீட்டு அறையினுள் சென்றாலோ அல்லது ஒரு இறைவனை வழிப்படும் கோவிலுக்குள் சென்றாலோ அல்லது உறங்கும் படுக்கையின் மேல் வைத்தாலோ எப்படி இருக்கும்? மிகவும் அருவருப்பாக இருக்கும். நாம் தூய்மையை மதிக்கவில்லை என்பதை குறிக்கிறது. அது அவ்விடத்தை இழிவு செய்வதுப்போல் ஆகும். 

அசுத்ததை மிதித்துவிட்டு காலை கழுவாமல் அக்காலால் ஒரு கோவிலுக்குள் செல்வதைப்போல சான்றோர் கற்றோர் அறிஞர் கூடியுள்ள ஒரு அவையினில் அல்லது ஒரு குழுவினில் பேதையர்கள் அறிவில்லாதவர்கள் செல்வது சான்றோரை அறிஞரை அவமதிப்பதுக்கு / சிறுமைசெய்வதற்கு ஒப்பாகும். ஆதலால் தண்டிக்கப்படும். தண்டனையை நாமே தேடிக்கொள்வதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

பேதையராய் இருக்கும் இழிவையும் பேதையர் சென்று இழிவு சேர்க்க கூடாத இடங்களையும் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

“கழாஅக்கால்” என்பதை இடக்கரடக்கல் என்று உணரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்படக்கூடாதவற்றை, குறிப்பால் சொல்லுவதை, இடக்கரடக்கல் என்று சொல்லுவர். மலம், சிறுநீர் போன்றவற்றை கழித்துவிட்டு உடலைத் தூய்மையாக்குதலை, “கால் கழுவுதல்” என்பது வழக்கம்.

படுக்கையில் கழுவாத கால் எப்படி தவறு ஆகும்?
படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? 

சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.

இந்த ஆசாரமே பின்னர் இஸ்லாமிய மரபிலும் நீண்டு ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக ஆகியது. கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.

பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.

மேலும்: அஷோக் உரை

நான் ஒரு குறளை எடுத்து விளக்கினேன்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

என்ற குறளுக்கு பரிமேலழகர் “சான்றோர் அவையின்கண் பேதையாயினன் புகுதல் தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண் வைத்தாற்போலும்” என உரை அளிக்கிறார்.

அதையொட்டி மு.வரதராசனார் முதல்  மு.கருணாநிதி வரையிலான அனைத்து உரைகளுமே ‘கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது அறிவில்லாதவன் அறிஞர் அவையில் புகுந்து பேசமுற்படுவது’ என்றே பொருள் அளித்துள்ளனர்.

அதுவே அறிஞர் வழக்கம். ஒருவரை முன்னோடி அறிஞர் என ஏற்றுக்கொண்டார்களென்றால் அனைவரும் அவரையே திரும்பத்திரும்ப பின் தொடர்வார்கள். சான்றோர் அவையில் அறிவிலாதவன் பேசுவது அச்சான்றோரை அவமதிப்பது. அதற்கும் படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? எந்த வகையில் பொருத்தமானது இந்த வாசிப்பு?

நான் நண்பரிடம் சொன்னேன். சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.

இந்த ஆசாரமே பின்னர் இஸ்லாமிய மரபிலும் நீண்டு ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக ஆகியது. கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.

பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.

பரிமேலழகர் உரை
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.

மு.வரதராசனார் உரை
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

 

குறள் 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பெரிது -  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

பிரிவின் - பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பீழை - துன்பம்

தருவது - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மெல்லிய நய்யாண்டியை பொதிந்து வைத்துள்ள குறள் இது. அறிவில்லாத மூடர்களுடன் நட்பு உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவிதத்தில் மிகவும் நன்மைவாய்ந்தது இனிமையானதும் கூட. ஏனெனில் அந்நட்பு முறிந்தாலோ அல்லது அந்நட்பை விட்டுப் பிரிந்தாலோ நமக்கு வருத்தம் என ஏதுமில்லை. ஆதலால் அது இனிமையானது. அகத்தால் கொள்ளும் நட்பே பிரிவின் போது வருத்தை தரும். ஆனால் இதுவோ பேதையார் உடன் கொண்ட நட்பு முகத்தால்  மட்டும் கொண்ட நட்பாகும். ஆதலால் வருத்தம் இருக்காது.

இதில் என்ன நய்யாண்டி? பேதையாரை அறிவுள்ளோர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். பேதையரின் பிரிவிற்கு வருந்த மாட்டார்கள். அவர்களை பயனற்றவர்களாகவே கருதுவார்கள். பேதையர்கள் பூமிக்கு ஒரு வித பாரமே. பேதையர்களால் எவ்வித பயனும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது இக்குறள். 

