Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - நெல்லை கண்ணன். Show all posts
Showing posts with label W - நெல்லை கண்ணன். Show all posts

இலமென்று அசைஇ இருப்பாரைக்

குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
 'இலம்!' - இல்லம்; இல்லறம் வறுமை
இலம்பை - ilampai   லம்பை, s. poverty, தரித்திரம்; 2. vexation, affliction, இடுக்கண், இலம்பைப்பட, to be distressed.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அசை - செய்யுள்உறுப்புகளுள்ஒன்று; இசைப்பிரிவு; ஆடுமாடுகள்மீட்டுமெல்லும்இரை; அசைநிலை செயலறவு (ceyal-aṟavu   n. id. +.Prostrate condition, helplessness; வலியின்மை.  ) சுவடித்தூக்கு; தொங்குதூக்கு.
அசை - acai   VI. v. t. move, shake, agitate ஆட்டு; v. i. சோம்பு. be idle.
அசை - acai   II, v. i. move, stir, shake, ஆடு; 2. be active, walk, உலாவு; 3. be slow, சோம்பு; 4. be agitated, disturbed, கலங்கு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

அசைஇ - தம்மிடம் விட்டு நகராது சோம்பி

இருப்பாரைக் - இருப்பவர்களை

காணின் - கண்டால்

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

நிலமகள் -  the earth as a goddess, பூமி தேவி.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.

நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).  

முழுப்பொருள்
ஒருவனுக்கு வறுமை (தரித்திரம்) என்பது வாழ்நாளில் வரக்கூடும். ஆனால் அந்த வறுமையின் துன்பத்தில் உழன்று சோம்பல் கொண்டு அதனை சுகமென்று வாழ்வோர் சிலர் இருப்பர். அந்த சுகமே சொர்க்கம் என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வார்கள். தன் வாழ்வின் நோக்கம் என்ன என்று உணராமல் இருப்பர். ஒருவேலையும் செய்யாது நேரத்தை வீண் அடிப்பர். இத்தகையவர்களை கண்டு பூமி திருமகள் சிரிப்பாள். ஏளனம் கொள்வாள்.

ஏனெனில்? எவ்வேலையும் யாரும் கொடுக்கவில்லை என்றாலும் உழவு என்னும் தொழிலை எப்போதும் கொடுக்க நிலமகள் காத்து இருக்கிறாள். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் உழுது விதைத்து அறுத்து உண்பதே உயிர்வாழ்கை என்ற உண்மையை உணரவேண்டியது தான். உழவு செய்து வரும் உணவுப்பொருளில் உணவு மட்டும் அல்ல பொருளும் ஈட்டலாம்.

இக்குறள் சோம்பலை என்று பற்றியப் போல் தெரிந்தாலும், இவ்வுலகத்தில் பிறருக்கு உணவு கொடுக்கும் உழவு தொழிலுக்கு எப்பொழுது ஆட்கள் தேவை என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும். (உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.).

மணக்குடவர் உரை
பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா உரை
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

  சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
  சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
  தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
  தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
  தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
  திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
  ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
  உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள் 

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்

குறள் 1007
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
அற்றார் - aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).  

அற்றார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கும், மக்கள் சேவை புரிகிறவர்களுக்கும்

ஒன்று - ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாதான் - செய்யாதவன்; தேடாதவன்; உதவாதவன்

செல்வம்- கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

மிகு - miku   மிகு¹-. adj. Great; பெரிய.--part. A word of comparison; ஓர் உவமவுருபு.(தண்டி. 33.)

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெற்றாள் - பெற்ற பெண்

தமியள் - திக்கற்றவள்; தனியாயிருப்பவள்.
மூத்தற்று - முதுமை அடைந்தார்போலாம் (பயனிலா இளமையாய் கழிந்ததுபோலாம்)

பெண்கள் பற்றி
'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்றார் பாரதியார். 'ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்வியறிவு பெறுவதற்கு சமம்' என்றார் நேரு. 'சமூகத்தில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள் பெண்களாலே' என்றார் மகாத்மா காந்தி.

பெண்களின் பணிப் பங்கு : பெண் என்பவள் தன் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளை கடந்து வருகிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என, பல பரிமாணங்களை எடுத்து வருகிறாள். குழந்தையாக இருந்து நடை பழக ஆரம்பித்த காலத்திலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்து விடுகிறாள். சிறு வயது முதலே வீட்டை சுத்தம் செய்வது, வாசலில் கோலமிடுவது என, சிறிது சிறிதாக தன் பணிப் பங்கினை உயர்த்துகிறாள். 

அன்புள்ள செல்ல மகள் : பருவம் அடைந்த பிறகு பெண்மைக்கே உரித்தாகிய அழகையும், தாயின் அரவணைப்பையும் பெறுகிறாள். பெற்றோரின் அன்பைத் தட்டிச் செல்லும் செல்ல மகளாகவும், அண்ணனின் கட்டளைக்கு கட்டுப்படும் அன்புத் தங்கையாகவும், தாத்தா பாட்டிக்கு மரியாதை செலுத்துவதில் செல்ல பேத்தியாகவும் மாறுகிறாள். வீட்டிற்கு வரும் அனைவரையும் உபசரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்துகிறாள். வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாக செய்து, தனக்கே உரிய முத்திரையை பதிக்கிறாள்.

புகுந்த வீட்டு உறவுகள் : குடும்ப கஷ்டத்தை உணர்ந்து பெற்றோரின் கடன் சுமைகளை தன் தோளில் இளவயதிலேயே சுமந்து வாழ்கிறாள். இன்னும் பல பெண்கள் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். புது உறவு முறைகள் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டுக்கு செல்லும் தருணம் வாழ்வில் எந்த பெண்ணாலும் மறக்க முடியாத ஒன்று. அப்பா, அம்மா உடன்பிறந்தோர் என, அத்தனை உறவுகளையும் விட்டு திருமணம் மூலமாக தனக்கு கிடைக்கும் புது உறவுகளை அனுசரித்து செல்கிறாள். அறிமுகமில்லாத நபர்களை மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் என, தன் வீட்டு உறவுகளாக ஏற்றுக்கொண்டு, தன் கணவரின் சொந்தங்களை தன் சொந்தங்களாக எண்ணுகிறாள். தன் பிறப்பின் அங்கீகாரமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அக்குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்து சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறாள். கணவனின் குடும்ப பாரத்தை குறைப்பதற்காக தானும் வேலைக்குச் செல்கிறாள்.

