Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 15 இயல் - களவியல். Show all posts
Showing posts with label 15 இயல் - களவியல். Show all posts

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நாணொடு - வெட்கத்துடன், மானத்துடன்; கூச்சத்துடன்

நல் - நல்ல; வறுமை.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

பண்டு  - பழைமை; முற்காலம்; நிதி

உடையேன் - உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

இன்று  - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்

உடையேன் - உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

காமுற்றார்  - காமம்/காதல் கொண்டுவர்கள் 

ஏறும் ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

மடல் - பனைமுதலியவற்றின்ஏடு; தோண்மேலிடம்; கை; ஏற்றக்கழி; பனங்கருக்கு; காண்க:மடன்மா; உலாமடல்; பூவிதழ்; கிளை; சிறுவாய்க்கால்; கண்ணிமை; திருநீறும்சந்தனமும்வைக்குங்கலம்; சோளக்கதிர்முதலியவற்றின்மேலுறை; காதுமடல்; ஆயுதவலகு.

முழுப்பொருள்
தலைவனின் சிறப்பையும் அவன் காதலினால் இன்றுபடும் அவதியையும் கூறுகிறது இக்குறள்.

தொன்றுதொட்டுத் தலைவன் வலிமையானவன் வெற்றிவாகை சூடியவன். எச்செயல் செய்தாலும்  பிறர் பழிச்சொல்லுக்கு வெட்கி (அஞ்சி) நாணத்தோடு வாழ்வை நடத்துபவன். நற்குடியில் பிறந்து வருவதால் பழைமையின் பெருமையும் காத்துவருகிறவன்.

தலைவன் நினைக்கிறான், நாணத்துடன் நல்ல ஆண்மையும் பழைமையும் அதனுடன் வந்த பெருமையை காத்துவந்தேன் இன்று வரையில். ஆனால் தலைவிமீது காதல் கொண்டதனால் காதலர்கள் கொண்டவர்கள் ஏறும் மடலை நானும் ஏறினேன்.

தன்னுடைய சிறப்புகள் இவ்வளவு இருப்பினும் மற்றவர்கள் (சராசரி) போன்று தானும் காமநோயின் வேட்கையில் அவதிப்படுகிறேன் என்று தலைவன் வருந்துகிறான். காதல் வந்துவிட்டால் வலிமையானவர் வலிமையில்லாதவன் என்று எல்லாம் பேதமில்லை. எல்லோரும் காதலின் இன்பத்துன்பங்களை சமமாக பாரபட்சமில்லாமல் அனுபவித்தாக வேண்டும்.

ஒப்புமை
”........................மடன் மாமேல்
மன்றம் படர்வித் தவள்” (கலி.141:9-10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

மு.வரதராசனார் உரை
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கருமணியின் - கண்ணின்மணி; கருகுமணி, நீலமணி;கண்ணின் கருமணி

பாவாய் - பாவை - பொம்மைபோன்றஅழகியபெண்; பதுமை; அழகியஉருவம்; கருவிழி; பெண்; குரவமலர்; காண்க:பாவைக்கூத்து; நோன்புவகை; திருவெம்பாவை; திருப்பாவை; இஞ்சிக்கிழங்கு; மதில்.

நீ  - நீ  (தலைவி)

போதாய் - போய்விடு

யாம்  - நான் - தன்மைப்பன்மைப்பெயர்

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நுதற்கு  - நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
காதலின் நேர்மையே அதன் சிறப்பு. காதலின் நேர்மை எப்படி இருக்கும் தெரியுமா? பதில் சொல்லுகிறார் திருவள்ளுவர். காதலன் காதலியை மனதார நேர்மையாக காதிலுக்கும் பொழுது, காதலன் எதிரே ஒரு பாவை வருகிறாள். அந்தப் பாவை அவன் முன்னே இருப்பதால் அவன் கண்களில் இடம் எடுத்துக்கொள்வதனால் அவளை அவன் முன்னே இருந்து போகச்சொல்கிறான். ஏனெனில் அவன் ஆசையாக விரும்பும் அழகியப் பெண்ணின் பொலிவான நெற்றியிற்கு /முகத்திற்கு இடம் இல்லாமல் போய்விடுகிறதாம். அதாவது அவன் கண்களில் அவன் காதலியின் பொலிவான நெற்றியை கொண்ட முகத்திற்கு மட்டுமே இடம். வேறு யாருக்கும் இடம் இல்லை. அதாவது அவன் பிறரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டானாம்.

அதுமட்டுமில்லை. தலைவி கண்முன்னே இல்லையென்றாலும் அவள் கண்முன்னே எப்பொழுதும் இருப்பதுப்போன்ற கற்பனையில் இருக்கிறான். அதுமட்டும் இன்றி இந்த கண்கள் தலைவிக்கு மட்டும் தான் சொந்தம். வேறுயாருடைய நிழல் கூட அதன் உள்ளே வருவதற்கு (அனுமதியில்லையாம் / ) இடமில்லையாம்.

பின்னாளில் பாரதியாரோ, “என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ” என்று கண்ணனைக் காதலியாக பாவித்து, அவனே கண்ணின் பாவையெனவும் கூறியதற்கு முன்னோடிக் கற்பனை வள்ளுவன் செய்தது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“மணிவாழ் பாவை நடைகற் றன்ன’ (நற் 184:7)
“பாவை மாய்த்த பனிநீர்” (அகநா 5:21)
“கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்” (அப்பர்.ஆவடுதுறை 1)

பரிமேலழகர் உரை
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.).

மணக்குடவர் உரை
என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

மு.வரதராசனார் உரை
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

உறாஅதோ ஊரறிந்த கெளவை

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

அதோ - சேய்மைச்சுட்டு; படர்க்கைச்சுட்டு; சுட்டிக் கவனிக்கச் செய்தற்குறிப்பு; கீழ்

ஊர்  - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

அறிந்த - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கௌவை?  - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

அதனைப் - அதன் - It's   It's   It's , அதனுடைய

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறா - உறவை பெறாவிட்டாலும்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

பெற்று பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

நீர்த்து - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

முழுப்பொருள்
உறா என்றால் பெறமுடியாதது என்று பொருள் ஏனெனில் உறாவொற்றி என்றால் மீளா வெற்றி என்று பொருள்.

காதலர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் மீண்டும் பெறவே முடியாதது எங்கள் காதல் உறவு என்று நினைத்தோம். அதனால் வாடினோம். ஆனால் இந்த ஊராருக்கு எங்கள் காதலைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவர்கள் எங்கள் காதலைப்பற்றிப் (பழியாகவோ அல்லது வம்பாகவோ) பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஊருக்கே எங்கள் காதல் வெளிப்டையானதால் பெறமுடியாது என நினைத்த எங்கள் காதலை /(திருமண) உறவை நாங்கள் பெற்றதுப்போல் (பெறுவதற்கும் ஏதுவாக) ஆயிற்று. ஊரார் பேச்சு காதலர்களை ஒன்று சேர்க்கும் தன்மைவாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
முறி - துண்டு; பாதி; பத்திரம்; ஓலையில்எழுதியபற்றுச்சீட்டு; துணி; முருட்டுத்துணி; தளிர்; கொழுந்திலை; இலை; சேரி; அறை; மூலையிடம்; சூலைநோய்வகை; உயர்ந்தவெண்கலம்.