அப்படியெனில் ஏன் அவர்களுடன் நட்புக்கொள்ள வேண்டும். சில சமயம் சில சூழ்நிலைகளில் பேதையர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள நேரிடும். அதனை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அந்நட்பை நினைத்து வருந்தாதே இதனால் உனக்கு ஒரு இழப்பும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். பேதையருடன் கொள்ளும் நட்பு பல நேரங்களில் இக்கட்டுகளை உருவாக்கும். எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. அது தாமாகவே முறியும் போது, அதைவிட மகிழ்வைத் தருவது எதுவுமில்லை. அதன்காரணமாகவே பேதையர் நட்பு பெரிதும் இனிமையானது எனப்படுகிறது. அது தானாக முறியும் இயல்பினது என்றும் உணர்த்தப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

 

குறள் 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
மையல் - :maiyal   n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.)

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

களித்தற்றால் - போதை கொள்ள கள்ளைக் குடித்தாற்போல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
மயக்கத்தில் உள்ளவன் அல்லது பித்துப்பிடித்த ஒருவன் எதையும் நிதானத்துடன் சுயநினைவில் செய்ய முடியாத நிலையில் இருப்பான். அத்தகையவன் எதையும் சரிவர செய்ய முடியாது. அவன் மயக்கத்தைத் தரும் சோர்வைத் தரும் கள்ளை (மதுவை) உண்டால் கேட்கவே வேண்டாம். அவன் செய்பவை கெடுதலையும் அழிவையும் தரும். 

ஆதலால் அறிவில்லாதவன் ஒரு பொருளை பெறுவது என்பது பித்துப்பிடித்தவன் கள் உண்டு கேடு விளைவிப்பதுப் போல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ஆக்கமுள்ள பயனை பெறுவது என்பது எட்டாத கனியாகவே இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

மு.வரதராசனார் உரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

 

குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
பகை - எதிர்,  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆம் - ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

வருங்கால் - வரும் பொழுது

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

நட்டு - உப்புக்கொட்டிவைக்கும்மேடை; நாட்டியம்; காண்க:நட்டுவன், நாட்டியக்காரன்; கீழ்மை; சரிநடு; நட்டம்.

நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல்.

முக நட்டு – முகத்தளவில் மட்டும் நட்பைக் காட்டி

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஒரீஇ -
ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
பகைவர் நம்மிடம் நட்பாக பேசினால் அப்பகைவர் இடத்தில் எவ்வாறு நட்புப் பாராட்ட வேண்டும்? 
பகைவர் ஏன் நம்மிடம் நட்புபாராட்டுகிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் கண்டிப்பாய் ஆராயவேண்டும். அவரது தவறுகளை அவர் உணர்ந்தாரா? நம்மை வஞ்சிக்க ஏதாவது குழிபறிக்கிறாரா? அல்லது பிற்காலத்தில் மனம் மாறி மறுபடியும் பகைவராக மாறுவாரா? ஆனால் இதனை அறிய சிலகாலம் எடுக்கும்.  பச்சோந்திகள் நிறம் மாறுவதுப்போல பகைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால் நாம் எக்காலமும் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. ஆதலால் பகைவரிடம் முகத்தளவில் சிரித்துப் பேசி மகிழ்ந்து அகத்தால் நட்பல்லாமல் விலகி இருப்பதே நல்லது. 

நட்பு அதிகாரத்தில் “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று நட்பை இனம் காட்டும் வழியைச் சொல்லிவிட்டு இந்த குறளில், அகத்தளவில் கொள்ளாது முகத்தளவில் நட்பை பகைவரிடம் காட்டவேண்டும் என்கிறார் வள்ளுவர். 

கம்பரின் இராமாவதாரத்தில், கிட்கிந்தா காண்டத்தில், அரசியல் படலத்தில் வரும் பாடலொன்றில் இவ்வாறு கூறுகிறார். படிப்பதற்கு எளிதாகப் சொற்களைப் பிரித்தே கொடுக்கப்படுகிறது.

“புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் வினயமும் வேண்டற் பாற்றே;
பகையுடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்கு, நாவால்” (கம்ப.அரசியல்.29)

அதாவது, இவ்வுலகம், ஓரிடத்தில் புகை இருக்குமானால், அங்கு கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு உண்டு என்று ஊகித்து அறிகின்ற கருதறிவினைக் (inference) கொண்டது. ஆனால், அதனோடு நூல் வல்லோர் கூறிய சூழ்ச்சியறிவும் அரசாள்பவருக்கு வேண்டும். பகைமை உடையாரிடத்தும், அவரவர்க்கு ஏற்றார்போல், பயன் தருவதாக, அவர்தம் இயல்பறிந்து, தம் பண்பும் மாறாது, மலர்ந்த இன் சிரிப்புடைய முகமு, இன் சொற்களையும் சொல்வாயாக. இதனால் நல்லவர்க்கு நல்லவராய், பகைவர்க்கு, அவரை அடக்குவதற்கு நல்லவர்போன்று இருக்கவேண்டியது உணர்த்தப்படுகிறது. காலம் அறிதல் அதிகாரத்தில், ஏற்கனவே இக்குறளை ஒட்டிய கருத்தை இவ்வாறு கூறியுள்ளார். பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (காலம் அறிதல் – 487)”;

