Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

குறள் 477
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஈக - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

பொருள்- சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

போற்றி - போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்

வழங்கும் - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
பிறருக்கு கொடுத்து உதவினாலும் (அந்த உதவி பசியை தணிப்பதற்கென்றாலும், துன்பத்தை துடைப்பதற்கென்றாலும்) தன்னுடைய பொருளாதார அளவு அறிந்தும் பிறரின் தேவை அறிந்தும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் தன்னுடைய பொருளை தன் தேவைக்கான அளவிற்கு பாதுக்காத்து அது வளர்வதற்கு (வளர்ந்ததில் வருங்காலத்தில் கொடுப்பதற்கு) தேவையான அளவு வைத்துக்கொண்டு கொடுப்பதே முறைமையாகும். 

கொடுப்பதற்கு பெரிய மனது இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்டு இருப்பதையெல்லாம் கொடுத்து ஒன்றும் இல்லாமல் ஆகிவிடகூடாது. தன் வலிமையையும் தேவையும் உணர்ந்து கொடுக்க வேண்டும். அதுவே நெடுங்காலத்திற்கு கொடுத்து உதவும் வலிமையை/ தன்மையை தரும்.

ஏற்கனவே இறைமாட்சி அதிகாரத்திலே “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற குறளை அறிந்திருக்கிறோம்.  ஒருவன் தன் செல்வத்தை நான்கு பங்குகளாகப் பிரித்து, இரண்டு பங்கினைத் தன்னுடை வாழ்க்கைக் குடும்பச் செலவுகளுக்கும், ஒரு பங்கை எதிர்பாரத அவசரத் தேவைகளுக்காக வைப்பு நிதியாகவும், ஒரு பங்கை பிறருக்கு தானம் செய்வதற்கும் வைத்துக்கொள்ளவேண்டும். இதை “வந்த பொருளின் காற்கூறு வருமேல் இடர்நீக்குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக” என்ற பாடல் வரிகள் சொல்லுகின்றன.

இனியவை நாற்பது, “வருவாய் அறிந்து வழங்கல் இனிதே” என்று எளிமையாக ஒரு வரியில் இதைத்தான் சொல்லுகிறது. நல்லதனார் எழுதிய திரிகடுகப்பாடலும், “வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” என்று சொல்லும்.

இந்த திருக்குறள் தான் பிற்காலத்தில் மருவி “ஆத்துல(ஆற்றிலே)  அளந்து  போட்டாலும் அளந்து போடனும்/அளந்துப்போடு

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
(ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

எள்ளாத - இகழாத 

எண்ணிச் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

தம்மொடு - தன்னுடன்

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. 

கொள்ளாத - ஒவ்வாத; பொருந்தாத

கொள்ளாது - எடுத்துக்கொள்ளாது, உரிமைக்கொள்ளாது, அங்கீகரிக்காது

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன் அச்செயல் ஒருவற்கு இகழ்ச்சியை தருமா அல்லது புகழை தருமா என்று ஆராய வேண்டும். இகழ்ச்சியை தராது புகழை பயனை தரும் அச்செயலை எப்படித் திட்டமிட்டு செயல்படுத்தபோகிறோம் என்று நன்கு எண்ண வேண்டும். ஏனெனில் திட்டம் சரியில்லை என்றாலும் செயல்படுத்துதல் சரியில்லை என்றாலும் அச்செயல் தோல்வியில் முடியும். அதுவும் இகழ்ச்சியே. ஆதலால் இகழ்ச்சி பெறக்கூடாது என்று எண்ணி ஒரு செயலை செய்யவேண்டும்.

ஆனால் இகழ்ச்சியை எண்ணாது கணக்கில் கொள்ளாது ஒரு செயலை செய்வோரை இவ்வுலக மக்கள் / சான்றோர்கள் / உயர்ந்தோர்கள் தன்னுடன்  நட்பாக/உறவாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

இக்கருத்து ஆள்வோருக்கு இன்றியமையாததாம். ஏனெனில் தனியொருவரின் பழியும் கேலியும் அவருடனே தீரும். ஆனால் ஆள்வோரின் பழி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதிக்கும், பழிக்கு ஆள் ஆக்கும், கேலிக்கு உரியோராக்கிவிடும். ஆள்வோர்க்கென்று சொல்லப்பட்ட இயல்புகளுக்கு ஒவ்வாதவற்றை செய்தால் உலகம் உவந்து ஏற்காது. எனவே உலகம் பழிக்காத, கேலிபேசாத வகையிலே ஆளுவோர் தம் செயல்களைச் செய்யவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

English Meaning - As I taught a kid - Rajesh
One should do a work without taking anything for granted. One should 1) research on the work to be done, 2) analyze the results and consequence of it 3) consider to do only if it doesn't harm anyone, society, environment, doesn't break law and doesn't brink bad repute 4) think through the plan, hurdles, combat plans, resources etc. Only if a person does a work with due diligence and prudence without taking anything for granted, a person would be able to execute a work well. If a person takes things for granted, then the people (in this world) will not accommodate him in their life, projects, work, circle etc.