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

முத்தம் -  உதடு; அன்பிற்கறிகுறியாகஒருவகைஒலிஉண்டாகஉதடுகளால்தொடுகை; பிள்ளைத்தமிழ்ப்பருவங்களுள்குழந்தையைமுத்தந்தரும்படியாகப்பாடும்பகுதி; மருதநிலம்; முத்து; முத்துக்கொட்டை; செடிவகை; மரகதக்குணங்களுள்ஒன்று; ஆண்குறி:அன்பு; மகிழ்ச்சி; யோகாசனவகை; முற்றம்; கோரைக்கிழங்கு; விடுதலை; கோரை.

முறுவல் - பல்; புன்னகை; மகிழ்ச்சி; செடிவகை; இறந்தொழிந்தநாடகத்தமிழ்நூல்களுள்ஒன்று.

வெறி - பயித்தியம்; மதம்; சினம்; கலக்கம்; ஒழுங்கு; வட்டம்; கள்; குடிமயக்கம்; விரைவு; மணம்; காண்க:வெறியாட்டு; வெறிப்பாட்டு; மூர்க்கத்தனம்; பேய்; தெய்வம்; ஆடு; பேதமை; அச்சம்; நோய்; ஆள்களின்றிவெறுமையாகை

நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.

வேல் -  நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

உண்கண் - மைதீட்டியகண்

வேய்த் - மூங்கில்; மூங்கிற்கோல்; உட்டுளைப்பொருள்; புனர்பூசநாள்; வேய்கை; மாடம்:வினை; குறளைச்சொல்; யாழ்கவனஞ்செய்கை; ஒற்றன்; ஒற்றினைத்தெரிந்துகொண்டகூறுபாட்டினைக்கூறும்புறத்துறை.

தோள்  - புயம்; கை; தொளை.

அவட்கு – அவளுக்கு.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை எப்படி வியந்து வர்ணிக்கிறான்? இவன் தலைவி 1) இளந்தளிர்ப் போன்ற மின்னும் மேனி கொண்டவள் 2) முத்துக்களைப் போன்று அழகிய புன்னகையை உடையவள் 3) தலைவனை மயக்கும்(வெறி:மயக்கம்) அளவிற்கு நறுமணம் கொண்டவள் 4) வேல் போன்ற நுனிக்கூர்மையான கண்களை உடையவள். அக்கண்களுக்கு அழகுசேர்க்கும் மைதீட்டியவள் 5) மூங்கில் போன்ற தோள்களை கொண்டவள்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது” (குறுந் 62:4-5)
“துளிதலைத் தலைஇய தளிரன் னோளே”(குறுந் 222:7)

பரிமேலழகர் உரை
(கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும் (பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.).

மணக்குடவர் உரை

தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு. இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

சாலமன் பாப்பையா உரை
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
குறி - அடையாளம்; இலக்கு; குறியிடம்; நினைத்தஇடம்; நோக்கம்; குறிப்பு; மதக்கொள்கை; முன்ன்றிந்துகூறும்நிமித்தம்; சபை; முறை; காலம்; ஒழுக்கம்; ஆண்பெண்குறி; அடி; இலக்கணம்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்காமை - நோக்காது இருத்தல்

அல்லால் - மற்றபட்டி

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சிறக்கணி - ciṟakkaṇi   VI. v. i diminish, குறை; 2. cast a side look, கடைக்கண்ணால் பார்; v. t. reduce, சுருக்கு.

சிறக்கணித்தல் - கண்ணைச்சுருக்கிப்பார்த்தல்; கடைக்கண்ணாற்பார்த்தல்; அவமதித்தல்.

சிறக்கணித்தாள் - கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்

போல - ஓர்உவமவுருபு

நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).

முழுப்பொருள்
தலைவி தலைவனை நேராகப் பார்த்து இவ்வுலகிற்கு அப்பட்டமாய்த் தெரியும் அளவிற்குப் பார்க்கமாட்டாள். அப்படி நேராகப் பார்ப்பது தெரிந்துவிட்டால் குறிப்பு வெளிப்படையாகிவிடுமே. குறிப்பு வெளிப்படையாக இருக்க கூடாதல்லவா?  ஆதலால் அவளுடைய ஒருகண்ணால் (கடைக்கண்ணை) கண்ணைச்  சுருக்கிப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வாள். இத்தகைய நுட்பமானக் குறிப்புகளை தலைவன் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தலைவியை உணர முடியும்.  பெண்ணின் நாணத்தைப் பலவிதமாக கண்டு அனுபவித்தாற் போன்று வள்ளுவன் எழுதிய மற்றுமொரு குறள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள். அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

மு.வரதராசனார் உரை
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்

குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.

தோற்றத்தான் - தன்னுடைய தோற்றத்தினால்

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை

தகைப் - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

பேதைக்கு - அறிவிலி, அறிவிலான்,  தரித்திரன், எளிய வன்

அமர்த்தன - அமர்த்தல் - அமரச்செய்தல்; ஏற்படுத்தல்; மாறுபடுதல் பொருதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். 

முழுப்பொருள்
தலைவன் தலைவியின் கண்களை காண்கிறான். அவளுடைய  அக்கண்களும் பொலிவும் அவன் உயிரை உண்ணும் அளவிற்கு ஈர்ப்புச்சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. உயிரைக்கொல்லும் அளவிற்கு அவனை ஆட்கொண்டுவிடுகிறதே!! அச்சச்சோ! பெண் என்றால் தகைமை/ அன்பு  குணம் கொண்டவள் என்று தானே நினைத்தோம். ஆனால் அதற்கு மாறாக இந்தப் பேதையின் கண்களும் பொலிவும் நம் உயிரை வாங்குகிறதே.

‘அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்’ என்றார் பாரதிதாசன். இப்படி அழகு உயிரை கொல்லுதலும் ஒருவித இன்பம் தான் போலும் 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது

மு.வரதராசனார் உரை
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

சாலமன் பாப்பையா உரை
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

மலரன்ன கண்ணாள் அருமை

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

கண்ணாள் - கலைமகள், நாமகள்; kaṇ-ṇ-āḷ   n. id. Belovedwoman; கண்ணாட்டி. (யாழ். அக.); kaṇṇāḷ   n. id. Sarasvatī,the goddess of learning; சரசுவதி (பிங்.)

அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியாது - உணராமல்

அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி. alar   n. அலர்-. 1. Full-blownflower; மலர் (திவா.) 2. (Akap.) The idle talkin a village about any two lovers, dist. fr. அம்பல் பலருமறிந்து கூறும் புறங்கூற்று (குறள், 1142.)3. Joy; மகிழ்ச்சி (பிங்.) 4. Water; நீர் (பிங்.)5. Turmeric. See மஞ்சள் (மலை.) 6. Blackpepper. See மிளகு (மலை.) 

எமக்கு - எனக்கு

ஈந்து - īntu   n. Poison; நஞ்சு. (சங். அக.)ஈந்து

ஈந்தது - ஈ -கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To give, give to inferiors, give alms, be stow, grant, exercise liberality, கொடுக்க. 2. To distribute, apportion, divide among several, divide in arithmetic, பகிர்ந்துகொ டுக்க. 3. To devote, offer, present, அளிக்க. 4. (p.) To abound in benevolence, சொரிய. --Note. Giving alms is prescribed as one of the six duties of a Brahman. See தொ ழில். ஈயார்தேட்டந்தீயார்கொள்ளுவர். That which misers have hoarded will be carried off by the vicious. நூற்றைப்பத்துக்கீ. Divide a hundred by ten, (lit.) distribute a hundred among ten. தண்ணீருமீயான். He will not give even water.