தமிழ் அகராதியில் பகைவர் என்பதைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இகழுநர் என்பது ஒன்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

மு.வரதராசனார் உரை
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

 

குறள் 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
மிகச் - Very much; abundantly; மிகவும்; பெரிய; ஓர்உவமவுருபு
மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

எள்ளுவாரை - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

நகச் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

சாப் - சாதல் - இறத்தல்

புல்லம் - எருது; இடபராசி; வசைமொழி; மலர்
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புல்லற்பாற்று  - அவரோடு ஒட்டி ஒழுகுக (புல்லுதல் – நட்புறவாய் ஒட்டிக்கொள்ளுதல்)

முழுப்பொருள்
ஒரு சிலர் நம்மிடம் நெருக்கமாய் இருப்பதுப்போல் சிரித்து மகிழ்ந்து பேசுவர் விழாக்களில் இணங்குவர் முகஸ்துதி செய்வர் அகத்தில் அழிக்கும் எண்ணம் கொள்வர். ஆனால் உள்ளூர நம்மை இகழுவர். அவர்களை இனம் கண்டுக்கொண்டு, அவர்களிடம் அவர்கள் செய்வதுப்போலவே சிரித்து பேசி மகிழ்ந்து, நட்பை மனதில் அழித்துவிட்டு, அவர்களிடம் இணங்கி இரு. நாம் அவர்களை நம்பியதாக அவர்களை நம்பவைத்துவிடு. தக்க சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் தண்டித்துவிடலாம். அதுவே அவர்களுக்கு தண்டனை.

ஏன் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் எல்லா இடங்களிலும் நாம் நேர்மையாக இருந்துவிட முடியாது. சில இடங்களில் அது துவேஷத்தை வளர்த்து நமக்கு வெளிப்படையாகவே பல இன்னல்களை கொடுக்கும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறு. நாம் அவர்களை நம்பவில்லை என்று சொன்னால் உடனே அழுகை சிந்தி நாடகம் ஆடுவர் அல்லது நம்மை ஏசுவர். ஆதலால் இந்த நாடகத்தினை எல்லாம் பார்க்காமல் அந்நாடகத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துவிட்டால் நாடகமும் சுமூகமாய் செல்லும். 

அதாவது வஞ்சகரை வஞ்சகம் செய்து வஞ்சிப்பதே தண்டிப்பது என்பது இக்குறளின் அடிநிலைக் கருத்து. ஆனால் வள்ளுவரே “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றும் கூறியிருப்பதையும், ஒளவை சொன்ன, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்” என்பதையும் ஒப்பு நோக்கும்போது, கீதையில் கண்ணன் சொன்னது போல தருமத்தின் பாதை மிகவும் சிக்கலானது. வெவ்வேறு நேரங்களில் அது இடம், பொருள் இவற்றுக்கேற்ப மாறும் போலும். சாணக்ய நீதி சொல்லுவதுபோல், இக்குறள், “பகையை உறவாடிக் கெடு” என்கிறது. இதை இருவிதமாகக் கொள்ளலாம். அன்பின் வழி நின்று பகையை மாற்று என்றும், அல்லது அழி என்றும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) ¢என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.).

மணக்குடவர் உரை
பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.

மு.வரதராசனார் உரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

 

குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
தொழுத - தொழுதல் - வணங்கல்

கையுள்ளும் - கைக்குள்ளும் 

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல்.

ஒன்னார் - பகைவர் 

அழுத - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.

கண்ணீரும்கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த. -

முழுப்பொருள்
பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்குகையில் கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பூவுக்குள்ளும் பூநாகம் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதுப்போல சில கூடா நட்புகளின் / உறவுகளின் கண்ணீர் சிந்தும் அழுகைக்குள்ளும் நம்மை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஒரு தந்திரம் ஒரு திட்டம் ஓரு சூழ்ச்சி இருக்கக்கூடும் என்றென்பதை நினைவில் கொள்க. அத்தையோரிடம் இருந்து (மனதளவிலாவது) விலகி நிற்க. அவர்களை நம்ப வேண்டாம்.