பெண் நடமாடும் கடவுள் : வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு, அலுவலக சுமை என, அனைத்தையும் சவாலாக ஏற்று சாதனை புரிகிறாள். வேலை நாட்களில் பம்பரமாக சுழன்று தன் கடமைகளை நிறைவு செய்கிறாள். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் அக்கறை காரணமாக, சமையலில் தனிக் கவனம் செலுத்தி குடும்ப ஆரோக்கியத்தை நிலைநாட்டுகிறாள். தன் உடல்நிலை சரியில்லாத காலத்திலும் ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் உழைக்கிறாள். இப்படி பல சொல்லப்பட்ட, சொல்லப்படாத நிலைகள் மாறுதல்கள் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இருக்கின்றன.இப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் 'லெமூரியா' கண்டத்தோடு அழிந்து விட்டார்கள் என்று எண்ண வேண்டாம். நம் வீட்டிலும், நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக அங்கீகாரம் நம் நாட்டைக் கூட தாய்நாடு என்றும், தாய்மண் என்றும் தான் கூறுகிறோம். நம் மொழியையும் தாய்மொழி என்று தான் அழைக்கின்றோம்.பெண் என்பவள் வற்றாத அன்பையும், உழைப்பையும் குடும்பத்திற்காக வழங்குபவள். அதனால் தான் வற்றாத  ஆறுகளுக்கும் நதிகளுக்கும் கங்கா, யமுனா, கோதாவரி, காவிரி என்று பெண்களின் பெயர்களை வைத்துள்ளனர். யாசகம் கேட்டு வீட்டிற்கு வருவோரும் அழைப்பது 'அம்மா தாயே' என்றுதானே. உயிரை படைக்கும் கடவுளான பிரம்மனே தன் வேலையை ஒரு பெண்ணிற்கே கொடுத்திருக்கிறார். ஆகவே பெண்களும் நடமாடும் கடவுள் தான்.

பெண்கள் குடும்ப பொக்கிஷம்: கணவன், மனைவியிடையே ஒரு ஞாயிற்று கிழமையில் போட்டி. தன் வீட்டிற்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது என்றும் பேசக் கூடாது என்றும். போட்டி ஆரம்பித்தது கதவு தட்டப்பட்டது. குரலோ கணவனின் பெற்றோரிடமிருந்து. கணவன் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக கதவை திறக்கவுமில்லை, பேசவுமில்லை. அவர்களும் சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. இப்போது குரல் மனைவியின் பெற்றோரிடமிருந்து. ஆனால், மனைவி போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என்று ஓடிச்சென்று கதவைத் திறந்துவிட்டு தன் பெற்றோரை உள்ளே அழைத்து உபசரித்தாள். கணவனுக்கோ முதலில் வெட்கம்; பின்பு மெதுவாக புன்னகை செய்து விட்டு கூறினான், 'இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின் எனக்காக கதவு திறந்துவிட எனக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்' என்று பெருமிதத்துடன் கூறினான்.பெண் சிசுக் கொலையைத் தவிர்த்துவிட்டு, பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற கவலையை அகற்றி, பெண் பிள்ளைகளை போற்றி வளருங்கள். திருமணத்திற்கு பின் தன்னால் முடிந்த உதவியை தன் பெற்றோருக்கு, கணவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்பவள் அவள். பெண் பிள்ளை ஒவ்வொரு குடும்பத்தின் அடையாளம். பெண் பிள்ளை நம் குடும்பத்தின் பொக்கிஷம்.

முழுப்பொருள்
ஒரு பெண் என்பவள் பல பரிமாணங்களை - மகள், பேத்தி, தங்கை, அண்ணி, மனைவி, இல்லத்தரசி, தாய், பாட்டி - எடுக்கிறாள். அத்தகையவள் ஒவ்வொரு பரிமாணத்திலும்  குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பலவகையில் தொண்டாற்றுகிறாள். அதனாலே அவள் பெருமை அடைகிறாள். ஆனால் அத்தகையவள் இத்தகைய எல்லா நல்ல குணங்களையும் மிகுதியாகவும் பெற்றும் கூட அதனை வெளிப்படுத்தாமல் தனிமையில் தன்னை ஆழ்த்திக்கொண்டு திக்கற்று இருந்தால் அவள் முதுமையை மட்டுமே இறுதியில் அடைகிறாள். அவள் என்றும் மகள், தாய், தங்கை, இல்லத்தரசிப் போன்ற பரிணாமங்களை அடைவதில்லை. முதுமை என்ற சொல்லுக்கு பழமை என்ற பொருளும் உண்டு. பழமை என்றால் சிதைவு என்ற பொருளும் உண்டு. அதாவது இவ்வுடம்பு பிறந்து வளர்ந்து சிதைவடைந்து மரணம் ஏய்துகிறது.

அதுமட்டும் இன்றி அமுதூட்டும் அன்னை மட்டும் அல்ல அவள். அன்பு ஊட்டும் அன்னையும் அவளே. ஆதலால் பெண்கள் இல்லை என்றால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றே சொல்லலாம். அத்தகைய பெண் இல்லை என்றால் இந்த சமூகமே சீர்கெட்டுப்போகும்.

ஆதலால் தான் திருவள்ளுவர் பெண்களை இக்குறளில் உவமையாக பயன்படுத்துகிறார். பெண்ணை போக பொருளாக இங்கே பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைப்பது தவறாகும்.

இப்போது குறளுக்கு வருவோம். எவன் ஒருவன் பொருள் இல்லாதவர்களுக்கு, பொருள் தேவையாக இருப்பவர்களுக்கு (அதாவது சில நேரம் நல்ல வேலைக்கு போவார்கள். ஆனால் அவர்களுடைய வருமானம் தங்கள் பிள்ளைகளின் குறைந்த செலவிலான படிப்பிற்குக் கூட போதாது. அப்போது பொருள் (பணம்) தேவையாக உள்ளது), பிறருக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகளுக்கு எவ்விதத்திலும் உதவி செய்யாமல் இருக்கிறானோ அத்தகையவரிடத்தில் இருக்கும் செல்வம் என்பது எல்லா குணங்களும் பெற்ற ஒரு பெண் பிறந்து முதுமையை மட்டுமே அடைந்து பயனில்லாது சிதைந்துப்போன உடம்பு போன்றதாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி¢ தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

அழகுக்கே அழகாகும் அழகுப் பெண்ணாள்
அவள் போல அழகில்லை ஊரில் எங்கும்
உளம் கொண்டோர் மண வாழ்வில் பெண்ணவளை
உரிமை கொண்டு வாழ வைப்பார் யாருமில்லை
கிழமாகி அவ் வழகு அழிந்த தாங்கு
கேட்பதற்கு நாதியின்றி ஒழிந்ததது
வளம் கொண்டோர் தம் பொருளை மறைத்து வைத்து
வழங்காமல் அது அழிந்து ஒழிந்தாற் போல

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

குறள் 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்து -  பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

தன்கண்  - தன்னுடைய கண்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணுவானைக் - நாணுபவன் - வெட்கப்படுகின்றவன், பயபடுகிறவன், அஞ்சுகிறவன்

கொடுத்தும் - koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

வேண்டும் - வேணும்; vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
நாம் ஒவ்வொருவரும் சில சமயம் யாரிடம் நட்புக்கொள்வது என்று யோசனை செய்யும் காலம் வரும். நம்முடைய நடப்பு நட்புகள் நல்ல நட்புகளல்ல என்று தோன்றும். வாழ்விற்கு நல்ல நட்புகள் தேவை என்று தோன்றும். யார் நல்ல நண்பர்கள்? அவர்களிடம் எப்படி உறவுகொள்வது?