இவ் - இந்த

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

முழுப்பொருள்
மலரினை போன்ற அழகான மென்மையான எனது அன்பிற்குரிய காதலியின் அருமை பெருமை அறியாத இந்த ஊர் மக்கள் எங்கள் காதலைப்பற்றி புறம் பேசினார்கள். இந்த புறம் பேசுதல் எனக்கு நன்மையே ஈன்றது. ஏனெனில் 1) நான் அவளை பிரிந்து இருக்கும் பொழுதும் என் நினைப்பை அவள் மனதில் அகலாமல் பார்த்துக்கொண்டது ஏனெனில் என்னை பற்றி பேச பேச என் நினைவு அவள் மனதில் மீண்டுக்கொண்டே இருந்தது. அதனால் காதல் வேர் மிக ஆழமாக ஊன்றியது 2) இப்படி பேசுவதனால் அவளை வேறு யாரும் நெருங்கவும் இல்லை. 3) அந்த பெண்ணுக்கும் தோன்றும் எங்களைப்பற்றி ஊரே இப்படி பேசி விட்டது இனிமேல் வேறு யாரை நான் விரும்ப முடியும். இவனை தான் விரும்பியாக வேண்டும் என்று.

புறம் பேசுதல் தவறு என்று கூறும் பொழுது இது போன்று காதலைப் பற்றி புறம் பேசுதல் காதலர்களுக்கு நன்மை செய்து விடும். ஆதலால் சில இடங்களில் பேசாது இருப்பது நல்லது. ஊரே பேசி பேசி இந்த காதலை வளர்த்துவிடும்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.).

மணக்குடவர் உரை
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

மு.வரதராசனார் உரை
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உழ - uẕa   VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை

உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.

உழந்து - ஆசையோடு பழகி ; உறவுகொண்டு; புணர்ச்சி மகிழ்ந்து

வருந்தி - வருந்து - vruntu   -கிறேன், வருந்தினேன், வேன், வரு ந்த, v. n. To suffer, to be distressed, to be grieved, துன்புற. 2. v. a. To take pains, முயல. (நீதி.) 3. To beg earnestly, கெஞ்ச. வருந்திக்கேட்கிறது. Soliciting, entreating. யாவருக்கும்வருந்தின்றாக. Without molest ing any. (p.)

வருந்தினார்க்கு - துன்பம் உற்றோர்க்கு

ஏமம் - இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.
ஏம - ஏம்புதல் - களித்தல், மனம்கலங்குதல், வருந்துதல், மயக்கமடைதல்.

மடல் -பனைமுதலியவற்றின்ஏடு; தோண்மேலிடம்; கை; ஏற்றக்கழி; பனங்கருக்கு; காண்க:மடன்மா; உலாமடல்; பூவிதழ்; கிளை; சிறுவாய்க்கால்; கண்ணிமை; திருநீறும்சந்தனமும்வைக்குங்கலம்; சோளக்கதிர்முதலியவற்றின்மேலுறை; காதுமடல்; ஆயுதவலகு.

மடலூர்தல் - தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல்

அல்லது - தீவினை; தவிர

இல்லை - illai   fin. v. இல்². No; உண்டென்பதன் எதிர்மறை 

வலி -வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.

முழுப்பொருள்
காமம் உழந்து என்றால் வெறும் காதலித்தவர்கள் அல்ல மிக தீவிரமாக காதலித்தவர்கள் என்று பொருள். அப்படி மிக தீவிரமாக காதலித்தவர்கள் பிரிவு அல்லது ஊடல் போன்று எதோ ஒரு காரணத்தினால் (அல்லது வேறு ஒருவர்க்கு கல்யாணம் செய்ய முனையும் பொழுது)  வருத்தம் உண்டாகுமாயின் அவர்களுக்கு காவலாக இருப்பது மடலூர்தல் என்னும் ஆயுதம் தான் அதனை தவிர வேறு வலிமையான ஆயுதம் இல்லை. மடலூர்தால் என்றால் இருவருக்கிடையே உள்ள காதலை தலைவன் உலகிற்கு அறிவுக்கும் ஒரு முறை. (மடலூர்தலை பற்றி கீழே காண்க. )

அப்படி தலைவன் உலகுக்கு அறிவிக்கும் பொழுது தலைவி நாணத்தினால் காதலை ஏற்றுக்கொள்வாள். ஆதலால் தலைவன் இதனை ஆயுதமாக பயன்படுத்தி தோழிகளிடம் சொல்லி  அனுப்புவார் தலைவிக்கு. தலைவி உலகுக்கு தெரிந்துவிடும் என்று நாணம் கொண்டு ஊடலை முடித்துக்கொள்ள வருவார்.

மடலேறுதலை விக்கிமூலம் இவ்வாறு விளக்குகிறது. 
“மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திறுநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ’மடல்’ ஆகும்.

இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.

மடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு”

திருக்குறளில் பல இடங்களில் மடலூர்தலைப் பற்றி பேசப்படுகிறது

ஒப்புமை
“மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம்காழ்க் கொளினே” (குறுந்.17)

“மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்
மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே” (கலி.58:20-23)

“ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் எவ்வநோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக் குயிர்ப்பாக
வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது
பாடுவேன் பாய்மா நிறுத்து” (கலி.139:10-13)

“மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்
பூவென் றெருக்கின் இணர்சூடுப புன்மை கொண்டே
பேயென் றெழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்ப காம
நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொள்வ தாயி னக்கால்” (வளையாபதி)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும் , அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின் , காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.]

(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
உடம்பு உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

உடம்பொடு - உடம்புடன் ;உடலுடன்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

உயிரிடை - உயிர் இடத்தில

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

மடந்தை - பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை.

மடந்தையொடு - அந்த பெண்ணுடன்; என் காதலியுடன்

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

எம்மிடை - என்னுடைய

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
இந்த உடம்புக்கு உயிருடன் என்ன உறவோ நெருக்கமோ எத்தன்மையோ அத்தன்மையானது என் காதலிக்கும் எனக்கும் உள்ள உறவு, காதல்.

உடம்பும் உயிரும் இரண்டற கலந்தது. உயிர் இல்லை என்றால் அதனை சடலம் என்று சொல்லுவோம். ஆதலால் காதலி இல்லை என்றால் இவன் சடலத்துக்கு ஒப்பானவன் என்று பொருள். உதாரணமாக பல இல்லங்களில் வயதடைந்த பல கணவன் மனைவி மார்களில் ஒருவர் உயிரிழந்த பின் மற்றொருவர் அந்த துக்கத்தை தாள முடியாமல் சிறிது காலத்திலேயே இறந்து விடுவார் அல்லது அவர்களது செயல்பாடுகள் குறைந்துவிடும் காலப்போக்கில் இறந்தும் விடுவார். அது வயதினால் மட்டும் அல்ல மனதளவில் ஒருவரோடு ஒருவர் சார்ந்து இருப்பார்கள்.


மேலும், உடம்பொடு உயிர் இருப்பது இயற்கையானது, இயல்பானதும் கூட. காதலும் அதுப் போன்றதே. இயற்கையானது.  அந்தக் கோணத்தில் பார்த்தால் எனக்கு கீழ்க்காணும் வரிகள் நினைவுக்கு வருகின்றன

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கி.ரா அய்யா ஒரு முறை டெல்லி சென்றபோடு, தாஜ்மகால் போயே ஆகணும் என்றார்களாம் கூட வந்தவர்கள். சரின்னு போனோம். எனக்கு எதுவும் வியப்பா இல்லை. இவ்வளவு பெரிய சமாதி. முழுக்க சலவைக் கல்லால் கட்டியது. முன்புறம் தேக்கியுள்ள நீரில் விழும் அதன் எழில் தோற்றம். ஜன்னால் அமைப்புகள், வேலைப்பாடுகள் இப்படி.... இதெல்லாம் நமக்கு புதுசு. இதை நிறைய T.V.யில் பார்த்திருக்கோம் என்கிறார்.