இன்றைய காலங்களில் குறிப்பாக சில உறவுகளிடம் இது அதிகமாய் இருக்கக்கூடும். தன்னை நியாயமாக காட்டிக்கொள்ள தன்மீது தவறே இல்லை, அடுத்தவர்மீது தான் தவறு, தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றெல்லாம் அழுவர். சிலர் சில (நிதி) உபாயங்கள் பெறவேண்டி தான் செய்த தவறு எல்லாவற்றையும் அறியாமையால் செய்துவிட்டேன் என்றும், தன்னை மன்னித்துவிடு என்றும், எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்றும் அழுகை சிந்தி நம்மை நம்பவைப்பர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் செய்கையில் ஒருவித மாற்றமும் இருக்காது எனதை அறியலாம். ஆதலால் அவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்க. 

புறநானூற்று (10:1) வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.

“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே” (சீவக.1891)

பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.

மு.வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 

குறள் 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு

குறுகுதல் - குள்ளமாதல்; சிறுகுதல்; மாத்திரைகுறைதல்; அணுகுதல்.

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

மனைக் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

கெழீஇ - கெழுவு -. பொருந்த, நிறைய
கெழீஇ - நட்பாடி இருந்துவிட்டு

மன்றில் - மன்றம் -  அவை:கழகம்; வழக்குமன்றம்; ஊருக்குநடுவாயுள்ளமரத்தடிப்பொதுவிடம்; காண்க:செண்டுவெளி; வெளியிடம்; போர்க்களப்பரப்பின்நடுவிடம்; சிதம்பரம்; வீடு; பசுவின்தொழுவம்; நெடுந்தெரு; மெய்ம்மை; உறுதி; மணம்.

பழிப்பார் - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்முடன் நமது வீட்டில் நட்புறவாடுவர் பொருந்திப்பேசுவர். நம்மை நெகிழவைப்பர். (நம்மிடம் காரியமும் சாதித்துக்கொள்வர்). ஆனால் ஒரு பொதுவெளியில், பலர் கூடியுள்ள சபைதனில் நம்மை இகழுவர். எள்ளுவர். நம்மை நகைப்புக்குரிய பொருளாக சித்தரிபர். நமது செயல்களையும் எண்ணங்களையும் சிறுமை செய்வர். (நண்பர்களுடன் மட்டும் கூடிய சந்திப்புகளில் வரம்புக்குள் கேலிசெய்துகொள்வது வேறு). அத்தகையோருடன் நட்பு சிறிதாயினும் அவர்களை சீர்தூக்கிப்பார்த்து அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீய நட்பை தவிர்த்துவிட வேண்டும். அவர்களை நம்மிடம் அணுகவிடக்கூடாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

 

குறள் 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
கனவினும் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

இன்னாது - தீது; துன்பு

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

வேறுபடுதல் - வேறாதல் - பிரிதல்; மாறுபடுதல்; மனம்மாறுபடுதல்; முன்னையதன்மைகுலைதல்; சிறப்புடையதாதல்; ஒதுக்காதல்; தனியாதல்.

வேறுபட்டார் -  வேறாய் இருப்பவர்கள்தம்

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்மிடம் நன்றாக தேனாக இனிமையாக பேசுவர். ஆனால் அவர்கள் செயல்களோ வேறு மாதிரி இருக்கும். அவர்களின் செயல்களில் நேர்மை இருக்காது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களின் செயல்கள் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும். அத்தகையோரின் நட்பை என்றென்றும் கொள்ளாதே ஏனெனில் அத்தகைய நட்பு கனவிலும் துன்பத்தையே தரும். கனவிலும் அவர்கள் நமது நம்பிக்கையை குலைப்பார்கள்.

சொல்லும் செயலும் இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று வலியுருத்தும் குறள் இது. இது நட்புறவுகள் என்றில்லை வணிக உறவுகளுக்கும் பொருந்தும்.  நாணயம் என்பது மிக மிக அவசியம். ஆதலால் ஒருவரின் சொற்களை செயல்களை வைத்து மதிப்பிட்டு அறிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலத்திற்கும் துன்பத்திற்கு வாக்கபட்டதுப்போல் ஆகிவும்.

ஒரு நாலடியார் பாடல் இக்கருத்தையே கூறுகிறது

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் – சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. (நாலடி 127)

இப்பாடலின் கருத்து: மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்.