நல்ல குடியில் (குடும்பத்தில்) பிறந்து தன் குடும்பத்தின் புகழ் உயர்வதற்கு தானும் ஒரு காரணமாய் அமைவோர் நல்ல மனிதர்கள். அத்தகையவர்கள் எத்தகைய தீய வழிகளிலும் அறமற்ற வழிகளிலும் தன்னை ஆட்கொள்ளமாட்டார்கள் ஏனெனில் அவர் பழிக்கும் குற்றத்திற்கும் அஞ்சி வெட்கப்பட்டு செய்யாமல் நின்றுவிடுவார்கள். சோம்பல் தேக்கம் என்று எதிலும் திளைக்கமாட்டார்கள். அதேப்போல தன்னுடைய நட்புகள் தீய வழிகளில் ஈடுபடவும் விடமாட்டார்கள். ஏனெனில் அப்படி விட்டால் அதுவர்களுக்கு பழியை சேர்க்கும் - தன்னை சுயநலவாதியாய் தோற்றுவிக்கும்.

ஆதலால் அத்தகைய நல்ல மனிதர்களிடம் எப்பொருளை கொடுத்தாவது அவர்களிடத்தில் நட்புக்கொள்ள வேண்டும். இங்கே பொருள் கொடுக்க வேண்டும் என்றால் பொன் பணம் என்ற அர்த்ததில் இருக்காது ஏனெனில் அதனை நற்குடியில் பிறந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். இது கண்டிப்பாக நல்ல மனிதர்கள் சிறுமைகளிடம் வெறுக்கும் கீழ்மைகளை விட வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் இருக்கும். கீழ்மைகளை விடுவதே நட்பிற்கான விலையாக ஒருவர் கொடுக்க வேண்டும். நல்லது தானே?! அதுமட்டுமின்றி அதே நண்பர் ஒரு இடரில் சூழ்ந்துள்ளப் பொழுது அவருடன் உடனிருந்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையேல் துன்பத்தின் போது விலகினால் அந்த நட்பு நீடிக்கும் என்று சொல்லமுடியாது. 


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.).

மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  சரியான தாய் தந்தை பெற்றெடுக்க
  சத்தியமே வாழ்க்கையெனக் கொண்டு நிற்க
  விரிகின்ற மனத்தாராய் வாழ்ந்து நிற்கும்
  வெற்றியெல்லாம் நல் வழியில் பெற்று நிற்கும்
  தெளிவான நல்லவரை நமைக் கொடுத்தும்
  தேர்ந்து கொள்ள வெண்டும் நல்ல நட்பாய் இங்கு

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

குறள் 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
அழிவினவை -அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்

அழிவு கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக

அழிவின் - அழிவில் இருந்து

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம்; புலவர்; நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு [pronoun (அவ்) plural of அது, they, those things.]; அப்பொருள்கள்.

நீக்கி - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

உய்த்து - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.

ஆறு உய்த்து -  நல் அற வழியில் (நண்பனை) செலுத்துதல், உண்மை நிலை எடுத்து உரைத்தல், தீயவழியின் பின்விளைவுகளை எடுத்து உரைத்தல், அறவழியின் மாண்புகளையும் எடுத்து உரைத்தல்

அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அழிவின் கண் - (நண்பன்) அழிவின் பாதையில் செல்கிறான என்ற கண்ணோட்டம் கொண்டு, அல்லது விதியால் வரும் துன்பங்கள்

அல்லல் - துன்பம்

உழப்பு - முயற்சி, ஊக்கம்; வருத்தம்; பழக்கம்; வலிமை.

உழப்பது - உழப்புதல் - மழுப்புதல்; குழப்பிப்பேசுதல்; போலிவாதஞ்செய்தல்; காலங்கடத்துதல்

ஆம் - அழகு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
தன்னுடைய நண்பர் தீய வழிகளில் சென்றால் அவரை அவ்வழிகளில் செல்லாது தடுக்க வேண்டும். அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டும். தடுமாறி விழும்பொழுது அவருக்கு நல் அறம் புகட்டி அவரை நல்வழியில் மீட்க வேண்டும். (குறிக்கோளை அடைய தேவையான பாதை தெரிந்தால் பயணம் எளிதாகும் ஊக்கம் கிடைக்கும்). அது மட்டும் இன்றி, அந்த நண்பருக்கு ஊழினால் அல்லது எதிரிகளால் துன்பங்கள் வரலாம். அந்த நேரத்தில் அவரிடம் இருந்து விளகிக்கொள்ளாமல், அவருடையத் துன்பத்தைப் புரிந்துக்கொண்டு அவரின் மீதுக் கண்ணோட்டம் (தாட்சீனியம்) கொண்டு அவருக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். இப்படி அவருடைய வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டு, துன்பத்தில் இருந்து மீண்டு வர வழி செய்து, நண்பருக்கு வலிமை சேர்க்க வேண்டும். இதுவே நட்பாகும். 

சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” (கம்ப.சடாயு உயிர் 13) என்று கம்பர் கூறுவார். 

“சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.

“அறமன்னானுடன் எம்பி யன்பினோ
டுறவுன் நாவுயி ரொன்றை யோவினான்
பெறவொண்ணாததோர் பெற்றி பெற்றவற்
கிறலென் னும்இதின் இன்பம் யாவதோ” (கம்ப.சம்பாதி.45)

முழுப்பொருள் 2
நண்பன் என்பவருக்கும் ஒரு சில இலக்கணங்கள் உண்டு என்று சொல்கிறார் திருவள்ளுவர். 
முதலாவதாக நண்பரின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அதாவது நண்பர் ஒழுக்கம் அல்லாத அறம் அல்லாத நன்மை அல்லாத செயல்களில் செல்கிறார் என்று ஆய்வு செய்து கொண்டு இருத்தல் வேண்டும். ஒரு வேளை நண்பன் ஒழுக்கம் அல்லாத செயல்களில் சென்றால் அது தவறு எடுத்துரைக்க வேண்டும். இதனால் எனக்கென்ன என்று இருக்க கூடாது. நண்பனை நல்வழியில் மறுபடியும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நண்பன் நட்பையே முறித்தாலும் கவலை இல்லை என்று எண்ணி நண்பனை நல்வழியில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக என்னதான் கவனமாக இருந்தாலும் நண்பருக்கு துன்பம் நேர வாய்ப்பு உள்ளது. அப்படி துன்பம் நேர்ந்தால் அத்துன்பத்தை கண்காணித்து அதில் இருந்து வெளிவர கூட இருந்து ஒத்துழைத்து மீண்டு வர ஒரு தோள் கொடுத்து நண்பனுக்கு வலிமை (உழப்பது) சேர்ப்பதே சிறந்த நட்பு.