காதலின் அடையாளம் இல்லையா என்கிறேன்(--எஸ்.பி.சாந்தி). மும்தாஜ் தன்னோட பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுக்கையில் இறந்து போனாள். எத்தனையோ துயரங்கள். காதல் ரொம்ப இயல்பானதும்மா. குறிப்பிட்ட வயதில், குறிப்பாக தன் வாலிப பருவத்தில் மனிதர்கள் ரொம்ப வீரமாக செயல்படுவார்கள். அதை யாரும் நான் என் வாழ்நாளில், அந்த காலங்களில் வீர வயப்பட்டேன் என்று சொல்வதில்லை. ஆனால் காதல் வயப்பட்டஹை மட்டும் இப்படீ... பெரீசா.. பேசிக்கிட்டே இருக்கோம். எத்தனை திரைப்படம், பாடல்கள் என அய்யா குறிப்பிடுகையில் அதில் உண்மை இருப்பதாகவே பட்டது. காதல் என்பது சலவைக் கல் கட்டிடம் அல்ல. கல்வெட்டு அல்ல. இவையெல்லாம் வெளிப்பாட்டின அடையாளம். ஆனால் எந்த அடையாளமும் இல்லாமல் நீர் மாதிரி தன் வழித்தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல் முளைக்கச் செய்யும் காதலும் உள்ளது. நிச்சயம் காதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வருவது அல்ல, என்பது அய்யாவையும், அம்மாவையும் ஒரு சேர பார்க்கையில் தோன்றுகிறது. 


ஒப்புமை


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை என்ன அன்ன - உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். ('என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு. நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.

மு.வரதராசனார் உரை
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

சாலமன் பாப்பையா உரை
என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே

குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

காணின் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

மை-த்தல் - mai-   11 v. intr. மை². 1. Tobecome black; கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85). 2. To be dim; ஒளிமழுங்குதல். மைத்துனநீண்ட வாட்டடங் கண்ணார் (சீவக. 2333).

ஆத்தி - மரவகை; திருவாத்தி செல்வம் அடைகை; சம்பந்தம் இலாபம் பெண்பால்விகுதி; அச்சவியப்புக்குறிப்பு.

மையாத்தி - ஒளி மழுங்குதல்;  மயங்குந்தால்

நெஞ்சே - நெஞ்சம் - நெஞ்சு; அன்பு; மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

இவள் -  ivaḷ   pron. இ³. [K. M. ivaḷ.] Thiswoman or girl; she, used to denote the femaleamong rational beings.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பலர் - அநேகர்; சபை

காணும் - முன்னிலைப்பன்மையில்வரும்ஓர்அசைச்சொல்.

பூ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின்நுதற்புகர்; யானையின்நெற்றிப்பட்டம்; கண்ணின்கருவிழியில்விழும்வெண்பொட்டு; விளைவுப்போகம்; ஆயுதப்பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த்துருவல்; சூரியனின்கதிர்படுதற்குமுன்னுள்ளபூநீற்றின்கதிர்; இலை; காண்க:முப்பூ; இந்துப்பு; வேள்வித்தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.
(வி)அலர், மலர்.

ஒக்கும் - okku-   5 v. tr. (W.) 1. Togargle; கொப்புளித்தல் 2. To leave behind;பிற்படவிடுதல்.
ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல்

என்று -எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
அழகிய மலர்களை கண்டால் மயங்கும் நெஞ்சமே இதோ கேள், என்காதலியின் கண்களுக்கு பலர் காணுகின்ற பூ(க்கள்)   இணையாகாது. இவள் கண்களின் வசீகர (ஈர்க்கும்) தன்மையை பார்த்துமா நீ இந்த மலர்களுக்கு மயங்குகிறாய் ?

இந்த குறள் பல உரையாசிரியர்கள் கற்பனையைத் தூண்டியிருக்கிறது. பரிதியார் இவ்வாறு கூறுவார்: “நெஞ்சே நீ கண்டு மயங்கும் மலர்கள் என் காதலியின் கண்களைக் கண்டு நாணும்; ஏனெனில், அவளைப் போல் கண்களைப் பெற்று, அவள் பார்க்கும் காதல் பார்வையை அவை பார்க்க முடியாதே!”.

எம்.ஜி.ஆர் நடித்த "தெய்வ தாய்" படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலில் இதை ஒத்த கருத்து வரும்
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை"

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்? (மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய். இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்).

வீழும் இருவர்க்கு இனிதே

குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

இருவர்க்கு - தலைவன் தலைவி இருவருக்கும் 

இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் ; இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

போழப் - போழ்தல் - பிளவுபடுதல்; பிரிவுபடுதல்; பிளத்தல்; ஊடுருவுதல்; அழித்தல்.

போழப்படா - புக முடியாத

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய.  

முயக்கு - முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

முழுப்பொருள்
காதலில் ஆசையாக வீழ்ந்த இருவருக்கு எது இனிது தெரியமா? கலவி / புணர்ச்சி. எப்படிப்பட்ட புணர்ச்சி? மெல்லிய காற்றுக்கூட (வளிகூட)  இவர்களுக்கு நடுவே(இடையே) புகமுடியாத அளவுக்கு (போழப்படா) இவர்கள் இரண்டுபேரும் முயங்கி இருப்பது. புணர்ச்சியில் இன்பம் கொள்கிறார்கள். கலவி கொள்ளும் பொழுது  காற்றுக்கூட இவர்களின் நடுவே இல்லாமல் இவர்கள் ஒருமையாகி விடுகிறார்கள்.

ஆதலால் கல்யாணத்திற்கு முன்பு இருவர் கலவி கொள்வது முற்றிலும் இயற்கையானதே என்பதை நாம் இங்கு அறியலாம். அது தவறில்லை. அக்காலகட்டத்தில் அது இயற்கையென  எண்ணியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். பின்பு ஒழுக்க நெறிகள் மக்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் இன்று கல்யாணத்திற்கு முன் கலவி என்பததை தவறாக பார்க்கின்றார்கள்.

அகநானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

“மெய்யில் தீரா மேவரு காமம்” (அகநா 28:1)
“வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து” (அகநா 361:5,6)

எனக்கு ஸ்பீடு(வேகம்/speed) எனும் 1994 ஆண்டு வெளிவந்த ஆங்கில/Hollywood படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தில் இறுதியில் வரும் வசனம் / உரையாடல் கீழே. இதில் கலவி மூலமாக உறவை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்பதை கூறிக்கொள்கிறார்கள்.
Jack:
I have to warn you, I've heard relationships based on intense experiences never work.

Annie:
OK. We'll have to base it on sex then.

Jack:
Whatever you say, ma'am.

(Speed Movie - Intense Relationship Scene Link from 0:49)

மேலும்: அஷோக் உரை

மைதுனம் பற்றிப் பகர்ந்தபின், காமத்துப் பாலின் இன்னொரு குறள் சொல்லாமல் கட்டுரையை முடிப்பதா என இருமனதாக இருக்கிறது. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறள், காதலர் இருவர் சம்மந்தப்பட்ட குறள் அது. காதலன் என்ற சொல்லுக்கு பகரமாக நீங்கள் தோழன் – தோழி, தலைவன் -தலைவி, நாயகன் – நாயகி, கணவன் – மனைவி, Partner, Pair, Mate, சேர்ந்து வாழ்பவர் என்று எதையும் பொருத்திக் கொள்ளலாம்.

‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு’

எப்போதுமே அளபெடை பயன்படுத்தப்படும் திருக்குறள் உச்ச பட்சக் கவித்துவத்துடன் இருக்கும். வளி என்றால் காற்று. போழப்படா என்றால் புக முடியாத, முயக்கு என்றால் மைதுனம். காமத்தில் வீழ்ந்த இருவருக்கு, வளி இடை போழப் படா முயக்கு இனிதே. காற்றுக்கூட இடை புகமுடியாதபடி உடல்களின் நெருக்கம் கொண்ட கலவி இனிது. யாருக்கு அந்தக் கலவி இனிது? காதலில் வீழ்ந்த இருவருக்கு இனியது. காதலில் வீழ்ந்த நாயகி – நாயகன் இருவருக்கும் நுண்ணிய மெலிய தென்றல் காற்றுக்கூட இடையே நுழைய முடியாத அளவிலான இறுக்கமான உடற்சேர்க்கை மிக இனிமையானது. அப்போது அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். அந்தக் கலவி நிலை இருமையல்ல, ஒருமை.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்

குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
நீங்கின் - நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்

தெறு - சுடுகை; கோபம்; அச்சம்; துன்பம்.
உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி

தெறூஉம் - தெறு -

குறு - kuṟu   VI. v. i. become short, diminish, குறுகு
குங்குதல் - குன்றுதல், குறைதல்.

குறுகுங்கால் - குறுகுங்குதல் - நெருங்கி வரும் பொழுது

தண் - taṇ   n. 1. [K. M. taṇ.] Coolness,coldness; குளிர்ச்சி (பிங்.) 2. Water; நீர் Brāh.3. Grace; love; அருள் தண்கலந்த சிந்தையோடு(சேதுபு. சீதைகுண்ட. 5)
குளிர்ச்சி - kuḷircci   குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death.. 

தண்ணென்னும் - குளிர்ச்சியாக 

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

யாண்டுப் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

பெற்றாள் - பெற்றாள்

இவள்? -இந்த பெண் (என் காதலி, தலைவி)

முழுப்பொருள்
பொருள் 1
தலைவன் நான் தலைவி இவள் அருகில் வரும்தோறும் மிக அருகில் இருக்கும் பொழுது என்னுடன் முயங்கும் (புணர்ச்சி கொள்ளுதல்) பொழுதும் குளிர்ந்தநீர்ப்போல குளிர்ச்சியாக அதாவது அன்பாக என்னிடம் நடந்துக்கொண்டாள்.  ஆனால் இவளை விட்டு நான் நீங்க போகிறேன் என்று தெரிந்தவுடன் நெருப்புபோல என்னை சுட்டெரிக்கிறாள். கோபம்கொள்கிறாள். குளிர்மையான நீர் போன்றவள் என்று நினைத்தேன். எங்கிருந்து இப்படிப்பட்ட சுட்டெரிக்கும் தீயை பெற்றாள் இவள் ?

நெருப்பு மூட்டி சற்று தொலைவில் இருந்து குளிர்காயும் பொழுது இதமாக இருக்கிறது. ஆனால் மிக அருகே சென்றால் சுடுகிறது அல்லவா? ஆனால் இங்கோ அருகில் இருக்கும் பொழுது இதமாக இருக்கிறது. விலகிச்சென்றால் சுட்டெரிக்கிறது. இது போன்ற தீயை எங்கு பெற்றாள் இவள்?  

பொருள் 2
இக்குறளை வேறு ஒரு மாதிரியும் பொருள் கொள்ளலாம். தலைவனும் தலைவியும் கூடும் பொழுது, பெண் தலைவனை எவ்வளவு விரும்புகிறாள் தன் அகத்தோடு உணர்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. தன் தலைவனை கூடும் பொழுது அவன் அவளை நெருங்கும் பொழுது குளிர்கிறாள். மகிழ்ச்சி அடைகிறாள். இன்பம் கொள்கிறாள். தலைவனும் அவ்வின்பத்தை கொடுக்கிறான் பெறுகிறான். அவ்வின்பத்தருணத்தில் தலைவன் சிறிதளவு பிரியும் பொழுது அச்சிறுப்பிரிவைக்கூட விரும்பாத தலைவி கோபம் கொள்கிறாள். தீயைப்போன்று சுடுகிறாள். [பின்பு என்ன, விலகும் தலைவனை அள்ளி அனைத்துக்கொள்கிறாள் தலைவி என்பதை யாரும் விளக்கவேண்டாம். ]

முயங்கும் பொழுதே பிரிவை விரும்பாத தலைவி எப்படி தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் பொழுது அதனை ரசிப்பாள்? அதான் அவள் சுடுகிறாள். பிரிவைப் பற்றியும் அதனால் வரும் துயரைப்பற்றியும் வரப்போகும் அதிகாரங்களில் விரிவாக காணலாம்.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் வருவதால் பொருள்-2ஏ பொருத்தமானதான பொருளாக எனக்கு தோன்றுகிறது.

பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.

“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து 
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”


மற்றொரு நாலடியார் (90) பாடல் வரி, 
“நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி 
ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.

“அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந் 257:5-6)

“கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுறு நெஞ்சத் தகல்விடத் தழற்ற” (பெருங் 2:18:8:9)

“நின் பிரிவினும் சுடு மோபெருங் காடென்றாள்’ (கம்ப.நகர்நீங்கு 226)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.).

மணக்குடவர் உரை
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

மு.வரதராசனார் உரை
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

தீயென்றால் தொட்ட உடன் சுடும் என்று
     தீண்டி அதை உணர்ந்துள்ளோம் அனைவருமே
மாயப் பெண் இவளிடத்தில் உள்ள தீயோ
     மாற்றங்கள் கொண்டதுவாய் இருப்பதென்ன
தோய்ந்து அவளைத் துய்த்திருந்தேன் அப்போதெல்லாம்
     துடியிடையாள் தீயதனின் குளிர்ச்சி தேர்ந்தேன்
போய் வரலாம் என்றே தான் பிரிந்தேன் தீ
     போட்டு என்னை வறுத்ததினை உணர்ந்தேன் வெந்தேன்
பிரிகையிலே சுடுகின்ற இந்தத் தீயைப்
     பெண் மகளாள் பெற்றதிங்கு யாரிடத்தில்
அறிவதற்கு முயல்கின்றேன் முடியவில்லை
     ஆனாலும் அனுபவித்தே மகிழ்கின்றேன் நான்
துடியிடையைத் தொட்டவுடன் தீயைக் காணோம்
     தொட்டு உடன் விலகி நின்றால் குளிரைக் காணோம்
அட அட இப் பெண்ணாளை அடைந்ததிலே
     அறிவியலின் தோல்வியினைக் கண்டேன் நானும்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்

குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
யான் - தன்மையொருமைப்பெயர்

நோக்கும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காலை - கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

நிலன் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நோக்கும் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்காக்கால் - நோக்கவில்லை என்றால் ; பார்க்கவில்லை என்றால்

தான் - தனக்குள்; படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

நோக்கி - கண்களால் நோக்குகை

மெல்ல - மெதுவாக

நகும் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

முழுப்பொருள்
(ஆண்மகன், தலைவன்) நான் அவளை (தலைவியை) பார்க்கும் பொழுது அவள் (பெண்மகள், தலைவி) நாணத்தினால் தலைகுனிந்து அவள் நிலத்தையே நோக்குகிறாள். (ஆணுக்கு நாணம் இல்லை என்பதையும் இங்கே நோக்குக). நான் பார்ப்பதை அவள் பார்க்காததுப்போல காட்டிக்கொள்கிறாள்.