மேலும், உதாரணமாக என் சொந்தவாழ்க்கையில் ஒன்றை கூறலாம். நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு தேடிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னிடம் தொலைப்பேசியில் பேசிய நபர் தேனாக பேசினார். தன்னுடன் வசிப்போர் எல்லாம் மிகவும் நல்லவர்கள். இங்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. இங்கு நாங்கள் ஐந்துப் பேர் தான் வாழ்கிறோம். உங்களைப்போல் திட்டமிட்டு வாழ்வோர் தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் பேசினார். ஒரு நண்பர்போல் இனிமையாக பேசினார். நண்பர் என்ற உணர்வை நம்பிக்கையை கொடுத்தார். அதை நம்பி நான் அவ்வீட்டிற்கு/அவ்வறைக்கு வாடகைக்கு சென்றேன். ஆனால் அவ்வீடோ மிக மிக அவலமாய் இருந்தது. சுத்தமென்பது எங்கும் சிறிதும் இல்லை. மொத்தம் ஏழு பேர் தங்கிக்கொண்டு இருந்தனர். ஒரே ஒரு ஒன்றிணைந்த குளியலறையும் கழிவறையும் இருந்தது. யோசித்துப்ப்பாருங்கள் ஏழு பேருக்கு ஒரு குளியலறை கழிவறைஎன்றால் எவ்வளவு அவலமாக இருக்கும் என்று. அதுவும் சுத்தம் செய்யவில்லை என்றால். மேலும், வீட்டின் வாடகை சரிசமமாக வகுக்கபடவில்லை. அவ்வீட்டில் சிறிய அறையில் இருப்போரிடம் அதிகம் வாடகை வாங்கபட்டது. இப்படி சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது. ஆனால் மற்றபடி என்னுடன் போனில் பேசிய அந்த ஒருங்கிணைப்பாளர் எப்பொழுதும் தேனாக நண்பர் போல் பேசுவார். ஆனால் அவரது செயல்களோ சற்றும் நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது. அவரை என்றும் நம்ப முடியாது. (ஆதலால் அவ்வறை விட்டு நான் அடுத்த மாதமே வெளியே வந்துவிட்டுவேன்) அத்தகையோருடன் நட்பு வைத்துக்கொள்வது மிக மிக துன்பம் தரும். கனவில் நினைத்தாலும் துன்பமே. ஆதலால் அத்தகையோருடன் உறவு வைத்துக்கொள்ளாதே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.).

மணக்குடவர் உரை
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

 

குறள் 817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகை - (வி)சிரி; பழி.

நகைத்தல் - சிரித்தல்; நிந்தித்தல், இகழ்தல்; பொருட்படுத்தாதிருத்தல்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

வகையர் - தன்மை உடையோர், செயல்கள் உடையோர்

ஆகிய -  பண்புருபு

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

நட்பின் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

பகைவரான் - பகைவர்க்கம் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்
பகை - எதிர்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
பகைவன் - எதிரி

பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில் பத்துப்பதிகம் கூடியபகுதி; சீட்டுக் கட்டில் பத்துக்குறியுள்ளசீட்டினம்.

அடுத்த - aṭutta   aTutta அடுத்த next; (with time words) the one after the coming one  
அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முழுப்பொருள்
நம்மை கண்டிக்கும் உரிமை நண்பருக்கு உண்டு. நாம் தவறு செய்தால் நம்மை உரிமையுடன் கண்டிப்பவரே நல்ல நண்பர். ஆனால் நம்மை எள்ளும் தன்மைக்கொண்ட நம்மை இகழும் தன்மைக்கொண்ட நம்மை பொருட்படுத்தாத நண்பருடன் கூடிய உறவை/நட்பை விட பகைவர் செய்யும் துன்பங்கள் பல (பத்துக்கோடி) மடங்கு மேல்.

இவை எப்படி மேலாம்? ஏனெனில் பகைவர் செய்யும் துன்பங்கள் ஒரு விதத்தில் நமது பலவீனங்களை அறிந்துக்கொண்டு அவற்றை சரி செய்துக்கொள்ள உதவும். நாமும் வலிமை அடைவோம். ஆனால் நம்மை எள்ளும் நண்பர் நம்மை இகழும் நண்பர் நம்மை பொருட்படுத்தாத நண்பர் நமது நேரத்தை விரயம் செய்கிறார் நமது மனவலிமையை குறைக்கிறார். நமது செயல்களை சிறுமை செய்கிறார். நமது மனதில் ஒரு புழுக்கத்தை உருவாக்குகிறார். ஆதலால் அத்தகைய நட்பு தீ நட்பாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.).

மணக்குடவர் உரை
நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

 

குறள் 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
எல்லைக் - வரம்பு; அளவு; அவதி; வரையறை; தறுவாய்; முடிவு; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்; சூரியன்; பகல்வேளை; நாள்; இடம்; கூப்பிடுதொலைவு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறவார் - துறவாதவர்கள்

தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம்.

இடத்தும் - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

தொல்லைக் - பழமை; துன்பம்; செயல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள் 
நட்பின் எல்லைக்குள் நெடுந்நாடகள் நட்புறவாடியவர்கள் நட்பின் அழிவிற்கு காரணங்கள் (ஒரு நண்பர் கெடுதல் செய்தாலும்) இருப்பினும் நட்பின் பழைமையினால் அந்நட்பைவிட்டு நீங்காது (/ துறவாது / அறுக்காது/ துண்டிக்காது) அந்நட்பின் எல்லைக்குள்ளேயே நின்று உறவில் நீடிப்பர்.

