குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
யான் - தன்மையொருமைப்பெயர்
நோக்கும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
காலை - கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.
நிலன் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நோக்காக்கால் - நோக்கவில்லை என்றால் ; பார்க்கவில்லை என்றால்
தான் - தனக்குள்; படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
நோக்கி - கண்களால் நோக்குகை
மெல்ல - மெதுவாக
நகும் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.
முழுப்பொருள்
(ஆண்மகன், தலைவன்) நான் அவளை (தலைவியை) பார்க்கும் பொழுது அவள் (பெண்மகள், தலைவி) நாணத்தினால் தலைகுனிந்து அவள் நிலத்தையே நோக்குகிறாள். (ஆணுக்கு நாணம் இல்லை என்பதையும் இங்கே நோக்குக). நான் பார்ப்பதை அவள் பார்க்காததுப்போல காட்டிக்கொள்கிறாள்.
ஆனால் நான் அவளை பார்க்காத பொழுது அவள் என்னை பார்த்து தனக்குள் மெதுவாக சிரித்து மகிழ்கிறாள். அவள் என்னை பார்த்தை நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு சிரிக்கிறாளோ? இல்லை நான் பார்த்தது அவளுக்கு தெரியுமாம் ஆனால் அவள் என்னை பார்த்தது எனக்கு தெரியவில்லை என்று நினைத்து சிரிக்கிறாளோ ?
உண்மையில் இருவருக்கும் இருவர் பார்த்ததும் தெரியும். இருவரும் நடிக்கிறார்கள் ஒருவர்மீதொருவர் கொண்ட வாஞ்சையால். தலைவன் பார்க்கும் பொழுது தலைவி நிலத்தை பார்ப்பதனால் தலைவி தலைவனுக்கு அவன் மீது கொண்ட காதலை அன்பை குறிப்பால் உணர்த்துகிறாள். நேரடியாக பார்த்துக்கொண்டால் என்ன? பிறகு சுவாரஸ்யம் இருக்காதே. இதனை நினைத்துப் பின்பு மகிழமுடியாதே. ஊடலின் துவக்கமே இங்குதான் போலும்.
ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையேயானப் பார்வைப் போரை கம்பன் வருணித்ததை பார்ப்போம். இப்பாடலில் இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்களால் கவ்விக்கொள்வதை இரசமாக விவரித்திருப்பார்.
“எண்ணரும் நலத்தினால் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”
கி.வா.ஜ-வின் ஆய்வு உரையில் சீவக சிந்தாமணியிலிருந்தும், கலித்தொகையிலிருந்தும்மேற்கோளாக கீழ்காணும் வரிகளைக் காட்டுகிறார்.
நேற்று மேற்கோள் காட்டிய கண்ணதாசன் பாடல், இன்றைய குறளுக்கே முற்றிலும் பொருந்துவதாகவும் அமைவதைக் காணலாம்.
“தன்னையான் முகத்தை நோக்கின்தான் முலை முகத்தை நோக்கும்” (சீவக சிந்தாமணி 1626)
“பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின்

மெல்ல இறைஞ்சுந் தலை” (கலித்தொகை 61-5:6)
கண்ணதாசனின் பாடல்வரிகள் இதே பொருளில்
“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே”
”இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
கண்ணதாசனின் பாடல்வரிகள் இதே பொருளில்
“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே”
”இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்றநிற் கண்டு” (அகநா 39:17-8)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத விடத்துத் தான்பார்த்துத் தோன்றாமை நகும். மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.

மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

No comments:
Post a Comment