ஆனால் நான் அவளை பார்க்காத பொழுது அவள் என்னை பார்த்து தனக்குள் மெதுவாக சிரித்து மகிழ்கிறாள். அவள் என்னை பார்த்தை நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு சிரிக்கிறாளோ? இல்லை நான் பார்த்தது அவளுக்கு தெரியுமாம் ஆனால் அவள் என்னை பார்த்தது எனக்கு தெரியவில்லை என்று நினைத்து சிரிக்கிறாளோ ?

உண்மையில் இருவருக்கும் இருவர் பார்த்ததும் தெரியும். இருவரும் நடிக்கிறார்கள் ஒருவர்மீதொருவர் கொண்ட வாஞ்சையால். தலைவன் பார்க்கும் பொழுது தலைவி நிலத்தை பார்ப்பதனால் தலைவி தலைவனுக்கு அவன் மீது கொண்ட காதலை அன்பை குறிப்பால் உணர்த்துகிறாள்.  நேரடியாக பார்த்துக்கொண்டால் என்ன? பிறகு சுவாரஸ்யம் இருக்காதே. இதனை நினைத்துப் பின்பு மகிழமுடியாதே. ஊடலின் துவக்கமே இங்குதான் போலும்.

ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையேயானப் பார்வைப் போரை கம்பன் வருணித்ததை பார்ப்போம். இப்பாடலில் இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்களால் கவ்விக்கொள்வதை இரசமாக விவரித்திருப்பார்.

“எண்ணரும் நலத்தினால் இணையள் நின்றுழி 
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

கி.வா.ஜ-வின் ஆய்வு உரையில் சீவக சிந்தாமணியிலிருந்தும், கலித்தொகையிலிருந்தும்மேற்கோளாக கீழ்காணும் வரிகளைக் காட்டுகிறார்.

நேற்று மேற்கோள் காட்டிய கண்ணதாசன் பாடல், இன்றைய குறளுக்கே முற்றிலும் பொருந்துவதாகவும் அமைவதைக் காணலாம்.

“தன்னையான் முகத்தை நோக்கின்தான் முலை முகத்தை நோக்கும்” (சீவக சிந்தாமணி 1626)

“பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின் 
மெல்ல இறைஞ்சுந் தலை” (கலித்தொகை 61-5:6)

கண்ணதாசனின் பாடல்வரிகள் இதே பொருளில்

“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே”


”இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்றநிற் கண்டு” (அகநா 39:17-8)




மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத விடத்துத் தான்பார்த்துத் தோன்றாமை நகும். மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.

மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

பண்டறியேன் கூற்றென் பதனை

குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
தகையணங்குறுத்தல் - தலைவியின் அழகுதலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை
தகையணங்குறுத்தல், v. n. comparing a lady present with another, to annoy a lover (in love poetry).

தகை - அன்பு

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

உறுத்தல் - uṟuttal   n. உறுத்து-. 1. Increasing; மிகுக்கை. (பிங்.) 2. Bringing intocontact, clapping; ஒற்றுகை. (திவா.)

பண்டு - பழைமை; முற்காலம்; நிதி.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்

என்பதனை - என்பது அதனை

இனி - இனிமேல் , இப்பொழுது; இனிமேல் பின்பு இப்பால் இதுமுதல்.

அறிந்தேன் - உணர்ந்தேன்

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு

பெண்தகை - பெணின் குணங்கள் ஆகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

யான் - தன்மையொருமைப்பெயர்

பேர்  - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

அமர்க் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

கட்டு - உறுதி; காவல்; அரண்; ஆணை; உறவின்கட்டு; தடைக்கட்டு; யாக்கை; மூட்டை; குறி; வரம்பு, கட்டுப்பாடு; மிகுதி; மலைப்பக்கம்; பொய்யுரை; வளைப்பு; திருமணப்பற்று; வீட்டின்பகுதி.
(வி)பந்தி, தளை, பிணி; வீடுமுதலியனகட்டு; தழுவு; மணஞ்செய்; தடைகட்டு; கதைகட்டு; சரக்குக்கட்டு; அடக்கு; இறுகு; மூடு.

முழுப்பொருள்
கூற்று என்றால் காலன் (உயிரை வாங்கும் எமன்) என்று பொருள். முன்பு நான் காலனை பற்றி அறியவில்லை உணரவுமில்லை (உதாரணமாக போர் செய்யும் உயிர்பயம் அற்ற ஒரு வீரன் உயிரை எடுக்கும் காலனை பற்றி அறியவில்லை உணர்ந்ததும் இல்லை). ஆனால் காலனை பற்றி அறிந்தேன் உணர்ந்தேன் இப்பொழுது. ஏனெனில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பெண்ணின் குணங்களைக்கொண்ட இந்த அழகிய பெண்ணிடம் நான் செய்யும் போராட்டத்தில் என்னை இழந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். இவள் என் உயிரை வாங்குகிறாள். ஆதலால் எமனை இப்பொழுது உணர்ந்தேன்.

இக்கருத்தைப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் சிலம்பும், கலித்தொகையும், சீவக சிந்தாமணியும், கம்ப இராமாயணமும் அழகாகக் கூறுகின்றன.

”வலைவாழ்நர் சேரி.... வேண்டுருவம் கொண்டுவேறோர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது”, 
“கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடங்கெழுமென் சாயல் மகளா யதுவே” என்று சிலப்பதிகாரமும் (7:10.12), 

“கோமகள் உருவமாய்க் கூற்றம் போந்தது” (சீவக 2451), 
“கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினை.... 
பெண்ணுடையப் பேதை நீர்மைப் பெருந்தடங்கண்ணிற் றம்மா” என்று சீவக சிந்தாமணியும் (2458) என்று கூறினாலும், கம்பனின் மிதிலைப் படலப் பாடலொன்று அழகானது.

“வண்ணமேகலைத் தேரொன்று வாணெடும்
கண்ணி ரண்டு கதிர்முலை தாமிரண்
டுண்ணி வந்த நகையுமுண் டாமெனில்
எண்ணும் கூற்றினுக் கித்தனை வேண்டுமோ?”  (கம்ப.மிதிலைக்காட்சி 144)

”வேண்டுருவம் கொண்டதோர் கூற்றங்கொல்” (கலி.56:9)

“பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பில் திவவியாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென” (சிலப்.5:219-23)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.).

மணக்குடவர் உரை
பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.

மு.வரதராசனார் உரை
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

சாலமன் பாப்பையா உரை
எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
நெய் வெண்ணெயைஉருக்கிஉண்டாக்கும்பொருள்:வெண்ணெய்; எண்ணெய்; புழுகுநெழ்; தேன்; இரத்தம்; நிணம்; நட்பு; சித்திரைநாள்.

'நெய்யால்- நெயினால், எண்ணெயினால்

எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை.

எரி - (வி)எரிஎன்ஏவல்; ஒளிர்; அழல்; பொறாமைகொள்; சினங்கொள்; வயிறெரி.

