குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]பொருள்
வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.
இருவர்க்கு - தலைவன் தலைவி இருவருக்கும்
இனிதே - இனிது - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் ; இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு
போழப் - போழ்தல் - பிளவுபடுதல்; பிரிவுபடுதல்; பிளத்தல்; ஊடுருவுதல்; அழித்தல்.
போழப்படா - புக முடியாத
படாஅ - படா - paṭā adj. U. barā. Large, great;பெரிய.
முயக்கு - முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
காதலில் ஆசையாக வீழ்ந்த இருவருக்கு எது இனிது தெரியமா? கலவி / புணர்ச்சி. எப்படிப்பட்ட புணர்ச்சி? மெல்லிய காற்றுக்கூட (வளிகூட) இவர்களுக்கு நடுவே(இடையே) புகமுடியாத அளவுக்கு (போழப்படா) இவர்கள் இரண்டுபேரும் முயங்கி இருப்பது. புணர்ச்சியில் இன்பம் கொள்கிறார்கள். கலவி கொள்ளும் பொழுது காற்றுக்கூட இவர்களின் நடுவே இல்லாமல் இவர்கள் ஒருமையாகி விடுகிறார்கள்.
ஆதலால் கல்யாணத்திற்கு முன்பு இருவர் கலவி கொள்வது முற்றிலும் இயற்கையானதே என்பதை நாம் இங்கு அறியலாம். அது தவறில்லை. அக்காலகட்டத்தில் அது இயற்கையென எண்ணியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். பின்பு ஒழுக்க நெறிகள் மக்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் இன்று கல்யாணத்திற்கு முன் கலவி என்பததை தவறாக பார்க்கின்றார்கள்.
அகநானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.
“மெய்யில் தீரா மேவரு காமம்” (அகநா 28:1)
“வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து” (அகநா 361:5,6)
எனக்கு ஸ்பீடு(வேகம்/speed) எனும் 1994 ஆண்டு வெளிவந்த ஆங்கில/Hollywood படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தில் இறுதியில் வரும் வசனம் / உரையாடல் கீழே. இதில் கலவி மூலமாக உறவை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்பதை கூறிக்கொள்கிறார்கள்.
Jack:
I have to warn you, I've heard relationships based on intense experiences never work.
Annie:
OK. We'll have to base it on sex then.
Jack:
Whatever you say, ma'am.
(Speed Movie - Intense Relationship Scene Link from 0:49)
மேலும்: அஷோக் உரை
மைதுனம் பற்றிப் பகர்ந்தபின், காமத்துப் பாலின் இன்னொரு குறள் சொல்லாமல் கட்டுரையை முடிப்பதா என இருமனதாக இருக்கிறது. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறள், காதலர் இருவர் சம்மந்தப்பட்ட குறள் அது. காதலன் என்ற சொல்லுக்கு பகரமாக நீங்கள் தோழன் – தோழி, தலைவன் -தலைவி, நாயகன் – நாயகி, கணவன் – மனைவி, Partner, Pair, Mate, சேர்ந்து வாழ்பவர் என்று எதையும் பொருத்திக் கொள்ளலாம்.
‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு’
எப்போதுமே அளபெடை பயன்படுத்தப்படும் திருக்குறள் உச்ச பட்சக் கவித்துவத்துடன் இருக்கும். வளி என்றால் காற்று. போழப்படா என்றால் புக முடியாத, முயக்கு என்றால் மைதுனம். காமத்தில் வீழ்ந்த இருவருக்கு, வளி இடை போழப் படா முயக்கு இனிதே. காற்றுக்கூட இடை புகமுடியாதபடி உடல்களின் நெருக்கம் கொண்ட கலவி இனிது. யாருக்கு அந்தக் கலவி இனிது? காதலில் வீழ்ந்த இருவருக்கு இனியது. காதலில் வீழ்ந்த நாயகி – நாயகன் இருவருக்கும் நுண்ணிய மெலிய தென்றல் காற்றுக்கூட இடையே நுழைய முடியாத அளவிலான இறுக்கமான உடற்சேர்க்கை மிக இனிமையானது. அப்போது அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். அந்தக் கலவி நிலை இருமையல்ல, ஒருமை.
No comments:
Post a Comment