மேலும்: அஷோக் உரை
சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” என்று கம்பர் கூறுவார். “சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.

சொந்த உதாரணம்
என் வாழ்வில் 2002-2005 ஆண்டுகளில் பல திரைப்பட பாடல் ஒலிப்பதிவு களஞ்சியத்தை கட்டுக்கொண்டு இருந்தேன். அவற்றில் பல பாடல்களை கேட்ககூட மாட்டேன். ஆனால் அந்த சமையத்தில் என் நண்பன் என்னை கண்டித்தான். இது என்ன வீண் வேலை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஒரு சினிமா பார்கிறாய் ரசிக்கிறாய். அத்துடன் முடிந்துவிட்டது. நல்பாடல் என்றால் சேகரித்து வைத்துக்கொள். ஆனால் வரும் படம் எல்லாவற்றை உடனுக்குடன் சேகரித்து விநியோகிப்பது உனக்கு வேண்டாத வேலை. 

வாழ்வில் நேரம் பொன் போன்றது ஆகும். வாழ்வில் முன்னேற வேலையில் முன்னேற மேற்ப்படிப்பு படிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசி. அல்லது உன்னை மேம்படுத்தும் கலைகளில் அல்லது புத்தகங்களில் உன்னை ஆழ்த்திக்கொள். அதுவே சிறந்தது என்று அறிவுருத்தினான்.

அன்று அந்த எச்சரிக்கை என்னை மேம்படுத்தியது. அன்று முதல் நான் புத்தங்கள் படிப்பது மேற்ப்படிப்பிற்கு படிப்பது வயலின் கற்றுக்கொள்வது என என்னை ஆழ்த்திக்கொண்டேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது.

பரிமேலழகர் உரை
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(¢நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.

மு.வரதராசனார் உரை
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழிவினவை நீக்கி-நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; ஆறு உய்த்து-நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; அழிவின்கண் அல்லது உழப்பது-தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; நட்பு-ஒருவனுக்கு நட்பாவது.

ஆறு என்னும் பொதுப்பெயர் நெறி, வழி என்பனபோல நல்லாற்றைக் குறித்தது. 'ஆறுய்த்து' என்றதனால், 'அழிவினவை நீக்கி' என்பதில் 'அழிவினவை' தீயநெறிகளைக் குறித்தமை அறியப்படும்.

"இனி, நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினுஞ் செல்வ வழிவினும் வந்த துன்பங்களென்றும், 'அழிவின்க'ணென்பதற்கு யாக்கையழிவின்கணென்றும் உரைப்பாருமுளர்." என்று பரிமேலழகர் கூறியுள்ளது நன்மறுப்பாகும்.


பதினெண் கீழ்க்கணக்கு - பழமொழி
உழந்ததூஉம் பேணா(து) ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்பச் சாணீளு மாறு.

(சொ-ள்.) தழங்(கு) கண் முழவு இரங்கும் தண் கடல் சேர்ப்ப - ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே!, உழந்ததும் பேணாது ஒறுத்தமை கண்டும் - தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல் - அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல், சாண் குறைப்ப - சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க, முழம் நீளு மாறு - அது முழம் நீளமாக நீளுவது போலும்.

(க-து.) தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.

(வி-ம்.) 'முழல் நீளுமாறு' என்றது முன்னினும் மிக்க தீமையையே புரிவார் என்பதைக் கருதி. 'முழம் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பதைப் போன்று மொழி மாற்றிப் பொருள்கொள்ள வேண்டுதலின், மொழிமாற்றுப் பொருள்கோள். தழங்குகண், தழங்கண் என வந்தது விகாரம். 'உழந்ததும்'என்றது,

‘அழிவி னவைநீக்கி ஆறுய்த்துஅழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு'என்றதைக் கருதி,'முழங் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது பழமொழி.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  தவறான வழிகளிலே சென்றழிந்து
  தடுமாறி வீழ்வாரைத் தான் தடுத்து
  அவமான உண்மை நிலை எடுத் துரைத்து
  அறமான நல்வழியில் அழைத்துச் சென்று
  நலமாக வாழ்கையிலே துன்பம் வந்தால்
  நண்பருடன் அத்துன்பம் பகிர்ந்து கொள்ளல்
  குலமான நண்பர்களின் குணமேயாகும்
  கொண்ட அந்த நட்பேதான் உண்மையாகும்

உனக்கு உறுதுணையாக .....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

உனக்கு உறுதுணையாக .....!!!
தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!

உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா ....!!!

நன்றி:  Interesting Tamil Poems
நட்பின் கடமை 

நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.


அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?


நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்


நன்றி: கூடா நட்பு வாழ்க்கையை சீரழிக்கும் (பணிப்புலம்)
நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.  இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன. 

வாச மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் விழ்ந்த நறுமண மலரும் சாக்கடையின் வாசத்தையே  பெற்று விடுகின்றது. ஒருவருடைய குணாதிசயங்களை அறிய அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்களை வைத்து சுலபமாக கணித்துக் கொள்ள முடியும் என்பதும், ஒருவருடைய பொருளாதார நிலையைக் கணிப்பிட அவர் சந்தையில் வாங்கும் பொருட்களை வைத்து கணித்துக் கொள்ள முடியும் என்பதும் பழைய பழமொழிகளாகும். விளக்கமாக கூறுவதாயின் ஒருவரின் அகத்தின் அழகை முகம் காட்டுவதுபோல் அவரின் குணத்தின் அழகை நண்பர்களின் நடத்தையில் கண்டு கொள்ள முடியும் எனக்கூறலாம்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவன் “அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு என அறிவுறுத்துகின்றார்.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். ஒரு நல்ல நண்பனிடம் இருந்து நல்ல பல விடயங்களை கற்றுக் கொள்ளலாம் அதேபோல் தீய நண்பர்களிடம் இருந்து தீய பழக்க வழக்கங்களையும் தீய குணங்களையுமே கற்றுக் கொள்ளலாம்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விடயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல, நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக, இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன், அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள், அதற்காக நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

”நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே” என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டுகொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கின்றதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்ப வனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல. 

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாக அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,

அன்னை திரேசாவின் வாழ்வில்....
அன்னை திரேசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியரில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என திரேசாவின் தாய் முடிவெடுத்தார்.

ஒருநாள் அவர் திரேசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய அப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட திரேசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போன திரேசாவை தாய் நிறுத்தினார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி தாய் கூறினாள். அதன்படியே திரேசாவும் நல்ல பழங்களாகத் தெரிந்து  இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார், திரேசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.