நட்புறவுக்கு நம்பிக்கை மிகவும் தேவை; நட்பின் வரம்புகளும் நன்றாக புரிந்து கொள்ளப்படவேண்டும். அவ்வாறு வரம்புகளைப் புரிந்துகொண்ட நட்புகளுள் சில நேரங்களில் கேடுகளைத் தரும் செயல்களை ஒருவருக்கொருவர் செய்துவிடலாம். அவற்றால் ஒரு நண்பருக்கு நன்மையும், மகிழ்ச்சியும் தொலையலாம். ஆனாலும் அவற்றால் எல்லாம் நட்பானது இழக்கப்படாது

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.

மு.வரதராசனார் உரை
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

 

குறள் 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
அழி - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

வந்த - வருதல் 

செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

அறார் - மாறாத

அன்பின் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

வந்த - வருதல் 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

யவர் - அவர்

முழுப்பொருள் 
முகத்தால் மட்டும் அல்லாமல் உண்மையாக மனதால் அன்பால் நெடுந்நாள் கொண்ட நட்பில் ஒரு நண்பர் தமக்கு கெடுதலையும் அழிவையும் செய்தாலும் அந்நட்பில் அன்பு மாறாது இருப்பார் என்றால் அதுவே நட்பாகும்.  உண்மையான அன்புகொண்டவர்கள் நிலை மாறாதவர்கள்.

நாலடியார் பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. நண்பர் என்று கொண்டவர், அவ்வுறவிலிருந்து விலகி இருப்பதை அறிந்தால், அவரை மேலும் மிகுதியாகப் போற்றி, அவர் நட்புறவில்லில்லை என்று புறத்தே தூற்றாது தமக்குள்ளாகவே அந்நட்பைப் போற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது அப்பாடல்.

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல். (நாலடி 229)

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்” (நாலடி 221)

“..............இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்” (நாலடி 227)

“நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்” (பழமொழி 16)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 

குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன்.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேளாக் - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல்

கெழுதகைமை - உரிமை; நட்பு.

வல்லார்க்கு வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள் 
பலகாலம் கொண்ட ஒரு நட்புறவில் ஒரு நண்பரை பற்றி பிறர் வந்து கோள் (புறங்கூறுதல்) சொன்னாலும் அதனை கேளாமல் தன் நண்பனின் மீது நம்பிக்கை வைத்திருப்பதே நட்பாகும். ஆனால் அவ்வாறு நட்பு வைத்திருக்கும் நண்பனின்(A) நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஒரு நண்பர்(B) தவறு செய்தாலோ அல்லது நண்பர் (A) நண்பர்(B) செய்த தவறை உண்மையென அறிந்துக்கொண்டாலோ அந்நாள் இழுக்காகும். அந்நாள் இழுக்கானாலும், நட்பும் அன்பும் மாறாது. ஆயினும் தவறு தவறு தான்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது. தவறுகள் இயற்கையாகவே நடக்கக்கூடும். ஆதலால் பழைமையான நண்பர்கள் அதனை மன்னித்து நண்பரை ஏற்றுக்கொள்வர். நண்பனுக்கு துன்பம் தவறு என்ற உடன் நட்புறவை முறித்துக்கொள்ளமாட்டர். 

ஆனால் தவறுக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு உறவில் ஒரு நண்பர் தான் செய்வது மிக தவறு தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிந்தும் தவறு செய்தாலோ அல்லது அத்தவறை நண்பரிடத்தில் இருந்து வேண்டுமென்றே மறைத்தாலோ அது கண்டிப்பாக அந்நட்பிற்கு இழுக்கை விளைவிக்கும். அதனை அதுவரை அறிந்திறதா நண்பர் அறியும் பொழுது அந்நாள் அந்நட்பிற்கு தளர்வை தரும். இன்னும் சொல்லப்போனால் நண்பன் அறிந்து செய்த தவறை கண்டிக்காமல் இருப்பது நட்பே அல்ல ஏனெனில் புணர்ச்சி பழகுதல் மட்டும் நட்பில்லை. தவறுகளை திருத்துவதே நல்ல நட்பு.