Questions that I ask to the kid
How should you do work?
What happens when you take a thing for granted? 
How does the world treat those who take a thing for granted?

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

வருந்துதல் - துன்புறுதல்; உடல்மெலிதல்; மிகமுயலுதல்; வருந்திவேண்டிக்கொள்ளுதல்.

வருந்தா - முயலாமல் 

வருத்தம் - துன்பம்; முயற்சி; களைப்பு; நோயாளியின்அபாயநிலை; அரிதல்நிகழ்வது.

பலர் - அநேகர்; சபை.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.

போற்றினும் - போற்றுதல் -  pōṟṟu-   5 v. tr. 1. Topraise, applaud; துதித்தல். (பிங்.) போற்று மடியாருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 2. Toworship; வணங்குதல். (பிங்.) 3. To protect,cherish, keep with great care; பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள், 693). 4.To nourish; வளர்த்தல். (W.) 5. To guardagainst; பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின்(சிலப். 30, 188). 6. To adhere, hold fastto; கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538). 7. To entertain; to treatwith regard; உபசரித்தல். எம்மைப் போற்றவே(கம்பரா. அரசியல். 40). 8. To desire;விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60). 9.To consider; கருதுதல். பொச்சாவாக் கருவியாற்போற்றிச் செயின் (குறள், 537). 10. To understand; to pay attention to; மனத்துக்கொள்ளுதல்.கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக.430). 11. To gather together; கூட்டுதல். (பிங்.)

பொத்துப்படும் - பொத்துப்படுதல்தவறுதல்; செயல்கைகூடாதுதீமைபயத்தல்.

முழுப்பொருள்
ஒரு செயலுக்குத் தேவையான ஆயுத்தப்பணிகளை முழுவதுமாக வருந்தி செய்யாமல் அதற்கு தேவையான எல்லாவகையான முயற்சிகளையும் துவக்கத்தில் செய்யாமல் அச்செயலை செய்தால்/ முயன்றால் அது துன்பத்தை மட்டும் தராது அதனை பலர் வந்து நின்று கூட்டாக உழைத்து உதவினாலும் பாதுக்காத்தாலும் அச்செயல் தவறாகவே முடியும் அல்லது முடங்கிவிடும். ஏனெனில் முதல் கோணல் முற்றிலும் கோணல்.

உதாரணமாக நாம் பல நிர்வாகங்கள் / கடைகள் / சினிமாக்கள் ஒரு உற்சாகத்தில் அதீத தன்னம்பிக்கையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி அல்லது முழு திட்டமிடலும் இன்றி துவங்கபடும். போகிற வழியில் கற்றுக்கொள்ளலாம் என்று துடங்கப்படும். ஆனால் பலர் ஜாம்பவான்கள் வந்து பணிபுரிந்தாலும் அவை பெரும்பாலும் முடங்கி போவதையே நாம் காண்போம். 

இன்று Agile Methodologies, Iterative method என்று ஒவ்வொருப் படியாக ஒரு பொருளை ஒரு செய்தியை கொள்கையை வளர்த்து எடுக்கின்றனர். அது தவறில்லை. சரியே (ஏனெனில் தவறான பாதையில் செல்வதை முன்னரே தவிர்க்கலாம்). ஆனால் அதற்கு ஒருவித திட்டம் வேண்டும். ஒவ்வொரு படியிலும் நாம் என்ன செய்யப்போகிறோம், தோல்விகளை எப்படி கையாளப்போகிறோம், அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் விளைவு இல்லையென்றால் நாம் ஒரு சுவரை முட்டிவிட்டதுப் போல் இருப்போமோ அல்லது அதில் இருந்து மீண்டுவர வேறு வழிகளை வைத்திருக்கிறோமா என்ற தெளிவான திட்டமிடல் அவசியம். ஒரு நடுவழியிலோ அல்லது பிரச்சனை என்று வந்த உடனோ பலர் வந்து உதவினாலும் அச்செயல் வெற்றிகரமாக முடிவது மிக மிக கடினம். 

பழமொழிப் பாடல்களிரண்டு இக்கருத்தையொட்டியன.

தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.

அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின் தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர். அங்கனமின்றி, முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது மேற்கண்ட பாடல்.

வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண்.

மேற்கண்ட பாடல் சோழன் செம்பியன் தேவர்களுக்காக அசுரர்களின் ஊரினை அழித்ததைச் சொல்லி, அம்பினை வலிவாகத் தொடுத்தால் கவசமும் பிளந்துவிடும், அதுபோல முடிந்த அளவு முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற கருத்தைச் சொல்லுகிறது. இப்பாடல் முயற்சியை முன்னிருத்திச் சொல்லப்பட்டது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
(முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.

மு.வரதராசனார் உரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

குறள் 465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறச்  aṟa   adv. அறு¹-. 1. Wholly, entirely,quite; முழுதும் வகையறச் சூழாது (குறள், 465). 2.Intensely, excessively; மிகவும் அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 3. Clearly; தெளிவாக அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224). 4. Tho-roughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.  

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழாது - சூழாமல் 

எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.

பகைவரைப் - பகைவர் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்.