“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என திரேசா கேட்டார்.

“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா” என்றார் தாய். திரேசா அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் திரேசாவை மறுபடியும் அழைத்தார். அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை திரேசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார்.

அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திரேசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் திரேசாவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்... பார்த்தாயா? ஒரு அழுகிய அப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். ஒரு மனிதனைக் கொல்வதற்கு ஒரு துளி விஷம் போதும்.

எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.  உடுக்கை இழந்தவன் கைபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நல்ல நப்புக்கு இலக்கணமாகும். 

மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது. பணக் கஷ்டமாயிருக்கு உதவி தேவையாய் இருக்கிறது, என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கிய தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் “மட்டுமே” உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்றார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல, அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான”  ஒரு செயலைச்செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். 

போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்” என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள், தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகு வதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்! நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.

கூடா நட்பு தூக்கு மேடைக்கு வழிகாட்டும். ஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அங்கணம் - சேறு; முற்றம் இருதூண்நடுவிடம்; சாக்கடை மதகு நீர்த்தாரை
அங்கணத்துள் - அங்கணத்திற்குள்; சேறு, சாக்கடை போன்ற நீர்த்தாரையினுள்

உக்க - ukku-   5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.  
அமிழ்து - உணவு; ஆவின்பால்; நெய் மோர் நீர் மழை தேவருணவு வேள்விப்பொருள்களில்மிஞ்சியவை; இரவாதுவந்தபொருள்; நஞ்சுபோக்கும்மருந்து; இனிமை அழிவின்மை; வீடுபேறு நஞ்சு பாதரசம்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. 
அற்றால் - போன்றது
தம் - tam   part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).  
கணத்தர் - கணத்தார் - ஊர்க்காரியநிருவாகிகள்.
அல்லார் - அல்லாதவர்கள்
முன் - முன் நின்று
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
நாம் ஒரு தகவலை அல்லது தர்க்கத்தை அல்லது அவிப்ராயத்தை பற்றி மற்றவரிடத்தில் பேசுகிறோம் அல்லது ஒரு குழுவிலே விவாதிக்கிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த தகவலை/ தர்க்கத்தை திறந்த மனதுடன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் நபர்களை நம் முன்னே பெற்று இருக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்துக்கொள்ளகூடிய அறிவும் ஆற்றலும் உடைய கற்றோரிடத்தில் தான் கூற வேண்டும். அப்படி அல்லாமல் கற்றோர் அல்லாதவரிடத்திலும் இதனை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் எண்ணமும் இல்லாதவரிடம் உரையாடிக்கொண்டு இருப்பது என்பது நம் வீட்டின் முற்றத்தில் உள்ள சாக்கடையில் (தனக்கும் பிறருக்கும் பயன் படக்கூடிய) அமிர்தத்தை கலப்பது போல் ஆகும். அந்த அமிர்தம் வீண் தான் ஆகும். அப்படி கலப்பது நமக்கும் அவப்பெயரை விளைவிக்கும். ஏன் என்றால், நம்மை பார்க்கும் பிறர், ஏன் இப்படிபட்ட கற்றோர் ஒரு மூடரிடம் போய் இதெல்லாம் சொல்லி தன்னுடைய நேரத்தையும் அறிவையும் வீண் செய்துக்கொள்கிறார் என்று ஏசுவார்கள். அது மட்டும் இன்றி நாமும் இந்த நேரம் விண் ஆகிவிட்டதே என்று வருந்துவோம்.

எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 

தகுதியில்லாரிடத்து சிறந்த பொருளைச் சேர்ப்பதை பலரும் கூறியுள்ளனர். “புல்லிடை உகுத்த அமுதேயும் போல்” என்பார் கம்பர், மந்தரைப் படலத்தில். “கல்வியினாய கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்” என்கிறது பழமொழிப் பாடல். நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறு பிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்; அன்றியும், ஒரு மலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற் செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும் என்கிறது கீழ்வரும் நாலடியார் பாடல்.

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  அறிவதற்கு முயலாத மூடர் முன்னே
  அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
  அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
  அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
  அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
  அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
  அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
  அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நால்வர் ஐவராகக் கூடிப் பேசும் பழக்கமுள்ளவர்கள் என்றால் நீங்கள் குழுமிப் பேசுவது சபை கூடிப் பேசுவதற்கு நிகரானது. பெருத்த சபை கூடி அங்கே நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு எப்போதும் அமையாது. குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள், விருந்தாடிச் சென்றவிடத்தில், அலுவலகத்தில், விட்டேத்தியான விடுமுறை தினங்களில் நாம் பலரோடு கூடியிருக்கிறோம். உலகப் பொருள் முதல் சொந்த இடர்வரை அனைத்தைப்பற்றியும் தொட்டுப் பேசிச்செல்வோம். உறவுகளால் நண்பர்களால் அல்லது மற்ற அந்நியர்களால் கூடும் சபையில் நீங்கள் ஒன்றை விவரித்துச் சொல்லும்போது உங்களுக்கே புரிபடாத ஒன்றின்மீது புதிய திறப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சபையில் நீங்கள் அங்கத்தவர் என்றால் கொடுத்து வைத்தவர். 

என் பள்ளித் தோழன் சந்திரமோகன்பற்றி முன்னர் எழுதிய பதிவுகள் சிலதில் கூறியிருக்கிறேன். எதைப்பற்றியும் அவனிடம் சொல்லலாம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நம் பிரச்சனையின் வேர் என்னவென்று நமக்கே புரியும்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிடுவான். நான் பணிக்குச் செல்லத் தொடங்கிய புதிதில் ‘ஒரு வீடு கட்ட வேணும்டா’ என்று அவனிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன். ‘வீடு கட்டனும்னா என்ன பண்ணனும் தெரியுமா ?’ என்று திருப்பிக் கேட்டான். நான் விழித்தேன். ‘முதல்ல ஒரு இடத்த வாங்கனும். கோவணத்தூண்டு எடமானாலுஞ் சரி. அதை வாங்கிப் போட்டுடனும். எடத்தை வாங்கிப் போட்டுட்டா எப்ப வேணாலும் வீட்டக் கட்டிக்கலாம். சவுரியப்படறபோது ஒவ்வொரு செங்கல்லா அடுக்கி மெதுவா வீட்டக் கட்டு. யாரு கேட்பா ?’ என்றான். அவன் சொன்ன கணத்தில் எனக்கு எல்லாம் விளங்கியது. உடனடியாக மனையொன்றை வாங்கினேன். மற்றவை எல்லாம் தானாய்க் கனிந்தன. 