பொதுவாக சினிமா உதாரணங்களை சொல்வதை தவிர்த்துவிடுவேன். ஆயினும், கூறுகிறேன் (சினிமா உதாரணங்களை வெறுப்போர் என்னை மன்னித்துவிடும்). நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் ஹானஸ்ட் ராஜ் (Honest Raj). விஜயகாந்த் கதாபாத்திரத்டின் பெயர் ஹானஸ்ட் ராஜ். அதில் அவரின் உற்ற நண்பனாக நடிகர் தேவன் (கதாபாத்திரத்தின் பெயர் வரதராஜன்) இருப்பார். தேவன் ஏழ்மையின் காரணமாக தேவன் கள்ளநோட்டு அடிக்கும் தொழிலை மறைவாக புரிவந்துவருவார். சிலகாலம் கழித்து விஜயகாந்திடம் வேறு ஒருவர் போனில் (Phone) அழைத்து தேவனின் குற்றங்களை கூறுவார். விஜயகாந்த் அதனை அப்படியே நம்பமாட்டார். ஆனால் பின்பு அதனை ஆதாரங்களுடன் அந்த மற்றொருவர் நிருபிப்பார். ஆயினும் தன் நண்பரிடம் வந்து எங்கள் நம்பிக்கையினையெல்லாம் இப்படி செய்துவிட்டாயே என்று குமுறுவார். தன் நண்பனின் குற்றைத்தை கண்டித்து அவரை போலிஸீடம் சரணடைய சொல்வார். ஆனால் அந்நாள் அந்நட்பு உடைந்துவிடும். அது இழுக்காக மாறிவிடும். 

விஜயகாந்த் தேவன் நட்பாக இருத்தல்

தேவன் கள்ளநோட்டு அடித்தல்

பிறர் தேவனை பற்றி விஜயகாந்திடம் கோள் சொல்லுதல். விஜயகாந்த் நம்பாது இருத்தல்

தேவனின் குற்றங்களை ஆதாரத்துடன் பிறர் கூறுதல்

தேவனின் குற்றங்களை பற்றி விஜயகாந்த் தேவனிடமே கேட்டல். நம்பிக்கை இழக்கும் தருவாய்.

திரைப்படம்: ஹான்ஸ்ட் ராஜ் /  Honest Raj (1994)


மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும்
சிதகு ரைக்குமேல்
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தார்
என்பர் போலும்” (பெரியாழ்வாஅர் திருமொழி 4.9:2)

பரிமேலழகர் உரை
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம். (பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .

மு.வரதராசனார் உரை
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

 

குறள் 800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
மருவுக - மருவுதல் - கலந்திருத்தல்; வழக்கப்படுதல்; தோன்றுதல்; கிட்டுதல்; தழூவுதல்; பயிலுதல்; புணர்தல்; தியானித்தல்; பதித்தல்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்றார் - இல்லாதவர்; பொருள்இல்லாதவர்; முனிவர்; 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. 

ஈத்தும் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

ஒருவு - ஆடு; நீங்குகை.

ஒருவு-தல் - oruvu-   5 v. tr. 1. Toabandon, renounce; விடுதல் ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, passover; கடத்தல் இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 3. To resemble, equal; ஒத்தல் (பரிபா. 3, 32, பி-ம்.) 4. To escape; தப்புதல் பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5).--intr. To beexcepted; ஒழிதல் வேந்தனி னொரீஇய வேனோர்(தொல். பொ 32).  

ஒருவுக - நீங்குக, விலக்குக

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இலார் - இல்லை, இல்லாதவர் 

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
மாசற்றவர்களோடு குற்றங்களற்றவர்களோடு தீமையற்றவர்களோடு எக்காலமும் நம்மிடம் மாறுப்பாடற்ற குணம் கொண்டோரோடு நட்பாய் கலந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்களுடன் இருந்தால் வாழ்வில் நாம் சென்று அடையக்கூடிய சிகரங்கள் ஏராளம். ஆராய்ந்து அவர்களை நட்பாய் கொள்க.

ஆனால் நம்முடன் மனதாலும் குணத்தாலும் தகுதியாலும் தன்மையாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் பொருந்தாத நண்பர்களை ஏதாவது (காசு) கொடுத்தாவது விட்டு விலகுக என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் அத்தகைய தீ நட்புகள் உடன் இருந்தால் நாம் வாழ்வில் இழப்பவை மிக மிக அதிகம். நேரம் விரயமாகும். ஊக்கம் குறையும். ஆக்க சக்தி குறையும். குறிக்கோள்கள் சிறிதாகும். கவன சிதறல்கள் அதிகரிக்கும். நம்பகத்தன்மையில்லா உறவுத் துன்பகாலத்தில் கைவிடும். மனம் நோகும். இப்படி பல இழப்புகள் உண்டு. இவற்றையெல்லாம் விட சிறிது விலைகொடுத்தாவது நமது இழப்பை வெகுவாக குறைத்துக்கொள்ளலாம். நமது ஆக்கசக்தியை வேறு திசைகளில் குறிக்கோள்களில் செலுத்தலாம்.

இக்குறளின் கருத்தையொட்டிய குறளினை அறத்துப்பாலின் செய்நன்றி அதிகாரத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.


இவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் ஏதேனும் கொடுத்தாவது நல்ல நட்பைக் கொள்ளவேண்டுமென்றார். இக்குறளில் ஏதேனும் கொடுத்தாவது தீயவர் நட்பை விடவேண்டும் என்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுக்கும் பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது போலும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.

