குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
பரிமேலழகர் உரை
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.).
மணக்குடவர் உரை
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
மு.வரதராசனார் உரை
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
பொருள்
மறத்தல் - maṟa- 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
மறவற்க - மறக்காதே
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.) அல்லாதவர் ; aṟṟār n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).
கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறவற்க - துறக்க வேண்டாம்
துன்பத்துள் - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
உள் - உள்ளே ; உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.
ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்
ஆயார் - ஆயாதவர்; நுணுகாதவர், வருந்தாதவர்,
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை
முழுப்பொருள்
நட்பை பற்றி இரண்டு முக்கிய செய்திகளை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார்
1. அப்பழுக்கு அற்ற அறிவிலும் ஒழுக்கத்திலும் சான்றோர்களின் கொண்ட நட்பை ஒருநாளும் மறவாதே. ஏன் மறக்க கூடாது என்றால்? சான்றோர்களிடம் பெற்ற அறிவும் பண்பும் அவர்கள் நம்மை எங்கிருந்தோ கண்காணிக்கிறார்கள் என்கிற ஐயம் அல்லது பொறுப்பு நம்மை தீவழியில் செல்லாமல் நல்வழியில் செல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும். சான்றோரிடம் நாம் பெற்றவை நமக்கு எல்லாக்காலத்திருக்கும் துணையாக தரும்.
2. நாம் மிக துன்பத்தில் இருக்கும் பொழுது நமக்கு உதவி புரிந்து துணையாக இருந்தோரிடம் உறவையும் நட்பையும் துறந்துவிடாதே. ஏனெனில் நாம் நன்றாக இருக்கும் பொழுது நம்மிடம் எல்லோரும் இருப்பார்கள். ஆனால் நமக்கு ஒரு துன்பம் என்றால் பெரும்பாலானோர் நம்மை விட்டு விலகி இருப்பர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மிடம் இருந்துக்கொண்டு நமக்கு துணையாக இருந்தவரே உண்மையான நட்பு எனலாம். மேலும் அன்று அவர் நமக்கு உதவி புரியவில்லை என்றால் என்று நாம் அன்றே வீழ்ந்து மடிந்திருப்போம். ஆதலால் அவரை எந்நாளும் துறக்காதே. அவர் செய்த உதவியையும் துணையாக இருந்ததையும் துறக்காதே.
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்கள் பலர் இவ்வுலகில் இருப்பர். அவர்கள் நம்முடனே இருப்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரிடம் பெற்றவை நமக்கு உடன் வந்து துணை புரியும். ஆனால் உண்மையான நட்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலால் அவர்களை துறப்பது அறிவில்லாத்தனம் எனலாம். அவரைப்போல் ஒருவரை மீண்டும் கண்டடைய இன்னொரு துன்பம் வந்தால் தான் கண்டடைய முடியும்.
சான்றோரை துறக்கலாமா? இல்லை. திருவள்ளுவர் அப்படிக் கூறவில்லை. அவர் மறவற்க என்று ஒரு அறிவுரையாக தான் கூறுகிறார். ஆனால் துன்பத்தில் இருக்கும்பொழுது துணையாக இருந்தவனை மறவாதே என்று கட்டளையிடுகிறார் திருவள்ளுவர்.
இராமயணத்திலே ஒரு காட்சி: தன்னைச் சரணடைய வருகின்ற விபீடணனைப் பார்த்து இராமன் இவ்வாறு கூறுகிறான்.
குகனொடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் றுந்தை!
குகனோடு ஐவராகி, சுக்ரீவனோடு அறுவராகி, பின்னர் விபீடணனோடு எழுவாரானதாக இராமனின் கூற்று. நட்பெனின் சிறிதளவு உதவ தயங்கினாலும், தன்னுடைய தம்பியரெனில் அவர்களுக்கு உதவாமல் இருக்க இராமனால் முடியுமா? இல்லையெனின் தம்பிகளாக ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான் முடியுமா? இராமனுக்கு துன்பமான காட்டு வாழ்கையிலே குகன் செய்த உதவியும், சுக்ரீவனுக்கு இராமன் அவனுக்கு சொந்தமான நாட்டை மீட்டுக்கொடுத்த உதவியும், நட்பு தவிர உறவென்னும் சிறப்பினாலல்லவா? சரணம் என்று வந்தவனை, சற்றும் பகைவனின் தம்பி என்று ஐயம் கொள்ளாமல், இராமனால்தான் ஏற்றுக்கொள்ளமுடிந்ததென்றால், மாசற்ற குணத்தினாலன்றோ?
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'மருவுக மாசற்றார் கேண்மை” (குறள் 800)
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788)
பரிமேலழகர் உரை
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.).
மணக்குடவர் உரை
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
மு.வரதராசனார் உரை
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நெருக்கடியில் உதவிய நல்லோரை என்றும் மறவாதே.
Not only this. But for every research you have put for each 'kural' thank you!
ReplyDeletegreat work
நன்றி
Delete