எங்கள் இலக்கிய நண்பர்களுக்குள்ளே ஓர் அருமையான சபை இருக்கிறது. தமிழினி பதிப்பக எழுத்தாளர்கள் அதில் அங்கத்தவர்கள். நண்பர் க.மோகனரங்கன் அக்குழுவில் கட்டாயம். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் இறுதியாக என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். எதிர்பாராத ஒரு திசையிலிருந்து தம் தரப்பைச் சொல்லுவார். ஆயிரம் பக்கங்களுக்கு எழுதுவது எப்படி இயல்கிறது என்று ஒருமுறை கேட்டேன். ‘யானையை ஒரேயடியா முழுங்கப் பார்த்தா அது எப்பவும் முடியாது. ஆனா, கொஞ்சங் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டா சுத்தமாச் சாப்பிட்டுடலாம்’ என்றார். தினமும் முடிகின்ற அளவுக்கு எழுதிக்கொண்டிருப்பதில்தான் அந்தச் சாதனை உருவாகிறது. ‘ஈன்ற நாள்முதல் கன்றுக்குட்டியைத் தோளில் தூக்கிப் பழகிவந்தால் அது வளர வளர ஒரு காளையைத் தோளில் தூக்கும் பலம் பொருந்தியவர் ஆகிவிடுவோம்’ என்பார். 

அதனால்தான் ‘அவையறிதல்’ என்ற அதிகாரத்தையே திருவள்ளுவர் அமைத்திருக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தரம் மிக முக்கியம். எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம். 
 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல். 

அங்கணம் என்றால் சேறு, பண்ட பாத்திரங்களைக் கழுவுகிற வீட்டுப் பகுதி, சாக்கடை. 

உக்க என்றால் ‘பதமழிந்த, கெட்டுப்போன.’ 

அமிழ்து அற்றால் - அமிழ்தத்தைப் போன்றது.

தம் கணத்தார் - தம்மைப்போன்ற இணையான நிறையறிவு பெற்றிருப்பவர்கள்.

கோட்டி என்பதற்குக் ‘கூடியிருக்கும்போது பேசும் பேச்சு’ என்று பொருள். (அதனால்தான் தனியாகப் பேசுகின்றவனை அவனுக்குக் கோட்டி பிடித்துவிட்டது, கோட்டிக்காரன் என்கிறோம். அதாவது அவன் முன் சபை கூடியிருப்பதைப்போன்ற பிரம்மை தோன்றி பேசிக்கொண்டேயிருக்கிறான்.) 

தன்னையொத்த நிறையறிவு இல்லாதவர்கள் முன் பேசுவது சேற்றில் அமிழ்தத்தை ஊற்றி அதன் பதத்தை அழிப்பதைப் போன்றது.

அறனறிந்து மூத்த அறிவுடையார்

குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம்; தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
மூத்த - மூத்தோர்; முதியோர்; அறிஞர்
mūttōr   n. மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22). 2. Learned persons;பண்டிதர். (திவா.) 3. Ministers; மந்திரிமார்.(திவா.)
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
உடையார் - செல்வர் 
கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.
திறன் -  திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognise, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
தேர்ச்சி, v. n. investigation; 2. learning discernment; 3. progress, proficiency.
தேர்ந்துபார்க்க, to deliberate, to examine in the mind.
tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்; அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்; அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
வாழ்வை வாழ வகுக்கப்பட்டுள்ள நெறிகளை கூறும் பல நூல்களை, வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை கற்று தேர்ந்து வாழ்வில் அன்றாடும் பயின்று ஞானமாய் உடைய அறிஞர்களுடன் நட்பு பாராட்டி அவர்களுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுடைய திறமையை ஒழுக்கத்தை வலிமையை கற்று அதில் தேர்ச்சி பெற உத்தேசங்களை பெற்று அவற்றை வாழ்வில் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றவற்றை வாழ்வில் பயின்றால் நம் வாழ்வு மேம்பட ஏதுவாக இருக்கும். 

சம்பந்தர்.வீழிமிழலை(3) தேவாரம் ஒன்று, “சிறியவர் அறிவினில் மிக்க விருத்தரை அடிவீழ்ந்திடம் புகும்”. ஆட்சிமுறையிலே, தலைமைப் பொறுப்பிலே இருப்பவருக்கு அறிவில் சிறந்த அமைச்சர் குழாமும், பெரியோர்களின் நட்பும் தேவை என்பதை எல்லா ஆட்சிமுறைகளுமே இந்திய துணைகண்டத்தில் உணர்த்தியிருக்கின்றன. தம் கட்டிலில் களப்பின் காரணமாக அயர்ந்து தூங்கிவிட்ட மோசிகீரனாருக்கு, சாமரம் வீசிய மன்னன், அவரது புலமைக்கும் அறிவுக்கும், அதன்காரணமாக ஏற்பட்ட நட்புக்கும் மதிப்பு கொடுத்ததாலன்றோ அவ்வாறு செய்தான்?

”பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே” என்ற புறநானூற்றுப் பாடல் சொல்லும் கருத்து: வயதில் முதிர்ந்ததற்காக மட்டும் ஒருவரை வியப்பதும், சிறியவர் என்பதனால் அறிவில் சிறந்தோரை இகழ்தலும் இல்லாதது தமிழர் பண்பாடு. இதை “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

பெரியோரின் பெருநட்பைக் கொள்ளவேண்டியது ஏன்? அவர்கள் தாம் செய்யும் பிழைகளைப் பொறுப்பதால்தானே? தவிரவும் நல்லன உணர்த்தி நல்வழி நடத்துவதால்தானே? குற்றங்கள் தவிர்த்து நல்லன செய்வோர் அத்தகு நட்பு அடைதல் அரிதா? இல்லை, என்கிறது நாலடியார் பாடலொன்று.
“பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ – அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்”

மூதுரை பாடல் ஒன்றில் ஔவையார் பெரியோருடன் இணங்கி இருத்தலை பற்றி கீழ்கண்ட வாறு கூறுகிறார்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மூவிருகுற்றமும் முறைமையின் கடிதலின் ,காவற் சாக்காடு உகைத்தற்கு உரியனாய அரசன் , தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார்: அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்.]

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).

மணக்குடவர் உரை
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

Thirukkural - Management - Mentoring
Mentoring has been practiced for ages. Many writers consider the origin to be that of the mentoring done to the son of the great Greek warrior Ulysses. So far, the practices were of general nature. Now, the practice of mentoring has gained a strong footing in organizations. Mentoring helps mentees improve their personal and professional productivity. Hence, organizations are investing to establish effective mentoring systems. 

Kurals show that 1) Mentoring has existed for a long period, 2) The practices of mentoring will be more professional, and 3) The needs for mentoring will increase because of organizational changes and challenges.

Mentoring is defined as, “...a relationship between two individuals, usually a senior and a junior employee, whereby the senior employee takes the junior employee ‘under his or her wing' to teach the junior employee about his or her job, introduce the junior employee to contacts, orient the employee to the industry and organization, and address social and personal issues that may arise on the job,” (Tammy, Lisa, and Mark, 2009).