மு.வரதராசனார் உரை
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

 

குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
கெடும் - கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

காலைக் - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

கைவிடுவார் - கைவிடுதல் - கைவிடு-தல் - kai-viṭu-   v. tr. id. +. [T.kaiviḍu, M. kaiviṭu.] To forsake, abandon,desert, as dependents; to shun, eschew, as passions; விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்டமயல் (நாலடி, 43).  

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

உள்ளினும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

முழுப்பொருள்
துரோகங்களை நமது சாவிலும் மறக்க முடியாது என்று கூறுகிறார் திருவள்ளுவர். நமக்கு ஒரு கேடு / துன்பம் வரும் பொழுது நம்மை கைவிடுகின்றவரின் உறவை நட்பை ஒருபொழுதும் கொள்ளவேண்டாம். ஏனெனில் அத்தகைய துரோகிகளை சாவில் (அழிவில், இறக்கும் தருவாயில்) நினைத்தாலும் நமது உள்ளம் நம்மை சுடும். ஏனெனில் போயும் போயும் இத்தகைய நட்பை வைத்துக்கொண்டு இருந்தாயே என்றும் அவர் கைவிட்டுவிட்டு சென்றதையும் நினைத்து வருந்தும். மேலும், சாவு என்பது ஒருவர் கனிவாகும் தருணமும் கூட. அது பிறரை எளிதாக மன்னிக்கும் வாய்ப்புள்ள தருணமும் கூட. ஆனால் அத்தகைய நிலையிலும் ஆராயாஅமல் கொண்ட அந்த தவறான நட்பை நினைத்து வருந்துவார் என்றால் அந்நட்பு எவ்வளவு தவறான ஒன்றாக இருக்கும். ஆதலால் ஆராய்ந்து நட்பினைக் கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்துகிற குறள்.

இத்தகையோரைப்பற்றியும் கூறும்விதமாக, நாலடியார் பாடலொன்று:

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் – ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர். ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

இன்னா நாற்பது பாடல் வரி இதை ஒரு வரியில் சொல்கிறது. “இன்னா,கெடும் இடம் கைவிடுவார் நட்பு”.


”உள்ளின் உள்ளம் வேமே” (நற் 184:6)
”உள்ளின் உள்ளம் வேமே” (குறுந்.102:1)
“உள்ளின் உண்ணோய் மல்கும்”  (குறுந்.150:4)
“கருதின்வேம் உள்ளமும்” (கம்ப.தாடமை.5)
“நினையும் நெஞ்சமும் சுடுவது” (கம்ப.வனம்புகு.38)

“இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்” (நாலடி.113)

“மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்” (ஐந்திணையைம்பது.48)

“கெட்ட காலை விட்டன ரென்னாது
நட்டோர் என்பது நாட்டினை” (பெருங் 2.9:118-9) 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

 

குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளற்க - நினைக்காதீர்

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சிறு - ciṟu  
(an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

சிறுகுவ -சிறு - ciṟu   - க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings. 2. To show anger, சினக்க. (c.) 3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under ad versity will retain their confidence.

கொள்ளற்க - கொள்ளாதீர் 

அல்லல் - துன்பம்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

ஆற்று - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறுப்பார்  - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

ஆற்று அறுப்பார் – எதிர்கொள்ளும், நீக்கும் வழிகளைச் சொல்லாது, கைவிடுகின்றவர்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

முழுப்பொருள்
நாம் ஒரு பெரும் செயலை செய்யும் பொழுது அல்லது வாழ்வில் ஊக்கத்தோடு உற்சாகத்தோடு செல்லும் பொழுது அந்த ஊக்கத்தை/உற்சாகத்தை குறைக்கின்ற (அல்லது சிறுமை செய்கின்ற) செயல்களை எண்ணங்களை நினைக்கக்கூடாது. ஏனெனில் அது பெரும் செயலை ஆற்ற தடையாக அமையும். 

அதுப்போல நமக்கு ஒரு துன்பம் வந்தால் உடன் இருந்து உதவாமல் நம்மைவிட்டு விலக காரணங்களைத் தேடி விலகும் நண்பரை/உறவை கொள்ளாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்கள் நம்மை தேக்கி வைக்கவே செய்வார்கள். 

ஏன் ஊக்கத்தையும் நட்பையும் தொடர்பு படுத்துகிறார் திருவள்ளுவர்?
ஊக்கம் பெரிய செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. அதுப்போல் நல்ல நண்பர்களும் பெரும் செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. ஊக்கம் ஒன்றே நம்மை வாழ்வில் முன்னேத்து செல்லும். நம்மை ஒழுங்கு படுத்தும். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவும். அதுப்போல நண்பர்களே நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற்றுவர். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவுவர். ஊக்கத்தையும் இழக்கக்கூடாது. நல்ல நண்பர்களையும் இழக்கக்கூடாது. தீய நட்புகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. 

ஒப்புமை

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.