குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]
பொருள்
பெறா - உறவை பெறாவிட்டாலும்
உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்
அதோ - சேய்மைச்சுட்டு; படர்க்கைச்சுட்டு; சுட்டிக் கவனிக்கச் செய்தற்குறிப்பு; கீழ்
ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
அறிந்த - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
கௌவை? - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.
அதனைப் - அதன் - It's It's It's , அதனுடைய
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெறா - உறவை பெறாவிட்டாலும்
அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு
பெற்று - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.
பெற்று - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.
நீர்த்து - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
முழுப்பொருள்
உறா என்றால் பெறமுடியாதது என்று பொருள் ஏனெனில் உறாவொற்றி என்றால் மீளா வெற்றி என்று பொருள்.
காதலர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் மீண்டும் பெறவே முடியாதது எங்கள் காதல் உறவு என்று நினைத்தோம். அதனால் வாடினோம். ஆனால் இந்த ஊராருக்கு எங்கள் காதலைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவர்கள் எங்கள் காதலைப்பற்றிப் (பழியாகவோ அல்லது வம்பாகவோ) பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஊருக்கே எங்கள் காதல் வெளிப்டையானதால் பெறமுடியாது என நினைத்த எங்கள் காதலை /(திருமண) உறவை நாங்கள் பெற்றதுப்போல் (பெறுவதற்கும் ஏதுவாக) ஆயிற்று. ஊரார் பேச்சு காதலர்களை ஒன்று சேர்க்கும் தன்மைவாய்ந்தது.
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.
மு.வரதராசனார் உரை
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று
No comments:
Post a Comment