Kurals that highlight the relevance of the practice of mentoring  for increased personal and professional productivity. Kural 441 advises a young person to relate with a senior person who has knowledge, wisdom, skills, and positive qualities so that the younger person will gain a lot of knowledge from the senior person.

Value and Secure the friendship
Of the virtuous, mature, and wise.

There is a belief that one conversation with a learned person is worth a month's study. So, a series of conversations in the process of mentoring will be worth years' study for a younger employee. However, Valluvar cautions us to carry out a thorough research to find a knowledgeable person. There are cases in medical history that cures become worse than diseases. A wrong mentor is worse than a disease. He will become, instead of a mentor, a tormentor. This is one of the reasons that mentoring has not gained a strong footing across industries. 

அகர முதல எழுத்தெல்லாம்

குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
அகரம் - 'அ'என்னும்எழுத்து(கரம்சாரியை); மருத நிலத்தூர்; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம்; பாதரசம்

முதல  - மொதல்  (first), ஆதி, முதல்வேர் (அடிவேர்)

எழுத்து  - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

எல்லாம்  - முழுதும்

ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும்இறைவன்; சூரியன் சுக்கிரன் திரோதானசக்தி; காண்க:ஆதிதாளம்; அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம்; நாரை ஆடாதோடை குதிரையின்நேரோட்டம்; மனநோய்

பகவன்  - பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறுகுணங்களை உடைய பெரியார்; சிவன்; திருமால்; தேவன்; பிரமன்; புத்தன்; அருகன்; சூரியன்; குரு; திருமால்அடியாரான முனிவர்.

முதற்றே  - முதல்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
உலகில் உள்ள எழுத்தக்களில் ஆன எல்லா நூல்களையும் ஆதி முதல் இன்று வரை உள்ள வற்றையும் பகுத்து ஆராய்ந்து அறிவதே சிறப்பு. இவ்வுலகிற்கு பகுத்து ஆராய்வதே முதன்மையானது சிறப்பானது. 

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
“அந்தமில் ஆதியம் பகவன்” (திருவாய்மொழி, 1.3.5)
“முன்னவன் உலகுக்கு’ (அப்பர்.திருமாற்பேறு 8)
“அருத்தனாய் ஆதிதேவன்” (சம்பந்தர்.நெடுங்களம் 6)
“ஆதி பெருமான திடம்” (சம்பந்தர்.வேதவனம் 7)

“ஆரும் அறியார் அகாரம் அவனென்று” (திருமந் 1751)
“அகார முதலா யனைத்துமாய் நிற்கும்” (திருமந் 1753)
“அகர முதலானை அணிஆப்ப னூரானை” (சம்பந்தர்.ஆப்பனூர் 5)
“ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்” (அப்பர்.ஆரூர் 5)
“அகரம்முதலின் எழுத்தாகி நின்றாய்’ (சுந்தரர்.நெல்வாயில்.அரத்துறை.7)

குறிப்பு
பகவன் என்ற சொல் பகத்தை உடையவன் என்னும் பொருள் உடையது. ஐசுவரியம், வீரியம் புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறையும் பகம் என்னும் சொல் குறிக்கும். பூதங்களின் உற்பத்தி, முடிவு, வரவு, செலவு, அவித்தை, என்னும் ஆறையும் அறிபவன் பகன் என்று கூறுவதும் உண்டு. பகவன் என்ற சொல்லுக்குக் கேவல ஞானி என்று பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்.10, 117)

உலகுக்கு முதல்வன் இறைவன் என்று கூற வந்தவர், அதற்குப் பொருத்தமாக “ஆதிபகவன்” என்ற பெயரைக் கூறினார். 

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உவமையில்லான் இறைவன் என்று உரைப்பவர்தான்
உவமையென இறைவனையே ஆக்குகின்றார்
அகரமதற்குவமையென இறைவனையே
அழகு படச் சொல்லி முதற் குறளிலேயே
தவ முனிவர் வள்ளுவரும் தன்னை ஒரு
தமிழனென்றுச் சொல்லுகின்றார் பெருமையோடு
புவிஅதனின் முதல் மொழியாம் தமிழாம் அன்னை
போற்றி நிற்பீர் தமிழர்களே வெல்க தமிழ்

பரிமேலழகர் உரை
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.

விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்
குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."

என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.
அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் -
செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான்
தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம்
குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]

மணக்குடவர் உரை
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

மு.வரதராசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல்

குறள் 714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒளி - மேன்மை, பிரகாசம், நட்சத்திரம்
ஒளியார் -  மேன் மக்கள் 
முன் - முன்பு
ஒள்ளியன் - அறிவுடையோன்; புகழுடையவன்; சிறந்தவன்; நல்லவன்.
ஆதல் - ஆகுதல்
வெளியார் - வெளி³. Senselesspersons; அறிவிலார், புறம்பானவர்
முன் - முன்பு
வான் - ஆகாயம், மழை, மேகம்
சுதை - சுண்ணாம்பு, மின்னல், கேடு
வண்ணம் - நிறம்
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அறிவுடையவர்களுடன், சான்றோர்களுடன், மேன்மக்களுடன் இருக்கும் பொழுது, பழகும் பொழுது, அவையில் பேசும் பொழுது அறிவாக பேச வேண்டும். சிந்தித்து பேச வேண்டும். ஏனெனில் ஒருவர் சொல்லவருவதை இலகுவாக அவர்கள் புரிந்துக்கொள்வர். அவர்களுக்கு கிளிக்கு சொல்வது போல விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய நேரமும் மிக முக்கியம். ஆதலால் சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொல்ல வேண்டிய அளவு சொல்லி முடித்தல் வேண்டும்.

ஆனால் அறிவில்லாதவர்களுடன் பழகும் பொழுது அறிவுள்ளவர் போல பேசக்கூடாது. அவர்களுக்கு அவ்வளவு எளிதாக விளங்காது. ஆதலால் எளிமையாக கருத்தை சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் தான் சொல்வதில் பயனுண்டு.

மேலும்: அஷோக் உரை

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அறிவார்ந்த அறிவுடையார் தமக்கு எல்லாம்
அறிவு வழி தருகின்றார் வள்ளுவனார்
செறிவான அறிவுடையார் முன்னர் சென்றால்
சிறப்பான உம் அறிவைக் காட்டி நில்லும்
அறிவற்றார் மத்தியிலே சென்று விட்டால்
அறிவற்றுச் சுண்ணாம்பாய் ஆகி நில்லும்
தெளிவான வழி சொன்னார் வள்ளுவரும்
திரு நாட்டில் நிம்மதியாய் அறிஞர் வாழ

குறள்
ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன்

வான் சுதை வண்ணம் கொளல்

பரிமேலழகர் உரை
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)

மணக்குடவர் உரை
ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்-அறிவால் விளங்குவார்முன் தரமும் அறிவுச்சுடராக விளங்குக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்-அறிவில்லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச்சாந்தின் நிறத்தைக் கொள்க.