நுதுத்தல் - அவித்தல்; அழித்தல்; நீக்குதல்.
நுதுப்பு - nutuppu   n. நுது-. Quenching,suppressing; தணிக்கை (W.)  ; தணிப்பு

நுதுப்பேம் - தணிப்பேன்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
என்றற்றால்-' என்று + அற்றால்

கௌவை -ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

யான் - நான்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நுதுப்பேம் - தணிப்பேன்

எனல் - என்றது

முழுப்பொருள்
தலைவன் தலைவிக்கும் இடையே உள்ள காதல் என்பது அவர்கள் பழகும் பொழுது வளரும். காதலை நினைத்து நினைத்து வளரும். இதை தெரிந்த ஊர் மக்கள் உறவினர்கள் இந்த காதலை வளரவிடக்கூடாது அழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இவர்கள் அனைவரும் பல இடங்களில் கூடி நின்று பேசி, எங்களை பற்றி பழிச்சொல் சுழல விட்டு, எள்ளிநகையாடுவது உண்மையில் எங்கள் காதலை வளர்க்குமே தவிர அழிக்காது. இவர்கள் கூடி நின்று பேசுவது என்பது எரிந்துக்கொண்டு இருக்கும் நெருப்பில் நெய்யினை ஊற்றுவது போல் ஆகும். தீயின் செந்தழல் நெய்யினை பருகி பருகி வளரும். அதுப்போல எங்கள் காதலும் வளரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

காதலித்து விட்டேனாம் ஊரார் அதைக்
காண்பது போல் செய்தேனாம் என்றும் எங்கும்
கூடி அவர் கொண்டேனாம் ஊரைப் பற்றிக்
கொஞ்சம் கூட நினைப்பின்றி நடந்தேனாம் நான்
தேடி இதை ஊரெங்கும் சொல்வதனால் நான்
திருந்திடவா வாய்ப்புண்டு காமத்தீயைப்
பேசி இவர் அணைத்திடவே நினைத்தல் நெய்யால்
பெருந்தீயை அணைத்திடவே முயல்தல் ஆகும்

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
காமக் - kāmam   n. kāma. 1. Desire; விருப்பம் காமம் வெகுளி மயக்கம் (குறள், 360). 2. Happiness in love, one of four kinds of puruṣārttam,q.v.; உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற்.பெரியதி. ம 37). 3. Sexual pleasure; புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092). 4.Venereal secretion; காமநீர் மெய்பொடித் திருங்காமமிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25). 5. Objectof desire; விரும்பிய பொருள் தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92). 6. (Astrol.) Theseventh house from the ascendant; இலக்கினத்துக்கு ஏழாமிடம். (சங். அக.) 7. See காமமரம் (மூ. அ )

காமக்-  kāmam   s. lust, desire, ஆசை; 2. lasciviousness, libidinousness, காமநோய்; 3. love, desire, அன்பு; 4. semen virile, வீரியம்; 5. sexual pleasure, புணர்ச்சி இன்பம்.

புனல் - puṉal   n. [K. ponalu.] 1. Water;நீர். தண்புனல் பரந்த (புறநா. 7). 2. Flood, torrent, stream, river; ஆறு. மழைகொளக் குறையாதுபுனல்புக மிகாது (மதுரைக். 424). (பிங்.) 3. Cold;குளிர்ச்சி. மண்புன லிளவெயில் (பரிபா. 15, 27). 4.The 20th nakṣatra; பூராடம். விட்டம் புனலுத்திராடம் (விதான. குணாகுண. 29). 5. Black-oil tree;வாலுளுவை. (சங். அக.)
கடும்புனல் - kaṭu-m-puṉal   n. கடு-மை +.1. Swift current of water; வேகமாயோடும் நீர் கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62). 2. Sea,from its abundance of water; கடல் காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167).

உய்க்குமே - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நாணொடு - வெட்கத்துடன், மானத்துடன்; கூச்சத்துடன்

நல் - nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

புணை - puṇai   n. புணை-. 1. Float, raft;தெப்பம். நல்லாண்மை யென்னும் புணை (குறள்,1134). 2. Boat, vessel, ship; மரக்கலம். (சூடா.)3. Support, help; உதவி. அறம் புணையாகலு முண்டு(கலித். 144). 4. cf. பணை. Bamboo; மூங்கில். (அக.நி.) 5. Fetters; விலங்கு. (சூடா.) 6. Pledge,security; ஈடு. 7. cf. பிணை. Surety; ஆள் ஜாமீன்.இவனுக்குப் புணை (S. I. I. V, 173). 8. Comparison;ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124).

முழுப்பொருள்
ஒரு தலைவன் தான் தோல்வியுற்றான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவான். தோல்வியென்பது அவனை நாணம் அடையச்செய்யும். ஆதலால் தோல்வியில் தழுவாதிருக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வான். அதுப்போல தன்னுடைய ஆண்மை என்று சொல்லப்படுகின்ற ஆளுந்தன்மை என்பது சிக்கலான நேரங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பல வழிகளை கொடுத்து உதவும். இவை இரண்டும் வாழ்வு என்னும் கடலில் ஒரு படகில் செல்லும் பொழுது தலைவனின் கையில் இருக்கும் இரண்டு தெப்பம் / மரக்கலம் போன்றது. பொதுவாக இந்த மரக்கலங்களை வைத்துக்கொண்டு கடலை கடந்து வருவார்கள்.

ஆனால் காமம் (புணர்ச்சி, ஆசை நோய்)  என்பது மிக பரந்து விரிந்த கடுமையான கடலைப்போன்றது. ஒரு கட்டற்ற வெள்ளாறு போன்றது. அதன் முன் தலைவனின் நாணமும் ஆளுந்தன்மையும் படகில் உள்ள மரக்கலங்கள் போன்ற சிறுமையான விஷயங்கள் ஆகிவிடும். காமம் நாணத்தையும் ஆளுந்தன்மையும் உய்த்துவிடும்.

இக்குறளை இருவகையில் எடுத்துக்கொள்ளலாம். 1) காதலின் முன் யாவரும் சிறியவர்களே. காமத்தின் சக்தி கடலைப்போன்றது. அதன் சீற்றதை மனிதனால் எதிர்க்கொள்ள முடியாது 2) காமம் மிக கடுமையானதும் கூட. காமத்தினால் மனிதன் தன்னிலை இழந்து தவறும் செய்யக்கூடும். கம்பராமயணத்தில் i) சூர்பனையிடம் சற்று காமம் கொண்ட இராமன் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சூர்பனையிடம் சொல்லி இருக்க மாட்டான். அந்த சமயத்தில் சூர்பனைக்கு இராமன் மீது காமம் இருக்கும். [ஒரு வேளை ராமன் தனக்கு கல்யாணம் ஆகியுள்ளது என்று சொல்லி இருந்தால் சூர்பனையின் காமம் அடிபட்டுப் போய் இருக்கும்]. இராமனை கட்டிக்கொள்ள இராவணனிடம் சீதையின் அழகைச் சொல்லி அவன் காமத்தை சீண்டுகிறாள். ஆக இங்கே சூர்பனகை எடுத்த ஆயுதம் காமம். ஏனெனில் சீதையை இராவணன் எடுத்துக்கொள்ளட்டும் இராமனை சூர்பனகை எடுத்துக்கொள்வாள். அதுவரையில் யாருடைய காலின் வீழாத இராவணன் சீதையின் மீது இருந்த காமத்தினால் தன்னிலையிழந்து அவளை சிறைப்பிடித்து. பின்பு அனைத்தையும் இழந்தான் இராவணன்.

“சான்றவிர் வாழியோ” என்னும் நெய்தற் கலியுள்
காணுநர் எள்ளக் கலங்கித் தலைவந்துஎன்
ஆணெழில் முற்றி உடைத்துள் அழித்தரும்
மாண்இழை மாதராள் ஏஎர்எனக் காமனது
ஆணையால் வந்தபடை” (கலி 139:20-24)

என்று கலித்தொகைப் பாடலொன்று காமத்தால் ஆணெழில் முற்றி உடைத்துள் அழிதருவதைக் கூறுகிறது, இக்குறள் கருத்தையொட்டி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.