பாத்திப்படுப்பது - பாத்திப்படுத்து-தல் - pātti-p-paṭuttu-   v. tr. பாத்தி +. To establish, set up; நிலைபெறச்செய்தல். பகைவரைப் பாத்திப்படுப்பதோராறு(குறள், 465).

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
ஓர் - (வி)ஆராய்; தெளி.

ஆறு நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை


முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன் அதனைப் பற்றி முழுவதுமாக ஆராயாமல், அச்செயலின் தன்மையை முழுவதுமாக அறியாமல், அச்செயலை செய்வதற்குத் தேவையான வலிமைகளையும், இடங்களையும் காலத்தையும் திறன்களையும் அறியாமல், செயலினால் வரக்கூடிய பயன்களை ஆராயாமல், செயலுக்கான திட்டத்தை திட்டாமல், செயலில் வரக்கூடிய இடர்களை முழுவதுமாக உணராமல், அதற்கான தந்திரங்களை சிந்தித்து தீட்டாமல், ஒருவர் ஒரு செயலை செய்தால் (அல்லது பகைவருக்கு எதிராக போருக்கு சென்றால்) அது பகைவரை நமது நிலத்திலேயே விதைத்து பாத்திக்கட்டி வளர்த்து நிலைபெற செய்வதற்கு ஒப்பாகும். பகைவர் கேடு விளைவிப்பர். ஆதலால் அச்செயலும் கெட்டு அழியும். செல்வம் அழியும். மனம் துன்பத்தில் உழலும். 

ஆதலால் எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன்பு முழுவதுமாக ஆராயவேண்டும். அரைகுறையாக ஆராய்ந்தால் ஆபத்து. 

“பின்னின்றார் இனைய ரென்றும் உணர்கிலம் பிடித்த மாயம்
என்னென்றும் தெளிதல் தேற்றாம் யாவதீ தென்றும் ஓராம்
முன்னின்றார் முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்
பொன்னின்ற வயிரத் தோளாய் புகழுடைத்தாமன் றென்றான்” (கம்ப.மாரீசன்.234)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
(அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை
முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
பல்லார் பலர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொளலின் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர்முதலியோரிடத்துஉள்ளபத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில்பத்துப்பதிகம்கூடியபகுதி; சீட்டுக்கட்டில்பத்துக்குறியுள்ளசீட்டினம்.

அடுத்த - aṭutta   aTutta அடுத்த next; (with time words) the one after the coming one  
அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

தீமைத்தே - தீமை- கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.

நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்.

தொடர் - தொடர்கை; சங்கிலி; விலங்கு; பஞ்சு; வரிசை; பிசின்; பூமாலை; மரபுவழி; சொற்றொடர்; பழைமை; நட்பு; உறவு; உலோகங்களைஉருக்கஉதவும்மட்பாண்டம்.

கைவிடல்கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்

முழுப்பொருள்
ஒருவருக்கு பகை என்பது என்றும் தீயதையே நிகழ்த்தும். அதனால் துன்பமும் இழப்பும் தான் அதிகம். முகத்தில் புன்னகையும் மனதில் மகிழ்ச்சியும் மறையும். ஆனால் இவையாவும் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிந்த புறப்பகை. பகைவர்களை பெரியோர் துணைக்கொண்டு தவிர்க்கலாம், வீழ்த்தலாம். 

பல பகைவர்கள் இருந்தால் துன்பத்தின் அளவும் பன்மடங்கு உயரும். ஆனால் பல பகைவர்கள் இருக்கும் பொழுது வரும் பன்மடங்கு தீமையைவிட பத்துமடங்கு தீமை பயப்பது பெரியோர் சான்றோரின் உறவை/ தொடர்பை விட்டொழிதல் ஆகும். ஏனெனில் பெரியோரது துணையின்றிப் போகுமாயின், அகப்பகைகளும் வளர்ந்து, ஆட்கொல்லியாக மாறி அழித்துவிடும். அதனாலேயே பெரியோரின் அணுக்கமும், அறவழி நடத்துதலும் ஒருவருக்குத் / ஒரு அரசருக்குத் தேவை. புறப்பகையைக்கூட துணையின்றி வென்றுவிடலாம் ஆனால் அகப்பகையை பெரியோர் துணையின்றி வெல்லுதல் மிக கடினம். அதனால் தான் பெரியோர் துணைவிட்டொழுகல் பத்துமடங்கு தீமைத்தரும்.

பெரியோர்கள் உடன் இந்தால் நம்மை நல்ல கேள்விகள் கேட்டு சிந்திக்கவைப்பர். அதனால் அகப்பகையால் நாம் செய்த தவறுகளை அறிந்து உணர்ந்து அதன் வேர்களை அறுத்து மீண்டு வருவோம்.

இன்னா நாற்பது பாடல் (27), “பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா” என்று அதை ஒரு துன்பமாகவேச் சொல்லுகிறது.

நாலடியார் பாடலொன்று, பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே என்று அங்கலாய்க்கிறது. அப்பாடலாவது:
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

மு.வரதராசனார் உரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.