'ஒளியார்' என்றது சொற்பொழியும் அறிஞரின் மிக்காரையும் ஒத்தாரையும். 'ஒளியார்' ஒள்ளியார் என்பதன் தொகுத்தல்.இனி, அகவொளியாகிய அறிவுடையார் எனினுமாம். ஒள்ளியராதல் மதிநுட்பமும் நூற்கல்வியும் உலகியலறிவும் சொல்வன்மையுந் தோன்ற விளக்கியுரைத்தல். 'வெளியார்' வெள்ளியார் என்பதன் தொகுத்தல். அறிவில்லாதவரை வெளியார் என்றது, வயிரமில்லாத மரத்தை வெள்ளையென்றும் வெளிறென்றும் சொல்லும் வழக்குப்பற்றி. அறிஞருக்கு அறிவு விளங்கித் தோன்றுவதுபோல் அறிவிலிகட்கு அறியாமையே விளங்கித் தோன்றுமாதலின், 'வான்சுதை வண்ணங் கொளல்' என்றார். அறியாமையின் இழிவுபற்றிக் கருத்துப் பொருள் வெண்மையைக் காட்சிப்பொருள் வெண்மையோ டிணைத்துக் கூறினார். அறிவிலிகட்கு அறிவிலியாகுக என்பது, சிறுபிள்ளை கட்குச் சிறுபிள்ளையாகுக என்பது போன்றதாம்.

மு.வ உரை: 
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்

சாலமன் பாப்பையா உரை
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Thirukkural - Management - Values
Mental maturity of a person is known by the way he conducts himself in the presence of others, confirms Kural 714. 

Sparkle mid the sparkling, and be chalk-white,
Among the blank.

A knowledgeable person has to share his knowledge and exhibit his skills in the presence of people who are knowledgeable and skillful. By sharing and exhibiting  a person can have a common conversation among the knowledgeable people and become equals with them. Moreover, the knowledgeable people understand and appreciate the knowledge and skills of another knowledgeable person. 

On the contrary, a knowledgeable person has to pretend that he is ignorant and he lacks skills in the presence of people who are not knowledgeable and skillful. By pretending ignorance he can have a common conversation among the ignorant people and become equals with them. This perceptiveness, the ability to understand others, helps one build effective relationship.

Kural 714 directly advises us not to exhibit our knowledge in the presence of knowledgeable people and pretend ignorance in the presence of ignorant people.

English Meaning - As I taught a kid - Rajesh
Great minds talk about ideas because great minds can understand ideas easily. One doesn't have to explain the basics of the ideas. Great minds can comprehend the subject due to their knowledge, expertise, experience and grasp of broad things. So, knowledgeable people can share their knowledge with knowledgeable people and can have an conversation with them and become equals with them. Sharing ideas and conversing around knowledge is much better than discussing about events and gossiping about people. 

At the same time, a knowledgeable person has to pretend that he is ignorant and lacks skills in the presence of people who are not knowledgeable. By which, he can converse even with layman. This helps to build effective relationship. Remember, not all are equals. At the same time, we should not consider ourselves superior. We all are humans. We can step down be equals to them. Also remember, sometimes, some insensible people pull down the knowledge of knowledgeable people because of jealous, hatred etc. Rather loosing our energy in these petite fights, one can remain ignorant with them. 

Questions that I ask to the kid
How should you carry yourselves in front of knowledgeable and ignorant audiences? Why?

அலரெழ ஆருயிர் நிற்கும்

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல்

அலர்  - பலரும் அறிந்து புறங்கூறல், பலரறிந்துபழிதூற்றுகை

எழ - எழல் - எழும்பல்; கிளர்ச்சி; தோன்றுதல்; புறப்படுதல்; உதித்தல்; மேற்பட்டுவருதல்; துயரம்.

ஆர் - நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன்; ஆதன்; ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து; ஓசை; ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்.

நிற்கும் - நிலைக்கும்

அதனைப் பலர் - தெரியாத ஒன்றை மற்றவர்கள், பிறர்

அறியார் பாக்கியத்தால் - அறிவதனால் ஏற்படும் நன்மையால்

முழுப்பொருள்
திருமணத்திற்கு முன் காதலர்கள் கூடி புணர்ச்சி கொள்வர். அப்படி புணர்ச்சிக்கொண்ட பின்பும் அவர்களால் எல்லோரிடமும் தங்கள் உறவை முறையாக தெரிவிக்க முடியவில்லை. அவர்களும் ஒன்றாக இல்லை. பிரிந்து இருக்கிறார்கள். அப்படி பிரிந்திருப்பதால் உயிரற்று இருப்பதற்கு சமானம். 

ஆனால் இவர்களுடைய காதலை ஊர் மக்கள் புறங்குறினால் என்ன ஆகும்? அது கிசு கிசு வாக ஏழும். அது உயிரற்ற இவர்கள் காதலுக்கு ஆருயிர் பாய்ச்சி நிலைநிறுத்த ஏதுவாக இருக்கும்.   ஏனெனில் இது ஊரில் பலருக்கும் தெரியவந்ததால் எனக்கும் அவளுக்குமான உறவு உறுதிபடுத்தும். ஆக மக்கள் புறங்குறுவது இவர்களுக்கு மிகுந்த பாக்கியமே. ஆனால் ஊர் மக்களுக்கு தெரியாது அவர்கள் பேசி பேசி இவர்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று!! 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , நாணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.]

(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

மணக்குடவர் உரை
நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அல்லகுறிப்பட்ட பின்வந்த தலைமகனைத் தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்வியது.)

அலர் எழ ஆருயிர் நிற்கும்-என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராயெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான வுயிர் அவளைப் பெற்றது போன்றுமகிழ்ந்து நிலை பெறும்; அதனைப் பாக்கியத்தாற் பலர் அறியார்-அவ்வுண்மையை என் நற்பேற்றினால் அலர் கூறும் பலரும் அறியார்.

அல்லகுறிப்படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக்குங்குறி தற் செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலைமகனைக் காணாது திரும்புதல்.

உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காதலியைப் பெறாமையல் அவ்வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையிலிருத்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும் ; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும்; கூறினான். முற்றும்மை செய்யுளால் தொக்கது.

மு.வ உரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலித்து விட்டேனாம் என்னை விட்டு
கண்ணாளர் பிரிந்தாராம் ஊரே கூடி
பேதலித்து விட்டேன் நான் என்று சொல்லி
பின்னாலும் முன்னாலும் பேசி நிற்பார்
ஆதரவே அவர் தூற்றல் அதனாலன்றோ
ஆருயிரும் அழியாமல் நிற்கின்றது
காதலினை அவர் பேசப் பேசப் பேச
கவலையின்றி வாழுகின்றேன் நல் வினையால்

நம் காதலின் உயிர்ப்பு.... !!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும்  பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.