மு.வரதராசனார் உரை
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

சாலமன் பாப்பையா உரை
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

   கரு விழியாள் தன்னழகில்  வீழ்ந்தேன்   வீழ்ந்தேன்  அந்தக்
           கனியிதழாள்  அமுத  நஞ்சில்   மாய்ந்தேன் மாய்ந்தேன்
   தருவதிலும்  பெறுவதிலும் வாழ்ந்தேன் வாழ்ந்தேன்  அந்தத்
           தளிர்க் கொடியாள் எனைப்  பிரிந்தாள் ஒய்ந்தேன் ஒய்ந்தேன்
   பெருமையுடன் நிமிர்ந்திருந்த ஆண்மை  ஊரார்
          பேசி நிற்கும் எந்தனது நாணம் என்னும்
   இரு படகும் இழந்து   விட்டேன் அந்தோ காமம்
          எனும் பெரிய  வெள்ளத்தில்  நானும்  நானும்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 
வாலெயிறு ஊறிய நீர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

பாலொடு - பாலுடன்

தேன் - மது; தேனிறால்; கள்; இரசம்; இனிமை; வண்டுவகை; பெண்வண்டு; மணம்.

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்

கலந்தற்றே - கலத்தலைப் போன்றது

பணி - செயல்; தொழில்; தொண்டு; பணிகை; பரக்கை; பயன்தரும்வேலை; நுகர்பொருள்; அணிகலன்; மலர்களால்அலங்கரிக்கை; பட்டாடை; தோற்கருவி; வேலைப்பாடு; வகுப்பு; சொல்; கட்டளை; விதி; வில்வித்தைமுதலியவற்றைக்கற்பிக்குந்தொழில்; ஈகை; நாகம்; தாழ்ச்சி.

மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.

பணிமொழி - paṇi-moḻi   n. பணி¹- +.1. See பணிபதம் 2. Low, gentle speech, as ofa woman; மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ
பணிமொழி - paṇi-moḻi   n. பணி&sup4;- +.Word of command; கட்டளை படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப். 8, 13).
பணிமொழி - தாழ்ந்தசொல்; மென்மொழி; பெண்; கட்டளை.

வால் - இளமை; தூய்மை; வெண்மை; நன்மை; பெருமை; மிகுதி; விலங்குகளின்பின்புறத்தில்நீண்டுதொங்கும்உறுப்பு; நீளமானது; குறும்புசெய்பவர்; குறும்பு; காண்க:வாலுளுவை.

எயிறு - பல்; பல்லின்விளிம்பு; யானைக்கோடு; பன்றிக்கொம்பு; கணு.

ஊறிய - ஊறுதல் - ūṟu-   5. v. intr. [T. ūru, K. M.ūṟu.] 1. To spring, flow, as water in a well;to issue; நீரூறுதல். (குறள், 396.) 2. To ooze,percolate; கசிதல் (W.) 3. To soak; to besteeped, pickled; ஊறுகாய்ப் பதமாதல். 4. Togather, as milk in the breast, as toddy in palmflowers; பால் முதலியன சுரத்தல் 5. To run; tospread, as ink on flimsy paper; to keep, asmoisture around a spring or in a river bank;  

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

ஊறிய  நீர் - உமிழ் நீர் - 

முழுப்பொருள்
பால் ஒரு பசுமாட்டின் (அல்லது எருமை மாட்டின்) காம்பில் இருந்து எடுக்கப்பட்டது. தேன் என்பது பல நூறு மெல்லிய மலர்களில் இருந்து சேகரிக்கபட்டது. பாலின் சுவையை நாம் அறிவோம். தேனின் சுவையை நாம் அறிவோம். ஆனால் பாலும் தேனும் கலந்தால் அதனின் சுவையே வேறு. அது மிக இனிமையான தித்திக்கும் சுவை. பருக பருக வேண்டும் என்று நா சொல்லும் சுவை.

அதுப்போல மிக மென்மையான என் காதலியின் வெண்மையான பற்களின் இடையே உள்ள உமிழ்நீர் பாலோடு சேர்ந்த தேன் போன்ற சுவை உடையதாம். தன்னுடைய உமிழ்நீரை தேன் சுவை என்று காதலி சொல்ல முடியும். தன்னுடைய பால் சுவை என்று காதலன் சொல்ல முடியும். பாலோடு தேன் கலந்த சுவை என்று காதலன் (அல்லது காதலி) சொல்கிறான் என்றால் அவர்கள் இருவரின் உமிழ்நீரும் கலந்ததனால் -அதனை சுவைத்ததனால் தான் சொல்ல முடியும். இரு உமிழ்நீரும் காதலனும் காதலியும் இதழோடு இதழ் முத்தம் கொடுக்கும் பொழுதுதான் கலக்கும். ஆக காதலனும் காதலியும் புணர்ச்சியின்பத்தை மகிழும் பொழுது கண்டுக்கொள்ளும் சிறப்பை இங்கு நாம் காண்கிறோம். இச்சுவை வேண்டும் வேண்டும் என்று நா சொல்லுவதுப் போல இம்முத்தம் வேண்டும் வேண்டும் என்று தங்கள் அகம் சொல்லுகிறது என்பதையும் நாம் இங்கு ஊகித்துக்கொள்ளலாம்.

மனித உடலில் உமிழ்நீர் சுரந்துக்கொண்டேஇருக்கும். அது தீடீர் என்று காதலியை பார்த்ததனால் சுரக்காது. ஆனால் பிறந்ததில் இருந்து இத்தனை ஆண்டுகளாக எல்லாம் தலைவனுக்கு உமிழ்நீர் சுவைக்கவில்லை. காதலியுடன் முத்தம் கொடுக்கும் பொழுது மட்டும் சுவைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உண்மையில் இருவரின் உமிழ்நீரும் கலக்கும் பொழுது அதற்கென்று ஒரு இனிமையான சுவை சேராது. ஆனால் காதலின் மிகுதியால் தலைவனும் தலைவியும் அந்த கலந்த உமிழ்நீரை பாலோடு கலந்த தேன் போன்ற சுவை என்கிறார்கள். அதுமட்டும் இன்றி பாலும் தேனும் சேர்ந்தால் அதனை பிரிக்க முடியாது. அதுப்போல இக்காதலனும் காதலியும் சேர்ந்துவிட்டார்கள். இவர்கள பிரியமாட்டார்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

இக்குறள் காதலின் மிகுதியால் நாம் அறியவதை கூறி காதலின் சிறப்பை எடுத்து உரைக்கிறது. 

ஒப்புமை

பாலொடு தேன் கலத்தல்:
“பிரசங் கலந்த வொண்சுவைத் தீம்பால்”
“தேனொடு தீம்பால்” (நற். 110:1, 179:5-6)

“தேன்மயங்கு பாலினும்”
“தேன்பெய்து, அளவுறு தீம்பால்”
“தேன்கலந் தளைஇய தீம்பால்”  (அகநா. 89:19-20, 207:14)

“பால்மடுத்துத் தீந்தேன் பருகுவாள்”
“தேனிற் பாலென” (சீவக. 1044, 1761)

“தேனும் பாலும் கலந்தன்னவர்” (பெரிய திருமொழி. 5. 4:8)

வாலெயிறூறிய நீர்:
“வாலெயி றூறிய வசையில் தீநீர்” (குறுந். 267:4)
”வாலெயி றூறிய நீரே” (அகநா. 237:17)

சீவகசிந்தாமணிப் (1915) பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

“பானிலத் துறையும் தீந்தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மானலங் கொண்ட நோக்கி மகன்மன மகிழச் சொன்னாள்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.]

(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).

மணக்குடவர் உரை
பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.