பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், கூடாநட்பு குறள் 830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்

 

குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
பகை - எதிர்,  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆம் - ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

வருங்கால் - வரும் பொழுது

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

நட்டு - உப்புக்கொட்டிவைக்கும்மேடை; நாட்டியம்; காண்க:நட்டுவன், நாட்டியக்காரன்; கீழ்மை; சரிநடு; நட்டம்.

நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல்.

முக நட்டு – முகத்தளவில் மட்டும் நட்பைக் காட்டி

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஒரீஇ -
ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
பகைவர் நம்மிடம் நட்பாக பேசினால் அப்பகைவர் இடத்தில் எவ்வாறு நட்புப் பாராட்ட வேண்டும்? 
பகைவர் ஏன் நம்மிடம் நட்புபாராட்டுகிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் கண்டிப்பாய் ஆராயவேண்டும். அவரது தவறுகளை அவர் உணர்ந்தாரா? நம்மை வஞ்சிக்க ஏதாவது குழிபறிக்கிறாரா? அல்லது பிற்காலத்தில் மனம் மாறி மறுபடியும் பகைவராக மாறுவாரா? ஆனால் இதனை அறிய சிலகாலம் எடுக்கும்.  பச்சோந்திகள் நிறம் மாறுவதுப்போல பகைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால் நாம் எக்காலமும் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. ஆதலால் பகைவரிடம் முகத்தளவில் சிரித்துப் பேசி மகிழ்ந்து அகத்தால் நட்பல்லாமல் விலகி இருப்பதே நல்லது. 

நட்பு அதிகாரத்தில் “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று நட்பை இனம் காட்டும் வழியைச் சொல்லிவிட்டு இந்த குறளில், அகத்தளவில் கொள்ளாது முகத்தளவில் நட்பை பகைவரிடம் காட்டவேண்டும் என்கிறார் வள்ளுவர். 

கம்பரின் இராமாவதாரத்தில், கிட்கிந்தா காண்டத்தில், அரசியல் படலத்தில் வரும் பாடலொன்றில் இவ்வாறு கூறுகிறார். படிப்பதற்கு எளிதாகப் சொற்களைப் பிரித்தே கொடுக்கப்படுகிறது.

“புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் வினயமும் வேண்டற் பாற்றே;
பகையுடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்கு, நாவால்” (கம்ப.அரசியல்.29)

அதாவது, இவ்வுலகம், ஓரிடத்தில் புகை இருக்குமானால், அங்கு கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு உண்டு என்று ஊகித்து அறிகின்ற கருதறிவினைக் (inference) கொண்டது. ஆனால், அதனோடு நூல் வல்லோர் கூறிய சூழ்ச்சியறிவும் அரசாள்பவருக்கு வேண்டும். பகைமை உடையாரிடத்தும், அவரவர்க்கு ஏற்றார்போல், பயன் தருவதாக, அவர்தம் இயல்பறிந்து, தம் பண்பும் மாறாது, மலர்ந்த இன் சிரிப்புடைய முகமு, இன் சொற்களையும் சொல்வாயாக. இதனால் நல்லவர்க்கு நல்லவராய், பகைவர்க்கு, அவரை அடக்குவதற்கு நல்லவர்போன்று இருக்கவேண்டியது உணர்த்தப்படுகிறது. காலம் அறிதல் அதிகாரத்தில், ஏற்கனவே இக்குறளை ஒட்டிய கருத்தை இவ்வாறு கூறியுள்ளார். பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (காலம் அறிதல் – 487)”;

தமிழ் அகராதியில் பகைவர் என்பதைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இகழுநர் என்பது ஒன்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

மு.வரதராசனார் உரை
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

கம்பனும் குறளும்
நன்றி கிருஷ்ணமூர்த்தி ராமானுஜம்
4123.'
'புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு
      அனல் அங்கு'' என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்;
     நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும், பயன்
      உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி, இன்
      உரை நல்கு, நாவால்.

இந்த உலகம்;
 (ஓரிடத்தில்) புகை உண்டாயிற்று என்றால்; 
அவ்விடத்தில் கிளர்ந்தெழுகின்ற நெருப்பு உண்டு; 
என்று
ஊகித்து அறிகின்ற;
 சிறப்பறிவைக் கொண்டுள்ளது.  
(ஆயினும் இந்த அனுமான அறிவோடு)
நூல் வல்லோரால் கூறப்படும் சூழ்ச்சியும் (அரசர்க்கு) வேண்டத்தக்கதாகும்;
-(உன்னிடம்) பகைமை கொண்ட
மனமுடையார் மாட்டும்;
(அவரவர்
தகுதிக்கேற்பப்) பயன் உண்டாகும்படி இயல்பறிந்து பண்புடன் நடந்து
கொள்வதினின்று மாறாமல்;
 மலர்ச்சி பெற்ற முகமுடையனாகிய;
நாவினால் இனிமையான சொற்களைச் சொல்வாயாக.

மூவகைப் பிரமாணங்களுள் காட்சியை விடுத்து ஏனை அனுமானப்
பிரமாணமும் ஆகமப் பிரமாணமும் ஈண்டுக் கூறப்பட்டன.  காட்சிப்
பிரமாணம் வெளிப்படை ஆதலின் கூறவில்லை.  இவை உண்மை காணத்
துணை செய்வன.  மிகை - கண்ணால் கண்டதற்கு மேல், சிறப்பறிவால்
ஊகித்தும் அறிவதால் 'மிகை' எனப்பட்டது.  நல்லவர்க்கு நல்லவர்களாகவும்,
அல்லாதார்க்கு அவர்களை ஒடுக்க வேண்டியிருத்தலின் நல்லவர்
போன்றவர்களாய் இருக்க வேண்டுமாதலின் 'நூலோர் வினையமும்' எனக்
குறித்தான்.  பகைவரிடமும் இன்முகமும் இன்சொல்லும் கொள்க என்றான்.

இந்தப் பாடலில் கீழ்க்கண்ட  குறட் பாக்களின் கருத்துக்கள்
உள்ளடங்கி இருக்கின்றன என்பது ஒப்புநோக்கத் தக்கது.

'குறள் :829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று

குறள் :830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்

குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

பகையுடைச்
சிந்தையார்க்கும் என்ற உம்மையால் யாவரிடமும் இன்முகமும் இன்னுரையும்
வேண்டும் என்பது பெறப்பட்டது.  பண்பு - எல்லோர் இயல்புகளும் அறிந்து
நடத்தல்.  'பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' (கலி. 143 - 8) என்ற
கலித்தொகையைக் காண்க.  அரசியல் அரங்கில் சூழ்ச்சி வழி பேணுதல்
என்றும் உண்டு போலும்.  அறத்தின் நாயகனாகிய இராமனே பேசுகிறான்
என்பதை எண்ண வேண்டியுள்ளது.  பகையுறு சிந்தையாரிடமும் பண்போடு
நடக்கச் சொல்லும் பெருமானே நூலோர் வினையம் பேணச் சொல்கிறான்!